Jump to content

மீண்டும் வரும் ‘கொரோனா’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வரும் ‘கொரோனா’

-அனுதினன் சுதந்திரநாதன்

கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப்பி இருக்கிறது.  

2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த நாடுமே, முழுமையான முடக்கத்துக்குள் உட்படுத்தப்பட்டதை ,அத்தனை இலகுவில் மறந்திருக்க முடியாது. ஆனாலும், ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பதற்காக, பல பொருளாதார இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, அந்த முழுமையான முடக்கத்தை, அரசாங்கமும் மக்களும் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். 

ஆனால், இம்முறை, அதே பொறுப்புணர்வை யாரிடத்திலும் பார்க்க முடியவில்லை. இதனால், கொரோனா வைரஸின் தாக்கத்துடன் இணைந்த பொருளாதார இழப்புகளுக்கு, முகம்கொடுக்க வேண்டிய மிக இக்கட்டான சூழ்நிலைகள், எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ளன என்பதே உண்மை.

திறந்த பொருளாதாரச் சூழ்நிலையில், எல்லா நாடுகளினதும் சரி, எல்லா வியாபாரங்களினது தொடர்புகளும் சரி, ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கின்றன. இதன் விளைவாக, பொருளாதாரத் தாக்கங்கள், ஒருவரை மாத்திரம் பாதிப்பதாக இருக்காது. ஒருவரோடு தொடர்புபட்டு இருக்கும், ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவே இருக்கப்போகிறது.

உதாரணமாக, கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக, பல நாடுகளும் முடங்கிப் போயுள்ளன. அந்த நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களும், தங்களது தொழில்முறை செயற்பாடுகளை நிறுத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளன. எனவே, தன்னிடம் இருக்கக்கூடிய தொழிலாளர் வளங்களைக் காப்பாற்றக் கூடியவகையில், தன்னிடம் இருப்பிலுள்ள நிதியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். 

எனவே, தற்சமயத்தில் செயற்பாட்டில் இருக்கக்கூடிய செயற்றிட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த முற்படும். இது, வெளிநாட்டில் இருக்கக்கூடிய குறித்த நிறுவனத்தில், தங்கி இருக்கக்கூடிய இலங்கை நிறுவனத்தையும் விரைவாகப் பாதிக்கச் செய்யும். குறித்த, வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களில் வேலை செய்யும் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினர், வேலையற்ற நிலையில், ஏனைய செயற்றிட்டங்களுக்கு மாற்றப்பட முடியாமல், தங்களது வேலைகளை இழக்க நேரிடலாம். 

இந்த வேலையிழப்பு, வேலையிழந்த அந்த நபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை. அந்த நபரையும் அவரது குடும்பத்தையும், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும். காரணம், குறித்த குடும்பங்களில் வருமான மூலம் தடைப்படும்போது, அந்தக் குடும்பங்களால் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து, ஏனைய செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது, இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இன்னுமொருவரை, மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும். இது, நாட்டின் பணப்பாய்ச்சலைக் குறைப்பதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளும் மிகப்பாரதூரமான அளவில் பாதிக்கப்படும்.

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f022660ad4.jpg

தற்போதைய நிலையில், அதிக நாள்களாக முடக்க நிலையிலிருக்கும் கம்பஹா மாவட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் உருவாகி இருக்கிறார்கள். அரசாங்கம் ஆட்சியிலிருப்பதற்கு,  பெரும்பான்மை வாக்குகளை வாரி வழங்கிய மாவட்டமாக கம்பஹா இருப்பதால், மிகவிரைவாகவே அவர்களுக்கான நிதி திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த விளைந்திருக்கிறது. 

இதுவே, ஒட்டுமொத்த இலங்கையும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகின்றபோது, ஏனைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார நிலைக்கும், இதுபோல விரைவாக, இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியுமா?

கோட்டாபய, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுமே, பொருள்கள், சேவைகளுக்கான வரிகளைக் குறைத்ததுடன், அரசாங்கத்துக்கு வருமான மூலமாக இருக்கக்கூடிய, பல்வேறு வருமான வரிகளையும் குறைத்திருந்தார். இதன் நோக்கம், மக்களின் கைகளில் மாதாந்தம் கிடைக்கின்ற பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமாக, கொள்வனவுச் சக்தியை அதிகரிக்க எதிர்பார்த்ததுடன், இதன் மூலமாக, இழந்த வருமான வரியின் ஒருபகுதியை ஈடுசெய்துகொள்ளவும் எதிர்பார்த்தார்.

