Jump to content

மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Recommended Posts

மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

     by : Jeyachandran Vithushan

http://athavannews.com/wp-content/uploads/2020/06/Mike-Pompeo.jpg

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு மீண்டும் அறிக்கையினூடாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மைக்-பொம்பியோ-எதிர்வரும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்தார் பொம்பியோ….

October 26, 2020

1 Min Read

Mike-Pompeo1-1024x683.jpg

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ நாளை (27.10.20) இலங்கைக்கு செல்லவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த பயணத்தின் போதான கலந்துரையாடல்களில் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பயணிக்கும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார். 

Mike-Pompeo2-1024x683.jpg

இந்தப் பயணம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளதோடு, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளுக்கான, சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என மைக்பொம்பியோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mike-Pompeo.jpg

மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் இருப்பதாக JVP தெரிவிப்பு….

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இலங்கை கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் மற்றும் ஏனைய அவசரமானவிடயங்களின் போது மாத்திரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விஜயங்களை மேற்கொள்வது வழமை எனக் குறிப்பிட்ட பிமல் ரட்ணாயக்கா
மைக்பொம்பியோவின் இந்த விஜயத்தின் போது எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அவசியமான கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது, இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கை குறித்த அலுவலகத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வைத்திருக்கின்றது எனவும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2020/152341/

Link to comment
Share on other sites

மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோள்களை இலங்கையின் அரச தலைவர்கள் நிராகரிப்பார்கள்- வெளிவிவகார அமைச்சு அதிகாரி

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி நியுஸ்இன்ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
நியுஸ் இன் ஏசியா மேலும் தெரிவித்துள்ளதாவது.
28ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை தலைவர்களிடம் முகத்திற்குநேரே சீனாவுடனான உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.

mike-pom-300x200.jpgஅமெரிக்கா முன்வைக்கின்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்குமாறும் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக்பொம்பியோ இலங்கை தலைவர்களை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரும், இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் மக்கள் வழங்கிய ஆணையின்அடிப்படையிலும், ,சட்டம் மற்றும் அரசமைப்பு நாட்டின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என மைக்பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர்.
அதேவேளை உலகிலும் பிராந்திய அளவிலும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் எனவும் அவர்கள் மைக்பொம்பியோவிடம் தெரிவிக்கவு;ளனர்.

port-city-300x176.jpg
இலங்கையை எப்படி ஆட்சிசெய்யவேண்டும் என்பதை வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தெரிவிக்கவேண்டியதில்லை என இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் மைக்பொம்பியோவிற்கு தெரிவிக்கவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடனான தி;ட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என இலங்கையை கேட்டுக்ககொள்ளவுள்ள மைக்பொம்பியோ இருதரப்பு இணக்கத்துடனான திட்டங்களை முன்னெடுப்பதற்கு வேறு எந்த நாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளார்.
480 மில்லியன் டொலர் எம்.சி.சி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக்பொம்பியோ இலங்கையின் அரசதலைவர்களை கேட்டுகொள்ளவுள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கவேண்டும் அல்லது மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

mcc-agreement-3.jpg
சோபா உடன்படிக்கை இலங்கையின் அரசமைப்பிற்கும் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை குறித்து ஆராயப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக கூட்டணியான குவாட்டிற்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி 30வருட யுத்தத்திலிருந்து சமீபத்திலேயே விடுதலையாகியுள்ள இலங்கை இன்னொரு சர்வதேச மோதலின் களமாக மாறுவதை விரும்பவில்லை என மைக்பொம்பியோவிடம் நாங்கள் தெரிவிப்போம் என வெளிவிவகார அமைச்சகத்தின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

