Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்

புதுடெல்லி

6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில்  மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் என அழைக்கபடும் பறவையின் புதைபடிவங்கள் அவை என அடையாளம் காணப்பட்டன.இரண்டு பறவைகளுக்கு சொந்தமான கால் எலும்பு மற்றும் பகுதி தாடை எலும்பு அடங்கிய புதைபடிவங்கள் காணப்பட்டன. பெலகோர்னிதிட்கள் "எலும்பு-பல்" கொண்ட பறவைகள் என்றும் அழைக்கப்பட்டன.

"இந்த அண்டார்டிக் புதைபடிவங்கள் இவை உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவைகளை மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பறவைகளையும் குறிக்கும்" என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. 

பாலியோண்டாலஜிஸ்ட் பீட்டர் க்ளோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கால் எலும்பு குறைந்தது 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தனர், அதே நேரத்தில் தாடை எலும்பு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.

"எங்கள் புதைபடிவ கண்டுபிடிப்பு, 5 முதல் 6 மீட்டர் இறக்கைகள் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது - கிட்டத்தட்ட 20 அடி - பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் ஒப்பீட்டளவில் விரைவாக உண்மையான பிரம்மாண்டமான அளவுக்கு பரிணாமம் அடைந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கடல்களை ஆட்சி செய்தன என்பதைக் காட்டுகிறது என்று  கூறினார்.

எலும்பு-பல் பறவைகளின் புதைபடிவங்கள் உலகெங்கிலும் காணப்பட்டாலும், அண்டார்டிக் புதைபடிவங்கள் பழமையானவை என்றும் அவை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்குள் பறந்த  பறவைகள் வெவ்வேறு வடிவங்களில் பன்முகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்றும் சி.என்.என் தெரிவித்துள்ளது.

ஆய்வின்படி,  அண்டார்டிகா மிகவும் வித்தியாசமானது. அப்போது இப்பகுதி மிகவும் வெப்பமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் நில பாலூட்டிகளின் தாயகமாக இதை கருதுகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/30101422/Scientists-discover-what-may-be-the-largest-flying.vpf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஓர் நகைசுவையான சம்பவம், ஆனால், அதை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தனனை மாணவன் எள்ளி நகையாடிதாக கோபித்த சம்பவம்.

எனது மகன் தமிழ் பாடசாலையில் படிக்கிறார்.

எத்தனையாம் வகுப்பு என்று மறந்துவிட்டது, ஆசிரியர் பட்சியை கொண்டும், பற்றியும்,  தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.

ஏதோ ஓர் சிந்தனை உதித்து,எனது மகன் ஆசிரியரிடம் பட்சிக்கு பற்கள் இருக்கிறதா என்று கேட்டார்.  
 
ஆசிரியர் அப்போது என்னசொனரோ தெரியவில்லை, ஆனால் அதை அவர் முறைப்பாடாக,  குறைபாடாக எங்களிடம் சொன்னார், தன்னை உங்களின் மகன் எள்ளி நகையாடுகிறார் என்று. 

இவையெல்லாம் ஆசிரியர் முறைப்பாடாக எம்மிடம் தெரிவித்ததை.

மகனிடம் கேட்டால், அவர்   சொன்னார், தனக்கு தற்செயலாக மனதில் உதித்த கேள்வி என்று.

அதே கேள்வியை, பாடசாலை முடிந்த கையுடன் மகன் என்னிடமும் கேட்டார்.

எனது  பதில், இதுவரைக்கும் பற்கள் உள்ள பட்சிகளை  நான் காணவில்லை, cassowary எனும் மூர்க்கமான பறவையை கூட இயலுமானவரை கிட்ட இருந்து பார்த்தும் நான் பற்களை காணவில்லை.

 ஆனால், சிறிய மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பட்சிகளின்  அலகை விரல்களால் திறந்து, அலகின் மருங்குகளை தடவிப் பார்த்த அனுபவத்தில், இப்போதும் பட்சிகளின் அலகின் மருங்கில் மிகவும் குணுகிய,  பற்கள் போன்ற அமைப்பு, கூர் மழுங்கி  இருக்கிறது.

அதனால், இப்போதைய பட்சிகளாக கூர்படைந்துள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இராட்சத பட்சி போன்ற தோற்றமுள்ள உயிரிரனத்தின் அலகில்  பற்கள் இருந்து இருக்கலாம்.

இதை இங்கு சொல்வதன் காரணம், தமிழ் பாடசாலைகளில், ஏன் பல தமிழ் இன ஆசிரியர்களுக்கு (எந்த பாடமாயினும்) பிடிப்பிபதில் மாணவர்களை அழைத்து செல்லமுடியாதரவர்களாக உள்ளனர்.

இப்படி, எனது மகன் அவரின் வழமையான (ஆங்கில) பாடசாலையில், டெசி மீட்டர் பற்றிஎனது மகன் தான் அறிந்ததை சொல்ல, அவர்கள் அதை தேடிப்பார்த்து பின்பு வகுப்புக்கே படிப்பித்தார்கள்.  அதை ஓர் குறைபட்டு கொள்ளவில்லை.  

  • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.