Jump to content

நினைவுப்பதிவு: பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.!

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.

சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.

 

3WVRb2wl1PuQiQhzMG13.jpg

 

உணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா? அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா?” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.

கதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,

***** **** ******

எல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.

தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.

ஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின் போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம் வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.

ஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”

உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.

தமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.

 

lHasMp6oxtSy0zAG4Dix.jpg

முக்கிய சந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.

ஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச் சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நா ஊறுபட்டுவிடக்கூடாது, கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.

எல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.

அடுத்த சுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டு விற்பன்னர்களுடன் களைகட்டும் போட்டி, இருள் சூழ்ந்த வேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்த பின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்து முடியும் போட்டி.

தமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம் வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச் சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம் போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில் பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.

அதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.

 அடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்ய வேண்டி வந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற் பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.

யாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர் பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.

தென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்ற போதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.

 

 

j44zTsYi0grWWdHw5mFv.jpg

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.

தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.

இந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.

அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.

‘எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.

“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.

ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.

அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.

 வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.

இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.

 இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.

 தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.

மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள்.

சாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டு விடுவார்களா என்ன? போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.

இந்தியப் படையினரால் எமது தாய் நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதி விலக்காகவில்லை. எந்தவொரு யுத்த முனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீன சந்தை. 1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள்? ஏன் எம்மைக் கொல்கிறார்கள்? என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.

இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.

யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.

அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரிய சுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை.

வடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சில நாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடை பேசியில் ஒரு செய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத் துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.

தினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறு தண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.

அப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்க வெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.

“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.

கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.

தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.

இந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரத நிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.

மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாகபக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.

நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.

மிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர்.

அக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.

 இதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனது தம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன்.

அவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறி குண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச் செயலிழக்கச் செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.

பதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர்.

தனது சகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.

 

5HyI66ZtPa5JiDTrNkZd.jpg

 

நன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்ற அணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.

 யாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள் வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது.

 ஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.

 தமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என.

 பூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரிய காயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின் உயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.

 பல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம்.

 எதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.

 இந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச் செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.

 தமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழி நடத்தலின் பெறுபேறே.

 தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.

 அது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரக ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.

 பின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது

நுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன? இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.

 தமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.

 கொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.

 “இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.

 சுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது.

 தமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.

 கையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்து தெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது.

 உயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.

 இந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.

 தமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.

 மக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.

 இந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.

 இவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.

 யாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா?

 முழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.

 ஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.

 அதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:

 எம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.

 கடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு.

 மீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.

 விரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக் காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான்.

 போரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.

 எமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்;

 ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப் படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.

 விடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.

 இராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.

 எம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.

 விடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.

 மறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும்.

 ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.

 எமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை.

 தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.

 தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.

 ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.

 

RYyQB5bXrOKR7x2bFw2W.jpg

 

தலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.

 அதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.

 தமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.

 எங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.

 எம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது.

 வாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.

 தமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.

 தமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.

 

TpTZliySJajVNmegThGB.jpg

 

நினைவுப்பகிர்வு:- ச.பொட்டு அம்மான்

(புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்)

 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/5ad186a3-d2e9-4524-a085-bb802041e999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் – சீ.இனியவன்

 
lrg-1488-t_s_norwaz_027.jpg
 6 Views

தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பன்முக ஆளுமையுடன் மக்களிடத்திலும் அனைத்தலக பரப்பிலும் அதிகம் அறியப்பட்ட ஓர் உன்னதமான போராளியே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

இதனால் தான் இவரது இழப்பு குறித்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 03.11.2007 அன்று தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற அறிக்கை குறிப்பின் மூலம் “தமிழ்ச்செலவன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன்.

நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாக நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்திருந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன்.

இலட்சிய போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகத்தோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்” என தனது  உள்ளார்ந்த உணர்வில் இருந்து குறிப்பிட்டிருந்தார்.

02.11.2020.அன்று சிறீலங்கா அரசின் நன்கு திட்ட மிட்ட நயவஞ்க விமானக் குண்டுத் தாக்குதலில் வீரச் சாவைத்தளுவிக்கொண்ட பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுத் தடங்களை மீட்டுப்பார்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர்  குறிப்பிட்டது போல,  தமிழ்செல்வன் அண்ணன் தாயக விடுதலைக்காக இணைத்துக்கொண்ட காலம் முதல் தமிழீழ மக்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும்  விசுவாசமிக்க அற்புதமான போராளியாக, போர்க் கள தளபதியாக, நிர்வாக பணிமிக்கவராக, அரசியல் பணிக்குரிய பொறுப்பாளராக, அரசியல் இராஜதந்திர பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட தளங்களில் நாளந்தம் சுழன்று கொண்டிருந்தார்.

இதனை விட வெளியே அறியப்பட்டதற்கு அப்பால், தேசியத் தலைவரின் பிரத்தியேகமான வெளியே சொல்லமுடியாத பாரிய பணிகள் இவரது தோள்களில் இருக்கும். இவற்றுள் புன்னகை உதிர்த்த முகத்தோடு ஒவ்வொரு போராளிகளிடத்திலும் பொறுப்பாளர்களிடத்திலும் அவரவர் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கான வழிகாட்டல் ஆலோசனை தேவைகளை நிறைவு செய்து முடியும் என்ற நம்பிக்கை ஊட்டலுடன் ‘அண்ணையின் எதிர்பார்ப்பு’ என வார்த்தைக்கு வார்த்தை சொல்லி  உற்சாகமூட்டி மக்கள் மத்தியில் அரசியல் பணி செய்ய அனுப்பி வைக்கும் உன்னதமான அரசியல் பொறுப்பாளன்.