gota-china-1-300x200.jpg
இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளும் சுதந்திரமான நடமாட்டம் உறுதிசெய்யப்படுவதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இலங்கை தலைவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் முதலீடுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளகூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்பது குறித்து கருத்துவெளியிட்டு;ள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கையில் முதலீடுவது வரவேற்கப்படுகின்றது, அமெரிக்கா சீனாவின் முதலீடுகளின் அளவிற்கு முதலீடு செய்யுமென்றால் அதனை வரவேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/83250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி 13 ஆவது திருத்தத்தையும், பொம்பியோ பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் வைத்துக் காய் நகர்த்துகிறார்கள். இலங்கை அடம்பிடித்தால், விரைவில் கிடப்பில் போட்டிருக்கும் போர்க்குற்ற விசாரணைகளை தூசு தட்டி ஐ. நா வில் படம் காட்டக் கூடும். ஆனால், இலங்கையினைப் பாதுகாக்க சீனா, கியூபா, ஈரான் என்று பல நண்பர்கள் இப்போது பாதுகாப்புக் கவுன்ஸிலில் இருக்கிறார்கள். இதையெல்லாம் கணித்துத்தான் இலங்கை சாதுரியமாக பொம்பேயுக்கும், மோடிக்கும் தண்ணி காட்டுகிறது. 

ஒருவேளை அழுத்தம் கூடினால், ஒரேயடியாகக் காலில் வீழ்ந்துவிடும். அதற்குப்பிறகு போர்க்குற்ற விசாரணைகளும் இல்லை, 13 ஆம் திருத்தமும் இல்லை. எமது வாழ்வும் மாறப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரஞ்சித் said:

ஒருவேளை அழுத்தம் கூடினால், ஒரேயடியாகக் காலில் வீழ்ந்துவிடும். 

வடலி வளர்த்துக் கள்ளு குடிக்கிறது எண்டு கேள்விப்பட்டிருக்கிறீயளே?

2015ல் தேர்தலில் தோற்று வீட்டில் குந்தி இருந்த மகிந்தவை, தோலில் தட்டி, உறசாகமூட்டி, எம்பி ஆக்கி, கோத்தவையும், பீகிங் கூப்பிட்டு, கவனித்து அனுப்பி, தேர்தலில் பெரு வெற்றி பெற தேவையான பணத்தினையும் வெள்ளமாக இறைத்து, ஐக்கிய தேசிய கட்சி இணையும் உடைத்து, டெல்லி வாலாக்களை சமாளிக்க, சுப்பிரமணிய சாமி என்ற புரோக்கரையும் பணத்தினை, சிங்களம் ஊடாக கொடுத்து,  ராஜ பாட்டையினை  போட்டுக் கொடுத்த சீனாக்காரன், அவ்வளவு இலகுவில் விட்டுவிட்டு போவான் என்று நீங்கள் நம்பினால்.... மன்னிக்க வேண்டும்.... கனவுலகில் இருக்கிறீர்கள் என்று தான் சொல்வேன். 

பேசாமல், சீனத்து டிராகன் உடன் சந்தோசமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது புரிகிறது. சீனத்து ட்ராகனுடன் சிங்களவன் சந்தோசமாக இருப்பான். ஆனால், எங்களையெல்லோ இன்னும் இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்துவான்? அதுதான் எனது கவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது புரிகிறது. சீனத்து ட்ராகனுடன் சிங்களவன் சந்தோசமாக இருப்பான். ஆனால், எங்களையெல்லோ இன்னும் இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்துவான்? அதுதான் எனது கவலை. 

அதெல்லாம் பயப்படாதீங்க... சீனாக்காரன் வந்தால் தான், எங்கள் மீது அன்பு பாசம் பொங்கிப் பெருகும், பக்கத்து வீட்டுக் காரருக்கு, வேறு வழி இருக்காதே. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் பயப்படாதீங்க... சீனாக்காரன் வந்தால் தான், எங்கள் மீது அன்பு பாசம் பொங்கிப் பெருகும், பக்கத்து வீட்டுக் காரருக்கு, வேறு வழி இருக்காதே. 😜

சீனக்காரன் வந்துவிட்டால், இந்தியா வாலைச் சுருட்டிக்கொண்டு சுருண்டு படுத்துவிடும். எங்கள் அவலம் எப்போதும் போல் அல்லது அதுக்கும் மேல அகோரமாக இருக்கும். தலைவர் காலத்திலேயே எங்கட தீர்வு வந்திருக்க வேண்டும். எங்கட தலைவிதி, ஆரை நொந்து என்ன பயன்? 

