செண்பகம் 21 பதியப்பட்டது October 21, 2020 Share பதியப்பட்டது October 21, 2020 விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று Bharati October 21, 2020விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று2020-10-21T04:55:40+05:30 FacebookTwitterMore விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வெளிவருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருக்கின்றது. இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர். இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார். எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த அரசாங்கம் கோரியிருந்தது. இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, சிறிலங்கா அரசு தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக கைக்கொள்கின்றது என வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/81589 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி 13,747 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம் இன்று காலை 10:30 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தத் தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்தவுள்ளது. எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த அரசாங்கம் கோரியிருந்தது. இதனை பிரித்தானிய உட்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. மேலும் பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, இலங்கை அரசு தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக்கொள்ளும் உபாயமாக கைக்கொள்கின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரித்தானியாவில்-விடுதல/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Nathamuni 2,778 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 (edited) தடை நீக்கம் தடைக்காக சொல்லப்பட்ட காரணங்கள் தவறானவை என்று சொல்லி, மேன்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என 38 பக்க தீர்ப்பில் அறிவிக்கப்படுள்ளது. நீதி மன்றுக்கு வெளியே இருந்து வந்த whatsup செய்தி. எமது மாவீரர்கள், எமது காவிய நாயகர்கள், எமது காவல் தெய்வங்கள்.... இனிமேல் பயங்கரவாதிகள் அல்ல. சுதந்திர போராட்ட தியாகிகள் என்று லண்டனில், நீதிமன்றுக்கு வெளியே வானம் பொத்திக்கொண்டு ஊத்தி வாழ்த்திக்கொண்டிருக்கின்றது. தமிழர் வாழ்வில் இன்று ஒரு முக்கிய வரலாறு பதியப்படுகின்றது. Edited October 21, 2020 by Nathamuni Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தமிழரசு 3,085 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை 10:30 அளவில் வெளிவந்தது மேலதிக தகவல் விரைவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட பிரிட்டனின் தடை உத்தரவுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு கோரிக்கை அடங்கிய மனுவை சமர்ப்பித்த போது பிரித்தானியா உள்துறை செயலாளர் அதை ஏற்கவில்லை . அதனால் லண்டனில் இருக்கும் மேட்ரிக்ஸ் சேம்பர்ஸின் பேராசிரியர் கோனார் ஜியார்டி மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ) வழியாக தடைக்கு சட்டரீதியான சவாலுக்கு உட்படுத்தும் நோக்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தது இது சிறப்பாக அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன தீர்ப்பாயத்தின் முன் விசாரிக்கப்படும். மேல்முறையீட்டு ஆணையம் (POAC). இதை நாடுகடந்த அரசாங்கத்தினை சட்ட ரீதியாக அமைக்கும் நோக்கம் கொண்டது அல்ல மாறாக மக்கள் பயமில்லாமல் கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்துக்காகவே என்று வாதிட்டார்கள் மேலும் "கடந்த 10 ஆண்டுகளில் எல்.ரீ.ரீ.ஈ யால் எந்த வன்முறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எல்.ரீ.ரீ.யை தடைசெய்வது என்பது நடைமுறையில் அனைத்து தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளையும் தகர்த்துவிடுகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன . ஆனால் உள்துறை அமைச்சு தடை நீக்கத்துக்கு எதிராக மறுத்துள்ள கடிதத்தில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது . அது 2018 இல் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவமாகும் . அது புலிகள் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள் . எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை நீக்க உள்துறை அலுவலகத்தை வழிநடத்தும் அதிகாரம் POAC க்கு உள்ளது என்றும் வாதிட்டு இருந்தார்கள் . விடுதலை புலிகள் அமைப்பு மார்ச் 2001 இல் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டது, அது "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி தமிழ் அரசுக்காக போராடும் பயங்கரவாத குழு" என்று வகைப்படுத்தப்பட்டது. ஒரு குழுவின் தடை அதை ஒரு செய்கிறது. இங்கிலாந்துஅரசாங்கம் பல ஆதாரங்களை இரகசியமாகக் பெற்றே இதை செய்திருக்கிறது என்றும் வாதிட்டார்கள் இந்த வழக்கு சென்றவருடம் நடந்தது . அந்தவகையில் இன்று நடந்த வழக்கின் போது உள்துறை அமைச்சு தனது எதிர்ப்பை வாபஸ் வாங்கியது . அதனால் விடுதலை புலிகள் மீதான தடை