இவர் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக  பொறுப்பேற்ற காலத்திலிருந்து தேசியத் தலைவர் அரசியல் பணிக்குரிய போராளிகள் மக்கள் மத்தியில் எவ்வாறு பணி செய்ய தயார்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தாரோ அதனை நிறைவான தெளிவூட்டல் மிக்கவர்களாக பயிற்றுவிக்கப்பட்டு பல்வேறு தளங்களில்  ஒவவொரு போராளிகளின் ஆற்றல் ஆளுமையை இனங்கண்டு அரசியல் பணிக்குரிய தளத்தில் வளர்த்தெடுத்து இரவு பகல் பாராமல்   மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென ஊக்கம் தருபவர் தமிழ்ச்செல்வன் அண்ணன்.

இவர் அரசியல் பணியை பொறுப்பேற்ற காலத்தை தொடர்ந்து தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறிலங்கா அரசு பல கிராமங்களை பிரதேசங்களை ஆக்கிரமித்து முன்னேறி  மக்களை இடம்பெயர வைத்த நிர்க்கதியான சூழலில் மக்களை வாழ்வதற்கு வழிகாட்டி நம்பிக்கையூட்டி போராளிகள் இடம்பெயர்வு தளத்தில் நின்று பணி செய்யவேண்டுமென்று வழிகாட்டிவர். இந்த சூழ்நிலையில் நாம் மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாவிட்டாலும் மக்கள் சீரளிந்து போகாமல் பார்த்துக்கொள்ள தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழ சுகாதார சேவை, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், குழந்தைகள் சிறுவர் பெண்கள் முதயோர் நலன்பேண் அமைப்புகள், தமிழீழ கல்விக் கழகம், மாணவர் அமைப்பு, ஏனைய மனித நேய அமைப்புக்கள் என அரசியல் துறை ஆளுகைக்குட்பட்ட பிரிவுகள் ஊடாக  உடனடி மனிதாபிமான பணிகளை கண்டறிந்து மக்கள் நலன்சார்ந்த தேவைகளை நிறைவு செய்த அரசியல் தொண்டனாக தமிழ்செல்வன் அண்ணனை மக்கள் கண்டனர்.

இவ்வாறான நிலையில்  மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு விடுதலைப் போரிலும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை உடையவர்களாகவும் எதிரியின் மீது கோபமும் எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர்.

வாழ்வின் அவலமோ  நிலமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்கு கொண்டு வந்தது. களத்தில் அகப்புற சூழ்நிலையை புரிந்து கொண்டு பாசறைக்குள் வருகை தரும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை  சிறீலங்கா அரசு, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு காடுகளுக்குள்  திணற வைக்க காரணமாக அமைந்தது.வன்னியின் ஊர்களின் ஒரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி செய்யத்தொடங்கினர்.இது தமிழ்செல்வன் அண்ணனின் வழிகாட்டலில் அரசியல் திரட்சியின் மக்கள் புரட்சியாக பரிணமித்தது.இதுவே ஓயாத அலைகள் 1,2,3 வெற்றியின் அறுவடையாக இழந்த நில மீட்பாக மாற்றித்தந்தது.

முப்பது வருட போராட்டத்திற்கு எழுந்த நெருக்கடியை தேசியத் தலைவருக்கு தோள்கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம் எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப்போட்டது. வந்த நெருக்கடியை நோக்கி அரசியல் துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார்.

தமிழ்ச்செல்வன் அண்ணன் எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார்.

போர் நிறுத்த உடன் பாட்டுடன்  நோர்வே நடுவன் சிறிலங்க அரசு பேச்சுவார்த்தைக்கு முகம் கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழச்செல்வன் அண்ணனை சார்ந்ததாகவே இருந்தது. தலைவரது உணர்வுகளை புரிந்துகொண்டு அரசியல் தலைவனாக இராஜதந்திரியாக பேச்சுவார்தையாளனாக பாலா அண்ணையின்  அனுசரணையோடு பரிணமித்தார். இவரது இராஜதந்திர திறனும் சிறப்பாற்றலும் நேர்மையான விடுதலைப் பற்றினையும் தாயகம் தேசியம் தன்னாட்சி கொண்ட  தமிழீழ தனியரசுக்கான மக்களின் அடிப்படை அபிலாசைகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்துச்சென்றவர்.

சமாதான பேச்சு வார்த்தை காலத்திலும் தனக்கு கிடைத்த நேரகாலத்தை  மேற்குலக நாடுகளில் தனது இராஜதந்திர சந்திப்புக்களையும் இந்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தில் தாயக விடுதலைப்போராட்டத்தில் கொணடிருக்கும் பற்று உறுதி செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் நம்பிக்கை ஊட்டி கருத்துருவாக்கம் ஆலோசனைகளோடு அமைப்புகளிடையே நல்லுறவை கட்டியமைத்தவர்.

எனவே தனது புன்னகையையும் அரசியலுக்கு ஆயுதமாக்கி, வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு மக்கள் மனங்களுக்குள் நிறைந்து நிற்கும் உன்னதமான மாவீரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் அலெக்ஸ்,மேஜர் மிகுதன்,மேஜர் செல்வம்,மேஜர் நேதாஜி,லெப் ஆட்சிவேல்,லெப் மாவைக்குமரன் ஆகியோருக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறோம். எமது இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த இவரது குரல் இன்னும் ஓயவில்லை இனியும் ஓயாது எமது தாயக தாயக விடுதலை வென்றெடுக்கும் வரை ஓயாது என உறுதியுடன் பயணிப்போம்.

 

https://www.ilakku.org/பிரிகேடியர்-தமிழ்ச்செல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு…

 

A-memento-to-Brigadier-SP-Tamilselvan.jp

இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை.

ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும் அவரது ஆளுமை அம்சத்தை புள்ளிகளிடுவதன் மூலம்ஒரு சித்திரம் தோன்றலாம். அதில் அந்தச்சிரித்த முகத்தோன் உயிர் பெற்றும் வரலாம்.

கல்லறைக்குப் போகுமுன் வணக்கம் செலுத்த வருபவர்களுக்காக காத்திருக்கிறது திருவுடல். அருகே ஐம்பது வயதைத் தாண்டிய அவரது மூத்த சகோதரன் யாரும் அறியா நேரங்களில் அவ்வப்போது அழுகிறார்.

