Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புலிகளை ஏற்குமா பிரித்தானியா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போதே புலிகளுக்கு உதவாத பிரித்தானிய பெருங்கட்சி அரசுகள்.. இல்லாத புலிகளுக்கு உதவி என்ன.. உதவா விட்டால் என்ன..??!

ஆனால் பெருங்கொடுமை.. புலிகள் மீது தடைவிதித்த தொழிற்கட்சிக்கு தமிழர்கள் அநேகர் வாக்களிப்பது தான். காரணம்.. தொழிற்கட்சி வழங்கும் சமூகக் கொடுப்பனவுகளின் கவர்ச்சி.

ஆனால்.. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கமென்பது.. தமிழர்களின் அரசியல் அபிலாசையை சுயநிர்ணய உரிமை.. தாயகக் கோட்பாட்டோடு முன்னெடுக்க முக்கிய ஒன்றாக இருக்கும்.

ஏனெனில்.. தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைக்கு புலிச் சாயம் பூசி வைத்துள்ள சிங்கள அரசுக்கு.. தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசையை நிராகரிக்க புலித் தடையும் உதவிக் கொண்டிருப்பது தான்.

அந்த வகையில்.. சர்வதேச பரப்பில் உள்ள சாத்தியமான நீதிக்கூடாக.. சாத்தியமானவற்றை எமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதும் இன்றைய எமது அவல நிலையில் இருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழ உதவும்.

ஆனால்.. இன்னும் பிரித்தானியாவில் சட்ட ரீதியாக விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கவில்லை. புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் மட்டுமல்ல.. சர்வதேச அரங்கில் பல நாடுகளில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.

அதற்கு இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக்கி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to post
Share on other sites

புலிகளின் தடையை நீக்குவது அல்லது நீக்காமல் விடுவது என்பது தனது சுயநலம் கருதியே இருக்கும்.

பிரிட்டன் புலிகளின் தடையை நீக்கினால் ஏனைய தடை செய்த நாடுகளும்  தமது தடையை மீள்பரிசீலனை செய்யும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2020 at 17:22, nunavilan said:

புலிகளின் தடையை நீக்குவது அல்லது நீக்காமல் விடுவது என்பது தனது சுயநலம் கருதியே இருக்கும்.

பிரிட்டன் புலிகளின் தடையை நீக்கினால் ஏனைய தடை செய்த நாடுகளும்  தமது தடையை மீள்பரிசீலனை செய்யும்.

28 நாட்களில் உள்துறை மேன் முறையீடு செய்யணும் என்ன நடக்குது என்று பார்ப்பம் .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்!   கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 50 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,250 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றியுள்ளனர்.   சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் இதுபற்றி  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்குப் பகுதியிலிருந்து நிலவறைக் கால்வாய் வழியாக மழைக் காலங்களில் சேரும் உபரிநீரினைக் கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தைச் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை என்கிறார்கள்.   கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறந்த நீர் மேலாண்மை, குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்குத் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். ‘பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும்' என்ற பழமொழி இதற்குப் பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.   சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் ஸ்ரீ நடராஜர் கோயில் நிலவறைக் கால்வாய் 1,250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவை 24 X 15 X 5 செ.மீ நீள, அகலங்களைக் கொண்டதாகும். 1:3:5 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்களை இந்தக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளைக் கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தக் கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும்போது பிற்காலச் சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.vikatan.com/government-and-politics/archaeology/excess-rainwater-exhaust-dungeon-canal-in-nadarajar-temple-built-by-the-cholas
  • உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் – எதிர்கட்சியின் கேள்வியால் சபையில் குழப்பநிலை   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குழப்பநிலை உருவானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் இடம்பெறும் விதம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா சுட்டிக்காட்டினார். விசாரணைகள் மூடிமறைக்கப்படுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என கர்தினால் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அரசாங்கம்உ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூலம் எந்த இலாபமும் அடையமுடியவில்லை என குறிப்பிட்டார். கோத்தபாய அரசாங்கம் ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்படுகின்றனது இதன் காரணமாக விசாரணைகளில் தலையிடாது என அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சரத்வீரசேகர விசாரணைகளின் போது இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன அவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.       https://thinakkural.lk/article/95542
  • எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் சேர்த்தும் துன்பங்களை புன்னகையால் மூடியும் இல்லாமையை அருகிருந்து நேசித்தும் தனிமையை விரும்பி யாசித்தும் வெறுமையை திறமையுடன் பிரவேசித்தும் இவை எல்லாவற்றையும் இயன்றவரை பூசித்தும் வாழ்ந்தால் உளத்தில் திண்மை பிறக்கும்! -தமிழ்நிலா.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.