Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..

LEB-GEN-Savent.jpg

கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா,

பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள்,

ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும்.

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்

பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

https://jaffnazone.com/news/21290

டிஸ்கி :

இனி ஒன்டுக்கு சரியில்லை என்டாலும் சீனன்தான் போல கிடக்கு . .☺️ .😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பழுதடைந்த இயந்திரங்களை

எல்லாம் பழுதடையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தவர்களா?

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும்

சீனாவில் இருந்தா இவை பெறப்பட்டன. அப்ப ஜஸ்டின் சொன்ன விலையை விட இன்னும் குறைவாக இருக்குமே. கொரியாவில் சிறந்த தயாரிப்புகள் உள்ளனவே.

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர்

அடடா. நான் கொஞ்சம் பிரேக் எடுப்பம் எண்டு பார்த்தால் இனி இது நீண்டுகொண்டு போகுது. நாளைக்கு இந்திய தூதுவர் சம்பந்தனை கூப்பிட்டு என்றை அறைக்கை இருக்கிற PCR இயந்திரந்தை பார். இனி போய் இந்த இயந்திரந்தை வேண்டாவிட்டால் பயங்கர விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும் என்று ஒரு போடு போடுஎன்று சொல்லுவார். அமெரிக்கரும் இதைவிட திறமான மெசின் எங்களிடம் உள்ளது இதோ இலவசம் என்று கொடுக்கக்கூடும். ஆனால் இலங்கையோ மெஷின் கோரணவோட வந்திருக்கென்று அறிக்கைவிட எங்கட தினக்குரல்/வீரகேசரி ஆய்வாளர்கள் எல்லாம் எழுதி  தள்ளுவீனம்.

Edited by puthalvan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..

LEB-GEN-Savent.jpg

 

அமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.😲

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்

பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒரு தொழில் நுட்பவியலாளர் வருகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையே என்னவோ கள்ளக்கூட்டு செய்யிறானுகள் போல இருக்கு. இந்த கொரோனா சீனுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. எது எப்பிடியிருப்பினும் ஒரு சர்வாதிகார ஆட்சி மலரப்போகுது. அதை  சிங்களவர் தட்டு வைத்து அழைத்திருக்கிறார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட ஆரம்பத்தில்... நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளும், சீனாவின் மருத்துவ உபகரகணங்களை வாங்கி, அவை தரமற்றவை என குற்றம் சாட்டினர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

பி.சி.ஆர்.இயந்திரம் திருத்தம் தொடர்பாக சீன குழு முக்கிய அறிவிப்பு

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர்.இயந்திர திருந்த பணியை  நாளைக்குள் (திங்கட்கிழமை) நிறைவு செய்ய முடியுமென இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர்.இயந்திரத்தின் தானியங்கி மூலக்கூறு பிரித்தெடுத்தலுக்கான கூறு, ஓரளவு விலகி இருந்ததாக சீனாவிலிருந்து வருகை தந்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பி.சி.ஆர்.இயந்திரம் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக  சீர் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, நாளை முதல் பி.சி.ஆர்.இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பி-சி-ஆர்-இயந்திரம்-திருத/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்   -(கனகராசா சரவணன்)- வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு மேலாகவும் காணப்படுகின்ற தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்துக்கு நாளை 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இத்தருணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார். கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம் – Thinakkural
  • கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு http://athavannews.com/wp-content/uploads/2020/12/IMG_5238-720x450.jpg கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அக்கரைப்பற்றில் இன்றுவரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில், அக்கரைப்பற்றை ஒரு உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும் கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதிவரை கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அம்பாறையில் 1361 பேரும் மட்டக்களப்பில் 5287 பேரும் திருகோணமலையில் 1249 பேரும் கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதார துறையினர், பொலிசார், இராணுவத்தினர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளை பேணுவதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என மேலும் தெரிவித்தார். கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு | Athavan News
  • போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள். பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.