Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவிற்காக சேகரிக்கப்பட்ட100 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எதிர்க்கட்சி கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மயந்த திசாநாயக்க கோரியுள்ளார்.

இதேவேளை இரண்டாவது கொரோனா அலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரன்டிக்ஸ் நிறுவனமே இரண்டாம் கொரோனா அலைக்கு காரணம் என்றால் அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் அந்த நிறுவனம் நட்ட ஈட்டை செலுத்த வேண்டும் என்றும் மயந்த தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/259491?ref=home-feed

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொத்தா  கொரோனோவுடன் கட்டி பிரண்டு   சண்டைபோட்டு வெற்றிகரமாக கலைத்ததுக்கு  சன்மானமா எடுத்து விட்டாராம் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு புகழாரம் சூட்டியவர்கள் இப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? எந்த நாடு இனிப் பிச்சை போடப் போகிறது? அதை வைத்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி விடலாம் என கணக்குப்  போடுவார் கொரோனாவின்  கதாநாயகன்.

Link to post
Share on other sites

ஆட்சிக்கு வந்து  இந்த சின்ன ஊழலை கூட செய்யா விட்டால் பிறகெப்படி தங்களை நல்லாட்சி செய்தவர்கள் என மக்களுக்கு சொல்வது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறந்த கால்பந்து வீரன். ஆழ்ந்த இரங்கல்கள்.   கால்பந்து வீரர் மாரடோனா காலமானார் - என்ன நடந்தது? பட மூலாதாரம், GETTY IMAGES கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.  பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.  பட மூலாதாரம், GETTY IMAGES இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை. தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.   1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைப்பதில் மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. அப்போது அவரது தாய்நாடான அர்ஜென்டீனா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது.          அவரளவுக்கு வேறெந்த வீரராலும் துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை. கால்பாந்தாட்ட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது தாயக அணியின் சிறப்பு பயிற்சியாளராக மாரடோனா இருந்தார். இந்த நிலையில், கால்பந்தாட்டத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது உயிரிழப்பு அமைந்து விட்டதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.  1960ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த மாரடோனா, இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரராக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர். அவரது மனைவி கிளாடியா வில்லஃபேன் 2003ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.   https://www.bbc.com/tamil/sport-55078371
    • ஆழ்ந்த இரங்கல்கள்..! 80களில் இவருடைய கால் பந்து ஆட்டங்களை மிகவும் ரசித்து பார்த்துள்ளேன்.
    • உடலில் சமிபாட்டை அதிகரிக்கும் enzymes போன்றனவும் 37 பாகை செல்ஸியஸில்தான் optimum ஆக வேலை செய்யும். அவையும் புரதங்கள்தான். ஆனால் 41 பாகை தாண்டினால் புரதங்கள் வேலை செய்யாமல் இறப்பைக்கொண்டுவரும். இதெல்லாம் 13/14 வயதில் படிக்கின்றார்கள் என்பதை மகனுக்கு படிப்பிக்க ஆரம்பித்து அறிந்துகொண்டேன்☺️ மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁 கொரோனாவுக்கு தடுப்பூசி மேற்கு நாடுகளில் மூன்றுக்கு மேல் வந்துவிட்டது. ரஷ்யா, சீனாவிலும் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் தொடர்பாடலின் வேகத்தால் மனிதர்கள் அறிவை தமக்குள் பகிர்ந்துகொள்வதாலும், கணணி பல்வேறு கடினமான modelling குகளை செய்ய உதவுவதாலுமே சாத்தியமானது.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.