ஆனால், தற்போதைய நிலை, இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கம், வறிய, நடுத்தர மக்களின் நாளாந்தச் செலவினங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. ஒவ்வொரு சுய தொழிற்றுறையாளனுமே, பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிலும், மிகப்பெரும் வருமான மூலமாக இருக்கக்கூடிய சேவைத்துறை, சுற்றுலாத்துறை இரண்டுமே, மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.  

இதன்காரணமாகத்தான், இந்தப் பொருளாதாரம், ‘பிரமிட்’ கட்டுமானம்போல, ஒருவரில் மற்றொருவர் தங்கியிருப்பதாக முன்னரே கூறியிருந்தேன். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ரீதியான இழப்புகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

எனவே, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்த்துக்கொள்ளவும் இந்தப் பொருளாதார பிரச்சினைகளைத்  தவிர்த்துக்கொள்ளவும் என்ன மாதிரியான விடயங்களைச் செய்யவேண்டும் என்பதே, மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

அப்பட்டமாக உண்மையைச் சொல்லவதாக இருந்தால், இந்த நிதியியல் சரிவிலிருந்தோ, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தோ ஒழிந்துகொள்ள முடியாது. நிச்சயமாக, பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். 

ஆனால், புத்திசாதுர்யமாகச் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில்,  இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள, சமூக இடைவௌி என்ற செயற்பாட்டை இறுக்கமாகப் பின்பற்றுகின்றோமோ? நிதியியல் ரீதியாக, எதிர்காலத்தில் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. இதன்மூலமாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள வணிகங்களில், நிதிச் சுழற்சி ஆரம்பிக்கப்படும். 

இது, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், வேலைகளை இழந்தோருக்கு மீளவும் வேலைகள் கிடைக்கச் செய்கின்ற செயற்பாட்டுடன் ஆரம்பித்து, மீளவும் ஒரு சுழற்சி அடிப்படையில், இந்தச் செயற்பாடுகள் ஒரு ஸ்திரமான நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும். இந்தப் பொருளாதார மீட்பு முறையை, வெறும் ஒற்றைப் பந்திக்குள் சுருக்கமாக அடக்கிவிட்டாலும், இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று, பொருளாதா ஸ்திரநிலை ஏற்படுவதற்கு, வருடங்கள் பல ஆகலாம். இந்தக் காலத்தைக் குறைப்பதென்பது, தனிமனிதனால் முடியாத ஒன்றாகும். கூட்டு முயற்சியாக, அனைவருமே இணையும்போதுதான், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நீங்கள் யாருமே பாதுகாப்பாகவில்லை என்பதை, இந்தக் கொரோனா வைரஸ் பரவல், இலங்கையில் நுழைந்த 2020இன் முற்பகுதியிலேயே உணர்ந்திருப்போம். இம்முறை, இந்தப் பொருளாதார நிலைவரத்துடன், நமது அலட்சிய போக்குக்கு மத்தியில், நமக்குள் ஊடுருவியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருக்கும்.

மிக இக்கட்டான சூழலை, எதிர்வரும் சில வாரங்களுக்கு, முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நமது பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ, அதுபோல , நம் பொருளாதாரம் தொடர்பிலும் சிரத்தையோடு சிந்திப்போம்.இல்லையெனில், நாளைய வாழ்க்கையை வாழ, ஏதுமற்ற நிலையைக் கொண்டவர்களாக, நாம் மாறியிருக்கக்கூடும். 

