Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?

 • விக்னேஷ்.அ 
 • பிபிசி தமிழ்
computer programming in sanskrit

பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES

 

(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.)

கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்ளது. 

கணிப்பொறிகளைக் கையாள்வது பற்றிய அறிவு பரவப் பரவ, அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலவும் பரவத் தொடங்கின. 

அவற்றுள் மிகவும் பிரபலமான புரளி சமஸ்கிருதம்தான் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது. 

மென்பொருட்கள் கணினிக்காக உருவாக்கப்பட்ட நிரல்மொழிகளின் குறியீடுகள் மூலமே உருவாக்கப்படுகின்றன எனும்போதும், சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற காலத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. 

ஆனால், சமஸ்கிருத மொழியின் குறியீடுகள் மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்றோ, சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு மென்பொருட்கள் நிரல் செய்யப்படுவதற்கான வழிமுறை என்னவென்றோ இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. 

நிரல் மொழிகளுக்கு பதிலாக சமஸ்கிருதம் மூலமாகவோ, வேறு ஏதேனும் மொழிகளின் மூலமாகவோ மென்பொருட்களை உருவாக்க முடியும் என்பது இதுவரை சாத்தியப்படவில்லை. 

இந்தப் புரளி எப்படித் தொடங்கியது? 

1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் (Research Institute for Advanced Computer Science) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 

மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார். 

உதாரணமாக 'ஆசிய கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?' என்ற கேள்வியை நீங்கள் கணினியிடம் கேட்டால், அதைப் புரிந்துகொண்டு, அதற்கான பதிலை கணினி உங்களுக்கு வழங்க ஏற்ற மொழி உள்ளதா என்பதே அதன் சாராம்சம். 

computer coding

பட மூலாதாரம், GETTY IMAGES

 

"கணினி புரிந்துகொள்ளும் வகையில் வாக்கியக் கட்டமைப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கொண்டுள்ளன. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியை உடைய சமஸ்கிருத மொழி அத்தகைய வாக்கியக் கட்டமைப்பை கொண்டுள்ளது," என்று ரிக் ப்ரிக்ஸ் குறிப்பிடுகிறார். 

இன்றைய நிலை என்ன? 

ரிக் ப்ரிக்ஸ் இந்தக் கட்டுரையை எழுதிய ஆண்டு 1985. கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகள் எதுவும் இணையத்தில் அறிமுகம் செய்யப்படாத காலம் அது. 

ஆனால், இப்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியில் உள்ள வாக்கியத்தை உள்ளீடாகக் கொடுத்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் முடிவுகளை வழங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 

மனிதர்கள் பேசும் மொழிகளை அந்தக் கட்டமைப்பிலேயே (language syntax) செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கணினிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று கருதப்படுவது மொழியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் செய்யப்பட்டுள்ள பல ஆய்வுகளை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளன என்று தனது கட்டுரையில் ரிக் ப்ரிக்ஸ் விவரிக்கிறார். 

ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளபடி சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் கட்டமைப்பு மட்டுமே செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற வகையில் இல்லை. எல்லா மொழிகளின் கட்டமைப்பையும் கணினிகள் தற்போது புரிந்து கொள்கின்றன.

சோஃபியா
 
படக்குறிப்பு, 

 

உதாரணமாக 'ஜப்பானின் தலைநகரம் எது' அல்லது 'What is the capital of Japan' என்று எந்த மொழியில் நீங்கள் கூகுள், யாஹூ போன்ற தேடு பொறியில் தேடினாலும் டோக்கியோ நகரம் பற்றிய தகவல்கள் உங்கள் கணினியின் திரையில் பட்டியலிடப்படும். காரணம் இரு மொழிகளையும், அவற்றின் வாக்கியக் கட்டமைப்புகளையும் தேடு பொறிகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இப்போது மனிதர்களுடன் உரையாடும் அளவுக்கு திறன் உள்ள ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. 

