Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் |  Athavan News

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், கடந்த 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட தாக்குதலில் 21 உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்திய-இராணுவத்தினரால்-2/

Link to post
Share on other sites

இதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை....ஆனால் அவர்களின் படைகளால் கொலை செய்யப்பட்டவர்களின் நினை நாளை அணுஸ்டிக்க அனுமதி மறுக்கப்ப்ட்டது.....அரசியல் புகுந்து விளையாடுகிரது

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கார்த்திகையில் பிறந்த கவிதை  கல்மனதையும் கரைக்கும் கவிதை.....! நன்றி சகோதரி....! 
    • இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித். இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார். பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே? அதுவும் சாரம் கட்டிய பெடியள்.
    • எங்களுக்காக  உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர்   தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு  மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர்   பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர்   எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர்   ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமிழர் பெயரை தரணியே போற்றிட  தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர்   அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால் கட்டிய கூடும் சிதைந்தே போனதே   அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே   ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே ஓசை கொண்டு ஒலித்த குரல்கள் ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே   ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில் கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள் கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும் போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்   அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்   தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்   மண்ணை இழந்து மறுகினோமாயினும் ஊரை இழந்து உருகினோம் ஆயினும்  மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம் மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்   வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன் வேங்கையானவர் வீரம் மறந்திடோம் கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய உங்களின் வீரம் என்றும் மறந்திடோம் படை நடத்திப் பகைவரை விரட்டித்   துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம் கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம் மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.