Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pompeo slams ‘predator’ China on Sri Lanka trip

Secretary of State Mike Pompeo made his comments after talks with President Gotabaya Rajapaksa on security cooperation.

US Secretary of State Mike Pompeo sits with Sri Lankan President Gotabaya Rajapksa, second right, and Foreign Minister Dinesh Gunawardena, right, before their meeting in Colombo [Eranga Jayawardena/Pool/AP]

US Secretary of State Mike Pompeo called China’s communist government a “predator” on Wednesday during a trip to boost ties with Sri Lanka, which has received huge investment and diplomatic support from Beijing.

Pompeo made his latest attack on China after talks with President Gotabaya Rajapaksa on security cooperation to keep open vital Indian Ocean sea lanes just south of Sri Lanka.

“A strong sovereign Sri Lanka is a powerful strategic partner for the United States on the world stage,” Pompeo told reporters as he wrapped up a 12-hour visit, the second stop on a four-nation tour.

“We want the people of Sri Lanka to have sovereignty and independence. We want them to be successful. We want sustainable development for them.”

Pompeo described how Washington has provided military training and recently gifted two coastguard vessels, contrasting its assistance with China.

“The Chinese Communist Party is a predator,” he declared.

The Chinese embassy in Colombo hit back, tweeting a promotional image for the “Aliens vs Predator” video game.

“Sorry Mr. Secretary Pompeo, we’re busy promoting China-Sri Lanka friendship and cooperation, not interested in your Alien v Predator game invitation,” it said.

US Secretary of State Mike Pompeo places a wreath at St Anthony’s Church, one of the sites of the 2019 Easter Sunday attacks, in Colombo, Sri Lanka, on Wednesday, October 28, 2020 [Eranga Jayawardena/Pool/AP]

Sri Lanka’s Foreign Minister Dinesh Gunawardena made no reference to China, but at a press conference with Pompeo, told reporters that the country maintains a non-aligned foreign policy.

“Once again we see Sri Lanka has become a familiar playground for international geopolitical rivalries,” Charu Lata Hogg of Chatam House told Al Jazeera from London.

“These rivalries have played out in the past … this is not new,” she added.

Sri Lanka borrowed billions of dollars from China for infrastructure when Rajapaksa’s brother Mahinda was the country’s leader from 2005 to 2015.

Unable to service a $1.4bn loan to build a deep seaport, the country was forced to lease the port to a Chinese firm for 99 years in 2017.

On Tuesday, the Chinese embassy accused Pompeo of trying to “coerce and bully” Sri Lanka with his visit.

Earlier this month, Yang Jiechi, a high-ranking Chinese Communist Party Politburo member, pledged more economic help to Sri Lanka when he was in Colombo.

Anti-China comments have been a key theme of Pompeo’s Asian tour this week, which began in India and will now take him on to the Maldives and Indonesia.

China has in the past helped Sri Lanka fight off allegations of human rights violations, particularly in the final months of a decades-long civil war, when the current president was the country’s top defence official.

Washington has insisted on credible investigations into charges that Sri Lankan troops killed at least 40,000 civilians as they crushed Tamil Tiger separatist rebels in 2009.

Pompeo wrapped up his Sri Lanka visit by placing flowers and praying at a Roman Catholic church where 56 people were killed in a suicide attack on Easter Sunday in 2019.

Five Americans were among 279 people killed in the coordinated attacks on three churches and three hotels in and around Colombo.

https://www.aljazeera.com/news/2020/10/28/pompeo-slams-predator-china-on-sri-lanka-trip

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் , சரியான சண்டை.

நான் முன்னரே சொன்னேன். பந்து, இந்தியாவிடம் இல்லை. பார்வையாளர் மட்டுமே என்பது, உறுதியாகிறது.

டெல்லி வாலாக்கள், வாயில அல்வா....

அமெரிக்காகாரனுக்கு இந்தபோடு போடுறார்கள் இந்த சீனர்கள் + சிங்களவர் எண்டால், நாம வாயை கொடுத்து, காமடி பண்ணிக் கொண்டு, மொக்கையீனப்படேலாது.

நடக்கிறது எல்லாம் நல்லா நடக்க, ராமர் அருள் புரியட்டும் எண்டு, கோமயத்தை குடிச்சிட்டு, பேசாம ஓரமா இருப்பம்.

குதிரை ஓடிப்போய் கணகாலம்.... இனி லாயத்தை பூட்டி, என்னத்தை காணுறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் பொப்கோர்ன் கொறிச்சுக் கொண்டு மகிழ என்ன இருக்கெண்டு தெரியவில்லை! இந்தியாவுக்கு என்ன வழி? அமெரிக்காவின் வழி தான் இந்தியாவுக்கும். 