விலகியது . http://www.vivasaayi.com/2020/10/ltte-uk_21.html Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Nathamuni 2,778 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 (edited) 36 minutes ago, Nathamuni said: தடை நீக்கம் தடைக்காக சொல்லப்பட்ட காரணங்கள் தவறானவை என்று சொல்லி, மேன்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என 38 பக்க தீர்ப்பில் அறிவிக்கப்படுள்ளது. இது வழமையான நீதிமன்று அல்ல. ஒரு விசாரணை ஆணைக்குழு. இதன் முடிவு அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டும். அரசு இறுதி முடிவினை எடுக்கும். Edited October 21, 2020 by Nathamuni Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan 5,606 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 நல்ல முன்னேற்றகரமான முயற்சி. இதே போன்று விடுதலைப்புலிகள் மீது தடைவிதித்துள்ள நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தடைநீக்க வற்புறுத்த வேண்டும். காலம் கடந்த செயல் என்றாலும்.. எனியும் தாமதிக்கக் கூடாது. தற்போதைய தெற்காசிய - சீன - அமெரிக்க பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ நகர்வுகளை நமக்கு சாதமாகப் பாவிப்பது தொடர்பில்.. தமிழர் தரப்புக்கள் சிந்திப்பதும் செயற்படுவதும் அவசியம். 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,677 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சட்டவலுவற்றது – விஷேட ஆணையம் தீர்ப்பு 197 Views தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது என்ற பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவு சட்டவலுவற்றது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகத்தை 2018ம் ஆண்டில் கோரியிருந்தது. ஆனால் பிரித்தானிய உள்துறை அமைச்சகம் 2019 மார்ச் மாதம் 8ம் திகதி மேற்குறிப்பிட்ட நாடுகடந்த அரசாங்கத்தின் கோரிக்கையை மறுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது என்ற தங்கள் முடிவை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் பிரித்தானியாவில் வாழும் அதன் அங்கத்தவர்கள் சிலர் இம் முடிவுக்கு எதிராக வலுவான பிரித்தானிய சட்ட வல்லுநர்களின் துணையோடு, ஒரு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் படி, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் மேன்முறையீடு செய்வதற்கென உருவாக்கப்பட்ட விசேட ஆணையத்தால் இம்மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகள் திறந்த விசாரணைகள், மூடிய விசாரணைகள் என இருவகையாக நடைபெற்றன. இவ் விசாரணைகள் கடந்த யூலை மாதம் 29, 31 ஆகிய இரு தினங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் படி இம்மேன்முறையீட்டுக்கான தீர்ப்பை மேற்படி ஆணையம் பிரித்தானியாவில் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் என்ற பட்டியலில் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவு சட்டவலுவற்றது என்று மேற்குறிப்பிட்ட ஆணையம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில், இது ஒரு முக்கிய முடிவாக இருக்கின்ற போதிலும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கிருந்த தடை நீங்கியது என்று, இதன் மூலம் நாம் பொருள்கொள்ள முடியாது. தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை நீக்கும் அதிகாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குரியதாகும். பிரித்தானிய நாடாளுமன்றம் இது தொடர்பாக எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறது என்பதை எதிர்வரும் நாட்களில் அறியக்கூடியதாகவிருக்கும். https://www.ilakku.org/தமிழீழ-விடுதலைப்-புலிகள்/ Quote Link to post Share on other sites
செண்பகம் 21 Posted October 22, 2020 Author Share Posted October 22, 2020 விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன? Bharati October 22, 2020 விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன?2020-10-21T22:49:59+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் கொண்ட ஆதாரங்களும் காரணங்களும் போதுமானதாக இல்லை. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடாத போதிலும், அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உள்துறை கவனத்தில் கொள்ளவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம், 1991ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்ல காரணமாக இருந்தது, 1993இல் இலங்கை பிரதமர் ரணசிங்க பிரேமதாஸாவை கொல்ல காரணமாக இருந்தது. பல தாக்குதல்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தியது என 1976ல் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம், அவர் 2009இல் சாகும்வரை இலங்கையில் உள்நாட்டுப் போரை மிகத் தீவிரமாக செயல்பட்டது. குடிமக்கள், கட்டமைப்புகள், இலங்கை அரசு மட்டுமின்றி நாடு கடந்தும் அதன் செயல்பாடுகள் இருந்துள்ளதாக அரசு தரப்பில் விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி உள்துறையின் தீவிரவாத எதிர்ப்புப்பிரிவின் தலைமை அதிகாரியாக டூகுட் என்ற அதிகாரி இதற்கான சாட்சியத்தை