Jump to content

மைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை


Recommended Posts

  • நியானி changed the title to மைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை
Quote

மைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை

பகல் கனவு காண்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட் உரிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதட்டுமே நல்லா மோதட்டுமே இதனால் எங்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவின் சரித்திரம் அப்படி...

நாயக்கர் ஆட்சியில் கடைசி நாயக்கர் செய்த கொடுமை, அந்நியரை வரவைத்தது.

போர்த்துகேயர்கள்,  கோவில்களை அழித்து, தமது மதத்தினை பரப்பியதில் நடந்து கொண்ட ஆணவத்தனத்தால், ஒல்லாந்தர் புகுந்து கொண்டனர்.

அதே தவறை அவர்களும் விட, ஆங்கிலேயரும் புகுந்து கொண்டனர்.

இருவருமே விட்ட தவறினை உணர்ந்த, ஆங்கிலேயர்கள், கனவான்களாக நடந்து, தமது மொழியினை, கலாச்சாரத்தினை புகுத்தினாலும், ஹிட்லர் உருவத்தில் எங்கிருந்தோ ஒரு பிரச்சனை வந்து சேர்ந்தது.

இப்போது சிங்களவர்கள் காலம். அவர்கள் செய்யும் தவறே எமக்கான பாதையினை அமைக்கும். அதேவேளை சிங்களவர்களுக்கும் வேறு வழி இல்லை. இவர்கள் கதை மட்டுமே. சீனா, கையிலே காசு, வாயில தோசை என்று நிக்கிறான்.

அதுவே இலங்கையின் தடுமாட்டம். அதேவேளை இவர்கள் செய்யமுடியாத வேலை ஒன்றினை சீனா செய்யும். விமல் முதல், வீரசேகர வரை.... அல்லக்கைகளுக்கும், பணத்தினை வாரி இறைக்கும். சீனா.... ஆயிரம் வருடங்கள் எங்கள் தோழன், ஆசியன்... பௌத்தன் என்று சொல்லி ஆதரவு கொடுக்க அவர்கள் ரெடி.

Link to comment
Share on other sites

டிரம்பின் தனிப்பட்ட செய்தியை கோத்தபாயவிடம் தெரிவித்த மைக்பொம்பியோ தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்

இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட செய்தியொன்றை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது மைக்பொம்பியோ தான் இலங்கை ஜனாதிபதியுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட செய்தியை மைக்பொம்பியோ பகிர்ந்துகொண்டுள்ளார்.

GR-and-MP-e1604137305895.jpg

டிரம்ப் நிர்வாகம் சிறிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்கின்றது என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பெரிய நாடுகளில் இருந்து தனது கவனத்தை சிறிய நாடுகளை நோக்கி திருப்பியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றுவது குறித்து அமெரிக்கா ஆர்வமாகவுள்ளது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இலங்கையில் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏதாவது விசேட தொழில்துறைக்கு அமெரி;க்காவின் உதவி தேவைப்படுகின்றதா என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
நாட்டின் விவசாய துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலமான கன்சாஸ் மூலம் அரசியலில் நுழைந்த தனக்கு நாட்டிற்கு பேண்தகு விவசாய தொழில்துறையின் முக்கியத்துவம் தெரியும் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இராணுவபின்னணியை கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியின் இராணுவ அனுபவங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார் , ஜனாதிபதி தனது வாழ்நாளில் அமெரிக்காவில் இராணுவபயிற்சி எதனையாவது பின்பற்றியிருக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி தான் அமெரிக்காவின் போர்ட் பெனிங் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட போர்ட் பெனி;ங் கல்லூரிக்கு மைக்பொம்பியோவும் சென்றுள்ளார்.
பொதுவான விருப்பங்கள் காரணமாக நட்புறவை மேலும் வளர்த்துக்கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியிடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் இரு நாடுகளிற்கும் இடையிலாக அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் தனது தனிப்பட்ட கையடக்கதொலைபேசி இலக்கத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார்.

 

https://thinakkural.lk/article/85165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமாக் கடல்சார் முக்கியத்துவம்

 
Editorial-1.jpg
 56 Views

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா – சீன உறவாடல், உலகப் பிரச்சினையாகத் தலைதூக்கியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது.

அமெரிக்காவில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அரசத் தலைவராக வந்தாலும், இந்தப் பிரச்சினை அமெரிக்காவின் தேசியப் பிரச்சினையாக முன்னுரிமை பெறும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அதேவேளை, கடன் பொறிக்குள் சிறீலங்காவைச் சிக்க வைப்பதன் மூலம் சீனா தனது வலுவாண்மையைச் சிறீலங்காவின் இறைமை மீது மேற்கொள்கிறது. இதனைத் தடுக்கும் ஆற்றலை சிறீலங்கா இழந்து நிற்பதால், ‘சீன அதிகாரம்’  உள்ள நாடாக சிறீலங்கா மாறிவிட்டது என்பது, அமெரிக்காவின் சிறீலங்கா குறித்த தெளிவான விளக்கமாக உள்ளது.

