Jump to content

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன்

டந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்பன் சொன்னார். “அப்படி என்றால் ராணுவத்தில் வேலை செய்யும் பௌத்தர்கள் அல்லாதவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டார்களா?” என்று மகள் கேட்டாள். இது ஒரு பத்தாம் ஆண்டு மாணவியின் கேள்வி.

இலங்கை தீவில் பௌத்த மதச் சின்னங்களும் கொடிகளும் குறியீடுகளும் மதப் பல்வகைமையின் செழிப்பான அடையாளங்களாக முன்னிறுத்தப்படுவதில்லை. மாறாக மத மேலாண்மையின் சின்னங்களாகவும் கொடிகளாகவும் அவை மாறிவிட்டன. அவை பல்லினத் தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரான கொடிகளும் சின்னங்களும்தான். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை சொன்னார்…”புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நடுகிறார்கள்” என்று.கன்னியா வென் நீரூற்றில் நீராவிப்பிட்டியில் இதுதான் நடக்கிறது.

0000-1.png
 

ஆனால், இவ்வாறு முகாம் வாசல்களிலும் விகாரைகளும் தொங்க விடப்படும் கொடிகளில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. அவை வெளிநாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. “நாட்டின் தேசியக் கொடி மற்றும் பௌத்த கொடி ஆகியவற்றின் தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பூர்த்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேககர என்னிடம் உறுதியளித்தார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்பதனை அமைச்சர் எனக்கு அறியத் தந்தார்”. இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பௌத்த கொடிகள் மட்டுமல்ல இலங்கைத் தீவின் தேசியக் கொடியும் அவ்வாறு வெளிநாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. அதை நிறுத்தி உள்நாட்டிலேயே தேசியக் கொடியையும் பௌத்தமத கொடிகளையும் தயாரிக்க வேண்டும் என்று அவர் தனது அமைச்சருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவருடைய மற்றொரு அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு காரியத்தைச் செய்தார். கோவிட்-19ஐ அகற்றுவதற்காக பிரித் ஓதி சேகரிக்கப்பட்ட நீரை அவர் ஆறுகளில் கரைத்தார். அவரோடு வேறு சில அமைச்சர்களும் இவ்வாறு வைரசுக்கு கழிப்புக் கழித்தார்கள். இது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கோவிட்-19 முதலாவது தொற்று அலையின் போதும் இவ்வாறு பிரித் ஓதப்பட்ட மந்திர நீர் போத்தல்களில் சேகரிக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் நாடு முழுவதும் தெளிக்கபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. கடந்த மார்ச் மாதம் சாமர சம்பத் என்ற ஓர் அரசியல்வாதி தம்பணவில் உள்ள வேடர்களின் கிராமத்தில் “கிரி கொரஹா” என்று அழைக்கப்படும் ஒரு சடங்கை ஒழுங்கு படுத்தியிருந்தார். அது கொரோனா வைரசிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்று கூறபட்டது. அதில் தனி ஆள் இடைவெளி பேணப்படவில்லை என்று டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டது.

அண்மையில் இரண்டாவது தொற்று அலை பரவத் தொடங்கிய போது எல்லா மதப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள் கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து நாட்டைக் காக்கும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.கடந்த புதன் கிழமை கிளிநோச்ச்சியில் ஒரு கோவிலில் வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட யாகம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டது. இவ்வாறு ஆலயங்களில் யாகங்களையும் விசேட பிரார்த்தனைகளையும் ஏற்பாடு செய்யுமாறு நாட்டின் பிரதமர் மகிந்த கோரிக்கை விடுத்திருக்கிறார். அயல் நாடாகிய இந்தியாவில் பிரதமர் மோடி வைரசை வெற்றி கொள்ள வீடுகளில் ஒளி ஏற்றும்படியும் மக்களை ஒலி எழுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். அதாவது கோவிட்- 19க்குப் பின்னரும் உலகில் கடவுள் நம்பிக்கையும் மதங்களுக்கான தேவையும் குறையவில்லை.முதலாவது தொற்று அலையின் போது மதங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. யாழ்பாணத்தில் ஒரு சுவிஸ் போதகர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால் இரண்டாவது தொற்று அலையின் போது வைரசிடமிருந்து பாதுகாப்பைத் தேடி மதங்களை நோக்கிப் போகிறதா சமூகம்?