அளித்திருந்தார். அதில் தரை, வான் வழி, கடல் வழியாக படைகளை நிறுவியிருந்ததாகவும் அதன் சர்வதேச தொடர்புகள் மிகவும் நெருக்கமாகவே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ராணுவ ரீதியில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வியுற்றிருந்தாலும், அந்த இயக்கம் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை விடுதலைப்புலிகள் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் டூகுட் கூறியிருந்தார். இத்தகைய சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்க முந்தைய காலகட்டத்திலும் கடைசியாக 2014ஆம் ஆண்டிலும் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அந்த மனுக்கள் உள்துறையால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிறகும் 2018ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் தேதி மேலும் 10 பேர் பிரிட்டன் உள்துறையிடம் அதே கோரிக்கையுடன் விண்ணப்பித்தனர். அதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, தீவிரவாத பகுப்பாய்வு அமைப்பு, விடுதலைப்புலிகள் தொடர்பான அச்சுறுத்தலை மதிப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தப்பின்னணியில் பிரிட்டன் உளவுத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில், பிரிட்டனில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கும் முன்பாக, அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்த, அதன் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் செயல்பாடுகள் உலக நாடுகளிலும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் இதில் எடுக்கப்படும் உறவுகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் உள்துறை சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. 2014இல் வடக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்ட மூன்று பேர் (ஒரு காவலரை சுட்டதாக கூறப்படும் சம்பவத்தில்) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு பவுடர் ஆகியவற்றுடன் பிடிபட்டது, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், தற்கொலை குண்டுதாரி கவசம், நான்கு கண்ணிவெடிகள், 9 எம்எம் துப்பாக்கி, இரண்டு தோட்டா பெட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது, 2017ஆம் ஆண்டில் தமிழ் எம்.பி ஒருவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மூலம் கொல்ல வெளிநாட்டில் உள்ள இயக்கத்தின் ஆதரவாளர்கள் பணியமர்த்தியது, அதே ஆண்டு ஜூலை மாதம், உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாவலரை முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கொலை செய்தது, அதே ஆண்டு பொது அமைதியை பாதிக்கும் வகையிலான துண்டு பிரசுரங்கள் இலங்கையில் விநியோகிக்கப்பட்டது போன்ற செயல்பாடுகள், விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் பல வடிவங்களில் இருப்பதை அனுமானிக்க முடிவதாக அரசு தரப்பு ஆணையம் முன்பு சாட்சியம் அளித்தது. ஆனாலும், இவை அனைத்தும் இலங்கையில் அந்நாட்டுக்குள் நடந்த விஷயம் என்றும் அவை உண்மையிலேயே விடுதலைப்புலிகள் பின்னணியிலேயே நடந்ததா என்பதற்கான விசாரணை அங்கு நடந்து வரும் நிலையில், அவற்றைக் கொண்டு பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க அரசு உத்தரவிடுவது சரியல்ல என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தனக்கான அதிகாரத்தை உள்துறைச் செயலாளர் எடுத்த விதம் சரியல்ல என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலிகள்தான் ஈடுபட்டதாக ஆரம்பகால சமூக ஊடக தகவல்களில் வலம் வந்த விவரங்கள், வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிந்தைய விசாரணையில், அந்த தாக்குதலில் ஈடுபட்டது வேறு ஒரு இயக்கம் என இலங்கை அரசு தரப்பு அதன் நீதிமன்றத்தில் கூறியது. இது குறித்து தனது தீர்ப்பில் குறிப்பிட்ட பிரிட்டன் ஆணையம், “இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வந்த செய்திகள் அடிப்படையில் உள்துறைச் செயலாளர் அவசரப்பட்டு முடிவு எடுக்க தன்னை அனுமதித்துக் கொண்டதாகவே கருதுகிறது” என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்க எடுத்த காரணங்கள், 2018ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் மீது எடுத்த தமது முந்தை முடிவு எந்த அளவுக்கு தாக்கத்தை கொண்டிருக்கும், இதுபோன்ற விவகாரத்தில் உள்துறை செயலாளர் மட்டுமே முடிவெடுப்பது போதுமானதா? ஆகிய கேள்விகள் எழுவதாக ஆணையம் கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து உள்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க செயலாளர் பிறப்பித்த உத்தரவும் அது தொடர்பான முடிவும் எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்ற கருத்தை மட்டுமே ஆணையத்தால் வெளியிட முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த அடிப்படையில், உள்துறைச் செயலாளரின் முடிவு தவறானது. அதே சமயம், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வம்சாவளி லண்டன் வாழ் இலங்கை தமிழரான வழக்கறிஞர் அருண் கனநாதன் பிபிசியிடம் பேசும்போது, “நான் இந்த வழக்கில் நேரடி சட்டத்தரணி கிடையாது. ஆனாலும், வழக்கின் விசாரணை பற்றி