Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.

141206164716_suresh_premachandran_eprlf_

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.”

    இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். இந்தச் சந்திப்பு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையாக இருந்தால் வரவேற்கக்கூடிய விடயமாகும்.

ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ச்சியாக தமிழர் தரப்போடு பேசிக்கொண்டு வருகின்றது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசப்போவதாக அறிந்தேன். இந்தச் சந்திப்புக்கள் இணைய வழியூடான பேச்சுக்களாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கக்கூடிய விடயமாகும்.

அந்தச் சந்திப்பு எவ்வாறு நடைபெறப் போகின்றது என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்த, எமது பிரச்சினைகள் பற்றிப் பேச சகல கட்சிகளையும் இணைத்து குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இவ்வாறு ஒரு குழு நியமிக்கப்பட்டால் தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஒரே குரலில் பேச முடியும்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88425/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் எம்பி சிவக்தி ஆனந்தனின் நேற்றைய அறிக்கைக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அவரது அறிக்கையின் சாரம் இது.

முப்பத்துமூன்று வருசமா, ஒப்புக்கு சப்பாணியாக அக்கறை இல்லாமல்,இந்தியா, பதின்மூன்றாவது சரத்து விசயத்தில் நடந்தது.

யுத்தம் முடிந்தபின்னான பதினொரு ஆண்டுகளில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது, சீனாக்காரன் வந்து போனதும், சிங்கள அரசை வழிக்கு கொண்டு வரலாம் என்று நிணைத்து, தமிழர் தரப்புடன் இணையத்தளம் மூலம் சந்திப்பை நடாத்தப் போகிறது, இந்தியா.

இதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

இலங்கை தமிழரை விடுங்கள். நமக்கு, சிங்களவர் அல்லது சீனர். இழப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால், உங்கள் தென்பகுதியை, சீனாவின் தீர்க்கமான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது கூடுதலான அக்கறை எடுங்கள்.

ஏற்கனவே நேபால் பிரச்சணை. பூட்டானில் பிரச்சணை. பாகிஸ்தான் பிரச்சணை. இலங்கை விசயத்தில், கோட்டை விட்டால், அக்கறை இல்லாவிடில், தென் இந்தியாவே பாதிப்படையும்.

உங்கள் நலுனுக்காவது, இதயசுத்தியுடன் அணுகுங்கள். இல்லாவிடில் இழப்பு உங்களுக்கே.

Edited by Nathamuni
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க சகல தமிழ்கட்சிகளின் பொதுச் செயற்பாட்டுக்குழு ஒன்று விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று  கட்சிகள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அப்படியிருக்க சுரேஷ் இந்தியா தமிழ் கூட்டமைப்புடன் தனியாக பேசக்கூடாது என்கிறார். அரசியல்வாதிகளின் பேச்சு ஒன்று செய்கை வேறொன்றாக உள்ளது கவலையளிக்கிறது.

பொதுவிடயங்களில் குறிப்பாக இனப்பிரச்சினை குறித்து பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

நண்பரே இது நடவாது. எனது கடந்த ஆண்டு பதிவு ஒன்றில் இது பற்றி எழுதியிருந்தேன். இவர்களிடம் நான் கண்ட அனுபவத்தின் படி துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெருமளவுக்கு அவர்களது மனோபாவம் இன்னும் உயரவில்லை. இவர்களது அரசியல் கலாச்சாரம் உயரவில்லை. அவர்கள் உயரவில்லை.

தனக்கு ஆலோசனை சொல்கிறவன் தன்னை மீறிவிடுவான், என்னுடைய குறைபாடுகள் அவருக்கு தெரிந்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க பழகியவர்கள் இவர்கள். அதனால் தான் இன்றைக்கும் ஒரே ஒருவர் தான் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவன் என்ற போக்கு. அல்லது ஆலோசனை பெறுவதென்றால் தங்களுக்கு ஆமா போடுபவனிடம் (yes men) தான் கேட்பினும். உலகவங்கியில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு துறை வரை நிபுணத்துவம் கொண்ட தமிழர் இருந்தும் அவர்கள் ஆலோசனை கூட்டங்கள்  வைத்தால் முகத்துக்கு ஆமாபோடுவிட்டு பின்னர் ஒரு follow-up ஒன்றும் நடவாது. கேட்டால் வேறொருவன் சொன்னவன் அவரைப்பற்றி, இது சரியில்லை அது சரியில்லை என சாக்குபோக்கு சொல்லி தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை அதே நிலையில் வைத்திருப்பார்கள். வெளிநாட்டவரை ஆலோசனை வழங்க கொண்டுவந்தால் கொண்டுவந்தவர் ஆர் என்று பார்த்து அவரை வெட்டுவதில் முழு நேரத்தையும் செலவழிப்பார்கள். இராஜதந்திரிகளுடன் கூட்டம் வைக்கப்போனால் கைளை ஆட்டிக்கொண்டு வருவார்கள். அந்த ராஜதந்திரிகளிடம் கையளிக்க ஒரு ஆதரக்கோவை (documentation, appeals etc) அல்லது கூட்டம் நடந்த  பின் கூட்டத்தில் அவர்கள் சொன்ன விடயங்கள் பற்றி ஆலோசனை செய்யமாட்டார்கள், follow-up ஒன்றும் நடவாது. இடைவிடாத தொடர்பாடல் (sustained diplomatic engagement) செய்யவே தெரியாத முட்டாள் கூட்டம். கூட்டம், கூட்டத்தின் பின் படம், நம்பிக்கை, தும்பிக்கை என்ற தலையகத்துடன் செய்தி. இவவளவுடன் இவர்களது வேலை முடிந்துவிடும்.  தமிழர் இன்றைக்கு இந்த நிலையில் இருப்பதட்கு இது மிகமுக்கிய காரணி 