 

http://www.tamilmirror.lk/வணிகம்/மீண்டும்-வரும்-கொரோனா/47-257495

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து நியுசீலன்ட், அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களை தவிர  மற்றவர்கள் எல்லாம் இப்போது மிகவும் பயந்து போய் தான் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கோத்தபாயவாலைதான் இந்த கொரோனாவை கட்டுபடுத்த முடிஞ்சது எண்டு இஞ்சை கொஞ்சப்பேர் துள்ளிக்கொண்டு திரிஞ்சினம். ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஏதோ கோத்தபாயவாலைதான் இந்த கொரோனாவை கட்டுபடுத்த முடிஞ்சது எண்டு இஞ்சை கொஞ்சப்பேர் துள்ளிக்கொண்டு திரிஞ்சினம். ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

எண்ணத்துக்கு கோத்தாவை  கொரனோ  விடயத்தில் திட்டுகிரண் என்று விளங்காமல் கொள்ளுப்பட்டவை இதுகளுடன்  100 முறை விளங்கப்படுத்தியும் விளங்காத கூட்டம் இப்ப பலிகடா நம்ம வடகிழக்கு தமிழ் சனம்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எண்ணத்துக்கு கோத்தாவை  கொரனோ  விடயத்தில் திட்டுகிரண் என்று விளங்காமல் கொள்ளுப்பட்டவை இதுகளுடன்  100 முறை விளங்கப்படுத்தியும் விளங்காத கூட்டம் இப்ப பலிகடா நம்ம வடகிழக்கு தமிழ் சனம்தான் .

மலையகமும்.. மிக மோசமாக, பத்திக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
வேண்டுமென்றே... தமிழர் பகுதிகளில் பரப்பினார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மலையகமும்.. மிக மோசமாக, பத்திக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
வேண்டுமென்றே... தமிழர் பகுதிகளில் பரப்பினார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 

சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு
*நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.*
*( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )*
உங்களுக்கு சுனாமி தெரியும். அதன் அவல நிலை உங்களுக்குத் தெரியும்.அனுபவம் இருக்கிறது .. தன்னுடைய குடும்பத்தின் மரண அளவு தெரியும் .. அன்புக்குரியவர்களின் இறப்புகளைப் பார்த்துள்ளோம் , குடும்பத்தோடு இறந்தவர்களை கண்டுள்ளோம்.. அதே போல் உயிர்களும் உடமைகளும் எவ்வளவு அழிந்து சென்றன என்பதைப் கண்களால் கண்டுள்ளோம். இன்னும் மறக்கவில்லை..
ஈஸ்டர் தின தாக்குதல் எப்போது என்பது உங்களுக்குத் தெரியும், ஒரு சில நொடிகளில் எங்கள் சொந்த மக்கள் எவ்வாறு துண்டுகளாக உடைந்தார்கள் என்பதை கண்ட நீங்கள் , தங்கள் அன்பு மகள் துண்டுகளாக இருப்பதை பார்த்த அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் இருக்கிறார்கள் ..
தங்கள் பெற்றோர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு துண்டுகளாக உடைந்திருப்பதைக் கண்ட குழந்தைகள் உள்ளனர். சுற்றுப்பயணத்திற்கு வந்து குடும்பங்களை இழந்து திரும்பிச் சென்ற வெளிநாட்டினரை அறிவோம்..
இது இரண்டில் ஒன்று மறுபடியும் நிகழும் எனின் உங்களுக்கு அது ஒரு நகைச்சுவையா ??
நீங்கள் கடலுக்குப் போவீர்களா ??
நீங்கள் தேவாலயத்திற்குச் செல்வீர்களா?
ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் … இப்போது வரப்போவது இது இரண்டையும் போன்றதொரு அழிவு அல்ல.. *இது போன்றவற்றோடு ஒப்பிட முடியாத அளவு பாரதூரமானது*..
பயமுறுத்தவில்லை. தயாராகுங்கள். பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
முன்னெப்போதையும் விட இலங்கையில் அதிகமான மக்கள் இறந்து போவர்.. போரின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தோற்கடிக்கப்படும்.
ஆனால் நீங்கள் இன்னும் கவலைப்படவில்லை… ஏன்???
முந்தைய இரண்டு சம்பவங்களை போன்ற அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதால் …
இத்தாலி உலகின் சிறந்த வைத்திய பிரிவைக் கொண்ட நாடு, ஆயினும் இன்று அந்நாடு முழுவதும் பாழாகிவிட்டது …
சீனாவில் மக்கள் 20 லிட்டர் வெற்று நீர் பாட்டிலை வெட்டி தலையில் இருந்து மறைத்து ,நாய் பூனைகளுக்கும் கூட முகமூடி அணிவித்து இதில் இருந்து பிழைத்தனர்..
இலங்கை மக்களால் அத்தகைய தியாகத்தை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா … ?? இந்த முகமூடி அணிய முடியாது, அரிக்கிறது , மூச்சு விட முடியவில்லை என புலம்பித் திரிபவர்கள் !!
இந்த நேரத்தில் இலங்கை இத்தாலியின் அளவைக் கடந்துவிட்டது …
தொலை காட்ச்சி, பத்திரிகை செய்திகளுக்கு ஒரு வரம்பு உள்ளது – அரசாங்கம் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு … ஆனால் உண்மை அதுவல்ல. நாங்கள் இப்படியே இருப்போமானால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் பாதி பேர் இறந்து போக கூடிய நிலைமை ஏற்படும் ..
அது குறிப்பாக எம் முட்டாள் தனத்தினாலும் ,தலை கனத்தினாலுமே ஆகும்..
இதிலிருந்து தப்பிக்க சில விஷயங்கள் மட்டும் செய்தால் போதும் .. தயவு செய்து
01.நாங்கள் இராவணனின் தலைமுறை, இது சிங்கள பெளத்த நாடு என கூறிக்கொண்டு திரிய வேண்டாம்.. வைரசிற்கு இது எதுவும் தெரியாது .. அது மேட் இன் சைனா.
2. அரசாங்கத்தினால் சில நேரங்களில் உண்மையைச் சொல்ல முடியாது.. சொன்னால் எங்கள் நாட்டு மக்களின் நிலை என்னவாகுமென அவர்கள் அறிவர்.. அதனால் அவர்கள் கூறுவதை மட்டுமே மலை போல் நம்பி கோட்டா அவர்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை , உலகின் சிறந்த ஆர்மி இருப்பதால் நோ ப்ரோப்லம்ஸ் என கூறி கொண்டு திரிய வேண்டாம்..
வைரஸுக்கு அவர்களில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது..
அரசாங்கத்தை குறை கூற வேண்டாம். இதை அரசாங்கத்தால் மட்டும் தடுக்க முடியாது.. நீங்களும் நானும் தடுக்கவில்லை என்றால்.., இது எம் செயற்பாடுகளை பொறுத்தே உள்ளது..
03. முகமூடி, கையுறை அணிந்தால் , மற்றவர்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்காதீர்கள்..உங்கள் குடும்பத்தை வாழ வைப்பது அவர்கள் அல்ல.