அறிந்தவன் என்ற வகையில், “விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிக்க அரசு கவனத்தில் கொண்ட ஆதாரங்களில் சிக்கல்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை பகுப்பாய்வு செய்த விதத்தில் தவறு என்பதால், அந்த முடிவு சட்டத்துக்கு புறம்பானது” என்று ஆணையம் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பிரிட்டன் உள்துறை செயலாளர் 2001ஆம் ஆண்டில் தடை விதித்தார். அந்த தடை உத்தரவு அவ்வப்போது காலாவதியாகும்போது, மதிப்பாய்வுக்குழு தரும் அறிக்கை அடிப்படையில் அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2011இல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு சார்பில் உள்துறைச் செயலாளரின் முந்தைய உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், விடுலைப்புலிகள் என்ற அமைப்பு ஒரு ராணுவ கட்டமைப்பாக இலங்கையில் இயங்கவில்லை. எவ்வித பயங்கரவாத செயல்களும் அங்கு நடக்கவில்லை என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை கடந்த ஆண்டு கவனத்தில் கொண்ட உள்துறை செயலாளராக இருந்த சஜித் ஜாவேத், இலங்கையில் 2009ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகும் அங்கு நடந்த பல்வேறு சம்பவங்களில் அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலும் அவர்களின் ஆதரவாளர்கள் உலக அளவில் இருப்பதாலும், அந்த இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார். இது குறித்து வழக்கறிஞர் அருண் கனநாதன் கூறும்போது, “தற்போதைய ஆணையத்தின் தீர்ப்பு அடிப்படையில், இரண்டு உத்தரவுகள் இனி பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்று, உள்துறை செயலாளர் எடுத்த முடிவு பிழை என்றபடியால், அதை மீளாய்வு செய்ய உத்தரவிடலாம் அல்லது பிரிட்டன் அரசே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உத்தரவிடலாம். இது தொடர்பான தங்களின் நிலையை 28 நாட்களுக்குள் ஆணையத்திடம் மனு தாரர்களும் அரசு தரப்பும் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால், “விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தாங்களாகவே பிரிட்டன் அரசு நீக்குவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அது அரசியல் சூழ்நிலை, இலங்கையுடனான உறவு, அரசியல் சர்வதேச அழுத்தம் ஆகியவை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று வழக்கறிஞர் அருண் கனநாதன் தெரிவித்தார். இந்த வழக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கரோலைன் ராபின்சன் பிபிசி தமிழிடம் கூறும்போது, “ஆணையத்தின் தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு, ஆணையம் வழக்கு விசாரணைக்காக நியமித்த சிறப்பு வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகள், எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு அனுமதிக்கப்பட்ட அவகாசமான 28 நாட்களுக்குள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை பிறப்பிக்கும். ஆனால், அந்த உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதை குறிப்பிட முடியாது,” என்று தெரிவித்தார். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கும் அறிவிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற சிறப்புத் தீர்ப்பாயம் உள்ளது. கடைசியாக இந்திய உள்துறை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து 2019ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை “தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம்” ஆக அந்நாட்டு அரசு 1997ஆம் ஆண்டு பட்டியலிட்டது. உலக அளவில் தற்போது இந்தியா, பிரிட்டன் உட்பட 32 நாடுகள், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்துள்ளது. பி.பி.சி. https://thinakkural.lk/article/81915 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் 2,005 Posted October 22, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2020 பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடினையடுத்து அந்த ஆணையம் வழங்கியிருக்கும் திருப்புமுனையான தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை (எல்.டி.டி.இ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்வதற்கான உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடுடையது” என்று சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பளித்துள்ளதன் மூலம், இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டரீதியிலான அமைப்பாக மீண்டும் செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த ஆணையத்தின் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற முறையீடு முன்வைக்கப்பட்டு, அரசின் முடிவு தவறானது எனும் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே இரண்டாவது தடவையென்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை லண்டனில் தனது தீர்ப்பை வெளியிட்ட ஆணையம், விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து முடிவெடுப்பதற்கான இரண்டாவது விசாரணையை இப்போது நடத்துகிறது. புலிகளின் பெயரினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்குவதான சட்டபூர்வமான