நினைவுகள் எழுந்து இதயத்தில் எங்கோ இருக்கும் ஈரத்தை இழுத்து வந்து கண்களால் கொட்டி விடுகிறது. அவர் சொன்னார், “சின்ன வயதில் எங்களது அப்பா இறந்து விட்டார். அதனால் குடும்பத்தில் வறுமை நிலவிற்று. நானே உழைக்கத் தொடங்கி குடும்பப் பாரத்தை சுமந்து இளையவர்களைப் படிப்பித்தேன். அதிக கண்டிப்புடன் சகோதரர்களை வளர்த்து வந்தேன். ஆனால், செல்வன் எந்த விடயத்திற்கும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், தண்டிப்பதற்காக தடியைத் தூக்கும்போதெல்லாம் தன் தவறுக்கு தக்க காரணங்களை கற்பிக்கத் தொடங்கிவிடுவான். அதைக் கேட்டுவிட்டால் தண்டிப்பதற்கான நியாயம் பறிபோய் விடும்” என்று.

இந்திய அமைதிப்படையுடன் நடந்த யுத்தத்தில் ஒரு நாள் தென்மராட்சிப் பொறுப்பாளரான இவரது மறைமுக இடத்தை இராணுவத்தினர் சுற்றிவளைக்க வந்தனர். வெடிக்க வைக்கத் தயாராக கையில் குண்டுடன், வீதியின் இரு புறமும் வந்துகொண்டிருக்கும் இராணுவத்தினரின் நடுவால் தமிழ்ச்செல்வன் சைக்கிளில் கடந்தார் ஒவ்வொரு இராணுவத்தினரையும் பார்த்துச் சிரித்து தலையாட்டியவாறு. புன்னகையை ஆயுதமாக்கி அன்று முற்றுகையை உடைத்துக்கொண்டார்.

இன்னொரு நாள் அமைதிப்படையின் அப்பிரதேசத் தளபதி சடுதியாக இவரது அணியை சந்திக்க நேர்ந்ததும் அந்த இடத்தில் மோதலைத் தவிர்க்குமாறும் உரையாட விரும்புவதாகவும் அழைத்தான். தினேசுடன் (இவரது பழைய பெயர்) கதைக்க விரும்பும் அழைப்பை ஏற்று முன்வந்த இவர் அமைதிப்படைத் தளபதிக்குச் சொன்னார், “தினேஸ் நூற்றுக் கணக்கான போராளிகளுடன் வேறு ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கின்றார். உங்கள் செய்தியைச் சொல்லுங்கள் நான் அவரிடம் சொல்கிறேன்.” என்று. தினேஸ் பற்றி அவனுக்கிருந்த பிரமையை தானே மேலும் பன்மடங்காக்கித் திரும்பினார்.

அந்தக் ‘கோலியாத்’ தளபதி தங்களை வீழ்த்தி வரும் அணியின் தலைவன் இந்தத் ‘தாவீது’ தான் என்று நம்பத் தயாரானமனநிலையில் இருக்கவில்லை. அவ்வளவு இளவயதும், சிறுவுருவமுமுடையவராக இருந்தார் அப்போது தமிழ்ச்செல்வன்.

சமயோசித புத்தி, நெருக்கடிச் சூழலை கையாளும் திறன், தன் மீதான நம்பிக்கை இதுதான் இளவயதில் மிளிரும் இயல்புகளாய் இருந்தன. இவை குறிக்கும் ஆளுமை என்னவெனில் தமிழ்ச்n;செல்வ்வன் ஒரு தந்த்திரி. இதைத்தான் இயக்கத்தின் வளமாக தலைவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

இந்த ஆளுமைதான் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை தலைமைப் பாத்திரத்தை வகிக்க, அவருக்கு இயலுமையைத் தந்தது. புலிகள் இயக்கம் அரசியல் முதிர்ச்சி பெற்ற தொண்ணூறுகளின் (1993) ஆரம்பத்தில் இவர் அரசியற்துறையைப் பொறுப்பேற்றார். இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் ஒரு அரசியற் பொறுப்புக்கு முகம் கொடுப்பது இலகுவானதல்ல. அதிலும் அவர் எதிர் கொண்ட காலம், இந்த விடுதலைப்போர் அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்த காலம்.

சந்திரிகாவின் சமாதானப் பேச்சு, அடுத்து கடந்த நூற்றாண்டின் இறுதியில், இந்த உலகம் கண்ட மாபெரும் இடப்பெயர்வான யாழ்ப்பாண இடப்பெயர்வு – ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வை – அதுவும் கோரமாக நடந்த யுத்தத்தின் இடப்பெயர்வை – அவர் முகாமைத்துவம் செய்த ஆற்றல் அசாத்தியமானது. இப்படியான இடப்பெயர்வுகளில் பிணி, வறுமை என்பவற்றாலும், கட்டுப்படுத்த முடியாத தொற்றுநோய்ப் பரவலாலும், ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்துபோவதுதான் சுகாதார நிபுணர்கள் கண்ட உலக அனுபவமாக இருந்தது. ஆனால், அத்தகைய கணிப்புக்களை பொய்யாக்கிய முகாமைத்துவம் ஒருபுறமும், மக்களுக்கேற்பட்ட மகா அவலத்தால் மக்கள் போராட்டத்தில் சலிப்புறுவதற்குப் பதிலாக, மக்களை எழுச்சியடைய வைத்து போராட்டத்திற்கு இளைஞர்களை அணிதிரட்டிய ஆற்றல் மறுபுறமுமாக அவரது ஆளுமை புதுமை படைத்தது.

இக்காலகட்டத்தில் போராட்டத்தில் உள்வாங்கப்படுவோரை மட்டுப்படுத்த வேண்டியளவிற்கு அது அமைந்தது. இதன் விளைவாகத்தான் ஓயாத அலைகள் – 01 வெற்றியின் மூலம் முல்லைத்தீவு விடுவிக்கப்பட்டது. புலிகள் ஒரு தீர்ந்துபோகாத சக்தி என்று நிரூபிக்கப்பட்டது. சர்வதேச கடற்போக்குவரத்துக்கான புலிகளின் வாசலாக முல்லைத்தீவு திறவுண்டது. பின்னாளில் வன்னி மீதான எதிரியின் முற்றுகை உள்ளடக்கத்தில் அர்த்தமிழந்ததும் இதனால்தான்.

