Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்

-புருஜோத்தமன் தங்கமயில்

மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர்.   

சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.  மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg

அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும் சக வேட்பாளர்களாலும் உறவுகளாலும், தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் பேசும் மக்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு, சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார்.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ தலைமையில், ஆளுங்கட்சி எம். பிக்களில் கூட்டம் நடைபெற்றபோது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு அளிக்க ஜனாதிபதியிடம் கோரும் மகஜரொன்று விநியோகிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது.   

எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து எம்.பிக்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.   

துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரிய, 150க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையெழுத்துடனான மகஜர் விவகாரம், ஊடகங்களில் வெளியானதும், மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை (26) வெளியிட்டார். 

அந்த அறிக்கையின் பிரதி, அவரது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை, தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கிவிட்டார்.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துமிந்த சில்வா என்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதான குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரண தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார். 

துமிந்த சில்வா என்பவர், ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர்களின் அம்பாகச் செயற்பட்டிருந்ததுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். ஊடக பின்புலம், ஆட்சியாளரின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களால், குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர்.  

 பிரேமசந்திர கொலை தொடர்பில், அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு, பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான், மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்து வைத்திருக்கிறார்கள்.  

ராஜபக்‌ஷர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுதலையாவார் என்பது, நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே, அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடகப் பின்புலம், அதற்காகக் கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களின் வெற்றி, பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது, அவரது ஊடகப் பின்புலத்தினூடாக, ஒருவகையிலான இலஞ்சமாகத் திணிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும். “ராஜபக்‌ஷர்களினதும் அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, துமிந்தவை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது” என்று, ராஜபக்‌ஷர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.  

தேர்தல் அரசியலில், கொடுக்கல்- வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, ஆட்சியதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல்- வாங்கல் என்பது, ஓர் அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. இந்தக் கொடுக்கல்- வாங்கல் என்பது, சகிக்கவே கூடாத அயோக்கியத்தனமாகும்.   

துமிந்த சில்வாவின் விடுதலைக்காகக் கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் -வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள், இந்தக் கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும்? 

ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார்?  

துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார்.  

மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது?   

அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?   

விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா?   

வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா?   

மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே?  

படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான்.   

ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார்.  

ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார்? என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார்.  

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.  

 மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்!    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துமிந்தவுக்காக-மனோ-சறுக்கிய-இடம்/91-257668

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "" பணத்திற்காக மனோ சறுக்கிய இடம்"" என வந்திருக்க வெண்டும்.

😂😂

Link to post
Share on other sites

இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.

Link to post
Share on other sites
9 minutes ago, Nathamuni said:

இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.

நேற்றே அறிவித்து விட்டார். ஆனால் தான் ஏன் கையெழுத்து இட்டார் என்ற சமாளிப்புகளை இன்னும் கைவிடவும் இல்லை, கையொப்பம் இட்டமைக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் முகனூலில் தன் அறிக்கையை வெளிவிட்டபின் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களை பார்த்து அந்தப் பதிவையே முகனூலில் இருந்து தூக்கியது பற்றிக் கூட  ஒரு வருத்தமும் இல்லை அவருக்கு.

Link to post
Share on other sites
1 minute ago, நிழலி said:

நேற்றே அறிவித்து விட்டார். ஆனால் தான் ஏன் கையெழுத்து இட்டார் என்ற சமாளிப்புகளை இன்னும் கைவிடவும் இல்லை, கையொப்பம் இட்டமைக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் முகனூலில் தன் அறிக்கையை வெளிவிட்டபின் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களை பார்த்து அந்தப் பதிவையே முகனூலில் இருந்து தூக்கியது பற்றிக் கூட  ஒரு வருத்தமும் இல்லை அவருக்கு.

போலி அரசியல்வாதியாகி விட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு மிச்சம் மீதியுள்ள சுயமரியாதையுடன் கட்சி பொறுப்புகளில் இருந்து தானாகவே விலகிவிடுவதுதான் மனோவுக்குள்ள ஒரே தெரிவு.