மற்றவர்கள் அணிவார்கள் என்றால் பரவாயில்லை இல்லையென்றால் கிச் கிச் போல் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்களும் உங்கள் முழு குடும்பமும் நிச்சயமாக இறந்துவிடுவீர்கள் … ( இப்படி சொல்றத தவிர வேற வழி இல்ல )
உங்க வீட்டில் ஒருவர் இறந்தால் தான் இவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் .. இதை கண்டு கொள்ளாதீர்கள் )
04. இன்னும், காரணங்களை உருவாக்கி கொண்டு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் …
தேவாலயத்திற்கும், போதி பூஜைக்கும் ,தன்சல் , சுற்றுலாவிற்கு சென்றால் மட்டுமல்ல. சாலையில் உள்ள ஒரு பஸ்ஸில் ஏறி இறங்கினால் போதும் …
நீங்கள் இன்னும் அதை செய்து கொண்டு இருந்தால் , உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை நீங்களே கொல்லப் போகிறீர்கள். உங்கள் முழு குடும்பமும் இன்னும் ஒரு மாதத்திற்குள் மண்ணின் கீழ் இருக்கும்.
05. நம்புவதாயின் நம்புங்கள்..
நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உலகின் அதிக மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடென இலங்கை விருது எடுக்கும்..
முகமூடி போட முடியாது – மூச்சுத் முட்டுகிறது – அரிக்கிறது – கிச் கிச் போன்றது … இது போன்ற முட்டாள் கதைகளை கூற வேண்டாம், மற்றவர்கள் அணியும் வரை காத்திருக்க வேண்டாம் … எல்லோரும் இன்னொருவர் அணியும் வரை காத்திருந்தால் யாரும் கடைசிவரை அணிவதில்லை..
வேலைக்குச் செல்ல வேண்டாம். லீவு தரவில்லை எனின் நின்று விடுங்கள் வீட்டில் இருங்கள்…வேலை போய்விடும்… வருமானம் நின்றுவிடும்.ஆனால் நீங்களும் உங்கள் குடும்பமும் உயிர் வாழ்வீர்கள்…
உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால்.., நீங்கள் போகும் பஸ்ஸில் ,வீதியில் , வேலை தளத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸை வீட்டிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுப்பீர்கள் …
அவசர பயணம் செல்வதாயின் முகமூடி மற்றும் கையுறைகளை கட்டாயமாக அணியுங்கள். வீட்டிற்கு வந்து முதலில் கைகளைக் கழுவுங்கள். சுத்தமாக இருங்கள். துணிகளைப் வெயிலில் போடுங்கள்…
06. வீட்டிலேயே இருங்கள்.. அவ்வளவு தான்… கஷ்டம் தான் வேறு வழியில்லை .. இவ்வளவு காலமாக படிக்காத புத்தகத்தைப் படியுங்கள்.. படம் ஒன்றை பாருங்கள். யாரையும் வீட்டிற்கு வர விடாதீர்கள். கோபப்பட்டாலும் பரவாயில்லை ..
வைரஸை எடுத்து கொண்டு உங்களை கொலை செய்ய வருவார்கள்..அது அவருக்கும் தெரியாது அனால் அதுதான் உண்மை.. வீட்டிலேயே சத்தமில்லாமல் இருந்து விடுங்கள்.. இல்லையெனில் ஸொரி மச்சான் திரும்பி போய்விடு என அனுப்பி விடுங்கள். கோபப்பட்டால் பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் .. அதை பற்றி நினைக்க தேவையில்லை..
உங்களால் அதை செய்ய முடியாது என்று எனக்கு தெரியும். உங்களால் ஒருவரை விட்டு குறைந்தது 3 அடி தூரத்தில் கூட இருக்க முடியாது என்று..
இறுதியாக, நான் கூறுகிறேன் …
இறப்பதாயினும் கொஞ்சம் மரியாதையாய் இறந்து போக வேண்டும்.. மதிப்பிற்குரிய விதத்தில். இதில் இறப்பதெனின் இறப்பவரின் பெயர் கல் வெட்டில் பொறிப்பதை விட்டும் குறைந்தது சவப்பெட்டி கூட கிடைக்காது புதைப்பதற்கு…
செய்ய வேண்டியதெல்லாம் தெரிந்து கொண்டே …
இந்த வைரஸால் அநியாயமாக அழிந்து போக வேண்டாம்.
இன்று நமக்குத் தெரியாவிட்டாலும், இது நாடு முழுவதும் பரவப் போகிறது. எனவே, அன்பாக கூறுகின்றேன், கவனமாக இருங்கள்.. இன்னும் ஒரு சில நாட்களுக்கு..
இன்று , நாளை அதை நீங்கள் செய்ய முடியாவிட்டால், உங்களால் ஒருபோதும் முடியாது …
(இதைச் சொல்வதற்கு வேறு வழியில்லை – மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்… )
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை நினைத்து பயந்தமோ அது அங்கு நடக்க தொடங்கி விட்டது .வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இதை எப்படி ஒரு விழிப்புணர்வாய் சொல்ல முடியுமென்பதுதான் சிந்தனை .

