Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நீஸ் பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலி - அல்லாஹு அக்பர் என்று கத்திய பயங்கரவாதி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான்.
தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான்.

https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திக்குத்து! மூவர் பலி!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது ஆசை என்னவென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதியின் அப்பாவிகள்மீதான தாக்குதல்பற்றி மடவலநியூஸ் என்ன சொல்கிறதென்று அறிவதுதான். சிலவேளை, இதுகூட யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் அனுப்பப்பட்ட முஸ்லீம்களில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு நடத்தியதாகக் கூறினாலும் கூறுவார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான்.

நீங்கள் இப்படி ஒருகாலத்தில் கத்தக்கூடும் என்ற பயமே இன்று சீனாவின் சிஞ்சான் மாநில அடக்குமுறைக்கும் மியன்மாரில் நடக்கும் நிகழ்வுக்கும் பிரதம காரணம். ஆனால் சிறப்பு என்னவென்றால் பிரெஞ்சு பதிலடி பற்றி கூவும் மத்தியகிழக்கு நாடுகள் சிஞ்சான் பற்றி அதிகம் மௌனம் காப்பதுடன் சீனாவில் பல பில்லியன் முதலீடுக்காக அல்லாஹ்வை அடகுவைத்துளார்கள் என்பதை இந்த முட்டாள்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை (மூலம் கீளே ).

இதேநிலை தான் பாலஸ்தீன போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட மத்தியகிழக்கு நாடுகள் இன்று அதே பலஸ்தீனரை மடக்கி பரம எதிரி என்று தாங்கள் பட்டம் சூட்டிய இஸ்ரயேளுடன் உறவுகளை ஏட்படுத்துகிறார்கள். எண்ணெய் வயல்கள் வற்றவும்  உலகம் காலநிலை மாற்றத்தை தடுக்க புதிய வளங்கள் நோக்கி நகர இந்த நாடுகளில் இதுவரை பணத்தை வைத்து மருட்டி நடத்திய அரசியல் ஒரு முடிவுக்குவருகிறது.அதோடு சேர்த்து மதம் பிடித்து திரிபவர்கள் காலமும் பெரிய மாற்றங்களை காணும். அதுவரை இந்த அடிப்படைவாதிகளின் அகோரத்துக்கு மிதவாத இஸ்லாமியாரும் பாகிஸ்தானிலும் அபஹ்கானிஸ்தானிலும் நடப்பது போல தொடர்ந்து பலியாவார் .

Sources:

Arab States Give China a Pass on Uyghur Crackdown

https://www.washingtoninstitute.org/policy-analysis/view/arab-states-give-china-a-pass-on-uyghur-crackdown

Gulf States Have Sacrificed Uighur Muslims for Cash From China
How Saudi Arabia and the UAE, among other Arab Gulf states, have sold out a million 'brother Muslims' in detention camps for multi-billion dollar investments from China

https://www.haaretz.com/middle-east-news/.premium-gulf-states-have-sacrificed-uighur-muslims-for-access-to-china-s-cash-1.9115903

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நைஸ் தேவலாய தாக்குதல்: இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்

நைஸ் தேவலாய தாக்குதல்: இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்

 

இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட மகாதீர், வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்ததை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை குறிப்பிட்டு மகாதீர் முகம்மது கடுமையாக சாடினார்.


அவர் பதிவிட்ட 13க்கும் அதிகமான டுவிட்டுகளில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் டுவிட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/30091513/ExMalaysian-PM-Mohamad-says-Muslims-have-right-to.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல் ; மலேசிய முன்னாள் பிரதமரின் டுவிட்டர் பதிவு நீக்கம்

வியாழக்கிழமை பிரான்ஸில் நைஸ் தேவலாயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலை புகழ்ந்து முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முஹமது பதிவிட்ட பதிவை டுவிட்டர் நீக்கியுள்ளது.

spacer.png

குறித்த டுவிட்டர் பதிவில்,

முஸ்லிம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட மகாதீர், வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்தை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை குறிப்பிட்டு மகதீர் முகம்மது கடுமையாக சாடினார்.

spacer.png

பிரான்ஸில் நைஸ் தேவலாயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.

spacer.png

அவர் பதிவிட்ட 13 க்கும் அதிகமான டுவிட்டுகளில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் டுவிட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/93277

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.