Jump to content

பிள்ளைகளை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். 

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/137249/IMG_20201026_134126.jpg

இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். 

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வரை எங்கள் உண்ணாவிரதம் தொடர்கிறது.

எங்கள் குழந்தைகளை தடுப்புக்காவல் மற்றும் பிற மறைவிடங்களிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு இலங்கை தவறிவிட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. துன்பப்படும் இந்த தமிழ் தாய்மார்களுக்கு உதவ உங்கள் நல்ல அலுவலகத்தைப் பயன்படுத்துமாறு செயலாளரை நாங்கள் தயவாக கேட்கிறோம். என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/93039

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2020 at 05:33, பிழம்பு said:

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அமெரிக்கா அல்ல எந்த நாடும் செய்யாது. இந்த காரணத்தை சாதகமாக வைத்து சிங்களவனை பயமுறுத்தி தம் ஆசைகளை நிறைவேற்றவே முயல்வார்கள். ஆனால் சிங்களவன் எல்லாருக்கும் பெப்பே காட்டிவிட்டு சீனாவோடுதான் குடும்பம் நடத்துவேன் என்று அடம்பிடிக்கும். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது எல்லா நாடும் பயமுறுத்தி கைவிட்ட பின், சீனா நாசூக்காய் கைவரிசையை காட்டும். அப்போ சிங்களவன் வாய்வீரம் எல்லாம் அடங்கி வைப்பாட்டியாய் (சீனாவின் கொலனியாய்) மௌனிக்க வேண்டியான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைக் பொம்மியோவை நம்புகின்றோம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்

 
PHOTO-2020-10-30-13-47-48-696x523.jpg
 19 Views

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ, எமக்கான தீர்வினைப் பெற்றுத் தருவார் என நம்புகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி அலுவலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

PHOTO-2020-10-30-13-47-50-1.jpg

இதன்போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி, “எமக்கான நீதி எப்போது யார் பெற்றுத் தருவார் என்று நாம் வீதியிலே காத்து இருக்கின்றோம். எங்களுடைய இந்த போராட்டமானது எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடரும் என கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

PHOTO-2020-10-30-13-47-49.jpg

சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள் எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம் சென்ற வாரம் வந்திருந்த அமெரிக்க ராஜதந்திரி மைக் பொம்மியோ அவர்களை நாம் சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த போதும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கொடூர நோய் காரணமாக அவரை சந்திக்க முடியாது போய்விட்டது. இருப்பினும் எமது நீதிக்கான கோரிக்கையினை நாம்  அவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றோம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எமக்கான நீதியினை பெற்று தருவார் என நாம் நம்புகின்றோம்” என தெரிவித்தார்

 

https://www.ilakku.org/மைக்-பொம்மியோவை-நம்புகின/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.