Jump to content

கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
 
கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
 
அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்ட அவரது மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பதிவு: அக்டோபர் 20,  2020 16:39 PM
வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார்.  இவரது மருமகள் மீனா ஹாரிஸ் (வயது 35).  வழக்கறிஞராக உள்ளார்.  குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  அந்த பதிவில், கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்டு படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அந்த படத்தில், கமலா ஹாரிஸ் கடவுள் துர்க்கையாக காட்சி அளிக்கிறார்.  மகிசாசுரன் ஆக அதிபர் டிரம்ப் காட்டப்பட்டு இருக்கிறார்.  அவரை ஹாரிஸ் குத்தி கொல்வது போன்று உள்ளது.

இதேபோன்று ஜனநாயக கட்சிக்கான அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், துர்க்கையின் வாகனம் ஆன சிங்கம் போன்று காட்டப்பட்டு இருக்கிறார்.

இந்த பதிவு வெளியிடப்பட்டு சற்று நேரத்தில் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.  இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்து அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் சுஹாக் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் கடவுளான அன்னை துர்க்கையின் முகவடிவம் மிகைப்படுத்தப்பட்டு இருப்பது, உலகம் முழுவதும் உள்ள பல இந்து மக்களை ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இந்து அமெரிக்க அரசியல் செயற்குழு, அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்களுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

கடந்த வார இறுதியில், நவராத்திரியை முன்னிட்டு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அல்லவை அழிந்து நல்லவை வெற்றி பெறட்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்து சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன்.

நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் பதிவிட்டார்.

https://www.dailythanthi.com/News/World/2020/10/20163911/Hindu-organizations-are-strongly-opposed-to-the-niece.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹரிஸ்.... பண்டி இறைச்சி சாப்பிடுகின்றவர். அவரை சரஸ்வதி பூசை நேரம், துர்க்கையுடன் ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கமலா ஹரிஸ்.... பண்டி இறைச்சி சாப்பிடுகின்றவர். அவரை சரஸ்வதி பூசை நேரம், துர்க்கையுடன் ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது.

சிறித்தம்பி இது ரூ மச்யா...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நுணுக்கமான பிரிப்பு அரசியல் யுக்தி என்று இங்கே வசிப்பவர்களுக்குத் தெரிகிறது. 

1. அமெரிக்காவில் 1.2 மில்லியன் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 2016 தேர்தல் படி, 138 மில்லியன் மொத்த வாக்காளர்கள், எனவே இந்த 1.2 மில்லியன் மிகக் கொஞ்சம். ஆனால் இம்முறை சில நூறு வாக்கு வித்தியாசங்களில் தான் அரச தலைவர், செனற், ஹவுஸ் என்பவற்றின் தெரிவு தங்கி நிற்கப்போகிறது. எனவே, மதில் மேல் பூனையாக இருக்கும் சில நூறு இந்திய அமெரிக்க வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள ட்ரம்ப் குழு  களமிறங்கியிருக்கிறது.

2. அப்ப இந்த எதிர்ப்பில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் பங்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. 2016 இல் 80% ஆன இந்திய அமெரிக்கர்கள் ட்ரம்பை எதிர்த்து ஹிலறிக்கு வாக்களித்தனர். இந்த முறை அதை விட அதிக வீதமானோர் பைடனை ஆதரிக்கின்றனர் என்று அபிப்பிராய வாக்கெடுப்புகள் சில சொல்கின்றன.

வாக்குகளைப் பொறுத்த வரை, பத்துக்கும் நூறுக்கும் கூட உழைக்க வேண்டிய நிலையில் இருக்கும் ட்ரம்ப் இப்போது குறி வைத்திருப்பது அந்த அந்த <20% அமெரிக்க இந்திய வாக்குகளை. இந்த <20% இல் பெரும்பாலானோர் வலது சாரி, தீவிர கருத்துகள் கொண்ட மோடி பக்தர்கள்! 

3. மிகப் பெரும்பாலான இந்த மோடி வாலாக்கள் பின் வரும் குழுக்களுக்குள்ளும் அடங்குகின்றனர்:

முஸ்லிம் எதிர்ப்பாளர்கள், கறுப்பின மக்களை வெறுப்போர், பெண்களை சமனாக நடத்தாதோர், இப்படி ஒரு நீண்ட பிற்போக்கு மண்டிய விடயங்களை ஆதரிப்போர் தான் இந்த விசித்திரமான ட்ரம்ப் ஆதரவு இந்திய அமெரிக்கர்கள். 