வன்னிச்சமர் என்றுமில்லாத புதிய நெருக்கடியை இந்தப் போராட்டத்திற்குத் தந்தது. தொடர்ச்சியாக வருடக்கணக்கில் நீண்ட ஒரு சமராக அது இருந்தது. வன்னிக்காட்டில் தனித்து விடப்பட்ட புலிகள் மீதான இறுதி யுத்தமாக உலகளவில் இது பார்க்கப்பட்டது. வன்னியின் நிரந்தரவாசிகளைவிட அப்போது இடம்பெயர்ந்தவர்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர். யுத்தம், முற்றுகை, பொருளாதாரத் தடை, யுத்தப் பின்னடைவுகள், ஊரின் மூலைமுடுக்கெங்கும் வரும் யுத்தத்தில் வீழ்ந்த உடல்கள் இவை எல்லாம் சேர்ந்து வறுமையும், பிணியும், பயமும், அவலமும் கொண்ட வாழ்வாக வன்னி மக்களின் சூழலை மாற்றியிருந்தது. நிச்சயமற்ற வாழ்வுக்குள் நாளாந்தம் மக்கள் திணறிக் கொண்டு இருக்கக்கூடிய காலம். இச்சூழல் தந்திருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் போராட்டத்திற்கு நிச்சயமானதும் முடிவானதுமான தோல்வியைத்தான். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டம் மக்களிலேயே ஆதாரப்பட்டு நிற்கிறது.

முப்பது வருடப் போராட்டத்திற்கு எழுந்த இந்த நெருக்கடிச் சூழலை, தலைவருக்குத் தோள் கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம், எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப் போட்டது.

வந்த நெருக்கடியை நோக்கி அரசியற்துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார் தமிழ்ச்செல்வன். எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார் அவர்.

மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு அதற்கு முகங்கொடுக்கத் தொடங்கினர். விடுதலைப் போரிலும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை இழந்தனரல்லர். எதிரியின் மீது கோபமும், எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர். வாழ்வின் அவலமோ நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்குள் கொண்டுவந்தது. களத்தில் விழுகின்ற உடல்கள் நாளாந்தம் கல்லறைக்குப் போய்க்கொண்டேயிருந்தாலும் பாசறைக்குப் போகும் புதியவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடாமல் இருந்தது. இது, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு எதிரியை காடுகளுக்குள் திணறவைத்தது. வன்னியின் ஊர்களின் ஓரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி பெறத்தொடங்கினர். தமிழ்ச்செல்வன் செய்த தவத்தின் பயனாய் எல்லா வன்னியர் கைகளிலும் வஜ்ஜிர ஆயுதம் முளைத்தது. மக்கள்படை திரண்டு புலிகளுக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. இறுதி யுத்தமென்று வந்தவர்கள் அதில் முழுதாய் தோற்றார்கள்.

வன்னி இயற்றிய இந்த இராணுவ அற்புதத்தால் உலகமே மூர்ச்சையாகிப் போனது. யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து, ஆயுதங் கொடுத்து, ஆலோசனை கொடுத்து சிங்கள அரசின் அருகாய் இருந்த உலகம் அதைக் கைவிட்டு சமாதானத்திற்குத் திரும்புமாறு சந்திரிகா அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. மக்களுக்கு தீரா அவலத்தைச் சுமத்தி விடுதலைப்போரில் வெறுப்பும், சலிப்புமுறப் பண்ணி அடிபணிய வைக்கும் அரசாங்கத்தின் தந்திரத்தை தலைகீழாக மாற்றி அதன் அறுவடையை விடுதலைப் போராட்டத்திற்கு சம்பாதித்துத் தர தமிழ்ச்செல்வன் இயற்றிய தவமே மாதவம்.

“சமாதானம்” இது முன்பிருந்த சூழலுக்கு முற்றிலும் எதிர்மாறானது. எம்மை தோற்கடிக்கச் செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியின் வியூகம் வேறு. அபிவிருத்தி என்ற மாயை மூலம் மக்களை யுத்த மனப்பாங்கில் இருந்து விடுபடச் செய்வதற்கான வியூகம் இது. சர்வதேச சமாதானக் கற்கைகள் கண்டு பிடித்த கோட்பாடு என்னவெனில், யுத்தத்திற்கெதிரான மனப்பாங்கை அபிவிருத்தி என்ற கருத்தாக்கத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதே.

சமாதானம் என்ற வியூகத்தின் அங்கமாக, அரங்காக அபிவிருத்தி என்ற நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சமாதானக் கற்கைகளின் இந்தக் கோட்பாடு புறந்தள்ளி விடக்கூடியதல்ல என்பது தெரியும். ஆயினும் அபிவிருத்தியை புறந்தள்ளி அல்லது தடுத்துவிடவும் முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது என்பதில் தமிழ்ச்செல்வன் உறுதியாக இருந்தார்.

உலகில் யாராலும், எங்கிருந்தாயினும் தமிழ்மக்களை நோக்கிக் கொண்டுவரப்படும் அபிவிருத்தியை வரவேற்று, உள்வாங்கி தொடர் யுத்தத்தால் மக்கள் பட்ட அவலத்திற்கு சிகிச்சையாக, புத்தூக்கமாக அதை மாற்றிப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அதேநேரம் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விடக்கூடிய சூழ்ச்சியாக இது உருவெடுக்க விடாமல் அதனிடமிருந்து தற்காக்க வேண்டியுமிருந்தது. இந்த இரண்டிற்குமிடையில் ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்து அதனை நிர்வகிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கையாண்ட ஆளுமையே தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வன் இயல்பிலேயே ஒரு தந்திரி.

