Jump to content

இந்தியாவின் உண்மையான கல்வி அதிபதி மெக்கலே


Recommended Posts

இன்று உண்மையான கல்வியின் அதிபதிக்கு பிறந்தநாள் !  இந்தியர்களுக்கு கல்வி கொடுத்தவர். 
ஆம் இந்தியர்களின் கல்விக்கு அதிபதியான லார்ட் மெக்கலே (Thomas Babington Macaulay)அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

large.6793C1E8-C967-40A5-AA35-3726096FE0F6.jpeg.5ac1a250c06b54764f13bfb4532dcb9e.jpeg

“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.

அப்புறம் நானே யோசித்தேன். 
என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்?

என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?
கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்:
லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே.

அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.

இந்தியாவிற்கு வந்த போதும் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர். 

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்வ மிஷினரி

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...... என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்து வித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்று இருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தியன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்!

நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன், 
ஆம்பிளை சரஸ்வதி, 
மாமனிதர் மெக்கலே!

டாக்டர் ஷாலினி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

 இந்தியர்களுக்கு கலவி கொடுத்தவர். 
 

இத்தியாவின் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, உடையார் said:

இத்தியாவின் 👍

 

19 hours ago, tulpen said:

இந்தியர்களுக்கு கலவி கொடுத்தவர். 

இவர் இந்தியாவிற்கு... கல்வி கொடுத்திரா விட்டால்,
இன்னும் கனக்க  எழுத்துப் பிழை வந்திருக்கும். :)

Link to comment
Share on other sites

  • நியானி changed the title to இந்தியாவின் உண்மையான கல்வி அதிபதி மெக்கலே

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.