Edited by vanangaamudi
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • டெல்லியில் விவசாயிகளுடன், மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது   மத்திய அரசின் 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் இல்லத்தில் மத்திய மந்திரிகள்  அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர்  ஆலோசனையில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய பரிசீலிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.    https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/05144858/Round-5-Of-Farmer-Talks-Government-May-Agree-To-Amend.vpf
  • வாய்க்காலை மூடி அமைத்த வீதியால் வீடுகளுக்குள் வெள்ளம்!   யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியில் உள்ள வெள்ள நீர் வடியும் வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று (05) அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எதுவித்தான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/வாய்க்காலை-மூடி-அமைத்த-வ/  
  • கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் மக்கள் – தனிமைப்படுத்தலிற்கு எதிர்ப்பு- பெரும் ஆபத்தின் பிடியில் அட்டளுஹம   அட்டளுஹம பகுதி பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டளுஹமவில் பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளிற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து வருவதன் காரணமாகவும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற வருவதன் காரணமாகவும் பாரிய மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ்கொத்தணியொன்று உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொதுசுகாதார பரிசோதகரை அவமரியாதை செய்த – முகத்தில் துப்பிய சம்பவத்தினை தொடர்ந்து பொதுசுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கான தங்களது சேவையிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளா மகேஸ் பாலசூரிய தெரிவித்துள்ளார். அட்டளுகம பகுதி மக்கள் விதிமுறைகளை மீறி கண்மூடித்தனமாக நடந்துகொள்வதால் பொதுசுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு செல்லமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது,கொழும்பை விட அங்கு நிலைமை மோசமாக உள்ளது பல நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் அவர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலைiயிலும் பொதுமக்கள் நடமாடுகின்றனர்,வீடுகளில் இருந்து செல்லும் போது முகக்கவசங்களை அணிய மறுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த மத மற்றும் சமூகதலைவர்களும் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு சுகாதார பரிசோதகர்களிற்கு ஆதரவு வழங்கவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியிலிருந்து பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,ஆனால் அப்பகுதி மக்கள் சுகாதார அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தடுக்கின்றனர் என அந்த பகுதியை சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனுமதி மறுக்கின்றனர் அவர்கள் தங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்க மறுக்கின்றனர் அவர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவதால் ஏனைய பகுதிகளிற்கு நோய் பரவும் ஆபத்துள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர் என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். அட்டளுகம மக்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் அதன் பின்னர் ஏற்படப்போகும் உயிரிழப்புகளிற்கு அவர்களே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முடக்கப்பட்டுள்ள நிலையில் கூட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் நினைத்ததை செய்கின்றனர்,எங்கள் உத்தியோகத்தர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.     https://thinakkural.lk/article/95423
  • மண்ணில் புதையும் விதையே  
  • சரத் பொன்சேகா பிதட்டலுடன் உண்மையை ஏற்றுக் கொண்டார்-சபா குகதாஸ்    53 Views தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தின் மூலம் சரத் பொன்சேகா ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ்  சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் இது குறித்து வெளியிட்ட செய்தியில், “ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இறுதிப் போரில் 45000 தமிழர்கள் கொல்லப்படவில்லை 5 தொடக்கம் 6 ஆயிரம் வரையான மக்களே கொல்லப்பட்டனர் எனவும் புரெவி சூறாவளி மாவீரர் தினத்தில் வீசியிருந்த நல்லாய் இருந்திருக்கும் என்றும்  நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றியிருந்தார். இவர் உரையாற்றினார் என்பதை விட பிதட்டினார் என்றே கூறலாம். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருந்த போது மாவீரர் தினம் வெகு சிறப்பாக தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றத்தை யாவரும் அறிவார்கள். அந்த நேரத்தில் மௌனமாக இருந்தவர் தற்போது தனது அரசியலுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காகவும் முன்னர் அரைக்கால் சட்டையுடன் இருந்த நினைவையும் மனதில் கொண்டு நன்றாக பிதட்டுகிறார். நல்லாட்சி அரசாங்கம் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவயைில் ஏற்றுக் கொண்டு கால நீடிப்பை பெற்ற போதும் இலங்கைப் நாடாளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்ட மூலம் நிறைவேற்றும் போதும் அதற்கு ஆதரவாக இருந்த பொன்சேகா, தற்போது தானே இறுதிப் போரை நடத்தியதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் என்றும் கதை விடுகிறார். ஆனால் சரத் பொன்சேகா தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது இறுதிப் போரை தானே நடாத்திதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் எனவும் கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மைத் தொகையை மறைத்து ஆறாயிரம் என ஒப்புதல் செய்தமை உறுதி செய்கின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.   https://www.ilakku.org/சரத்-பொன்சேகா-பிதட்டலுடன/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.