அவரது ராஜதந்திரப் பணியில் சில புள்ளிகளை இடுவது இங்கு முக்கியமானது. சந்திரிகாவின் தீர்வுப்பொதி வெளியிடப்பட்ட காலத்தில் வன்னிக்கு வந்த தெற்கு ஊடகவியலாளர் ஒருவர் இவரைச் செவ்வி கண்ட போது எழுப்பிய கேள்வி, “நீங்கள் இந்தத் தீர்வுப்பொதியை ஏற்காதது, நீங்கள் சமாதான அணுகுமுறையில் விருப்பமற்ற போர் நாட்டமுள்ளவர்களென்பது காரணமே தவிர, தீர்வுப்பொதி காரணமல்லவே” என்ற தொனியில் இருந்தது. அதற்கு இவர் அளித்த பதில் கொழும்பின் முகத்தையே கிழித்தது. “தமிழ்மக்களால் துரோகிகளாக வர்ணிக்கப்படும் குழுக்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அவையே இதை ஏற்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே இந்த அரசாங்கத்தால் முன்வைக்க முடியாதபோது இந்தக் கேள்வியை நீங்கள் எங்களிடம் கேட்பது சரியல்ல.”

நடந்த கடைசிப் பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னான காலத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச செய்தி ஸ்தாபனத்தின் பிரபல நிருபர் ஒருவர், குதர்க்கமான கேள்வி ஒன்றைத் தொடுத்தார். அதன் தொனி புலிகள் சமாதானத்தை போலியாகத்தான் நடத்தினார்கள், என்று திரித்து அம்பலப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது. அதற்கு அவர் அளித்த பதில், நீ குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறாய் என்பதைச் சுட்டி, சபையில் நிருபரை அடக்கவைத்தது. கேள்வி இது தான் “காட்டில் வாழும் சிறுத்தை தம் புள்ளிகளை மாற்றிக்கொள்வதில்லை என்று பழமொழி இருக்கிறதே”. “நாங்கள் இங்கு மனிதர்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறோம். மிருகங்களைப் பற்றி கேள்வி எழுப்ப இது இடமல்ல” என்று வந்த பதிலில் அவர் தலைகுனிந்தார்.

ஜெனிவா – 2 இறுதியாக நடந்த பேச்சுவார்த்தை. அந்தப் பேச்சுவார்த்தையின் பின் எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே அடுத்த பேச்சுக்கான திகதி தருமாறு சர்வதேசத்தின் பிரதிநிதியான நோர்வேயால் நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. அதற்கு இசையாத தமிழ்ச்செல்வனை நோக்கி எரிக்சொல்கெய்ம். “திகதி குறிக்கப்படாதுவிடில் பேச்சு முறிவடைந்ததாக அர்த்தமாகிவிடும். எனவே திரும்பிப் போகும் உங்களின் பயணத்தின் பாதுகாப்பை எங்களால் உத்தரவாதப்படுத்த முடியாது” என்றார். தமிழ்ச்செல்வன் “உயிர் அச்சுறுத்தல்களைக் கொடுத்து புலிகளைப் பணியவைத்து விடமுடியாது” என்று பதிலளித்தார்.

இறுதியில் எரிக் சொல்கெய்ம் சொன்னார் “நீங்கள் பேச்சுத் திகதி குறிக்காமல் போவது நல்லதல்ல என அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ்புஷ் கருதுகிறார்” என்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் சொன்ன பதில் எரிக் சொல்கெய்மையும், அங்கிருந்த ராஜதந்திரிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாங்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான, வோஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், வுட்ரோ வில்சன் ஆகியோரது கருத்துக்களில் தான் கரிசனையாக உள்ளோம். ஜோர்ஜ்புஷ் இன் கருத்திலல்ல”. (மேற்சொன்ன ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திரத்திற்காகவும், சிவில் உரிமைக்காகவும், தேசிய இனத்தவர்களின் சுயநிர்ணயத்திற்காகவும் போராடியவர்கள்)

ஜெனீவா – 2 பேச்சுவார்த்தைக்கு அரச தரப்புப் பேச்சுக்குழுவினர் மிகவும் புளகாங்கிதத்தோடு வருகை தந்திருந்தனர். காரணம், புலிகள் தரப்பில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இல்லை என்பதே. மேலும், பேச்சின் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே தீர்மானிக்கப்படாமல் நடக்கப்போகும் ஒரு அசாதாரண சூழல் பேச்சுவார்த்தை இது. இதனால் தயார்படுத்திக் கொண்டுவர வாய்ப்பும் இல்லை. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் இதற்குத் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சு மேசையில் தமிழ்ச்செல்வன் கையாண்ட உத்திதான் நியாயத்தை எங்கள் பக்கம் திருப்பி அரச தரப்பு “மேதைகளை” தலைகுனிய வைத்தது.

முதல்நாள் பேச்சில் கர்வத்தோடு வந்த அரசதரப்பைக் கதைக்கத் தூண்டி அவர்கள் கையிருப்பில் இருந்த விவாதப் பொருளைக்கக்கவைத்து அதற்கு எதிர் விவாதம் செய்யாது அக்கருத்தில் அவர்களை நிலைபெற வைத்து, மறுநாள் அந்த விவாதத்திற்கு எதிர் வியூகம் அமைத்து அரச தரப்பை அம்பலப்பட வைத்தார். அரச தரப்பின் கருப்பொருள் அடிப்படை அரசியல் பிரச்சினை குறித்தே பேசவேண்டும் என்றிருந்தது. அதற்குச் சம்மதிக்காத புலிகள் போலியாகவே சமாதானப் பேச்சைக் கையாளுகின்றனர் என்று விவாதித்தனர். அன்றாடப் பிரச்சினையை விடுத்து அடிப்படைப் பிரச்சினை குறித்த அரசியல்தீர்வு பற்றியே பேசவேண்டும் என்றனர். அவர்களது நோக்கம், தனியரசு இலட்சியத்தில் இருக்கும் புலிகள் அரசியல்தீர்வு குறித்துப் பேச சம்மதிக்கமாட்டார்கள். எனவே புலிகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்திவிட முடியும் என்பதாகவே இருந்தது.