அறிவிப்பினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு இங்கிலாந்தின் உள்த்துறைச் செயலாளருக்கு இவ்வாணையம் அறிவுருத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இத்தீர்ப்பிற்கெதிராக உள்த்துறையமைச்சு செயற்படக்கூடும் என்றும், இவ்விடயம் தொடர்பான சாட்சியங்களைத் தானே ஆராய்ந்து தனது இறுதிமுடிவினை அறிவிக்கும் சந்தர்ப்பமும் இருக்கின்றதென்று கூறப்பட்டிருக்கிறது. புலிகள் மீதான தடையினை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் இத்தீர்ப்புத் தொடர்பாக உற்சாகம் அடைந்திருப்பதாகவும், இத்தீர்ப்பின் மூலம் புலிகள் இங்கிலாந்தில் சட்டபூர்வமாக இயங்கும் சூழ்நிலை உருவாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சுதந்திர விடுதலைப் போராளி அமைப்பேயன்றி, பயங்கரவாத அமைப்பு அல்ல என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வழக்கில் வாதிட்ட சட்டவல்லுனர்களின் கருத்துப்படி, ஒரு அமைப்பு உண்மையாகவே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்த்துறைச் செயலாளர் சந்தேகங்களுக்கு இடமின்றி நம்பும் பட்சத்தில் அவ்வமைப்பு தடைசெய்யப்படலாம். ஆனால் புலிகள் விவகாரத்தில் மிகத்தவறான விதத்தில் வழிநடத்தப்பட்டே உள்த்துறை அமைச்சர் இத்தடையினை பிறப்பித்திருக்கிறார். ஆகவே இத்தடையானது குறைபாடு உடையது என்று கூறியிருக்கின்றனர். 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் 2,005 Posted October 22, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2020 (edited) 2018 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையினையடுத்து, தடையினை மீளவும் அமுல்ப்படுத்துவதற்கு ஏதுவாக தனது புல்நாய்வு நிறுவனங்களை உள்த்துறையமைச்சு புலிகளின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள, சாட்சியங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தது. இதன் அடிப்படையில் பின்வரும் இரு முக்கிய சம்பவங்களை இங்கிலாந்து புலநாய்வுத்துறை இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தடைக்கு ஆதாரமாக முன்வைத்திருந்தது.அத்துடன், சில சம்பவங்கள் இப்படித்தான் நடந்திருக்கலாம் என்று அவர்களே எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டும் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன. முதலாவது, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் காவற்கடமையின்போது கொல்லப்பட்ட இரு பொலீஸ்காரரகள். இச்சம்பவத்தின் பின்னர் முன்னாள் புலிகளின் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் பொலிஸாரினால் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாக முன்வைத்திருந்தனர். ஆனால், பொலீஸாரின் கொலையுடன் உண்மையிலே சம்பந்தப்பட்டது ஒரு இஸ்லாமியத் தீவிரவாதக்குழுதான் என்று கண்டறியப்பட்ட பின்னரும்கூட, தனது ஆதாரத்தினை மீள்பரிசீலினை செய்வதிலிருந்து உள்த்துறயமைச்சு தவறியிருந்தது. ஆனால், தொடர்ந்தும் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டுவந்த இங்கிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு புலநாய்வுச்சேவை, புலிகள் மீது தொடர்ச்சியான வேறும் 6 குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களாக முன்வைத்தது. அவற்றுள் மிதவாத தமிழ் அரசியல்வாதியான சுமந்திரன் மீதான 2017 ஆம் ஆண்டின் கொலை முயற்சி, உயர் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீதான கொலை நடவடிக்கை என்பன குறிப்பிடத் தக்கன. மேலும், புலிகளின் மீளுருவாக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள், மாவீரர்களை நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கை ராணுவத்தாலும், பொலிஸாரினாலும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த முன்னாள்ப் போராளிகளை புலிகள் இன்றும் உயிர்ப்புடன் செயற்படுகிறார்கள் என்று உறுதிப்படுத்த ஆதாரங்களாகக் காட்டிய இங்கிலாந்தின் புலநாய்வுத்துறை, இவ்வாறான சம்பவங்களில் இடம்பெற்றுவரும் பொய்யான தகவல்களின் அடிப்படையிலான கைதுகள், நாடக பாணியிலான சம்பவங்கள், மனிதவுரிமை மீறல்கள் ஆகிய எவற்றினையும் கருத்தில் கொள்ளவில்லை. Edited October 22, 2020 by ரஞ்சித் பந்தி சேர்க்கப்பட்டது Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி 13,747 Posted October 22, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2020 50 minutes ago, ரஞ்சித் said: மிதவாத தமிழ் அரசியல்வாதியான சுமந்திரன் மீதான 2017 ஆம் ஆண்டின் கொலை முயற்சி, உயர் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீதான கொலை நடவடிக்கை என்பன குறிப்பிடத் தக்கன. சுமந்திரன் மீதான கொலை முயற்சி என்பது... சோடிக்கப் பட்ட ஒரு கதை என்றே, அன்று, பலரும் கூறினார்கள். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் 2,005 Posted October 22, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2020 வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சின் கருத்தின்படி, புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்துவருவதால் தமது நட்புநாடொன்றுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று இங்கிலாந்து அஞ்சுகின்றது. ஆதலால், வெளிவிவகார பொதுநலவாய அமைச்சு புலிகள் மீதான தடை தொடர்வதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தது என்றும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. அத்துடன் இலங்கையிலிருக்கும் இங்கிலாந்தின் உயர்ஸ்த்தானிகர் இந்த முறையீட்டு ஆணையத்திற்கு 5 ஆம் திகதி, பெப்ரவரி 2019 அன்று அனுப்பிய காட்டமான கடிதத்தில் இலங்கையில் இன்று ஏற்பட்டுவரும் மிகப்பலமான இன ஐக்கிய நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால சமாதான முயற்சிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக இவ்வழக்கினைத் தொடர்ந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு கரிசணை எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், இத்தடையினை நீக்குவதால் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இருக்கும் நட்புப் பாதிக்கப்படலாம் என்றும், இங்கிலாந்தின் பெயர் இலங்கையில் பாதிப்படையலாம் என்றும், இத்தடையினை நீக்குவதால் எவருக்கும் எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லையென்றும் மேலும் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் ஒரு சில தமிழர்களே புலிகளை இன்னும் ஆதரித்துவருவதால் இத்தடைநீக்கம் பெரிதாக அவர்களுக்கு நண்மையளிக்கப்போவதில்லையென்று கூறும் அவர், இங்கிலாந்தில் வாழும் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகங்களிடையே இத்தீர்ப்பு முறுகல் நிலையினை உருவாக்கும் என்றும் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,677 Posted October 22, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2020 சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி; யுத்தம் தொடர்கிறது; வி.உருத்திரகுமாரன் 72 Views விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், இந்த விசேட தீர்பாயத்தின் கடந்த 20 வருட வரலாற்றில் இது இரண்டாவது வழக்காகும். இந்த வழக்கினை முழுமையாக நடத்தியமைக்கு எங்களை நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம். எமது இலக்கினை நோக்கி அரசியல்ரீதியான வெற்றியினை அடைவதற்கு, சட்டரீதியான இப்போராட்டத்தின் முதல்கள வெற்றியை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்த வேண்டும். சட்டயுத்தம் தொடர்கின்றது. எந்தவொரு அநீதியான சக்தியாலும், எவ்வளவு பலமிக்க சக்தியாக இருந்hதலும் கூட, அதனை எதிர்த்து போராடும் வல்லமை தமிழ் தேசிய இனத்துக்கு உண்டு என்பதனை நாம் நிறுவியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். நிகழ்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகள் இருக்கிறதா என்றே சட்டம் பார்கின்றது. கூறுகின்றது. குறிப்பாக கடந்த 18 மாதங்கள் என்ன நடந்தது என்றே சட்டம் பார்கின்றது. அந்தவகையில் விடுதலைப்புலிகள் மீது பிரித்தானிய உள்துறை அமைச்சு விதித்திருந்த தடைக்கான காரணங்கள் வலுவாக இல்லை என இத்தீர்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சின் தடையினை நீக்குகின்ற அதிகாரம் இந்த தீர்ப்பாயத்துக்கு இல்லாதுவிட்டாலும், பிரித்தானிய அரசாங்கத்துக்கு இதுவொரு அரசியல் சவாலாக இருக்போகின்றது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் இத்தீர்பின் அடிப்படையில் அரசியல்ரீதியான கொள்கை முடிவினை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக பாராளுமன்றத்தின் ஊடாக தடையினை நீக்க வேண்டும். குறிப்பாக பிரித்தானிய அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு, ஆணையம் வழக்கு விசாரணைக்காக நியமித்த வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகள், அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதன் ஒவ்வொரு கட்டங்களையும் எதிர்கொண்டவாறு இச்சட்டப்போராட்டத்தின் இறுதி வெற்றியினை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டப்போராட்டத்தினை தொடரும் என உறுதிபட பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/சட்டப்போராட்டத்தின்-முத/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,677 Posted October 23, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 23, 2020 `புலிகள் மீதான தடை நீக்கம்... இந்தியா எச்சரிக்கையாகக் கையாளும்’ - வானதி சீனிவாசன் விடுதலைப் புலிகள் கொடி ``ராஜீவ் கொலையை விசாரணை செய்துவரும் எம்.டி.எம்.ஏ-வின் முடிவைத் தெரிந்துகொண்டால், புலிகள் மீதான தடையை இந்தியா விலக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் திருச்சி வேலுச்சாமி. `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது’ என இங்கிலாந்து நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, `இந்தியாவிலும் தடை நீக்கப்படுமா?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. 