இவ்வாறு வைரசுக்கு எதிராக- அதாவது வெல்லக் கடினமான ஒரு எதிரிக்கு எதிராக – கடவுளைச் சரண் அடைவது அல்லது மந்திர தந்திரங்களைச் சரணடைவது என்பது இலங்கைத் தீவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். யுத்த காலங்களில் மரண பயம் காரணமாக அரசாங்கத்தின் பிரதானிகளும் சாதாரண சிப்பாய்களும் இவ்வாறு பிரித் ஓதி நூல்களைக் கட்டுவதும் மந்திரத் தாயத்துகளை இடுப்பிலும் கைகளிலும் அணிந்து கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கைகளில் மந்திரித்த கயிறுகளை அணிந்திருக்கக் காணலாம். குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது வைபவங்களில் தமது கை ஒன்றில் ஏதோ ஒன்றை விரல்களால் இறுக்கிப் பிடித்திருக்க காணலாம். 2009 இற்குப் பின் யாழ் தேவி தொடரூந்தை முதன் முதலாக யாழ்பாணத்திற்கு ஓட விட்ட வைபவத்தில் அவர் அவ்வாறு எதோ ஒரு பொருளைக் கையில் வைத்திருந்ததைப் படங்களில் காண முடிந்தது. சோதிடத்தில் அமானுஷ்ய சக்திகளில் மந்திர தந்திரங்களில் அந்தக் குடும்பத்துக்கு அதிகம் நம்பிக்கை உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கிரீஸ் மனிதன் தமிழ்ப் பகுதிகளை அச்சுறுத்திய ஒரு கால கட்டத்தில் கொழும்பு டெலிகிராப் என்ற இணையத்தளத்தில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதில் கிரீஸ் மனிதனை அரசினால் ஸ்பொன்சர் செய்யப்பட்ட மாந்திரீகம் என்று ஒரு விமர்சகர் வர்ணித்திருந்தார்.

இவ்வாறானதொரு அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பவித்ரா வன்னியாராச்சி மந்திரித்த நீரை ஆற்றில் கொட்டியிருக்கிறார். பவித்திரா தேவியும் வேறு சில அமைச்சர்களும் அவ்வாறு செய்தது அவர்களுடைய நம்பிக்கையின் பாற்பட்டது. ஆனால் அதை வீடியோ எடுத்து பகிரங்கபடுத்த வேண்டிய தேவை என்ன? ஒரு சுகாதார அமைச்சரே அதைச் செய்வது நாட்டு மக்களுக்கு எப்படிப்பட்ட செய்திகளைக் கொடுக்கும்? வைரசுக்கு எதிரான நடவடிக்ககளை அதிகம் படை மயப்படுத்திய பின்னும் நாடு திணறுகிறது என்பதையா?

இதன் மூலம் “மூடநம்பிக்கைகளின் பக்கம் மக்களைத் திருப்பாதீர்கள்” என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் விமர்சித்திருக்கிறார்.

“மாய மந்திரங்கள் தெய்வ சக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை பௌத்த தர்மம் ஏற்றுக் கொள்ளாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களைத் தூண்டாது. இவை மூடநம்பிக்கைகள். வணங்குதல் ; பூஜைகளைச் செய்தல் ; ஊர்வலங்களை நடத்துதல் என்பவை பௌத்த தர்மத்தில் உள்ளவை அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மைதான் இலங்கைதீவில் ஒற்றையாட்சி கட்டமைப்பை பாதுகாக்கும் பௌத்த மதக் சிந்தனை எனப்படுவது பல்லினத்தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரானது மட்டுமல்ல அது புத்தருடைய அடிப்படைத் தத்துவங்ககளோடு முரண்படுவது. பௌத்தத்தை ஒரு மதமாக ; வெற்றுச் சடங்காகச் சுருக்குவது.

இப்படித்தான் இறைச்சிக்காக மாட்டை வெட்டும் விடயத்திலும் புத்தரை முன் நிறுத்தினார்கள். அதன் மூலம் மாட்டிறச்சியை அதிகம் நுகரும் மதப் பிரிவினரின் பண்பாட்டு உரிமைகளை புண்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் புத்த பகவான் எங்கேயும் புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை.

அதுபோலவே கொரோனாத் தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைக்கக் கூடாது எரிக்கத்தான் வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பாகக் கூறுகிறது. இது விடயத்தில் சுகாதாரக் காரனங்களுக்காக முஸ்லிம்களின் மத உணர்வுகளை பண்பாட்டு உணர்வுகளை மதிக்காத ஒரு அரசாங்கத்தின் ஒரு அமைச்சரே இப்படித் தனது மத நம்பிக்கைகளின்படி கழிப்புக் கழிப்பதை எப்படிப் பார்ப்பது?

அண்மையில் பாணந்துறை கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.அவற்றை உள்ளூர் மக்கள் காப்பாற்றி கடலில் விட்டனர். அதைப் பாராடிய ஜனாதிபதி இலங்கை மக்களிடத்தில் வேரூன்றியுள்ள அஹிம்சையின் நற் பண்புகளை உலகிற்கு நிரூபிக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அரசியல் கைதிகளின் விடயத்திலும் காணாமல் ஆக்கபட்டவர்களின் விடயத்திலும் கடைசிக் கட்டப் போரின் போதும் அந்த அஹிம்சையின் நற் பண்புகள் ஏன் நிரூபிக்கப்படவில்லை?

பௌத்த மதத்தையும் அதன் சின்னங்களையும் கொடிகளையும் குறியீடுகளையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குக் கவசமாகப் பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள் ; பொத்த தேவாலயங்களில் பதவிகளைப் பொறுப்பேற்கும் சிங்கள அரசியல்வாதிகள் புத்தர் போதித்த அகிம்சைக் கோட்பாட்டையோ அல்லது அறநெறிகளையோ பின்பற்றுவதில்லை. மாறாக புத்தருடைய போதனைகளை கழிப்புக் கழிக்கும் ஒரு சுகாதார செய்முறையாகக் குறுக்கி விடுகிறார்கள்.