இதனைச் சரியாகக் கணிப்பிட்ட தமிழ்ச்செல்வன் மறுநாள் “நாங்கள் அதற்குச் சம்மதிக்கிறோம். நீங்கள் கொண்டுவந்த அரசியல்தீர்வு யோசனையை முன்வையுங்கள் பேசுவோம்” என்றார். அரச பேச்சுக்குழு சங்கடத்தில் மாட்டியது. தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்தது போலவே அப்படி எந்த ஒரு தீர்வு முன்மொழிவையும் அது கொண்டுவந்திருக்கவில்லை. மேலும் தமிழ்ச்செல்வன் அவர்கள் “எங்களது முன்மொழிவாக இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை முன் வைத்துள்ளோம் அரசியல்தீர்வு பற்றியே பேசவந்த உங்களது முன்மொழிவு எங்கே? தொடர்ந்து பேசுவோம” என்றார். விக்கித்துப்போன அரசகுழு “நாங்கள் இப்போதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். விரைவி;ல் தயாரித்து விடுவோம்” என்றனர். அதற்குத் தமிழ்ச்செல்வன் “தயாரித்ததும் வாருங்கள் பேச்சுக்குத் திகதி தருகிறோம்” என்றார். அரச குழுவை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்கள் விரித்த பொறியில் அவர்களையே சிக்கவைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றுவரை அவரெழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை.

மாறாக, தமிழ்ச்செல்வனைக் கொல்வதுதான் அரசின் பதிலாக இருந்தது. இப்படியொரு வல்லமை மிக்க ஆளுமையை வீழ்த்திவிட எதிரியென்று வரும் எவருக்குத்தான் பிரியமிருக்காது. இதில் தர்மம் என்ன? தார்மீகமென்ன? நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் வீடுகளெங்கும் முகாரி இசையில் மூழ்கியிருக்க, கோத்தபாய ராஜபக்ச பேட்டியளித்தார். “இன்றுதான் நான் வாழ்வில் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்” என்று.

நினைவுப்பகிர்வு:- கு.கவியழகன்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007).

 

https://thesakkatru.com/a-memento-to-brigadier-sp-tamilselvan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு

The-Ideal-Fire-that-Melted-itself-and-Wo

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

LTTE-leader-pays-respects-to-Tamilselvan

LTTE-leader-pays-respects-to-Tamilselvan

LTTE-leader-pays-respects-to-Tamilselvan

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

https://thesakkatru.com/the-ideal-fire-that-melted-itself-and-worked-for-the-people/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியார் தமிழ்செல்வனுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வம்

Tamilselvam.jpg

ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில் தான் மலர்த்தி முடித்திருந்தது.

இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங்கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட் பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை.

ஆனால் ஒரு உயரிய போராளிக்குக் கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய மதிப்பு எதிரியால் கொல்லப்படுவதுதான். அத்தகைய போராளியான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வாழ்வும், வரலாறும் பிறருக்காக உழைத்து அவருக்காகவே மகிழ்வோடு மடிந்த வரலாற்று மனிதர்களின் வரலாற்றுத் தடங்களோடு இணைந்துவிட்டது.

Brigediar-TamilSelvan-Tamilselvam-Post-2

சர்வதேச ரீதியிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடாக இன்று ‘சே’ பார்க்கப்படுகின்றார். தமிழின எழுச்சியின் வெளிப்பாடாக இன்று தமிழ்ச்செல்வன் கணிக்கப்படுகின்றார். இப்படிப்பட்டவர்களின் வரலாறுகளாலே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அதற்குரிய தகமைகளைப் பெறுவதும் அதன்வழி இறுதி யில் வெல்வதும் நிகழ்கின்றது. அந்த வகையில், தான் வாழும் சூழலில் பாதிப்படைந்து போராளியாகி அத் தடைகளைத் தாண்டுவதின் மூலம் சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தி இறுதியில் அப்போராட்டத்திற்கே உரமான தமிழ்ச்செல்வன் தமிழ் கூறும் நல்லுலகின் மதிப்பைப் பெறுகின்றார்.

1967இல் பரமு விசாலாட்சி இணைக்கு தமிழ்ச்செல்வனாகி, 1984இல் விடுதலைப்புலிகளுக்குத் தினேஸ் ஆகி, 2007இல் தமிழ்மக்களுக்கு தமிழ்ச்செல்வமாகிய கதைதான் இது. 1984 – 2007 வரை 23 ஆண்டுகள் தன் இளமைப்பருவம் முழுவதையும் விடுதலைக்கு ஒப்புக் கொடுத்த அவரது போராட்டம் முப்பரிமாணம் கொண்ட தளத்திலே இயங்கியதாக கணிக்கமுடியும். அவரது போராட்ட வாழ்வு விடுதலையமைப்பின் வளர்நிலையின் படி மலர்ச்சிப் பாதையோடு ஒத்தது. மூன்று காலகட்டங்கள், மூன்று வௌ;வேறு சூழல்கள் – இவற் றிற்கு முதலில் இசைவாக்கம் பெற்றும் பின்னர் ஈடு கொடுத்தும் அவர் செயற்பட்டதின் தடங்களே அவரது ஆளுமையின் உருவகமாகின்றன.

