Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன்.

October 25, 2020

20201023_144631-678x1024.jpg

வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார்.

தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாளர்களிடமிருந்தும் அந்த நாடுகளில் பாவனையில் இருக்கும் தீப்பெட்டிகளை கோரிப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்டபோதும் அநுராதபுரம் மிகிந்தலையை சொந்த இடமாக கொண்டவர். என்பதனால் 1977 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களிற்கு வழிகாட்டியாக தொழில் புரிந்துள்ளார். இவ்வாறு தொழில் புரியும் காலத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் இருந்து அவர்களது நாட்டின் தீப்பெட்டி ஒன்றை நினைவாக பெற்றுக்கொண்டு அதனை சேகரித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் உச்சம் பெற்றதோடு முழுமையாக யாழ்ப்பாணம் கோண்டாவிலிலேயே வாழ்கின்றார்.

இவ்வாறு கோண்டாவிலிற்கு கொண்டுவந்த சகல நாட்டின் தீப்பெட்டிகளையும் பேணிப் பாதுகாக்கும் அதேநேரம் 1995 ஆம் ஆண்டு யாழில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று வன்னியிலும் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த சமயம் வன்னியில் 1997 ஆம் 98 ஆம் ஆண்டு காலத்தில் சாதாரணமாக தீப்பெட்டி 2 ரூபாவாக இருந்தபோதும் தடையின் காரணமாக 15 ரூபா முதல் 20 ரூபா வரை சென்றபோதும் இந்த தீப்பெட்டிகளை பாவனைக்கு எடுக்கவே இல்லை என தனது பழைய நினைவுகளை மீட்டுகின்றார்.

20201023_145614-1024x716.jpg

இவ்வாறு 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரையில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்தபோதும் பல இடப்பெயர்வுகள் , மழை , தண்ணியென அனைத்திலும் அகப்படாது பாதுகாத்த நிலையில் இன்றும் 53 நாடுகளின் தீப்பெட்டிகளை முழுமையாகவும் மேலும் சில தீப்பெட்டிகள் சேதமடைந்த நிலையிலும் பராமரிக்கின்றார். இவ்வாறு பேணிவரும் தீப்பெட்டிகளை ஏதொ ஒரு வகையில் பேணி பராமரிப்பது மட்டுமன்றி இதனை தொடர என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புவதோடு இவற்றினை நீண்டகாலமாக பாதுகாத்து வரும் விடயம் அறிந்த சிலர் ஆச்சரியமாக பார்த்தாலும் மேலும் சிலர் எள்ளி நகையாடியவர்களும் உண்டு என்கின்றார்.

இவ்வாறு ஓர் வித்தியாசமான சிந்தனையுடன் இருப்பவரிடம் பெயர் , முகவரி , வயதினைக் கேட்டபோது எனது முயற்சி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று விரும்புகின்றேனே அன்றி இதனால் நான் பெயர் எடுக்க விரும்பவில்லை எனது வாழ் நாளில் இழந்தவை அதிகம் இதன் மூலம் எதனையும் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்ததோடு தீப்பெட்டிகளை நேர்த்தியாக படமாக்குங்கள் ஆனால் என்னை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்ததோடு இது அடுத்த தலைமுறை மாணவர்களிற்கு ஏதோ ஒரு வழியில் பயன்படுமாக இருந்தால் நான் இவ்வளவு காலமும் பாதுகாத்த ஒன்றிற்கு பெறுமதி கிடைத்ததாக கருதுவேன்.

எனக்கு பிற்காலத்தில் என்னால் சேகரிக்கப்பட்ட இப் பொருட்களை உள்ளூரில் உள்ள ஓர் பொது அருங்காட்சியங்கள் ஒன்றில் அல்லது பொதுவான இடத்தில் பார்வைக்கு உகந்த்தாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை அதற்கும் முயற்சிப்பேன் . என்றார்.

 

https://globaltamilnews.net/2020/152332/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு புசு புசு குஸ்பு இட்டலிக்கு கொட்டலில் அவலுக்கு பதில் கொஞ்சம் ஜவ்வரிசி சேர்ப்பினம் ..👍 நன்றி.!
    • பிறந்தநாள் வாழ்த்துகள் ரஞ்சித் and சகாறா
    • சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்   பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா குறித்து கேட்ட சில கேள்விகளுக்கு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.   அதில் சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்படி பார்த்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது. Related Tags :   https://www.maalaimalar.com/news/topnews/2020/12/05073609/2136407/tamil-news-Sasikala.vpf
    • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணி யாற்றிய 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தல் நிலை யங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.   https://thinakkural.lk/article/95413
    • இது ரவா இட்லி இல்லை.. அரிசி இட்லி...கருத்து பகிர்வுக்கு நன்றி 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.