இல்லை, புலிகள் தங்களது அதி கூடிய உச்சத்தினை அடைந்து, நீங்கினார்கள். மிகுதி நமது கையில் தான் இருக்கிறது. இன்று கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் அமைச்சர் ரம்புக்வலவின் கருத்துக்கு வந்த பின்னூட்டத்தில், பிரித்தானிய பிரதமர், அங்குள்ள தமிழ் வாக்காளருக்கு, இரு நாடுகள் தீர்வே சரியானது என்று தேர்தல் விஞ்ஞாபத்தில் சொல்லி இருப்பது எழுத்தில் உள்ளது என்பதனை மறக்கவேண்டாம் என்கிறார்.

சீனா எப்போதும் நிழலாக தான் இருக்கும். சிங்களத்தின் பின்னாலேயே இருக்கும். எமது போராட்டம், சுஜநிர்ணய தேர்தல் குறித்தே இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சீனா எப்போதும் நிழலாக தான் இருக்கும். சிங்களத்தின் பின்னாலேயே இருக்கும். எமது போராட்டம், சுஜநிர்ணய தேர்தல் குறித்தே இருக்கவேண்டும். 

மிகச்சரியான பார்வை. சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பாக ஒரு கதை அடிபடுகிறதே? கேள்விப்பட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

மிகச்சரியான பார்வை. சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பாக ஒரு கதை அடிபடுகிறதே? கேள்விப்பட்டீர்களா? 

அதுதான், இந்தியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள இறுதி தேர்வு. 

முக்கியமாக, தமிழகத்தில், ஈழ விடுதலை குறித்து பேசிக்கொண்டே வளரும், தமிழ் தேசியத்தின் வளர்ச்சி தான், இந்தியாவினை இது நோக்கி தள்ள வைக்கும். அதை கவனிக்காமல் விட்டால், தமிழ் நாட்டின் ஆட்சிக்கு வந்து, பெரும் குடைச்சல் கொடுக்கும்.

முன்பு போல, பேச்சு பம்மாத்து விட, கருணாநிதி உயிருடன் இருந்தாலும் முடியாது. 

உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே.... அலம்பரைக் பேச்சுக்களை கலாய்த்து தள்ள மீம்ஸ் மூலமா வடிவேலும், கவுண்டமணியும், விவேக்கும் மும்மரமாக நிக்கிறார்கள். அதனால் தான் ஸ்டாலின், வைக்கோ எல்லோரும்  நவீன கவனிப்பாளர்கள் ( new audiences ) மத்தியில், எவ்வாறு பேசுவது  என புரியாது தடுமாறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில், ஈழ விடுதலை குறித்து பேசிக்கொண்டே வளரும், தமிழ் தேசியத்தின் வளர்ச்சி தான், இந்தியாவினை இது நோக்கி தள்ள வைக்கும். அதை கவனிக்காமல் விட்டால், தமிழ் நாட்டின் ஆட்சிக்கு வந்து, பெரும் குடைச்சல் கொடுக்கும்.