இனிமேலாவது அரசாங்கம் சொல்லும் கதைகளை கிளிப்பிள்ளை போல் பிரிண்ட்  பண்ணும் வீரகேசரியையும் உள்ளூர் பத்திரிகைகளையும் மேய்ந்து போட்டு மந்தைகள் போல் அரசுக்கு சார்பாக கதைப்பவர்கள் சிந்திக்கனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் இலங்கையின் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பல மேற்கு நாடுகளை விட பல மடங்கு சிறந்தது. இதற்கு கோத்தாவின் இரும்புக் கரம் குறித்த பயம் காரணமா? இருக்கலாம், ஆனால் முக்கிய காரணம் இலங்கையில் இருக்கும் பொதுச் சுகாதார ஊழியர்களும் மருத்துவர்களும் முழுமையாக விஞ்ஞானத்தை நம்பி, பின்பற்றுகின்றனர்.  அனேக இலங்கை மக்களும் சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை விட பிரிண்ட் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி நடக்கின்றனர். 

பொருளாதாரம் அடி வாங்கும், கேஸ்கள் கூடும், மரணங்கள் நூற்றுக் கணக்காக வரலாம். ஆனால் பெருமாளின் vision அவரது தலைக்குள்  இருக்கும் காட்சி மட்டுமே!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியே தப்பியோடிய 18 பேர்!

By sharmi -
9e82a184-s.jpg

இலங்கையில் அடுத்தடுத்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதோடு, முக்கிய சில பகுதிகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலே பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 18 பேர் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட  நபர்களிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேலியகொட மீன் சந்தை இணைப்பாளர்களில் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல மறுத்த 18 பேர் சந்தைக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குதித்து அடுத்த கரைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தப்பியோடியவர்களை பிடிப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் தப்பியோடியவர்களில் சிலர் தாம் தமது தவறை உணர்ந்தாக கூறி மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்தோடு, தப்பிச் சென்றவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://samugammedia.com/public-apology-to-duminda-silva-release-tamil-political-prisoners-too-mano/?fbclid=IwAR0Yov7cr6dkyUS4fLCyVb95xCagPVuSKiSTDKMaN0Cuh5P7GjusLicq2Yw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த  நாடுகளே சமாளிக்கமுடியாது திண்டாடும் போது  வரவு  செலவு  திட்டத்தில் கூட குறை நிறைப்பை  தவிர  வேறு ஒன்றையும் ஒருமுறை  தானும் காணாத சிறீலங்கா  எல்லாம் சமாளித்துவிடும்  என்பதெல்லாம் மிகத்தவறான கணிப்பு.

உண்மைகளை  மறைத்து வெளி  உலக  தொடர்புகளை  துண்டித்து  இன்னும் எத்தனை  நாளைக்கு???

அடுத்த வரவு செலவுத்துண்டு  விழும் தொகைக்கு பிச்சைக்கு  எங்கு  போவது????

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த  நாடுகளே சமாளிக்கமுடியாது திண்டாடும் போது  வரவு  செலவு  திட்டத்தில் கூட குறை நிறைப்பை  தவிர  வேறு ஒன்றையும் ஒருமுறை  தானும் காணாத சிறீலங்கா  எல்லாம் சமாளித்துவிடும்  என்பதெல்லாம் மிகத்தவறான கணிப்பு.

உண்மைகளை  மறைத்து வெளி  உலக  தொடர்புகளை  துண்டித்து  இன்னும் எத்தனை  நாளைக்கு???

அடுத்த வரவு செலவுத்துண்டு  விழும் தொகைக்கு பிச்சைக்கு  எங்கு  போவது????

விசுகர், "கிண்டினவன் பொங்கலை விட தண்டினவன் பொங்கல் அதிகம்" என்றொரு சிலேடை மொழி ஊரில் கேள்விப்பட்டிருப்பீங்கள். அதனால் தான் சிறி லங்கா போல உதவியிலும் நீண்டகாலக் கடனிலும் ஒடும் நாடுகள் ஒரு நாளும் பொருளாதார சரிவினால் மூழ்கிப் போவதில்லை! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

விசுகர், "கிண்டினவன் பொங்கலை விட தண்டினவன் பொங்கல் அதிகம்" என்றொரு சிலேடை மொழி ஊரில் கேள்விப்பட்டிருப்பீங்கள். அதனால் தான் சிறி லங்கா போல உதவியிலும் நீண்டகாலக் கடனிலும் ஒடும் நாடுகள் ஒரு நாளும் பொருளாதார சரிவினால் மூழ்கிப் போவதில்லை! 

உங்களுக்கு பக்கத்தில தான் வெனிசுலா என்ன நடந்தது என்றாவது தெரியுமா ?

இவ்வளவுக்கும் சொறிலங்கா போல் இல்லை மிகையான எண்ணெய்  வள இருப்பு கொண்ட நாடு இப்ப அதிகூடிய பணவீக்க நிலையில் உள்ளது .

அநேக மக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் நிலை .