4. ஏன் விசித்திரமான ட்ரம்ப் ஆதரவாளர்கள் என்கிறேன்? 
அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவினுள் நுழையப் பயன்படுத்தும் எச் விசாவை ட்ரம்ப் மிகவும் கடினமாக்கி, இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டார்!
ட்ரம்பினால் ஊக்குவிக்கப் படும் வெள்ளையின மேலாண்மை வாதத்தினால் கறுப்பர்கள் , ஸ்பானியர்கள் மட்டுமல்ல பாதிக்கப் படுவது. ட்ரம்ப் அரச தலைவராகி சில மாதங்களில், ஒரு ட்ரம்ப் ஆதரவாளரால் கன்சாஸில் சுட்டுக் கொல்லப் பட்ட ஒரு இந்திய அமெரிக்கரே இதற்கு நல்ல உதாரணம். ஆனாலும், குந்தி இருக்கிற மரக்கிளையையே தறிக்கிற அளவுக்கு மோடி வாலாக்களின் வலது சாரித்தனம் புத்தியை மழுக்கி விட்டது!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இங்கேயும் இப்படி ஒரு விசித்திர கூட்டம் தெற்காசியர்கள், கறுப்பர்கள் பிரெக்சிற்றுக்கு வோட் போட்டது.

கேட்டால் ரொமேனியன் களவெடுக்கிறான் என்பார்கள்... கிரெடிட் கார்ட் என்ற பதத்தையே கெட்ட வார்த்தை போல ஆக்கியவர்கள் தாம் என்பதை இலகுவாக மறந்து விட்டு🤣

இன்னும் ஒருவர், அவரே தமிழ் பிரென்சு பிரஜை. குடும்பமாக இங்கே வர முடிந்ததே ஐரோப்பிய யூனியன் சட்டத்தால்தான். இருப்பதும் அரச உதவியில் (கையில் காசுக்கு வேலை செய்வது வேறு கணக்கு🤣).

“வெளியிலதான் போகவேணும் தம்பி, இவங்கள் எல்லாம் வந்து இந்த நாட்டை சுரண்டிறாங்கள்” என்றாரே பார்க்கலாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

கோசான், இது பற்றி உதயகுமார் என்ற கள உறவின் முன்னைய பதிவில் அறிந்தேன். இது ஆசியக் குடியேறிகளிடையே இருக்கும் ஒரு பொதுவான குணமோ என்று நான் யோசிப்பதுண்டு. புதிய குடிவரவாளராக வரும் போது தளர்வான குடிவரவுக் கொள்கை, உதவித் தொகை (இது அமெரிக்காவில் இல்லை), இவையெல்லாம் அனுபவிப்பர். குடிமகனாக வந்த அடுத்த நாளே கொடி பிடிக்கும் தீவிர கன்சவேர்டிவாக மாறி விடுவர். (எல்லாக் குடியேறிகளும் bleeding liberals ஆக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இல்லை!) 

ஆனால், அமெரிக்காவில் இத்தகைய கடும் போக்குடையோர் மிகச்சிறுபான்மையான இந்திய/இலங்கைக் குடியேறிகளே என்பதையும் குறிப்பிட வேண்டும்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

குறுகிய சுயலநல நோக்கு என நினக்கிறேன். குடிவரவை கட்டுபடுத்த வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டில் இருப்பது அவரவர் விருப்பம். ஒரு முன்னாள் குடியேறி கூட அந்த நிலைபாட்டில் இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லும் காரணங்கள்தான் மோசமானதாக, இனவாத கலப்பில், ஏழ்மையில் இருப்போரே எல்லா பிரச்சனைக்கும் காராணம் என்ற தொனியில் இருக்கும்.

இந்த சிந்தனையுடையோர் இங்கேயும் குறைவானோரே எனவே நானும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கேயும் இப்படி ஒரு விசித்திர கூட்டம் தெற்காசியர்கள், கறுப்பர்கள் பிரெக்சிற்றுக்கு வோட் போட்டது.

நானும் பிரெக்சிற்றுக்குத்தான் வோட் போட்டேன்.🤗

டேவிட் கமரோன் தேவையில்லாமல் referendum வைத்ததற்கு எதிர்ப்பைக் காட்டவும், எப்பவும் “வெல்லாத பக்கம்” 😱 வோட் போடவேண்டும் என்ற “கொள்கை”க்காகவும், கிழக்கு ஐரோப்பியர் போனால் இலண்டனில் வீடு விலை குறையலாம் என்ற நம்பிக்கையும் காரணங்கள். ஆனால் கிடைத்தது பொரிஸ் ஜோன்சனும், ஜேக்கப் ரீஸ்மொக்கும்😱😱😱

மீசையில் மண்படக்கூடாது என்பதற்காக வேலைத்தளத்தில் ஜேக்கப் ரீஸ்மொக்தான் எனது அரசியல் ஆசான் என்று சொல்லிவைத்துள்ளேன்😜😜😜 எங்கள் கம்பனியில் COO ஆக இருந்தவர் பொரிஸ் வெல்ல முக்கிய பங்காற்றியவர் என்பதால் சிலர் திருப்பி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஒரு இந்திய நண்பர் “கார்டியன் வாசிக்கும் நீ எப்படி பிரெக்சிற்க்கு வோட் பண்ணினாய்” என்று அடிக்கடி சிரிப்புடன் கேட்பார்😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.