ஈழத்தமிழர்களை தமிழகத்திலிருந்து பிரிப்பதன் மூலம் பரந்த தமிழ்த் தேசியம் என்னும் எண்ணக்கருவினைச் சிதைத்துவிடலாம், இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் காத்துக்கொள்ளலாம் என்று இந்தியாவின் தற்போதைய ஹிந்துத்துவவாதிகள் செயற்படுவதாகத் தெரிகிறது. இதன் ஒரு அங்கமே தமிழர்களை இந்துக்களாக அடையாளப்படுத்துவதன் மூலம், இலங்கையில் சிங்கள - ஹிந்து முரணை தோற்றுவித்து, இதில் ஹிந்துத் தமிழர்கள் தமிழகத்தை விட்டு விலகி தில்லியைச் சார்ந்திருக்கப்பண்ணுவதன் மூலம் தனக்குச் சார்பான, தனது கட்டுக்குள் இருக்கக் கூடிய ஒரு இனமாக ஈழத்தமிழரை மாற்றலாம்  என்று இவர்கள் எண்ணுவது போலத் தெரிகிறது. இது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

அந்தளவு தூரம் சிந்திக்கும் அளவுக்கு டெல்லி வாலாக்கள் இல்லை என்றே நினைக்கிறேன். இவர்கள் பந்தா காட்டும் பேர்வழிகள். நமது தமிழில் சொல்வதானால், அணில் மரத்தில் ஏறும் வரை காத்திருந்து அண்ணாந்து பார்க்கும் நாயின் நிலைமை தான்.

ஒரே ஒரு இந்து நாடான, நேபாலை, சீனா பக்கம் விட்டு இருப்பார்களா? அதிகம் வேணாம், ராஜிவ் காந்தியின் மரணம், கொலை குறித்த எச்சரிக்கை இருந்தபோதும், ரா என்ன செய்து கொண்டிருந்தது?

இன்று அதே ராவின் தலைவர் நேபாலில், கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

ஒரே ஒரு இந்து நாடான, நேபாலை, சீனா பக்கம் விட்டு இருப்பார்களா?

சிந்திக்க வேண்டிய கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முன்பு போல, பேச்சு பம்மாத்து விட, கருணாநிதி உயிருடன் இருந்தாலும் முடியாது. 

உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே.... அலம்பரைக் பேச்சுக்களை கலாய்த்து தள்ள மீம்ஸ் மூலமா வடிவேலும், கவுண்டமணியும், விவேக்கும் மும்மரமாக நிக்கிறார்கள். அதனால் தான் ஸ்டாலின், வைக்கோ எல்லோரும்  நவீன கவனிப்பாளர்கள் ( new audiences ) மத்தியில், எவ்வாறு பேசுவது  என புரியாது தடுமாறுகிறார்கள்.

வாயால் வடை சுட்டு தமிழர்களின் முதுகில் சவாரி விட்ட திமுக இம்முறை குறிப்பிட்ட அளவு மார்க்ஸ் எடுக்காது விடின் இனி அவர்களுக்கு அரசியலே கிடையாது .

இரண்டு கோடியை சிலவளித்தால் வெல்லலாம் என்ற கதை மலையேறி விட்டது பத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து விட்டு அவன் பாட்டுக்கு போயிடுறான் போதாக்குறைக்கு மரீனாவில் சமாதி உள்ளவர்கள் வாரிசுகள் ஒருபோதும் ஆட்சி பீடம் ஏறுவதில்லை என்ற மீம்ஸ் சுடலையை இரவுபகலாய் யோசிக்க வைக்குதாம் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது புரிகிறது. சீனத்து ட்ராகனுடன் சிங்களவன் சந்தோசமாக இருப்பான். ஆனால், எங்களையெல்லோ இன்னும் இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்துவான்? அதுதான் எனது கவலை. 

கடந்த 5 வருடமாக மேற்குலகிற்கு தேவையான அரசு அமைத்த போதும் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த 5 வருடமாக மேற்குலகிற்கு தேவையான அரசு அமைத்த போதும் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையே?