அப்படியான ஒன்றைத்தான் சொறிலங்காவில் வர கோத்தாவுக்கு உடுக்கு அடியாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு பக்கத்தில தான் வெனிசுலா என்ன நடந்தது என்றாவது தெரியுமா ?

இவ்வளவுக்கும் சொறிலங்கா போல் இல்லை மிகையான எண்ணெய்  வள இருப்பு கொண்ட நாடு இப்ப அதிகூடிய பணவீக்க நிலையில் உள்ளது .

அநேக மக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் நிலை .

அப்படியான ஒன்றைத்தான் சொறிலங்காவில் வர கோத்தாவுக்கு உடுக்கு அடியாக்கும் .

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

இந்த சுமத்திரன் போல் பதில் வேண்டாம் உங்களால் விளங்கப்படுத்தமுடியாது தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிட்டு போவது நல்லது அதை விட்டு எங்களிடம் போட்டு வாங்க வேண்டாம் நீங்கள்  தான் பதில் கருத்து எழுதும்முறை  என்ன வித்தியாசம் சிறிலங்காவில் உங்களுக்குதெரியவில்லையா ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 

என்ன வித்தியாசம் சிறிலங்காவில?

1 - சிறிலங்கா ஒரே நேரத்தில் பலவீடுகளை கையாளும் திறமை  வாய்ந்தது

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இந்த சுமத்திரன் போல் பதில் வேண்டாம் உங்களால் விளங்கப்படுத்தமுடியாது தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிட்டு போவது நல்லது அதை விட்டு எங்களிடம் போட்டு வாங்க வேண்டாம் நீங்கள்  தான் பதில் கருத்து எழுதும்முறை  என்ன வித்தியாசம் சிறிலங்காவில் உங்களுக்குதெரியவில்லையா ?😀

ஓம் பெருமாள் எனக்கும் தெரியவில்லை, அதனால் தான் உங்களிடம் அறிந்து கொள்ளலாம் என்று கேட்டேன், உங்களுக்கே தெரியவில்லையென்றால் யாரிடம் போவது?😭 

(அது சரி மேலே விசுகர் நச்சென்று போட்டிருக்கிறார் ஒரு பதில் பார்த்தீர்களா?, இனியாவது ஐந்து வித்தியாசங்கள்?) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

1 - சிறிலங்கா ஒரே நேரத்தில் பலவீடுகளை கையாளும் திறமை  வாய்ந்தது

அவர் வித்தியாசத்தை தேடுகிறார் அவர்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் சைனீஸ் Debt-trap எனும் கடன் பொறி மூலம் பஞ்சத்தில் கொண்டுபோன  நாடுகள் .சிறிலங்கா சைனாவிடம்  வாங்கிய கடன் என்ன செய்யும் என்று சொல்லவே தேவையில்லை அந்த நாடுகளை பார்த்தாலே தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவர் வித்தியாசத்தை தேடுகிறார் அவர்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் சைனீஸ் Debt-trap எனும் கடன் பொறி மூலம் பஞ்சத்தில் கொண்டுபோன  நாடுகள் .சிறிலங்கா சைனாவிடம்  வாங்கிய கடன் என்ன செய்யும் என்று சொல்லவே தேவையில்லை அந்த நாடுகளை பார்த்தாலே தெரியும் .

நான் உதாரணம் காட்டிய போதே சீனக் கடனும் முதலீடும் பெறும் நாடுகளைத் தான் போட்டேன்! இருந்தாலும் இலங்கை இவையெல்லாவற்றிலிருந்தும் வித்தியாசங்கள் கொண்டது, அவர் சொன்ன பதில் சரி. திறமையான கல்விப் பெற்ற ராஜதந்திரிகள் தான் அந்த பல வீடுகளை ஒரே நேரத்தில் சமாளிக்க காரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்!

உங்களுக்கு தெரியும் என்றுதான் மேல் உள்ள கருத்தில் சொல்லியுள்ளீர்கள் நீங்கள்  தான் சொல்லும் முறை .

டிவியில் கொடுத்த பேட்டியை ஒளித்தது போல் இங்கு ஒளிக்கேலாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்களுக்கு தெரியும் என்றுதான் மேல் உள்ள கருத்தில் சொல்லியுள்ளீர்கள் நீங்கள்  தான் சொல்லும் முறை .

