Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரம், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினி: கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் பயன்படுத்தப்படுகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் 18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரமும், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடம் தோறும் நெற்செய்கை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. காலபோகத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், சிறுபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கபர் பரப்பளவுமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் போது ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு அடி உரம், வீ1, யூரியா, ரிஎஸ்பி, ரிடிஎம் போன்ற இரசாயன உரங்கள் சுமார் 200 கிலோ கிராம் பயன்படுத்தப்படல் தேவை எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 225 கிலோ கிராம் அல்லது 175 கிலோகிராம் என கூடி குறையும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள் சராசரியாக ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 200 கிலோ கிராம் இரசாய உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே கிளிநொச்சியின் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கிராம் படி இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்ற போது மொத்தமாக வருடந்தோறும் கிளிநொச்சியின் நிலங்களில் 18 மில்லியன் கிலோ கிராம் அதாவது ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ இரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. (90000×200) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறே ஒரு ஏக்கர் நெற் பயிர்ச் செய்கைக்கு சுமார் 500 மில்லி லீற்றர் கிருமி நாசினி தேவைப்படுகிறது என்றும் அதன்படி மொத்தமாக வருடந்தோறும் 90 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 45 ஆயிரம் லீற்றர் கிருமிநாசினியும் பயன்படுத்தப்படுகிறது விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் நெற்பயிர்ச் செய்கைக்கு மாத்திரம் வருடந்தோறும் ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ கிராம் இரசாயன உரமும் 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுவது ஆரோக்கியமற்ற சூழல் எனவும், வருடந்தோறும் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற போது நிலம் நஞ்சாக மாறிவிடும் எனவும் இதனால் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்து எனவும் சூழலியலாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.pagetamil.com/152755/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன் மதீனா மணல்வெளியில்.🙏 அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே    
    • ரெலோ இயக்கம் பயிற்சி எடுத்துள்ளது றோ மூலம். சிறிலங்கா அரசும் பயிற்சி எடுத்துள்ளது.  http://www.effedieffe.com/index.php?option=com_content&task=view&id=61777
    • வாட்சப் , முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களை ஆதாரமாக வைத்துக்  கதைப்பவர்களுடன் நான் பொதுவாக முரண்படுவந்துண்டு. நீங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று மேலும் பாதிப்படையாமல் தப்பியதில் மகிழ்ச்சி
    • கோத்தாவையும் ரம்பையும் ஒரே வண்டிலில் பூட்ட வேண்டிய மாடுகள்.
    • CNN)President Donald Trump announced on Wednesday that he has "granted a Full Pardon" to former national security adviser Michael Flynn. "It is my Great Honor to announce that General Michael T. Flynn has been granted a Full Pardon. Congratulations to @GenFlynn and his wonderful family, I know you will now have a truly fantastic Thanksgiving!" Trump tweeted. Flynn, who was Trump's first national security adviser, pleaded guilty twice to lying to the FBI during its investigation of Russian interference in the 2016 presidential campaign about his conversations with then-Russian Ambassador Sergey Kislyak during the presidential transition. Trump said in March that he was "strongly considering" pardoning Flynn and had told aides in recent days that he planned to pardon him before leaving office. https://www.cnn.com/2020/11/25/politics/trump-pardon-michael-flynn/index.html     சி.என்.என்) முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின்னுக்கு "முழு மன்னிப்பு வழங்கியுள்ளதாக" ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். "ஜெனரல் மைக்கேல் டி. ஃப்ளின்னுக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பது எனது பெரிய மரியாதை. En ஜென்ஃப்ளின் மற்றும் அவரது அருமையான குடும்பத்திற்கு வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது உண்மையிலேயே அருமையான நன்றி செலுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும்!" டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். ட்ரம்பின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஃபிளின், ஜனாதிபதி மாற்றத்தின் போது அப்போதைய ரஷ்ய தூதர் செர்ஜி கிஸ்லாக் உடனான உரையாடல்கள் குறித்து 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்ய தலையீடு குறித்து எஃப்.பி.ஐ யிடம் பொய் சொன்னதாக இரண்டு முறை குற்றத்தை ஒப்புக்கொண்டார். மார்ச் மாதத்தில் ஃப்ளினுக்கு மன்னிப்பு வழங்குவதை "கடுமையாக பரிசீலித்து வருவதாக" ட்ரம்ப் கூறினார், அண்மைய நாட்களில் உதவியாளர்களிடம் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு மன்னிப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். கூகிள் மொழிபெயர்ப்பு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.