உண்மைதான், தாங்கள் விரும்பும் ஆட்சி இலங்கையில் அமையுமாயின் அவர்கள் ஒருபோதுமே இலங்கைக்கு எதிராகவோ அல்லது தமிழருக்கு ஆதரவாகவோ நிற்கப்போவதில்லை. அமெரிக்காவும், மேற்குலகமும் பேசும் மனிதவுரிமைகள் வெறுமனே அவர்களின் நலனகளை அடைவதற்கு மட்டுமே பாவிக்கப்பட்டும் நெம்புகோல்கள்தான். அதை நம்பி ஏமாறும் நாங்கள்தான் ஒவ்வொருமுறையும் அநியாயமாக அடிபட்டுச் சாகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது புரிகிறது. சீனத்து ட்ராகனுடன் சிங்களவன் சந்தோசமாக இருப்பான். ஆனால், எங்களையெல்லோ இன்னும் இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்துவான்? அதுதான் எனது கவலை. 

6 hours ago, Nathamuni said:

அதெல்லாம் பயப்படாதீங்க... சீனாக்காரன் வந்தால் தான், எங்கள் மீது அன்பு பாசம் பொங்கிப் பெருகும், பக்கத்து வீட்டுக் காரருக்கு, வேறு வழி இருக்காதே. 😜

வடலி வளர்த்துக் கள்ளு குடிக்கிறது எண்டு கேள்விப்பட்டிருக்கிறீயளே?

நாதம் மிக அருமையான வசனம் 
இதுக்குள்தான் இன்றைய உலக அரசியல் முழுமையாக புரிய கூடிய 
கருவே இருக்கிறது. அமெரிக்கா .... இந்தியா ........சீனா என்று எமது செய்தியாளர்கள் 
தமிழில் அள்ளிக்கொடும் செய்திகளில் படிக்க ஒன்றுமே இல்லை அவர்களுக்கு அடிப்படை 
பொருளாதார நிலமைகளே புரியாமல் அலட்டுவதை நீங்கள் வாசித்து இருப்பீர்கள். 
யாரும் எங்கு ஓடியும் ஓன்றும் ஆவத்துக்கு இல்லை காரணம் சீனாவின் நகர்வுகள் அவ்வாறானவை. 

வடலி வளர்த்து கள்ளுக்குடிப்பதை உலகம் பூராக அனைத்து மூன்றாம்தர நாடுகளிலும் 
சீன கச்சிதமாக செய்துவருகிறது. அமெரிக்க தொலைநோக்கு அரசியல் என்பது வெறும் 
சின்ன பிள்ளை விளையாட்டாகவே இருக்கிறது எந்த இடத்திலும் ஒரு தொலைநோக்கு சிந்தனை 
கடந்த 25 வருடமாக இல்லை.

இப்போது நடக்கும் ஆஜர்பச்சான் ஆர்மேனிய மோதல் பற்றி கொஞ்சம் முழுமையாக விளங்கி கொள்ளுங்கள் 
அமெரிக்க பென்டகன் இராணுவ அதிகாரிகளின் கண்ணுக்குள்ளேயே கையைவிட்டு ஆட்டும் நகர்வுகள் 
சிரியாவில் ரசிய இராணுவம் தரையிறங்கி இப்போது 8 வருடம் ஆகிறது. அமேரிக்கா ஏதாவது ஒரு 
அறிவார்ந்த  வேலையை இந்த அரசியல் தளத்தில் செய்தது என்று ஒன்றை எழுத முடியுமா?

யார் வந்து என்ன பேசினாலும் சோறு முக்கியம் இது சீனாவுக்கு தெரியும் 
சீனாவின் நகர்வுகள் மிக தொலைநோக்கு பார்வை கொண்டவை பாரிய அளவிலான 
பணத்தை முதலீடு செய்பவை சும்மா கண்ணை மூடிக்கொண்டு செய்ய முடியாது.