Brigediar-TamilSelvan-Tamilselvam-Post-1

எமது விடுதலைப்போராட்டத்தின் திருப்புமுனை ஆண்டாகக் கருதப்படும் 1970களை அண்மித்து அவர் பிறப்பெடுக்கின்றார். பிற்காலத்தில் அறியப்பட்ட அவரது சிறந்த ஆளுமைக்குரிய பண்புகள் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட குடும்பப் பின்னணியாலும் விடுதலைப்புலிகளின் தொடர்புள்ள சூழலால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவை அவரை ஒரு வழமையான மனிதனாக மாறவிடாது போராளியாக்கி விடுகின்றது. அவருக்குப் பெற்றோரால் இடப்பட்ட பெயர் தமிழ்ச்செல்வன் என்பதும் அவரது புன்சிரிப்பும், மலர்ந்த முகமும் இயல்பிலேயே உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

“இளவயதிலும் சரி இப்போதும் சரி எதையும் தனக்கெனச் சேர்த்துவைக்கும் பழக்கமற்றவன்” என அவரது மூத்த சோதரரில் ஒருவர் கனடாவில் துயர் பகிர்வின் பொழுது நா தழுதழுக்கக் கூறினார். உண்மையில் இப்போது எண்ணிடும் பொழுது அவரை பிற் காலங்களில் சந்தித்த எவரும் ஏதாவது பயன்களை அவரிடம் இருந்து பெறாமல் சென்றதில்லை என்பதும் எம் நெஞ்சின் நீங்காத பதிவுகளாய் உள்ளது.

விடுதலைப்புலிகள் கரந்துறைப் போர்முறையினைக் கைக்கொண்ட வேளையில் அவர் இயக்கத்தில் இணைகின்றார். இயக்க மரபிற்கேற்ப தனியாகவும், குழுவாகவும் வீர உணர்வுள்ள போராட்டச் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்ட காலமது. அவரது சிறப்பு இயல்புகள் தேசியத் தலைவரை ஈர்த்தமையும், அதன் விளைவாகத் தேசியத் தலைவர் பிற்காலத்தில் தான் சந்திக்கப் போகும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கத்தக்கதொரு நம்பகமான துணைவனைப் பெற்றதும் நாம் கவனிக்கத்தக்கது.

1987 – 1990 வரை இந்தியப்படைகளுக்கு எதிரான துணிகரமான, இடைவிடாத தாக்குதலை நடத்திய உணர்ச்சிகரமான போராளியாக அவர் அறியப்படுகின்றார். கரந்துறைப் போர்முறைக் கால கட்டத்திலே போராளிகளின் இருப்பும், பாதுகாப்பும் மக்களின் கைகளிலேயே இருக்கும். ‘சே’ முன்பொருக்கால் எழுதினார். “ ஒரு புரட்சிக்காரனுக்குத் தேவையானவை எவை? வலிய கால்கள், பிச்சைக்காரன் வயிறு, எளிய சுமை”. தமிழ்ச்செல்வன் வெறும் கால்களுடன் தென்மராட்சி மண்ணிலே இந்தியப் படையோடு மோதிய காலத்தில் அலைந்து திரிந்து தென்மராட்சி மக்களின் அபிமானம் பெற்ற ‘செல்லப்பிள்ளையாக’, ‘எங்க வீட்டுப்பிள்ளையாக’ அவர் ஆகிவிடுகின்றார். எத்தனை அன்னையர் அவருக்கு உணவூட்டியும், கண்போலக் காத்தும் நினறனர் பிற்காலத்தில் எத்தனை உயர்ந்த நிலைக்கு சென்றாலும் தனக்குதவிய மக்கள் நெருக்கடிகளுக்கு உட்பட்டபொழுது முடிந்தளவு உதவிகளைச் செய்ய அவர் தயங்கவில்லை.

அவரது நன்றிமறவா இப்பண்பு உயரியது. அவ்விளவயதில் கபடமற்ற மனதோடு தன்னோடொத்த தோழரோடு போராடிய காலம் அவர் வாழ்வின் பொற்காலமாக அவர் மனதில் பதிந்திருந்தது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக அவர் பதவியேற்ற பின் அடிக்கடி அவர் அசைபோடும் மலரும் நினைவுகளாகவும், மக்கள் உறவில் கவனமின்றி செயற்படும் போராளிகளுக்கு அறிவுரையாகவும் இந் நினைவுகளை மீட்டுக்கொள்வார். அப்போது அவர் மலர்ந்த முகம் மேலும் மலரும்.

Brigediar-TamilSelvan-Tamilselvam-Post-4

இப்போது இரண்டாம் காலகட்டம். இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னான கட்டம். விடுதலைப்புலிகள் நகர்வுப் படையணியாகி மரவுவழிப் படையணியாகப் படி வளர்ச்சி கண்ட காலம். ஒருபுறம் பாரிய படைநடவடிக்கைகள் மறுபுறம் அரசியல் நிருவாக அலகுகள் கட்டமைப்பு என இருவேறுபட்ட பணிகளோடு மருத்துவத்துறையில் மறைவான ஆனால் நிறைவான வளர்ச்சிக்கான ஏற்பாடுகளென அவர் பணியாற்றினார். 1995இல் சந்திரிக்கா அரசோடான பேச்சுக்களிலும் தலைமை தாங்கித் தனக்கான பட்டறிவையும் பெற்றுக்கொள்கின்றார். 1995 ஏப்பிரலின் பின் மீண்டும் போர் வெடித்தமை, இடப்பெயர்வு, வன்னிவாழ்வு, முல்லைச்சமர், ஜெயசிக்குறு, ஓயாத அலைகள் என வரலாற்று நிகழ்வுகளால் எம் வரலாறு நிரம்பிவழியும் போதெல்லாம் தமிழ்ச்செல்வன் தலைவர் அருகில் சிறப்புடனும், சிரிப்புடனும் நின்றார்.

ஓர் மனிதனால் இத்தனை பணிகளையும் சுமந்திட முடியுமா என மற்றவர் ஏங்கிடுமளவு பளுச்சுமந்தார். தலைவன் முகமறிந்து – மனமறிந்து – விருப்பு – வெறுப்பறிநது – ஓயாத சிந்தனையின் பொழுது தலைவரிடமிருந்து வெளிப்படும் அறிவுறுத்தலறிந்து அவற்றினை நடைமுறைச் செயற்பாடாகமாற்ற அவர் பட்டபாடு, தலைவரின் சுருக்கமான ஆனால் மிக அடர்த்தியான கூற்றுக்களை விரிவான பேச்சுக்களாக மொழிபெயர்த்து அவர் பாரதி பாடிய கண்ணனின் (கண்ணன் என் தோழன் – என் சேவகன், என் சீடன்) பல்வேறு அவதாரம் எடுத்தார்.

