Jump to content

மாவீரர் புகழ் பாடுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம் 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை 
முடிசூடும் தமிழ் மீது உறுதி. 
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் 
வரலாறு மீதிலும் உறுதி. 
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை 
வீரர்கள் மீதிலும் உறுதி. 
இழிவாக வாழோம், தமிழீழப் போரில் 
இனிமேலும் ஓயோம் உறுதி. 

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ வீரனே எங்கள் மண்ணில்

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
ஓ வீரனே  எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 


விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை 
வெடி குண்டு நடுவில் நின்ற   உன் தோளை 
விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை 
வெடி குண்டு நடுவில் நின்ற   உன் தோளை 
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு 
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு 
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு 
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு 

நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா 
ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

நீ அடைந்த சாவு  இங்கே உயிரானது 
நீ எரிந்த உயிர் விதை பயிரானது 
நீ அடைந்த சாவு  இங்கே உயிரானது 
நீ எரிந்த உயிர் விதை பயிரானது 
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது 
வீரனே உனது முகம் தெரிகின்றது 
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது 
வீரனே உனது முகம் தெரிகின்றது 

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் 
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் 
காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் 
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் 
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் 
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் 
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் 
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் 

நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

ஓ வீரனே ,,,எங்கள்  மண்ணில் உன் பெயர் 
எழுதி வைக்கப்படும் 
நீ மடியவில்லையேடா 
உன் கதை முடியவில்லையேடா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தொன்று விழுந்தாலே பாடல் வரிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தோழர்களின் புதை குழியில் மண் போட்டு செல்கின்றோம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடு தாயே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் (2)

கடலினில் சிங்கள படகினை உடைத்தோம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு
ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு
ஆறடி மண் கூட எமக்காக கேளோம்
தமிழ்த்தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு சாவோம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

சாவினை தோள்மீது நாங்கள் சுமப்போம்
சாவிற்கும் அஞ்சாமல் சாவிற்குள் வாழ்வோம்
தமிழனின் சாவுகள் வரலாறு படைக்கும்
தமிழீழ தாயவள் விலங்குகள் உடைக்கும்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

ஊரதில் வெடியோசை வான்வரை கேட்கும்
உலகத்தின் திசையெங்கும் எம்சேதி தாக்கும்
காற்றாகி எம்உடல் நீராகி கரையும்
தமிழர்தன் உணர்வோடு என் உயிர் கலக்கும்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் 

கடலினில் சிங்கள படகினை உடைத்தோம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதம் பூத்திடும் போதில்

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.