1. நவம்பரில் ட்ரம்ப் வந்தால் இந்தியாவுடன் அமெரிக்காவின் நல்ல உறவு தொடரும். ஆனால், வர்த்தக விடயத்தை வைத்து அமெரிக்கா சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் போது சிறி லங்கா விடயம் பகடைக்காயாகும். நல்ல டீல் கிடைத்தால் "சிறி லங்காவை நீயே வைத்துக் கொள்" என்று சொல்வது நடக்கலாம். மோடி தன் ட்ரம்ப் நட்பைப் பாவித்து இதை mitigate செய்யலாம்! இந்திய நலனையும் அமெரிக்க டீலில் செருகிக் கொள்ளலாம் (தமிழ் தரப்புக்கு ஒன்றும் கிடைக்காது!)

2. பைடன் வந்தால், சீனாவுடனான உறவு குறைந்த போர்க்குணம் கொண்டதாகும். சீனாவும் அமெரிக்காவும் (கூடவே இந்தியாவும்) இலங்கையில் சமகாலத்தில் இருந்து ஒரு மறைமுக யுத்தம் நீடிக்கும். மனித உரிமை விடயத்தை காட்டி பயமுறுத்துவர் இலங்கையை, "பயம் காட்டினால் சீனாவுடன் போய் விடுவேன்" என்று இலங்கை சொல்லும்! சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்று கீழ் நிலை ராஜதந்திரிகள் பைடனுக்கு அறிவுரை சொல்வர்! எனவே இன அழிப்பு விசாரணை, தீர்வு எதுவும் வராது தமிழருக்கு!

எனவே இந்தியா மூக்குடைபட்டாலும், தமிழருக்கு போன மூக்கு திரும்பி வளரப் போவதில்லை! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka borrowed billions of dollars from China for infrastructure when Rajapaksa’s brother Mahinda was the country’s leader from 2005 to 2015.

Unable to service a $1.4bn loan to build a deep seaport, the country was forced to lease the port to a Chinese firm for 99 years in 2017.

வடலி வளர்த்தவன் கள்ளு  குடிப்பான்
என்பது வடலி வளர்த்து கள்ளு குடித்த தமிழருக்கு 
ஞாபகத்தில் இருந்தால் இப்போதே ஆங்காங்கே வடலிகளிகளை 
வளர்க்க வேண்டும் அது ஒன்றுதான் கள்ளுத்தரும்.

ஹிந்தியாவே ஏன் அமெரிக்காவே இனி சீனாவை எதிர்க்க ஒன்றும் இல்லை 
சீனாவின் நகர்வுகள் அடுத்த 25 வருடம் நோக்கியது ஹிந்தியா அமெரிக்க நகர்வுகள் 
ரவுடிசம் சார்ந்தது இனி இந்த பருப்பு எங்கு வேக போவதில்லை.

சீனாவின் வளர்ச்சி உலக ஜனாநாயகத்துக்கு எதிராக அமையலாம் 
ஆனால் இதுவரையில் அமெரிக்க ரவுடிசம் செய்த மனித படுகொலைகள்தான் 
ஏராளம் அதை திருத்தி அமெரிக்கா இந்த உலகை தலைமை தங்கவேண்டும் என்ற 
எதிர்பார்ப்பு எனக்கு மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் இருக்கலாம் ஆனால் அமேரிக்கா 
மீண்டும் மீண்டும் பழைய பாணியில் தொடருவதுதான் சீனாவின் வெற்றி.

சுடலை ஞானம் பெற்று இப்போது சில அரபு நாடுகளை இஸ்ரேல்லுடன் சேர்த்து ஒரு புதிய  
பாதையை உருவாக்குகிறார்கள் ஆனாலும் இஸ்லாமியர்களின் அடி மனதில் இருக்கும் வலிகள் 
நீங்க இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை ..... தவிர பலஸ்தீனத்துக்கு எதிரான மனித கொடூரம் 
இப்போதும் இஸ்ரேலால் தொடரப்படுகிறது  ..இது நல்லுறவை பேணும் அரபு நாடுகளுக்கு மேலும் 
சங்கடத்தை உண்டுபண்ணும் தவிர ஒரு நல்லுறவை ஒருபோதும் உருவாக்காது. 

