Jump to content

“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8B5A1451-9B0A-4EC7-A8AD-B36D1BF62A1C.jpeg
 

 

 ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும்சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய்உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்குநன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டைவிட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில்சொல்லுகிறேன்.

 

சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விடதிரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின்வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரேசம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்துஅப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு வருவது - பின்னணியில் எப்படி வெற்றிகொள்கிறார்கள் என்பதே ஒற்றை வரி. சகோதரிகளாக வரும் சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசனின்வாழ்க்கைப் பின்னணி, அடிப்படையான இயல்புகள், வாழ்க்கைப்பிரச்சனைகள் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறன. இங்கிலாந்தில் வாழும் சுஹாசினிக்கு தன் மகனை போதுமானஅளவுக்கு கவனிக்க முடியவில்லை, அவனுக்கு டிஸ்லெக்ஸியாஎனும் ஆற்றல் குறைபாடு உள்ளது எனும் குற்றவுணர்வு, அனுவுக்குநீண்ட கால முயற்சிக்குப் பின்னரும் மகப்பேறு இல்லை எனும்இயலாமை, ஸ்ருதிக்கு தன் விருப்பங்களை தாய் புரிந்து கொண்டுஆதரிக்கவில்லை எனும் கோபம். உறவுகள் மீதான புரிதல்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை, குடும்பத்தின் மீதான பாசம் தோன்றிஇவர்கள் நெருக்கடியை கடப்பதே கதை. இதை ஒரு வசனத்தின்மூலம் சாதிக்கிறார்கள் என்பது நம்பும்படியாய் இல்லையென்றால்படத்தில் ஓரளவுக்கு இதை சமாளித்து விடுகிறார்கள். இறுதிக்காட்சியில் அம்மா கோமாவில் இருந்து முழுமையாய் மீண்டும்தனக்கு ஒரு கப் காப்பி வேண்டும் எனக் கேட்பதைபார்வையாளனுக்கு இன்னும் திருப்தி ஏற்படும்படிஅமைத்திருக்கலாம் - அம்மாவின் நிலை மோசமாகி பின்னர்எதிர்பாராமல் சீராவதைப் போல அல்லது வேறு விதங்களில்(தேய்வழக்குதான், ஆனால் வேலை செய்யும்.).

இப்படத்தின் ஒளிப்பதிவு, framing, blocking மற்ற படங்களைவிட சிறப்பாக உள்ளது. அதாவது மணிரத்னம் ஸ்டைலில், ஒவ்வொரு கடையும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் என்பதைப்போல உள்ளது. .தா., சுஹாசினி தன் அம்மாவை வீட்டில்வைத்து, மருத்துவ கவனிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதைவிரும்பவில்லை; அவர் சற்று எதிர்மறையாக அதிசயங்களில்நம்பிக்கை இல்லாதவராக உள்ளார். இதைக் காட்டுவதற்காகஇவர் ஆரம்பத்தில் தோன்றும் காட்சிகளில் சட்டகத்தில் பாதிதிறந்த கதவின் பக்கத்தில் நிற்பது போல அமைத்திருக்கிறார்கள். அன்பின் மகத்துவத்தை அவர் புரிந்து கொண்ட பின் அவர் திறந்தசட்டகங்களில் தோன்றுகிறார்.    

 

 ஸ்ருதி ஐபேட் வழியாக தன் அம்மாவுடன் பேசும் போது அவரது கைமட்டும் சத்தம் வருகிற திசையாக எழுந்து தொட முயலும். இக்காட்சி ஒரு உருவகம் போல உள்ளது - ஒரு சிறு அசைவால்காலம் ஏற்படுத்தும் தொலைவைக் கடந்து எளிதில் அன்பைத்தொட, உணர்த்த முடியும் என்பதற்கான உருவகம். அதை ஒருநகைமுரணாகவும் (திரையில் தோன்றும் வெர்ச்சுவல் உண்மையைதொட முடியாதே), அவரது ஆசீர்வாதமாகவும் கூட தோன்றுகிறது.

 

இப்படியான நுணுக்கங்களை மற்ற படங்களில் காணமுடியவில்லை. ஒரே குறை நீளமான வசனங்கள். வசனங்களைக்குறைத்தால் படத்தை இன்னும் சிக்கனமாக பண்ணியிருக்கலாம்.