அந்த அடிப்படையில் பார்த்தாலும் மென்பொருட்களை உருவாக்க மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த ஒரு மொழியைச் சார்ந்தும் இல்லை என்றும், மனிதர்கள் பேசும் எந்த ஒரு மொழியையும் உள்ளீடாகக் கொடுத்து அதே மொழியில் கணினி அல்லது ரோபோ போன்ற இயந்திரத்திடம் இருந்து பதிலைப் பெரும் வகையில் நிரல்மொழிக் குறியீடுகள் மூலம் செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது. 

மனித மொழி - இயந்திர மொழி 

கையாள்பவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை கணினி நிறைவேற்றச் செய்யும் மென்பொருட்களை உருவாக்க நிரல்மொழிக் (programming language) குறியீடுகள் (coding) பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த நிரல் மொழிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன எனும்போதிலும், தமிழ், வங்கம் போன்ற வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக C அல்லது C++ போன்ற நிரல் மொழிகளில் 'Print' என்று வழங்கப்படும் கட்டளை, 'எழில்' என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள நிரல் மொழியில் 'பதிப்பி' என்று வழங்கப்படுகிறது. 

நிரல்மொழிக் குறியீடுகள் மனிதர்கள் பேசும் எந்த மொழியில் இருந்தாலும் அந்தக் குறியீடுகள் பணிக்கும் வேலையைப் புரிந்துகொண்டு அவற்றைக் கணினிகள் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் நிறைவேற்றியே வருகின்றன. 

சமஸ்கிருத எழுத்துகள் மற்றும் எண்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

சமஸ்கிருத எழுத்துகள் மற்றும் எண்கள்

ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் கணிப்பொறி ஆராய்ச்சி அதிவேகத்தில் நடந்து, அதே வேகத்தில் பயன்பாட்டில் மாற்றங்களும் நடந்துவரும் சூழலில் உலகில் எழுத்து வடிவம் உள்ள அனைத்து மொழிகளிலும் நிரல்மொழிகள் உருவாக்கப்படவில்லை என்றாலும் பெரும்பான்மையாக தொழில்நுட்பப் புழக்கத்தில் இருக்கும் மொழிகளில் கணினிகளுக்கான நிரல் மொழிகள் எதிர்வரும் ஆண்டுகளில் உருவாக வாய்ப்புண்டு. 

அது நிகழும்போது கணினிக்கு ஏற்ற மொழி என்ற குறிப்பிட்ட ஒரு மொழி இருக்காது. 

நிரல்மொழிக் குறியீடுகளை கணினி இயந்திர மொழியாக மாற்றி (machine language), எந்தச் செயலைச் செய்யுமாறு பணிக்கப்படுகிறதோ அதைக் கணினி செய்கிறது. 

அது கூகுளில் எதையாவது தேடுவதாக இருக்கலாம், கூட்டல் கணக்குக்கு விடை சொல்வதாக இருக்கலாம், உங்களுக்குப் பிடித்த பாடலை இசைக்கச் செய்வதாகவும் இருக்கலாம்.

இந்தக் கட்டளைகளை கணினிக்கு புரிந்துகொள்ள வைக்க நிரல் மொழிகளால் மட்டுமே முடியும். கணினி அல்லது ரோபோ போன்ற வேறு இயந்திரம் எதையும் மனிதர்கள் பேசும் மொழிகளைப் பேசவோ, எழுதவோ வைக்க வேண்டுமானாலும் நிரல்மொழிகளே தேவை. 

ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், மாண்டரின் என மனிதர்கள் பேசும் மொழிகளின் சொற்களைக் கொண்டு நிரல் மொழிக் குறியீடுகள் உருவாக்கப்படாவிட்டால் எவ்வளவு இனிமையான, கவித்துவமான மனித மொழியில் சொன்னாலும் அது இயந்திரத்துக்குப் புரியாது.

 

 

https://www.bbc.com/tamil/science-50850117

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது. இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார். அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. 
  • மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும். ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..   “ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸) அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன. இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”   படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪
  • நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும் காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன் உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர் அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???  
  • சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது.  அதையே தான், நிழலிக்கு சொன்னேன். 1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.
  • ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான். நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.