Edited by puthalvan
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By sudaravan
   தேர்தலுக்கு பின்னர் தங்களின் கொள்கைகளையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    
   அதன் போச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறியுள்ளார்.
    
   தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போதைக்கு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை.
    
   இந்த முறை தேர்தலில் பிரதமானமாக இரண்டு விடயங்களை கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகிறது.
    
   நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வு,
    
   மற்றையது காணாமல் போனோர், அரசியல் கைதிகள் போன்றோருக்கான தீர்வும் மீள்குடியேற்றமும்.
    
   இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கின்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/41708/57//d,article_full.aspx
 • Topics

 • Posts

  • காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி    55 Views காந்தள் கிழங்குகளே மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.   ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும் ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள். விழித்த மனதில் புதிய விதையாய் நிலை நாடினீர்கள் கனவின் தொடர்ச்சி நீளும் நாளுமெனச் சுடராகினீர்கள்.   அக்கினிக் குஞ்சென வாழ்ந்தீர் இருள் எரிக்க ஆகாய விரிப்பில் மலர்ந்தீர் வீரம் சிறக்க காற்றின் மொழியில் கடலில் அலையில் கடும் கானகம் வெளியில் புயலில் வெய்யிலில்…   சிவப்பு மஞ்சள் நிறங்களிலே காற்றின் கொடிகள் படபடக்க நாளும் பொழுதும் மாலையிட்டு உம்முன் மண்டியிடவில்லை. மனதுக்குள் புதைத்து வைத்த காந்தள் கிழங்குகளே நீங்கள் பெருநெருப்பாய் பூத்திருக்க நாங்கள் பணிசுமந்தே பாதையெங்கும்…   https://www.ilakku.org/காந்தள்-கிழங்குகளே-வெற்/
  • 13) காதல் வெண்பா  .....  இனியவன் காதல் வெண்பா ..... எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!.  .... அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  ..... சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  .... விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  .... காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா ....  முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  • 12) கதைக்கு கவிதை  ....... கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல் !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!  இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில்  வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த  வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!  !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!  கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........  ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................  பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................  ..........பத்தினியாள் பக்தியாள்............................  சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........  .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............  சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........  .........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............  சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!  !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!  தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்.......  ..............காதலன் பெயரோ கருணாகரன் ............  மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........  ......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ......  கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் .........  .....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் .......  அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் .....  ....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!!  !!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!!  மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் ....  ....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் .....  மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........  ....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் .......  கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன்  ....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!!  !!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!!  சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் .....  ....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே .....  வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....!  ....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்.....  சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ......  ...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை.......  இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!!  !!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!!  காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் ....  ....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்...........  காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ...........  ....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ......  தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட ....  .....காத்திருந்தாள் காத்திருந்தாள்..........  கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி .......  .....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின .....  முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ......  .....பலமாகிய காற்று பலமிழந்தது ...........  ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின .....  ....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் ....  அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது.....  ...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!!  !!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!!  கருணாகரனே எனவனே கருணாகரனே ......  ....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்.....  குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........  ....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ......  வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே .....  ...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே .......  தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே ....  ...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் ....  என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது ....  ....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!!  !!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!!  என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே .....  ...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் .....  புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,,  ....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது.....  மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் ....  ....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ......  இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் ....  ....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ......  அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் .....  ...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ ....  என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் ....  ,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!!  !!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!!  மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு .....  ...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்.....  சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் .....  ....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்......  மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் .....  .....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்......  அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!!  .......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் .....  அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் ....  ....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே.......  எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே!  ....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........  இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்?  ...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே.....  நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,,  .,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே!  என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!!  ......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!!  !!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!!  மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது.....  ......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் ....  மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட ....  ......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை....  பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே.......  ....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ......  மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை ....  .....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!!  !!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!!  கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை ....  ....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்.....  என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்.....  ....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ......  என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் .....  ....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது .....  இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் .....  ...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் ....  அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!!  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^  குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது மாணவர்களுக்கு  மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி  ^  நன்றியுடன் ;கவிப்புயல் இனியவன் -யாழ்ப்பாணம்
  • ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கார்த்திகைப் பூவுடன் மாவீரர்களை நினைவுகூரும் ஒளிப்படம். தடை அதை உடை! We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.