 

கார்த்திக் சுப்புராஜின் Miracle ஒரு வித்தியாசமான சமூகப் பகடி. அவரது படங்களின் டிப்பிக்கலான ஸ்டைல் அம்சங்களும் உண்டு - பழைய பாடல்களை எதிர்பாராத இடங்களில் ஒலிக்க விடுவது, குறைந்த ஒளியில் அதிரடிக் காட்சிகள், அசமந்தமானநகைச்சுவை என. ஒரே குறை உணர்ச்சி ஆழம் இல்லாதது. படம்முடியும் போது கிளைமேக்ஸ் நம்மை ஆச்சரியப்படுத்துகிறதேஒழிய திருப்தி அளிக்கவில்லை. சமூகப் பகடி எனும் போது ஒருசமூகத்தீமையை சித்தரித்து, அதனால் ஏற்படுகிற பாதிக்களைசுருக்கமாய் காட்டி இறுதியில் வில்லன் தமாஷாக இழப்பைசந்தித்து பல்ப் வாங்குவதாய் காட்டலாம். இதில் வில்லனுக்குஇழப்பு நேரும் போது அவன் அதனால் வருத்தப்படுகிறானாஇல்லையா, அவன் சாமியாரா அல்லது வட்டிக்கு விட்டு, மக்களைவாட்டி சம்பாதிக்கிற கொடூரனா என்பது தெளிவாக இல்லை. (எல்லா கார்த்திக் சுப்புராஜ் படங்களையும் போல இதிலும்வில்லன் யார், ஹீரோ யார் எனும் குழப்பம் உள்ளது.) கிளைமேக்ஸ்நேரம்”, “சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களைநினைவுபடுத்துகிறது.

 

சுதா கொங்கோராவின் இளமை இதோ இதோ ரொம்பபலவீனமான திரைக்கதையைக் கொண்ட படம். பிரதானபாத்திரங்களுக்கு எந்த பெரிய சவால்களும் இல்லை என்பதுபடத்தை ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பைப் போல படுக்கவைக்கிறது.

அவரும் நானும் - அவளும் நானும் கௌதம் மேனனின் படம் எனஎன்னால் நம்ப முடியவில்லை. அவரது முத்திரை இல்லாத படம் பேத்தி வீட்டுக்கு வந்ததும் அந்த தாத்தா தன் மனத்தடைகளைகடந்து ஏற்கப் போகிறார் என்பது ஒற்றைவரி. ஆனால் இக்கதைமுதல் ஐந்து வினாடிகளுக்குள் முடிந்து போகிறது. அதன் பிறகுமுழுக்கவே அழுகைப் படலம் தான். ஆனாலும் சில இடங்கள்நம்மை நெகிழ வைக்கின்றன, எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு அவ்வளவுஅழகாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

ராஜீவ் மேனனின் Reunion தான் இருப்பதிலே மட்டமான படம் - அது யாருடைய கதை? போதைப் பழக்கத்தில் இருந்து மீளவேண்டிய ஆண்டிரியாவின் கதையா? எனில் ஏன் அவ்வளவுநேரத்தை லீலா சேம்சன், குரு சரணில் வீணடிக்க வேண்டும்? ஆண்டிரியா போதைக்கு அடிமையாகக் காரணம் தன் கலைவாழ்வில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்பது. அதுவேஅவரது சவால். அதைக் கடப்பதே அவருக்கான அடிப்படைவிழைவு. ஆனால் அதை குருசரண் லவ் யூ சொன்னதும், லீலாசேம்சன் அன்புடன் பராமரித்ததும் அவரால் கடந்து விட முடியும்என்பதை நம்ப முடியவில்லை. கிளைமேக்ஸை வேறுவிதமாய்அமைத்திருக்கலாம் - குரோசாவாவின் இகிரு போல.

 

இக்கதைகளை வீட்டுக்குள் வைத்து எடுத்தது மற்றொருபிரச்சனை - அது இயல்பாகவே கதைகளை குடும்பத் தளத்துக்குள்முடக்கி விடுகின்றன. இந்த கொரோனா காலத்தில் வெளியேஎத்தனையோ பிரச்சனைகள், எதிர்பாரா அனுபவங்கள்ஏற்பட்டதைப் பார்த்தோம். ஊருக்கு நடந்தே போக முயன்றுவழியில் செத்துப் போன மக்கள், சிகிச்சைக்காக மாநிலஎல்லைகளுக்கு, இடையே பாஸ் வாங்கி அலைபாய்ந்த மக்கள், நிறுவனங்களின் ஊழல், மருத்துவர்கள், செவிலியரின் தியாகம், பயணத்தின் போது விடுதியில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குஆளானவர்கள் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் எனசமூகவலைதளங்களிலேயே சினிமாவுக்குப் பொருத்தமானஎத்தனையோ முக்கியமான ஒற்றை வரிகளைப் பார்த்தோம். எதிர்காலத்தில் இவ்வகையான கொரோனா கதைகளைஇயக்குநர்கள் எடுக்க முயல வேண்டும்.

 

 

இந்த 5 படங்களில் முதல் மார்க் வாங்கி பாஸ் ஆகிறவர் சுஹாசினிதான். என்னாலே நம்ப முடியவில்லை! இவ்வளவு நல்லதிரைமொழி சுஹாசினியிடம் உண்டா? உண்மையானமிராக்கிள் இதுதான்.
 

 

http://thiruttusavi.blogspot.com/2020/10/ott.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.