Jump to content

பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டதா..? பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டதா..? பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவு..!

IMG-425da4b3a1f8d2125d43c509ac5b1551-V_1

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் பெருந்தொகை நிதி செலவில் கட்டப்பட்ட குறித்த சிகிச்சை பிரிவு இரண்டு மாடிகள் கொண்டதாக மக்கள் வரிப்பணத்திலிருந்து குறித்த கட்டடம் அமைக்கப்பட்டது.

அப்போதைய  வைத்தியராக இருந்த எஸ். சத்தியலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் சாவகச்சேரி விபத்து பிரிவு கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பணம் வவுனியா பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவு அமைக்க மாற்றப்பட்டதன் விளைவே குறித்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைந்துள்ள குறித்த கட்டடம் முழுமை பெறாமல் இருப்பதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இடவசதிகள் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசினால் வரைந்து அனுப்பப்பட்ட கட்டட வரைபடத்தை மாற்றி திடீர் வைத்திய பிரிவை நிறுவுவதற்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியாவில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுகிறது.

மக்கள் பயன்பாட்டிற்கென மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு  சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட குறித்த  கட்டடம் கம்பீரமாக காட்சி அளித்தாலும் இரவில் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சரணாலயமாக மாறி வருவதோடு குறித்த கட்டடத்தில் போடப்பட்ட பொருத்தப்பட்டுள்ள யன்னல் கதவுகள் கழன்று விழும்  துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே குறித்த வைத்தியசாலையில் அமைந்துள்ள கட்டடத்தை பூரணப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தத்தமது  கடமைகளையும் பொறுப்புகளையும்  உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

https://jaffnazone.com/news/21222

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.