Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது.


இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது.

கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும்.  உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23040701/Shock-in-France-Suddenly-41622-people-were-affected.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு

பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு

 

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.


 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/26003401/2007024/Coronavirus-positive-cases-crosses-52000-in-France.vpf

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படம்; தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் முகநூல் கணக்கில் இருந்து. 
    • இப்படி எல்லாம் அநியாயங்கள் நடக்கும் என்று தான் சிலதுகளை இயக்கம் போடுறது. போட்டதுகளும்.. மிஞ்சி இருந்திருந்தா.. தமிழன் புழுதி தான் மிஞ்சி இருக்கும். 
    • அப்படி சொன்னால்தானே அவர்கள் டிசைன், டிசைனாக அனுபவிக்கலாம்🤣. கொரோனா காலம் முழுவதும் பதுங்கி இருந்து விட்டு, தடுப்பூசி வேலை செய்ய தொடங்கியது வருவார்கள், ”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.  
    • . சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ்லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே கொண்ட அந்த தமிழர் தேசம் உதவிகள் ஏதுமின்றி யுத்தகாலத்தில் இருந்த அதே நிலமையில் வறுமையுடனும் வாழ்க்கையுடனும் போராடுகிறது.  பிழைப்புக்கு வழியின்றி எந்த ராணுவத்தால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதே ராணுவத்தில் இணைந்து வயிற்றைக் கழுவ ஆயிரக்கணக்கில் இணைய தயாராயிருக்கிறது.   பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன? மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும், இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது, சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?  வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது. இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார். சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும் அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன? இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.   அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.