Jump to content

மேதகு திரைப்பட முன்னோட்டம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மேதகு திரைப்பட முன்னோட்டம்

தமிழீழ தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு.
21 வயதே ஆனா பிரபாகரன் எனும் இளைஞன் ஆயுதப் போராட்டாம் தான் தமிழீழ விடுதலைக்கான ஒரே தீர்வு என கருதி தன்னை முழுமையாக போராட்ட களத்தில் அற்பணிக்க துணிந்ததற்கு பின்னால் உள்ள அரசியலே இக்காவியம்.

Direction                 : Kittu
DOP                        : Riyas
Music                      : APK
Art Director             : Mujbur, Ajar
Editing                    : Elango
DI                            : Vinayagam
CG                          : Aravind
Sound Recording    : Golden Studio

 

உறவுகளுக்கு வணக்கம்,

“மேதகு” முன்னோட்டம் இன்று (21/10) புதன் மாலை இந்திய நேரம் 6 மணிக்கு கீழ்கண்ட அன்பர்கள் வாயிலாக அவர்களது முகநூல் கணக்குகளில் ஊடாக வெளியிடுகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்:

வழக்கறிஞர் நல்லதுரை அண்ணன்
Ambalarajan Nalladurai

பேராசிரியர் கல்யாணசுந்தரம்
Kalyanasundaram Sanmugam

கார்டூனிஸ்ட் பாலா
Balakrishnan G

வழக்கறிஞர் அறிவுச்செல்வன்

திரு அண்ணன் (Ireland)

சுதன் அண்ணன் (UK)

ஜாய்ஸ் (USA)

ராஜவேல் நாகராஜ்

பாரிசாலன்

இங்கர்சல் (Norway)
Ingersol Selvaraj

ரஹ்மானியா (Germany)

குகன் குமார்
குகன்குமார் தஞ்சை குகன்குமார்

மற்றும் கீழ்கண்ட வலையொளிகளின் (YouTube) வாயிலாகவும் இந்த முன்னோட்டம் குறித்த நேரத்தில் வெளியாகும்:

ழகரம் - https://bit.ly/34e1or7
பயணி - https://bit.ly/37ovk5W
செங்கோல் - https://bit.ly/3m616Zn
டெண்ட் கொட்டாய் - https://bit.ly/2Hp8VKC
நையப்புடை - https://bit.ly/37owFK0
தமிழ்த்தேசியம் - https://bit.ly/3kgCGMk
ரைசிங் தமிழ்ஸ் - https://bit.ly/37qrlpr

 

https://www.facebook.com/NaiyappudaiOfficialPage/

Edited by உடையார்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடையார் இதை யார் எங்கே தயாரிக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இதை யார் எங்கே தயாரிக்கிறார்கள்?

பிரபாகரன் பெயரை வைத்து.!? “மேதகு” திரைப்படம் கதை.!? உண்மையை உடைக்கும் “கிட்டு நையப்புடை”

 

http://www.velichaveedu.com/2920-1-a/

THE RISE OF KARIKAALAN | TAMIL SHORT FILM | KITTU | THIRUMURUGAN | RIYAS | APK | ROBERT | SANTOSU

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"மேதகு"
தமிழீழ தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்.. 
வாழ்க்கைப் படம் பற்றிய செய்திகளை... 
எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு,  நன்றி உடையார். 🙏

Link to comment
Share on other sites

28 minutes ago, நந்தன் said:

இப்படத்தை நாங்கள் எடுப்பதே சிறந்தது.

 

நாங்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ? புரியவில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னொருத்தரும் வெப் சீரியல் தொடங்கப்போகின்றேன். தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசியும் இருக்கின்றேன் என்று ஸ்ரேற்மன்ற் வேறு கொடுக்கின்றார். 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 "மேதகு படம் தேசியத்தலைவரை வேற லெவல்ல காட்டும்"|இயக்குனர் கிட்டு

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2020 at 09:17, சண்டமாருதன் said:

நாங்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ? புரியவில்லை. 

சாமிகளே,

ஒரு கன்சோடியம் மாதிரி அமைத்து எடுக்கலாமென சொல்லுறார் போல தெரியுது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பான வரலாற்றுத்திரப்படங்களைத் தயாரிப்பது இயக்குவது வெளியிடுவது என்பன தவிர்க்கப்படல்வேண்டும் என்பது எனது எண்ணம் காரணம் அதை யார் படமாக்கினாலும் யானையைப் பார்த்த குருடர்களது கருத்தாகவெ முடியும்.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் மல்கம் எக்ஸ் எனும் திரைப்படம் அவர் இறந்த்துக்கு நீண்டகாலத்துக்குப் பின்பு வெளிவந்ததை.

சும்மா ஆர்வக்கோளாறில படமாக்கும் விடையம் இல்லை தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடையங்கள். தேவையில்லாத விடையங்கள் எல்லாவற்றையும் அங்காங்கே தெளித்துவிட்டுப்போய்விடுவார்கள் படமெடுப்பவர் யார் எங்கிருந்து வருகிறார் எவர் பின்னால் நிற்கிறார் யார் பணம் கொடுக்கிறார் என்ன எது என எதுவுமே தெரியாது படம் எடுக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"மேதகு படம் எடுக்க கூடாது.!? யார் உரிமை கொடுத்தாங்க..!? | இயக்குனர் கிட்டு

 

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

மேதகு பாடல்கள்

பாடல் 1.                  : வசந்தம் பூத்ததடி 
பாடல் ஆசிரியர்  : தமிழீழ தேசியக்கவி. புதுவை இரத்தினதுரை
பாடகர்                    : உதய்பிரகாஷ்

பாடல் 2.                  : எட்டுத்தொக ஏட்டுக்குள்ள
பாடல் ஆசிரியர்  : கவிஞர் தி.திருக்குமரன்
பாடகி                      : ரோஜா ஆதித்யா

பாடல் 3.                  : உதிரம் வழிய
பாடல் ஆ‌சி‌ரிய‌ர்  : தி.கிட்டு
பாடகர்                     : உதய்பிரகாஷ் 

இசை                       : பிரவீன் குமார்
 

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!
  • அரசாங்கத்துக்கு எதிராக... பாரிய போராட்டத்திற்கு, அழைப்பு. அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1295055
  • காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம். காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன? கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன். இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம். அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம். இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம். இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர். இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள். செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார். https://athavannews.com/2022/1295043
  • ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் புலம்பெயர் அமைப்புக்களின் தடை பற்றி கேள்வி எழுப்புவார்கள். அதற்கான  நரியின் முன்னேற்பாடு தான் இத்தடை நீக்கம்.
  • கோட்டாபய...  எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என...  அறிவித்தார் உதயங்க ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1295058
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.