Jump to content

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

November 6, 2020

%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒரு குழுவான கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் இன்றைய கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவரினால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வீடமைப்பு திடடங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/86804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி திருவினையாகட்டும் 

வெடியரசன் கோட்டையைக் பிக்குகளிடமிருந்து காப்பதும் முக்கியம் அமைச்சரே. 

 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

முயற்சி திருவினையாகட்டும் 

வெடியரசன் கோட்டையைக் பிக்குகளிடமிருந்து காப்பதும் முக்கியம் அமைச்சரே. 

 👍

சும்மா ஒரு கதைக்கும் கதைக்க விடமாட்டியளப்பா....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கதைக்கும் கதைக்க விடமாட்டியளப்பா....😜

மாகாண சபைத் தேர்தலுக்கு மனுப்போட்டு வைக்கிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

மாகாண சபைத் தேர்தலுக்கு மனுப்போட்டு வைக்கிறார்.  

முதலமைச்சர் கனவு.. 😀

அதற்குரிய ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்கிறார்.  

மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கலாம் (செய்பவற்றை .. 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசால் ஒரு சில நன்மைகள் தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படும்போது கூட தமிழ் கைக்கூலிகளை வைத்து மிகவும் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். சுரேன் டக்கிளஸ் போன்றவர்களை வைத்து கேள்விகளை கேட்க செய்து அதனால் தான் அந்த உதவி தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்பதுபோல ஒரு மாயையை உருவாக்கிவிடுகிறார்கள்.

இதனால் காலப்போக்கில் தமிழர் மத்தியில் இந்த ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் ஆதரவு அதிகரிக்க தத்தமது  வாக்கு வங்கிகளை நிறைக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதைத்தான் விக்கியரும் அண்மையில் ஒரு செய்தியில் காட்டமாக குறிப்பிட்டு சொல்லியிருந்தார்.

மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் சிறந்த தமிழ் அரசியல்வாதிகளை கவர்ந்து தங்கள் பக்கம் வைத்திருந்த கடந்த கால சரித்திரத்தில், சுளையை வைத்துக்கொண்டு வெறும் கொட்டையைதான் தமிழருக்கு விட்டுவைக்கும் அதே கதைதான் இன்றும்  தொடர்கிறது. இனிமேல் தமிழருக்காக வெளியில் நின்று குரல் கொடுக்க நாங்கள் வெறும் புண்ணாக்கு அரசியல்வாதிகளிடம் தான் செல்லவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.. நாங்க நினைச்சம்.. உவர் கடந்த அமைச்சராக இருந்த போதே நெடுந்தீவை சிங்கப்பூர் ஆக்கிட்டார் என்றெல்லோ.

இன்னும்.. தண்ணி வெண்ணியே சரியாக் கொடுக்கல்லையா.

எனி இப்ப சொல்லி.. நாளைக்கு திட்டம் போட்டு.. இவர் சாகும் வரைக்கும் தீவகத்தை இப்படியே வறுமைக் கோட்டில் வைச்சு.. வாய் பார்ப்பார். நாமளும் நம்பி நம்பி.. வறுத்துக் குத்துவம்.

உந்த முட்டாள்களின் கதையை நம்பிக்கிட்டு இருக்கிற முட்டாள் தனத்தை விட்டிட்டு வேற வேலையிருந்தால்.. போய் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அது  சிங்கப்பூர் தான் அவருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

அது  சிங்கப்பூர் தான் அவருக்கு....

அண்மையில் தான் அறிந்தேன் யாழ் கோட்டைப் பகுதியின் பின்புற வீதியை மையப்படுத்தி அழகு படுத்தலும்.. பூங்கா அமைத்ததும்.. இவரின் மகிந்த கூத்தாடியின்.. வடக்கின் வசந்தம் இல்லையாம்.. அருகில் தோன்றி இருக்கும்.. உல்லாச விடுதியின் அன்பளிப்பு அது. ஆனால்.. திறந்து வைச்சு பெயர் வாங்கினது.. இந்த அத்தி அடி குத்தியன். இந்தக் கள்ளங்களை காடையன்களை கொலைகாரன்களை இன்னும் வாக்குப் போட்டு தெரிவு செய்யும் அடி முட்டாள்களாக மக்கள் இருப்பது தான் பேரவலம். அதுவும் ஒரு போராட்ட சமூகம். அப்படியான சமூகப் பொருண்மிய நிலையில் அவர்களை இவர்கள் வைத்திருக்க விரும்புகின்றனர். அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

மக்களின் வறுமையையும் வேலைவாய்ப்பின்மையையும் 

தமது சுயநலங்களுக்காக  பாவிக்கும் நச்சு விதைகள் இவர்கள்

என்ன செய்வது இந்த வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணமே இவர்களது  அரசே என்பதை  அறிந்தும் அறியாத  மக்களை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கலாம் (

முதலில்;  வடக்கை விட்டு அந்த மக்கள்  வெளியேறுவதற்கு இராணுவத்திடம்  அனுமதி பெறும் நடைமுறை அமுலில் இருந்த காலத்தில்,  இவரால் அச்சுறுத்தப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து    வெளியேற அனுமதிகிடைக்காமல்  தவித்தபோது, நடுத்தெருவில் துரத்தி துரத்தி சுட்டபோது,  தம் உயிர் போகும்வரை அதைக் காப்பாற்றுவதற்காக கதறி கதறி முடியாதபோது  துடிதுடித்து நடுவீதியில் விழுந்து உயிர் துறந்தவர்களுக்கு  பொறுப்பு கூறட்டும். அதன்பிறகு இவர் நல்லது செய்வாரா நாம் அவரை வரவேற்கலாமா என்பதை யோசிப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு....தகவலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

முதலில்;  வடக்கை விட்டு அந்த மக்கள்  வெளியேறுவதற்கு இராணுவத்திடம்  அனுமதி பெறும் நடைமுறை அமுலில் இருந்த காலத்தில்,  இவரால் அச்சுறுத்தப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து    வெளியேற அனுமதிகிடைக்காமல்  தவித்தபோது, நடுத்தெருவில் துரத்தி துரத்தி சுட்டபோது,  தம் உயிர் போகும்வரை அதைக் காப்பாற்றுவதற்காக கதறி கதறி முடியாதபோது  துடிதுடித்து நடுவீதியில் விழுந்து உயிர் துறந்தவர்களுக்கு  பொறுப்பு கூறட்டும். அதன்பிறகு இவர் நல்லது செய்வாரா நாம் அவரை வரவேற்கலாமா என்பதை யோசிப்போம். 

இதை எதிர்பார்த்துத்தான் (...) போட்டேன் 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.