Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா?

 
1-83-696x392.jpg
 37 Views

கடுமையான நோய் அல்லது அதிக உயிரிழப்புகளைக் குறைப்பதில் மிகமிகக் குறைந்த அளவில்தான், பிளாஸ்மா சிகிச்சையால் பயன் கிடைத்தது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்தியாவில் மிதமான கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 464 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (பி.எம்.ஜே) தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தமிழகத்தின் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின.

இதுகுறித்து  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,

”ஆய்வில் பங்கேற்ற, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறைந்தது 18 வயதுடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஏழு நாட்களுக்குப் பிறகு, மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்க முடிந்ததைக் காண முடிந்தது. மிதமான கோவிட்-19 பாதிப்புடைய நோயாளிகளுக்குச் சாத்தியமான சிகிச்சையாக இது ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட செயல்திறனை மட்டுமே காட்டியது. மேலும் பிளாஸ்மா சிகிச்சையை வயது வந்தோருக்கான 239 நோயாளிகள் பெற்றனர். அதே நேரத்தில்  பிளாஸ்மா  சிகிச்சை  இல்லாமல் 229 நோயாளிகளைக் கொண்ட கட்டுப்பாட்டுக் குழு ஒன்றும் நிலையான கவனிப்புகளைப் பெற்றது.

ஆனால், 41 நோயாளிகள் அல்லது 18 சதவீதம் பேர் கொண்ட சாதாரண கட்டுப்பாட்டுக் குழுவை ஒப்பிடும்போது ஒரு மாதத்திற்குப் பிறகு, பிளாஸ்மா சிகிச்சையை  பெற்றவர்களில் 44 நோயாளிகள் அல்லது 19 சதவீதம் பேர் கடுமையான நோய்க்குத் தள்ளப்பட்டனர் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு கடுமையான கோவிட்-19க்கு நோய்க் குறைப்பில் முன்னேற்றமில்லை. அதே நேரம் பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

முன்னர் நடத்தப்பட்ட அவதானிப்பு ஆய்வுகள், பிளாஸ்மாவைப் பெறுபவர்களுக்கு மருத்துவ நன்மைகளை பரிந்துரைக்கின்றன. ஆனால், இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில், அவர்கள் உயிரிழப்பிலிருந்து தப்பியதைப் பற்றி ஏதும் கண்டறிய முடியவில்லை என்பதால் சோதனைகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டன.

குறைவான ஆய்வகத் திறன் கொண்ட அமைப்புகளில், மிதமான கோவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 28 நாளில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கான பாதிப்பை பிளாஸ்மா குறைக்காது என்று புதிய ஆய்வு காட்டியுள்ளது” என்றனர்.

 

https://www.ilakku.org/இந்தியாவில்-பிளாஸ்மா-சிக/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள். இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜
  • பகிர்வுக்கு நன்றி✍️
  • பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்! November 29, 2020 கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர்  (Body Builder)  மார்கோ (Margo) என்ற பொம்மையை  8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடன் இணையதளத்தில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த நபர் தனது  திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த  வீடியோவானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.   https://thinakkural.lk/article/93669
  • காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.
  • மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள்; கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே? மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர்.  இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள். நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள். அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள்.  இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை.  தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர். இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.   https://www.ibctamil.com/srilanka/80/155221  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.