இக் கட்டத்திலே….

எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நானென்றான்
இங்கிவனை யான் பெறவே என்னதவம்
செய்துவிட்டேன்
கண்ணன் என்னகத்தே கால்வைத்த
நாள்முதலாய்
எண்ணம் விசாரம், எதுமவன் பொறுப்பாய்.
என பாரதி பாடியபாடல் நினைவிற்கு வருகின்றது.

இப்போது மூன்றாம் கட்டம். புலிகளின் சருவ தேச வருகை நிகழ்ந்த காலம். சருவதேச தொடர்பு பெருகிய காலம். திடீரென இயக்கம் இராணுவ அரசியற் செயற்பாட்டிற்கு அப்பால் இராசதந்திரம் எனும் உச்ச அரசியல் நுண்ணுணர்வுத் திறன்மிக்க செயற்பாட்டில் கால்வைத்த நேரம். இங்கும் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு நிகழ்கின்றது. பாலா அண்ணையின் துணையுடன் இவ்வளவு சடுதியான மாற்றங்களுக்கெல்லாம் அவர் தன்னை உட்படுத்தினார். தன்முத்திரை பதித்து உலகத்தாரிடம் மிகப் பிரபலம் பெற்றார். புலிகள் என்றால் அது தமிழ்ச்செல்வனின் பூ மலர்ந்த முகமே என சருவதேசமே உணரும் பிம்பம் அவருடையதாகியது. இக்கட்டத்திலேயே ஒரு சிறப்பை இங்கே நாம் பதிவு செய்யவேண்டும். சர்வதேச உறவுகள், சர்வதேச கற்கைநெறிகள் என பெருமெடுப்பில் இராசதந்திர உலகம் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையிலேயே கற்றுப் பிள்ளையாக தமிழ்ச்செல்வன் களமிறங்கினார். அதற்கு முகம் கொடுக்கும் ஆற்றலையும் அவர் தன்னுள் வைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடும் போராளிகளுக்குள்ளே அளவற்ற ஆற்றல் வலிமை பெருகும் என்பது வரலாற்று விதி. எத்தகைய சிக்கல்களைக் கொண்டதாக இராசதந்திர உலகம் அமைந்தாலும் அங்கும் அடிப்படை மனித உறவுகளைச் சீராகப்பேணல் என்பதே. பாலா அண்ணையின் வழிகாட்டலோடு இதிலும் தமிழ்ச்செல்வன் தகுதிநிலை பெற்றார் என்பதற்கு போவர் அவர்களின் இரங்கலுரையே சான்று “அவருக்கூடாகவே புலிகள் அமைப்பு தொடர்பான பிம்பம் சருவதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டது. அவரின் வழியே புலிகள் சருவதேசத்தில் அறியப்பட்டார்கள்” என்கின்ற கருத்துப்பட போவர் பேசினார்.

இப்பொழுது தன் கடன் முடித்து அவர் நிறைவெய்திவிட்டார். ஆனால் எம்பணி நிறைவெய்தவில்லை. அவரிடமிருந்து நாம் பெற்றதென்ன? கற்றதென்ன? வரலாறு எழுப்பும் வினாவிது. தன் ஒவ்வொரு வருகையின் பொழுதும் மகிழ்வையும், கலகலப்பையும், பரபரப்பையும் கூடவே கொண்டு வரும் – பிறர் எவராயினும் எழுந்து நின்று மதிப்பளித்து நலம் விசாரிக்கும்போது குளிரவைக்கும் – அவரவர் மன அலைவரிசையில் அவரவர் குறைநிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் தன்மையை எம்மால் முற்றாகப் புரியமுடிந்ததா? நம்பமுடியாத பொறுமையுடனும் எவருக்கும் கிட்டாத இனிமையுடனும் ஆதிக்கம் காட்டாத – கோபிக்காமல் பாதிப்பேற்படுத்தும் நிருவாகம் அவரது. நவீன முகாமையியல் கூறும் தலைவனாகிவிடு, ஆனால் அதிகாரியாகவிராதே – நல்லெண்ணத்தை நம்பு – அதிகாரத்தை நம்பாதே – நான் என்று சொல்லாதே நாம் என்று சொல் – மதிப்பை வேண்டிப்பெறாதே உன் தகுதியால் பெறு என்று நீளும் கூற்றுக்களோடு பிறரை உற்சாகப்படுத்தி, தூண்டி வேலைவாங்கும் தன்மையை அவர் கைக் கொண்டார். “மதி உணர்ச்சியோடு மன உணர்ச்சியையும் கொண்டிருந்தார்”.

Brigediar-TamilSelvan-Tamilselvam-Post-6

அவரது மன ஆழத்தில் மக்களுறவே ஆழப்பதிந்திருந்தது. “எம் மக்கள் எம் மக்கள் என்றும் மக்களிடம் போங்கோ மக்களிடம் போங்கோ” என்றும் எப்போதும் போராளிகளிடம் கூறியவண்ணமேயிருப்பார். மக்களைப் பற்றிக் கதைப்பதோடு நில்லாமல் மக்களோடும் கதையுங்கள் என்றார். அவரது இலக்கினை நிறைவேற்றுவதே அதற்குரியவராக எம்மை உருவாக்கிக்கொள்வதே எமது பணி. அதுவே அவருக்கு நாம் செய்யும் உச்ச மதிப்பு. ஏனெனில் இறுதிக் காலத்தில் அவரது உள் மனதில் பெரும் கவலையாக இருந்தது மக்கள் படும் துயரே. அதை நாம் நீக்க முற்படும்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீண்டும் எம்மிடம் தோன்றுவார். “சே எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரைக் காணமுடியும்” என்கின்ற கூற்றை அவருக்குரியதாக்கி எமது ஆழ்ந்த அன்பையும் நன்றியையும் அவரிடமே விட்டுச்செல்கின்றோம்.

நினைவுப்பகிர்வு:- க.வே.பாலகுமாரன்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007).

 

https://thesakkatru.com/tamilselvam/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம் 

Link to comment
Share on other sites

  • 11 months later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.