2009-ல் சர்வதேச உதவியோடு இலங்கை சிங்கள அரசால், ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இறுதிப்போர் எனும் இனப் படுகொலையில், விடுதலைப் புலிகளும் அப்பாவித் தமிழர்களும் அழித்தொழிக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உலகெங்கிலும் தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். பிரபாகரன் இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சித்திரித்து தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, தொடர்ந்து அந்தத் தடை நீட்டிக்கப்பட்டும்வருகிறது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், `விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து அரசின் தடை தவறானது’ என நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்தத் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசும், தடையை விலக்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, `இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை விலக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும், ஈழ ஆதரவாளர்களும் இது குறித்த கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசும் தமிழ்த் தேசிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, ``2009-க்குப் பிறகு இந்தியாவுக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் எதுவுமே இல்லை. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றுகூட ஒருவரும் கைதுசெய்யப்படவும் இல்லை. ஆனாலும்கூட, இங்கே விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. ராஜீவ் காந்தி இதனால், இங்கிருக்கக்கூடிய இலங்கை அகதிகள் பெரும் பாதிப்புக்காளாகிவருகின்றனர். இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அகதிகளாக இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் ஈழ மக்கள். ஆனால், இங்கேயே அகதிகளாகப் பார்க்காமல், அவர்களைத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாகவே இந்திய அரசும் பார்த்துவருகிறது. அதனால், அகதி முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் இந்த மக்கள், தங்கள் பண்பாட்டு உரிமை மற்றும் குடியுரிமையைக்கூட மீட்டெடுக்க முடியாமல் வருடக்கணக்கில் துயரம் அனுபவித்துவருகின்றனர். அடுத்து தங்கள் அரசியல் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் `நாடு கடந்த தமிழீழ அரசாங்க'மாக பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் இன்னும் தடை நீடிக்கும் காரணத்தால் செயல்பட முடியாத சூழலே நிலவுகிறது. செயல்பாட்டில் இல்லாத ஓர் அமைப்பு, இந்தியாவின் இறையாண்மையும் பாதிக்காத ஓர் அமைப்புக்குத் தடை மட்டும் தொடருவதால், இங்கிருக்கக்கூடிய அகதிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவருவது எந்த வகையில் நியாயம்? உதாரணமாக, திருச்சியிலுள்ள `சிறப்பு அகதிகள் முகாமில்' மட்டும் 62 பேர் இருக்கிறார்கள். அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள் ஏதேனும் சிறு குற்ற வழக்குகளில் சிக்கினால்கூட, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்களில் அடைத்துவைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா... `இவர்களும் விடுதலைப் புலிகள்தான்' என்ற தவறான யூகத்தின்பேரால் கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் இவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. சீமான் ட்விட்டர் பதிவு நம்மை நம்பி அடைக்கலம் தேடிவந்தவர்களை வெறும் யூகத்தின் பெயரால் கைதுசெய்யக் கூடாது. `வாழும் உரிமை' எல்லோருக்குமே உண்டு. ஆனால், இப்படி உளரீதியான தொடர் அச்சுறுத்தல்களை இந்திய அரசு தந்துகொண்டேயிருப்பதால், அந்த மக்கள் தங்கள் கல்வி, உணவு, வாழ்விடம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கையைக்கூட இங்கே எழுப்ப முடியவில்லை. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா இனிமேலாவது விலக்கிக்கொள்ள வேண்டும்'' என்றார் கோரிக்கையாக. இதையடுத்து, `இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியம்தானா' என்ற கேள்விக்கு பதில் கேட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் கமிஷனில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி வேலுச்சாமியிடம் பேசியபோது, ``முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தடை விதித்தன. விடுதலைப் புலிகளின் வழிமுறைகள் வேறாக இருந்தாலும், அவர்களின் போராட்டம் என்பது, சுதந்திரத்துக்கான போராட்டம்தான். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு இந்தியா உதவியிருக்கிறது. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியபோது, அன்றைக்கு இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தென்னாப்பிரிக்காவின் இனவெறியை எதிர்த்து, அந்த நாட்டோடு இந்தியாவுக்கு இருந்த உறவையே துண்டித்துக்கொண்டார். இலங்கையில் சிங்களம் - தமிழ் என்ற இன வாதத்தின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்துவந்திருக்கிறது. ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பிறகு இந்த நிலைமை அப்படியே மாறிப்போனது. ராஜீவ் கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து நான் தெரிவித்த கருத்துகளை ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் `பல்முனை நோக்கு புலனாய்வு' மூலமாக இன்றளவிலும் விசாரணை நடைபெற்றுவருவதாக இந்தியத் தரப்பிலும் சொல்லப்படுகிறது. திருச்சி வேலுச்சாமி 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதோ அல்லது இதுவரை விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தாலோ போதும்... இங்கிலாந்து இப்போது எடுத்திருக்கும் முடிவைத்தான் இந்தியாவும் எடுக்க வேண்டி வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட, அழுத்தமான எண்ணம். இந்தியா, ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நாடு. இன்றைக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., `இந்து மதப் பாதுகாவலன்' என்று சொல்லித்தான் பொறுப்புக்கு வந்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்றது இனவாதம் என்றாலும்கூட, அங்கே கொல்லப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள். கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள். இந்தச் சூழலில், மற்ற கட்சிகளுக்கோ இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க-வுக்கு அரசியல் காரணத்தைத் தாண்டி, அவர்கள் சொல்லிவரும் 'இந்து மதப் பாதுகாவலன்' என்ற காரணமும் அடங்கியிருக்கிறது. இப்போதும் இலங்கையிலேயே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதும், புத்த விஹார்கள் கட்டப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. பா.ஜ.க இதுநாள் வரையிலும் சொல்லிவருவது உண்மையென்றால், அந்த உண்மையை உலகறியச் செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எனவே, உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு, பல்முனை நோக்கு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிவுகளைப் பெற்று, அதன்பேரில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து, இங்கிலாந்து காட்டும் வழியில் இந்தியாவை பயணப்படவைக்க வேண்டியது அதன் கடமை!' என்கிறார் அழுத்தமாக. பா.ஜ.க-வின் தமிழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான வானதி சீனிவாசன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``இங்கிலாந்து நாட்டிலுள்ள நீதிமன்றத் தீர்ப்பு, `விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது' என அமைந்திருக்கிறது. இந்தநிலையில் அந்த நாடு இது குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. வானதி சீனிவாசன் 2009-க்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கையிலேயே செயல்பட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இயங்காத ஓர் இயக்கத்தின் மீதான தடையை நீக்கம் செய்வதால், எந்த மாதிரியான பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. இந்தச் சூழலில், தடையை நீக்குவதற்கான முயற்சியை யார் எடுக்கவிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்துத்தான் இந்திய அரசும் இதில் ஒரு முடிவெடுக்க முடியும். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியில் சென்று வேலை பார்க்கும் வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டேவருகின்றன. `விடுதலைப் புலிகள்' என்ற பார்வையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக சமீபகாலங்களில் எந்தச் செய்தியும் கிடையாது. ஈழத் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வது உள்ளிட்ட விஷயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு செய்துதான் வருகிறது. மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் பயணத் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் இலங்கை அரசுடன் வலுவான தொடர்பையும் ஏற்படுத்தியிருக்கிறோம். இதற்கான அழுத்தங்களையும் தமிழக பா.ஜ.க தொடர்ந்து கொடுத்துவருகிறது. நரேந்திர மோடி தடையை இன்னும் நீட்டிப்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா அல்லது தடையை விலக்குவதால் இங்கிருக்கும் அகதிகளுக்கு புதிய வாழ்க்கை கிடைக்குமா என்பதையெல்லாம் இந்த சமயத்தில் சொல்ல முடியவில்லை. உலக நாடுகளில், தீவிரவாதத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையான முடிவை எடுக்கவே வாய்ப்பிருக்கிறது'' என்கிறார். https://www.vikatan.com/government-and-politics/politics/india-to-handle-carefully-ltte-ban-lift-order-of-uk-tribunal-says-bjp-vanathi-srinivasan Quote Link to post Share on other sites
puthalvan 106 Posted October 25, 2020 Share Posted October 25, 2020 On 23/10/2020 at 23:01, உடையார் said: உலக நாடுகளில், தீவிரவாதத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. அப்படியா?. அப்ப ஆப்கானிஸ்தான்?. ஆதாரமில்லாமல் அள்ளிக்கொட்ட பழகிவிட்டீர்கள். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் 2,806 Posted October 25, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2020 On 23/10/2020 at 08:01, உடையார் said: புலிகள் மீதான தடை நீக்கம்... இந்தியா எச்சரிக்கையாகக் கையாளும்’ - வானதி சீனிவாசன் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்களின் வாக்குகளை கவர்வதற்காக தடையை எடுக்கலாம். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் 2,806 Posted October 30, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2020 மேற்குலகில் மாற்றம் வருமா? Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.