இங்கு கருத்து பகிர்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டியது தற்போதைய தொழிநுட்ப துறைக்கு 
சீனாவை விலத்தி யாராலும் முன்னேற முடியாது என்ற அடிப்படைதான். நீங்கள் கையில் வைத்திருக்கும் 
ஒவ்வரு நவீன தொழில்நுட்ப பொருட்களும்  ரேர் மாடேறியல்  Rare Material (அரிதான பொருள்) மூலம் உருவாகுபவை இது துரதிர்ஷ்ட வசமாக சீனாவிடம் மட்டுமே உண்டு. இதனால் அமெரிக்க சிலிகான் வலேக்கு Silicon Valley எக்காலத்திலும் சீனாவை  பகைக்க முடியாது. இது போதுமானது சந்திரனில் இருப்பதாக கூறுகிறார்கள் அங்கு மைனிங் செய்து  பூமிக்கு கொண்டுவருவத்துக்கு இன்னமும் 25 வருடங்கள் கூட ஆகலாம். 

ஆகவே போம்பே கொழும்பில் பொங்கினாலும் 
சீனாவிடம் பம்மி கொண்டுதான் வாழவேண்டும் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து எங்கள் இனத்தையே கருவறுத்தார்கள் இப்போது அவர்களுக்கு ஆப்பு இறங்கும்போது பார்த்து ஆறுதலடையலாமே தவிர கவலைப்பட ஏதுமில்லை... 😜😜

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இங்கே நாம் பொப்கோர்ன் கொறிச்சுக் கொண்டு மகிழ என்ன இருக்கெண்டு தெரியவில்லை! இந்தியாவுக்கு என்ன வழி? அமெரிக்காவின் வழி தான் இந்தியாவுக்கும். 

1. நவம்பரில் ட்ரம்ப் வந்தால் இந்தியாவுடன் அமெரிக்காவின் நல்ல உறவு தொடரும். ஆனால், வர்த்தக விடயத்தை வைத்து அமெரிக்கா சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் போது சிறி லங்கா விடயம் பகடைக்காயாகும். நல்ல டீல் கிடைத்தால் "சிறி லங்காவை நீயே வைத்துக் கொள்" என்று சொல்வது நடக்கலாம். மோடி தன் ட்ரம்ப் நட்பைப் பாவித்து இதை mitigate செய்யலாம்! இந்திய நலனையும் அமெரிக்க டீலில் செருகிக் கொள்ளலாம் (தமிழ் தரப்புக்கு ஒன்றும் கிடைக்காது!)

2. பைடன் வந்தால், சீனாவுடனான உறவு குறைந்த போர்க்குணம் கொண்டதாகும். சீனாவும் அமெரிக்காவும் (கூடவே இந்தியாவும்) இலங்கையில் சமகாலத்தில் இருந்து ஒரு மறைமுக யுத்தம் நீடிக்கும். மனித உரிமை விடயத்தை காட்டி பயமுறுத்துவர் இலங்கையை, "பயம் காட்டினால் சீனாவுடன் போய் விடுவேன்" என்று இலங்கை சொல்லும்! சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்று கீழ் நிலை ராஜதந்திரிகள் பைடனுக்கு அறிவுரை சொல்வர்! எனவே இன அழிப்பு விசாரணை, தீர்வு எதுவும் வராது தமிழருக்கு!

எனவே இந்தியா மூக்குடைபட்டாலும், தமிழருக்கு போன மூக்கு திரும்பி வளரப் போவதில்லை! 

தமிழருடைய மூக்கு அல்ல கழுத்தே போய்விட்டது. இனி ஆகப்போவது எதுவுமில்லை. மூக்கு வளராது என்று எல்லோருக்கும் தெர்ரிந்ததே

எனவே...😂

இந்தியாவுக்கு(அமெரிக்கனுக்கும் சேர்த்து) ... ஆப்பு... இறங்கும்போது...

பார்த்து சிரிக்க வேண்டியதுதான். வேறென்ன... 

😜😜😜

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடக்கும் விடயங்கள் எந்தவிதத்திலும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை என்று ஆளாளுக்கு அவசரப்பட்டு அரசியல் வியாக்கியானம் செய்வது ஏனென்றுதான் தெரியவில்லை. விட்டால் அரசியலிலும், சர்வதேச ராஜதந்திரத்திலும், இனிநடக்கப்போகும் அரசியல் விடயங்களை காண்டம் வாசித்து அறிந்துகொண்டதிலும் தேர்ச்சிபெற்றவர்கள் போல ஆளாளுக்குப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.  சகிக்க முடியவில்லை. 

நடப்பது நடக்கட்டும். எமக்கு நல்லதாக நடந்தால் நண்மையே, இல்லாவிட்டாலும் என்ன, இனி எதை இழக்கப்போகிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

நடப்பது நடக்கட்டும். எமக்கு நல்லதாக நடந்தால் நண்மையே, இல்லாவிட்டாலும் என்ன, இனி எதை இழக்கப்போகிறோம்.

இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் தான், சிரித்துக் கொண்டே கருத்து.

இந்தியாவின் நிலையினை நினைக்கத்தான் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது. ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டின கதை தான்.

சீனா உள்ளே வந்து விட்டான் என்று தெரியும்.... அதெல்லாம் இல்லை.... என்று பூனை கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு, இன்று அமெரிக்காவின் பொம்பியோ வந்த போது, சீனாக்காரனின் சீறலை கண்டு, வியர்த்துப் போய் இந்தியா இருப்பதை நினைத்தால்.... சிரிப்பு, சிரிப்பாக வருகிறது....

உங்களுக்கு?
 
  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சிரிப்புத்தான் போங்கள்

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

1) தற்போது நடக்கும் விடயங்கள் எந்தவிதத்திலும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை

என்று

2) ஆளாளுக்கு அவசரப்பட்டு அரசியல் வியாக்கியானம் செய்வது ஏனென்றுதான் தெரியவில்லை.

விட்டால் அரசியலிலும், சர்வதேச ராஜதந்திரத்திலும், இனிநடக்கப்போகும் அரசியல் விடயங்களை

3) காண்டம் வாசித்து அறிந்துகொண்டதிலும் தேர்ச்சிபெற்றவர்கள் போல ஆளாளுக்குப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

4)  சகிக்க முடியவில்லை. 

5) நடப்பது நடக்கட்டும்.

6) எமக்கு நல்லதாக நடந்தால் நண்மையே,

இல்லாவிட்டாலும் என்ன,

7) இனி எதை இழக்கப்போகிறோம்.

ஹிஹிஹி....ஹி😁

1) நன்மை தரப்போவதில்லை என்பது உண்மை. ஏனென்றால் தொடர்புபட்டவர்கள் மீதான பட்டறிவு அப்படி

2) உங்களுக்கு ஏனென்று தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். உதவி புரிய ஆயத்தம். (வசதி எப்படி 😜)

3) கொண்டோம் அல்ல காண்டம் (😜)

4) சகிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.நாங்கள் சகிக்கப் பழகவில்லையா 😀

5) அதைத்தான் நா(னும்)ங்களும் சொல்கிறோம் 😜

6) அதே அதே 😉

7) அதே அதே

இப்போது கூறுங்கள் நான் சிரிக்கலாமா கூடாதா 🤔

😂😂😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தமிழருடைய மூக்கு அல்ல கழுத்தே போய்விட்டது. இனி ஆகப்போவது எதுவுமில்லை. மூக்கு வளராது என்று எல்லோருக்கும் தெர்ரிந்ததே

எனவே...😂

இந்தியாவுக்கு(அமெரிக்கனுக்கும் சேர்த்து) ... ஆப்பு... இறங்கும்போது...

பார்த்து சிரிக்க வேண்டியதுதான். வேறென்ன... 

😜😜😜

அட சும்மா மனத்திருப்திக்காகவாவது "ஏதாவது நடக்கும்!" என்று சொல்லி வையுங்கள்! காசா பணமா? Don't pee on their pie! 😉

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

தற்போது நடக்கும் விடயங்கள் எந்தவிதத்திலும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை என்று ஆளாளுக்கு அவசரப்பட்டு அரசியல் வியாக்கியானம் செய்வது ஏனென்றுதான் தெரியவில்லை. விட்டால் அரசியலிலும், சர்வதேச ராஜதந்திரத்திலும், இனிநடக்கப்போகும் அரசியல் விடயங்களை காண்டம் வாசித்து அறிந்துகொண்டதிலும் தேர்ச்சிபெற்றவர்கள் போல ஆளாளுக்குப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.  சகிக்க முடியவில்லை. 

நடப்பது நடக்கட்டும். எமக்கு நல்லதாக நடந்தால் நண்மையே, இல்லாவிட்டாலும் என்ன, இனி எதை இழக்கப்போகிறோம்.

நன்மையை அனுபவிக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியல் தளம் அற்ற நிலையும் பேரம்பேசும் பலமும் தலமையும் அற்ற நிலையில் வரும் வாய்புகளை எல்லாம் இழக்கும் நிலையிலும் எந்த் நன்மையையும் அனுபவிக்க முடியாத நிலையிலும் தமிழர் தரப்பு இருக்கின்றது. 