இவ்விடத்தில் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவுக்கு ஈழத்தமிழர்களின் கடற்பலத்தை ஒடுக்க உதவியதன் உலக விளைவாகவே இன்று சிறீலங்கா எந்த நாடுகளையும் உலகச் சட்டங்களையும் பொருட்படுத்தாது, சீனாவுடன் ‘ஆசிய நாடுகளுக்கு முன்னுரிமை’ என்னும் கொள்கை உருவாக்கல் மூலம் சார்ந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பாதுகாப்பான கடலாக இந்துமா கடலைப் பேணுவதற்கு சிறீலங்காவும் இந்தோ – பசுபிக் கடற் பாதுகாப்புக்கான அமெரிக்க திட்டங்களில் பங்காளராக வேண்டும் என்பது, அமெரிக்காவின் இன்றைய அழைப்பாக உள்ளது. இந்த அழைப்பைச் சிறீலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா, தனது சிறீலங்காவுக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. இந்த மென்மைப் போக்கு சிறீலங்கா தொடர்ந்தும் அனைத்துலக சட்டங்களுக்கோ அல்லது அனைத்துலக முறைமைகளுக்கோ கட்டுப்படாத அரசாகச் செயற்படுவதற்கான ஊக்கத்தையே சிறீலங்காவுக்கு அளிக்கிறது.

‘அயலகத்துக்கு முதலிடம்’ என்னும் வெளிவிவகாரக் கொள்கைத் திட்டமிடல் மூலம் இந்தியாவும் கடன்களை வழங்கியும், இராணுவப் பயிற்சிகளை அளித்தும் மென்மையான போக்கில் சிறீலங்காவின் பங்காளிகளாகத் தொடர்வதன் மூலமே இந்துமா கடல் மீதான தனது நிலை கொள்ளலை உறுதி செய்ய முயற்சிக்கிறது.

ஆயினும் வரலாற்றில் ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாப்பற்ற வேளைகளிலேயே, சீன ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடிந்தது என்ற உண்மையை இந்தியா உணர வேண்டும். யாழ்ப்பாண அரசின் தோற்றம் என்பது இந்துமா கடல் கடற் பாதுகாப்பைச் சோழர்கள், பாண்டியர்கள் இழந்ததின் பின்னணியில் ஏற்பட்டது என்பதையும், யாழ்ப்பாண அரசை 17 ஆண்டுகள் மட்டும் ஆண்ட சிங்கள சார்பான செண்பகப் பெருமாள் கைப்பற்றிய பொழுதும்,  தமிழரசனான அழகக்கோனின் கம்பஹா அரசின் வீழ்ச்சியின் பொழுதும், அக்காலத்திலேயே சீனக் கடற்படை இலங்கை கடல் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் இந்நேரத்தில் இந்தியா எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்துமா கடலில் சமநிலையின்மையை ஏற்படுத்த உதவுங்கள்; நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்ற கோரிக்கைகள் போராட்டக் காலங்களில் முன்வைக்கப்பட்ட நேரங்களிலும், ஈழத்தமிழர்களின் தலைமை உலக அமைதியையும் இந்தியத் துணைக் கண்டத்து அமைதியையும் முன்னிலைப்படுத்தி, தங்களுக்கு நன்மை வரும் என்ற நிலையிலும் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள் என்பது இன்றைய சமகால வரலாறு.

இன்று இந்துமா கடலில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும், இந்தியாவும் எதிர்பார்க்கும் இந்துமா கடல் அமைதித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதாக இருந்தால், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாப்பு வழி அவர்களின் கடலான தென்னிந்திய இந்துமா கடல் மேலான அவர்களின் இறைமையும் அவர்களால் ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுதல் அவசியமாகிறது.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க இராஜங்க செயலாளருக்கான கடிதம் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான நிலைமாற்றக்கால நீதியையும், மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கலையும் ஆதாரபூர்வமாக வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு உலக அமைப்புக்கள் பலவும் நிலைமாற்ற நீதியையும் நிவாரணங்களையும் மனித உரிமைப் பாதுகாப்பையும் நல்லாட்சியையும் ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் இக்காலத்தில், இதற்கான உரையாடல்களை ஈழத்தமிழர்களுடன் ஈழத்திலும் அவர்கள் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலும் உலகநாடுகள் நடாத்தி அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் ஏற்பதே இலங்கை சார்ந்த இந்துமா கடல் அமைதிப்பிர தேசமாகத் தொடர்வதற்கான சிறந்த வழிகளைத் தோற்றுவிக்கும்.

இதற்கான அரசியல் உரையாடல்களை முன்னெடுக்கக் கூடிய ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட அரசியல் கட்டமைப்பு ஒன்றை உடன் உருவாக்க வேண்டியது புலம்பெயர் தமிழரின் இன்றைய இலக்காக உள்ளது.

https://www.ilakku.org/importance-of-indian-ocean-in-post-corona-global-politics/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.