டிவியில் கொடுத்த பேட்டியை ஒளித்தது போல் இங்கு ஒளிக்கேலாது .

நானே சொல்லி விட்டால் எப்படி உங்கள் மனதில் தங்கும்? எனவே தான் நீங்களே தேட வேண்டும்! எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொண்டு தேடுங்கள், அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி தரும்? 

ரிவி பேட்டியெல்லாம் எதற்கு ? உங்களால் தேட முடிந்தால் அதை நீங்களே கண்டு கொள்ளலாம்!(ஆனால் பாதியில் தூங்கி விடுவீர்கள், பார்க்க ஆரம்பித்தால்! உங்கள் ஏரியா அல்ல அதில் இருப்பது!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நானே சொல்லி விட்டால் எப்படி உங்கள் மனதில் தங்கும்? எனவே தான் நீங்களே தேட வேண்டும்! எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொண்டு தேடுங்கள், அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி தரும்? 

அப்ப  சொறிலங்கா வெகுவிரைவில் வங்குரோத்து தான் உங்களை போல் ஆட்கள்  உடுக்கு அடிக்குமட்டும்  வந்ததும் தான்தான் அடுத்த லீ  என்று கனவு கண்டுகொண்டு இருக்குது எங்க போய்  முடியுது என்று பார்ப்பம் .

4 minutes ago, Justin said:

ரிவி பேட்டியெல்லாம் எதற்கு ? உங்களால் தேட முடிந்தால் அதை நீங்களே கண்டு கொள்ளலாம்!(ஆனால் பாதியில் தூங்கி விடுவீர்கள், பார்க்க ஆரம்பித்தால்! உங்கள் ஏரியா அல்ல அதில் இருப்பது!)

அந்த இணைப்பை தர  பயமாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்ப  சொறிலங்கா வெகுவிரைவில் வங்குரோத்து தான் உங்களை போல் ஆட்கள்  உடுக்கு அடிக்குமட்டும்  வந்ததும் தான்தான் அடுத்த லீ  என்று கனவு கண்டுகொண்டு இருக்குது எங்க போய்  முடியுது என்று பார்ப்பம் .

அந்த இணைப்பை தர  பயமாக்கும்.

நான் தான் சொன்னேனே, யாழில் தேடி, கிடைப்பதை வைத்து யாழுக்கு வெளியே தேடும் இயலுமை கொஞ்சம் இருந்தாலே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இணைப்புக் கிடைத்து விடும்! அது உங்களுக்கு முடியாது என்பதும் தெரியும், எனவே நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன் என்று தேற்றிக் கொள்ளுங்கோ! 

இனி எதிர்வுகூறல்களைச் செய்யும் போது கொஞ்சமாவது வாசித்து விட்டு, வரலாற்றை அறிந்து விட்டு இங்கே எதிர்வு கூருங்கோ! அல்லது இப்படியே சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கப் பழக வேண்டியான்! 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள் அங்கு மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களும் வெளியில் வந்த பின் கொண்டாடி பழி தீர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இனி எதிர்வுகூறல்களைச் செய்யும் போது கொஞ்சமாவது வாசித்து விட்டு, வரலாற்றை அறிந்து விட்டு இங்கே எதிர்வு கூருங்கோ! அல்லது இப்படியே சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கப் பழக வேண்டியான்! 😎

இங்கு எதிர்வு கூறல் சொல்லி கவலைப்படுவது மலையக வடகிழக்கு தமிழ் மக்களை நினைத்து *********   உங்களின் ஸ்ரீலங்கா விஜயம் நாலு பேர் பொறாமைப்படும்படி ****** பெருமையுடன் போய்  வருவதுக்கு .எங்களுக்கு கொரனோ வால்  ஒரு தமிழ் உயிரும்  போகக்கூடாது அதுதான் முக்கியம் .

டொட் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஆனால் இண்டைக்கு கொழும்பிலை இருக்கிற ஆக்களை கேட்டால் கொரோனா உக்கிரமாய் கூத்தாடுது எண்டு சொல்லினம்.

மகிழ்ச்சியாக இருக்கிறதோ
உங்கள் நாடு யேர்மனியில் கொரோனா வைரஸ் அழிந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடு என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதாமே

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.