இப்போது அமேரிக்க ஐரோப்பிய யூனியன் இரன்டையும் சேர்த்து அதுக்கு அதிகமாக உலக நாடுகளுக்கு 
கடன் கொடுத்து இருக்கிறது சீனா இதுதான் பொருளாதார ரீதியாக பார்க்க வேண்டிய செய்தி. துருக்கியை எவ்வாறு  நகர்த்தி மத்திய கிழக்கு அரசியல் குட்டயை கலக்க போகிறார்கள் என்பதை பொறுத்தே என்ன மீன் பிடிக்க  போகிறார்கள் என்பது புரியும். அவர்கள் எப்போதோ காலைவிட்டு ஆழம் பார்த்துவிட்டுத்தான் இறங்குகிறார்கள்  ஆகவே அமெரிக்க ரவுடியிசம் இனி எங்கும் வெற்றிகொடுக்க போவதில்லை  கடந்த 25 வருடமாக  எங்கும் வெல்லவும் இல்லை.

இப்போ சீனாவின் பொருளாதாரத்தை முடக்க டிக்டாக் 5ஜி  டிஜிட்டல் கரன்சி  போன்றவற்றுக்கு தடைபோட்டு மிரட்ட பார்க்கிறார்கள் ஹுவெவெய் பிரச்சனை போதே இவர்கள் இந்த ரவுடி வேலை மட்டுமே செய்வார்கள் என்பது  சீனாவுக்கு நன்கு தெரியும் ஆகவே இதை எல்லாம் அவர்கள் பொருட்டாக எடுக்கப்போவதில்லை  காரணம்  3ஆம் உலகு என்று வரும்போது இங்கே இரண்டு சந்தை சீனாவுக்கு உறுதியானது ..... ஒன்று பசித்த  வயிறுக்கு  முதல் சோறு வேண்டும் .. மற்றது மக்கள் தொகை. சீனாவின் பொருளாதாரத்துக்கு  தேவையான   கோன்சுமார்  டார்கெட் அங்கேயே போதுமானதாக இருக்கிறது. மேலைநாடுகளுக்கும் போட்டி என்பதே இரண்டாம்  பட்ச்சம்தான் ஆனாலும் அங்கேயும் வெற்றிகள்தான். அமெரிக்க சீன இறக்குமதி  என்பது சந்திரனை  தொட போவதுபோல  இருக்கிறது என்றால்  
இப்போதைய ஹிந்தியாவின் நிலை இது  

India Imports by Country Last Previous    
China 372.24 418.69 INR Billion Aug/20
United States 177.80 160.21 INR Billion Aug/20

சீனாவின் வடலிகள் எல்லாம் சத்தம் யுத்தம் இல்லாமல் இரவோடு இரவாக 
வளர்பவை பெரிய பனைகள் ஆனபின்பு சிலருக்கு கண்ணை கட்டும் 
பனங்காட்டு நரிகள் போல அங்கும் இங்கும் ஓடுவார்கள் ... நரிகள் ஓடி பனை 
விழுந்ததாக எங்கேனும் நடந்துண்டா? 
ஈழ தமிழருக்கு என்றுமே இல்லாத ஒரு சாதகமமான சூழல் இப்போ பொங்கி வந்து இருக்கிறது 
மொத்த தமிழரின் பொருளாதார வலு என்பது இலங்கையின் மொத்த பொருளாதாரத்தை விட 
கூடியது இதை லாச்சப்பலில் டீ குடித்துவிட்டு வெற்றிலை போட்டு துப்பிக்கொண்டு போகும் 
ஈழ தமிழனுக்கு புரியவைக்க முடியாது ......... முடிந்தால் ஈழம் இல்லை மொத்த இலங்கையையும் 
கட்டுக்குள் கொண்டுவர முடியும். துரதிஸ்டவசமக இல்லாதவனின் உழைப்பும் முயற்சியும் கடினமானதாக  இருக்கும்  அந்த வகையில் நான் பார்க்கும்போது சிங்களவர்கள் மிக பலமாக முன்னேறிக்கொண்டு போகிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

