Jump to content

இவ்வாண்டில் 4 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராகிறது ஃபைசர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டில் 4 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராகிறது ஃபைசர்!  | Athavan News

இவ்வாண்டில் 4 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராகிறது ஃபைசர்!

இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்க முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் (Pfizer Company) தெரிவித்துள்ளது.

தற்போது நடந்துவரும் கிளினிக்கல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமையும் என அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு கோடி தடுப்பூசி மருந்துகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் மார்ச் மாதமளவில் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த மாதம், தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இவ்வாண்டில்-4-கோடி-கொரோனா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.