மேற்குலகமோ சீனாவோ இல்லை இந்தியாவோ எதோ ஒரு வகையில் தமிழர் பிரச்சனையை லேசாக சுட்டிக்காட்டி சிங்கள அரசை தமக்கு சார்பான நிலையில் வைத்திருப்பது ஒன்றுதான் அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு. தமிழர்கள் மத ரீதியாகவோ வடகிழக்கென்ற பிரதேசவாத பிரிவினை அற்றவர்களாவோ  ஆழுக்கொரு திசையில் சொல்லும் அரசியல்தலமைகளாகவோ அன்றி ஒற்றுமையான பலமான இனக்குழுமமாக இருந்தால் இந்த தெரிவு மாறலாம். வல்லரசுகளின் போட்டியின் நிமிர்த்தம் ஒரு நெருக்கடியான கட்டத்தில் சிங்களத்துக்கு பதிலாக தமிழர்களை தமக்கு சாதகமான ஒரு தரப்பாக மாற்றலாம். அதுவே தமிழர்கள் எதிர்பார்க்கும் விமோசனத்துக்கு இணையானதாகவும் அமையலாம். 

தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை விட முக்கியமான விசயம்  தமிழர்கள் தமக்கள் ஒற்றுமையாகவும் ஒரு பலமான அரசியல் சக்தியாகவும் இருப்பதுதான் என்பதே ஆயுதப்போராட்டத்தின் தோல்வி கற்பித்துச் சென்ற பாடம். ஆனால் அதை தமிழர்கள் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அதனால் கைக்கெட்டியது வாய்கெட்டாத நிலையாக பல வாய்புகள் நழுவிச் செல்லும். இது இந்திய உபகண்டத்து தேசீய இனங்களின் சாபக்கேடு...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சண்டமாருதன் said:

"தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை விட முக்கியமான விசயம்  தமிழர்கள் தமக்கள் ஒற்றுமையாகவும் ஒரு பலமான அரசியல் சக்தியாகவும் இருப்பதுதான் என்பதே ஆயுதப்போராட்டத்தின் தோல்வி கற்பித்துச் சென்ற பாடம். ஆனால் அதை தமிழர்கள் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அதனால் கைக்கெட்டியது வாய்கெட்டாத நிலையாக பல வாய்புகள் நழுவிச் செல்லும். இது இந்திய உபகண்டத்து தேசீய இனங்களின் சாபக்கேடு..."

இலங்கையில் தமது ஆதிக்கம் இல்லாமல் போகும்போது 
மீண்டும் தமிழர் பிரச்சனைகளை இந்தியா கையில் எடுத்து 
ஒரு பயங்கரவாதம் செய்யும் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும் 

சீனா இன்டெலிஜென்ஸ் வேலை என்பதை எப்போதோ தொடக்கி இருக்கும் 
சன் டீவியில் வந்து தமிழில் சீனா காரி என்ன பிரமாதமா பாடுகிறாள் என்று நாம் 
கைதட்டி ரசித்துக்கொண்டு இருப்போம் அவர்கள் எங்கள் படுக்கையை அறையையே 
நோட்டம் போட்டுவிட்டு போயிருப்பார்கள். கொழும்பில் வைத்து பாகிஸ்தான் 
அதிகாரிக்கு குண்டு வைத்தது இந்தியா என்பதை மறு  நிமிடமே பாகிஸ்தானுக்கு 
கூறியது சீனாதான். இந்தியா புலிமேலே பழியை போட்டு பாகிஸ்தானிடம் மேலும் 
உதவி கேட்க கோத்தாவுக்கு அறிவுரை கூறி இருக்கிறது. 

இலங்கையில் முன்னாள் புலிகள் மற்றும் இதர பரந்தன் ராஜன் 
ஒட்டு உண்ணிகள் ஓட்டாத உண்ணிகள் என்று எல்லோரையும் சிங்களவன் 
பார்கிறானோ இல்லையோ சீனா ட்ராக் பண்ணிக்கொண்டே இருக்கும் 
பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துவிட்டு சிங்களவனின் விபச்சார 
அரசியலை நம்பி சீனா ஒருபோதும் ஓரமாக இருக்காது.  

இலங்கையில் இனி தமிழர்கள் உரிமை பெற வேண்டுமாயின் 
நில சொத்து உரிமை பொருளாதார வலு வணிகம் போன்றவற்றில் 
வளர்ச்சி காணவேண்டும் இதன் மூலம் சிங்களவர்களை மேலும் நெருக்கடிக்குள்  
தள்ளி ஒரு அதிகாரத்தை பெறமுடியும். அதுக்கான வாய்ப்புதான் இப்போது உண்டு 
அதை மட்டுமே எதிர்ப்பில்லாமல் செய்யவும் முடியும். 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.