சீனாவின் வடலிகள் எல்லாம் சத்தம் யுத்தம் இல்லாமல் இரவோடு இரவாக 
வளர்பவை பெரிய பனைகள் ஆனபின்பு சிலருக்கு கண்ணை கட்டும் 
பனங்காட்டு நரிகள் போல அங்கும் இங்கும் ஓடுவார்கள் ... நரிகள் ஓடி பனை 
விழுந்ததாக எங்கேனும் நடந்துண்டா? 
ஈழ தமிழருக்கு என்றுமே இல்லாத ஒரு சாதகமமான சூழல் இப்போ பொங்கி வந்து இருக்கிறது 
மொத்த தமிழரின் பொருளாதார வலு என்பது இலங்கையின் மொத்த பொருளாதாரத்தை விட 
கூடியது இதை லாச்சப்பலில் டீ குடித்துவிட்டு வெற்றிலை போட்டு துப்பிக்கொண்டு போகும் 
ஈழ தமிழனுக்கு புரியவைக்க முடியாது ......... முடிந்தால் ஈழம் இல்லை மொத்த இலங்கையையும் 
கட்டுக்குள் கொண்டுவர முடியும். துரதிஸ்டவசமக இல்லாதவனின் உழைப்பும் முயற்சியும் கடினமானதாக  இருக்கும்  அந்த வகையில் நான் பார்க்கும்போது சிங்களவர்கள் மிக பலமாக முன்னேறிக்கொண்டு போகிறார்கள்

மிகச்சிறந்த கருத்து. 👍🏽

Link to comment
Share on other sites

20 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழர்களை தமிழகத்திலிருந்து பிரிப்பதன் மூலம் பரந்த தமிழ்த் தேசியம் என்னும் எண்ணக்கருவினைச் சிதைத்துவிடலாம், இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் காத்துக்கொள்ளலாம் என்று இந்தியாவின் தற்போதைய ஹிந்துத்துவவாதிகள் செயற்படுவதாகத் தெரிகிறது. இதன் ஒரு அங்கமே தமிழர்களை இந்துக்களாக அடையாளப்படுத்துவதன் மூலம், இலங்கையில் சிங்கள - ஹிந்து முரணை தோற்றுவித்து, இதில் ஹிந்துத் தமிழர்கள் தமிழகத்தை விட்டு விலகி தில்லியைச் சார்ந்திருக்கப்பண்ணுவதன் மூலம் தனக்குச் சார்பான, தனது கட்டுக்குள் இருக்கக் கூடிய ஒரு இனமாக ஈழத்தமிழரை மாற்றலாம்  என்று இவர்கள் எண்ணுவது போலத் தெரிகிறது. இது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

ரஞ்சித் உங்கள் கருத்துடன் தொடர்புபட்டதால் இதை இனொரு திரியில் இருந்து  இங்கே இணைக்கிறேன் 

எமது ஈழக்கோரிக்கையால் தமிழ்நாடு பிரிந்துவிடும்  என்ற கோணத்தில் இந்தியா பார்த்தத்தினால் பல தவறுகள் நடந்தன.  சிவ சங்கர் மேனன்  தனது நூலில் (Choices: Inside the Making of India’s Foreign Policy) இலங்கையின் இறுதியுதம் பற்றிய அத்தியாயதில் (Chapter 4) தமிழ்நாடு பிரிவினை ஒரு முக்கிய காரணம் என்று  குறிப்பிடத்துடன் மேலதிகமாக புலிகளின் முடிவுக்கு இந்திய பங்களிப்பு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதோ அவர் எழுதியது:

"we must engage in order to defend our interest in keeping Sri Lanka free of antagonistic outside influences while also trying to prevent the growth of Tamil extremism and separatism that could affect Tamilnadu. "

"But no matter what one might think of its internal politics, Sri Lanka today is a better place without the LTTE and the civil war. And India contributed to making that outcome possible."  Source: Choices: Inside the Making of India’s Foreign Policy by Shivshankar Menon

எனவே இந்த பின்னணியில் நாதமுனியின் "வடலி வளர்த்துக் கள்ளு குடிக்கிறது" கதை சரிப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.