முஸ்லிம்களின் ஜனாஸாவைப் புதைக்க மறுக்கும் ஒரு நாடு மந்திரித்த நீரை ஆற்றில் விடுகிறது. இது தொடர்பான சர்ச்சைகளின் போது அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கூறினார் கொரோனா தோற்று ஒழியுமென்றால் தானும் கடலில் குதிப்பதற்குத் தயார் என்று. அவர் கடலில் எல்லாம் குதிக்கத் தேவையில்லை. புத்த பகவான் கூறியற்றை அப்படியே பின்பற்றினாலே போதும்.
 

https://thinakkural.lk/article/86878

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரோனோவை சிறப்பாக அடக்கிய நாடு என இலங்கை பெயர் பெற்றுள்ளது .

புலிகளை அடக்கிய எங்களுக்கு கொரோனோவை அடக்குவது பெரிய விடயம் இல்லை .

இப்ப மந்திரம் செய்த தண்ணி  குண்டானை தூக்கிக்கொண்டு திரியினம் .

Link to comment
Share on other sites

10 minutes ago, பெருமாள் said:

தண்ணி  குண்டானை தூக்கிக்கொண்டு திரியினம்

ஒருத்தர் வண்டியையே தூக்கமுடியாமல் நிக்கிறார் படத்தில!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அமைச்சர் கழிப்புக் கழிச்சது முட்டாள் தனமான செயல் என்றாலும்.. அதனால் வைரஸ் பரவாது. அதனால்.. மக்களுக்கு அதனால் பாதிப்பில்லை.

ஆனால்.. அதிக தொற்றுத் தன்மை கொண்ட ஒரு வைரஸ் நோயாளியின் உடலை புதைப்பதை விட எரிப்பது என்பது தொற்றைக் கட்டுப்படுத்த உதவக் கூடிய இலகு செயன்முறையாகும். அதனை முஸ்லிம்.. இந்து.. கிறிஸ்தவம்.. புத்தத்தின் பெயரால்.. தவறாக அர்த்தப்படுத்தும்.. மதவெறி தான் ஆபத்தானது. 

அண்மையில் கூட சீனாவில் இருந்து கிளம்பிய மணற் புயலை அடுத்து.. மொங்கோலியாவும்.. வடகொரியாவும் மக்களை வீடுகளுக்குள் இருக்க உத்தரவிட்டது. தென்கொரியாவும் மக்களின் நடமாட்டத்தை குறைக்க உத்தரவிட்டது. காரணம்.. அந்தத் தூசி வழி வைரஸ் பரவக் கூடும் என்பதால்.

இப்படியான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில்... மதத்திற்கு முன்னுருமை அளிக்க முடியாது. தொற்று நீக்கல் பொறிமுறைக்குத்தான் முன்னுரிமை அளிக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

 
1-40.jpg
 36 Views

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரியூட்டுவது கண்டனத்திற்குரியது என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்பிடிஐ) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது வரையில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பத்தாயிரத்தை நெருக்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், “முஸ்லீம்களின் முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது  அவர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர்” என முன்னதாக இலங்கை முஸ்லிம்கள்  குற்றம்சுமத்தியிருந்தன.

“ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தாலோ, இல்லை கொரோனாவால் இறந்ததாகச் சந்தேகப்படப்பட்டாலோ, அவரின் சடலத்தைத் தகனம் செய்யப்படும்.” என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கடந்த ஏப்ரல் 12-ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை, “அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்.” என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக,  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாள்வது தொடர்பான உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களில் கூட இத்தகைய எரியூட்டும் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், இலங்கை அரசின் இத்தகைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம்தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காகக் கோரிக்கையைச் செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.” என்று மாநில தலைவர் நெல்லை முபாரக், அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளவர்,” உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/இலங்கையில்-முஸ்லீம்களின/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கோரனோவால்  23 பேர்தான் இறந்தது என்கிறார்கள் முஸ்லீமும்  உள்ளார்களா அந்த 23 பேரில் ?

இல்லை இனிமேல் இறக்கும் முஸ்லீய்மை  நெருப்பில் எரிகிறதுகூடாது என்பதுக்கு அழுக்கிறாங்களா ?

மேலே நிலாந்தன் வேறை குழப்பி விட்டிருக்கார் இந்தமுறை காதுக்குள் போனை வைத்து கொண்டு கட்டுரை எழுதியிருக்கார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

இன்றுவரை 30 பேர் கொரொனாவினால்
இறந்து இருக்கின்ரார்கள், அதில் அரைவாசிக்கு மேற்ப்பட்டோர் முஸ்லிம் இனத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, zuma said:

இன்றுவரை 30 பேர் கொரொனாவினால்
இறந்து இருக்கின்ரார்கள், அதில் அரைவாசிக்கு மேற்ப்பட்டோர் முஸ்லிம் இனத்தவர்.

எங்கே உள்ளது இந்த செய்தி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 

இலங்கையில் கோரனோவால்  23 பேர்தான் இறந்தது என்கிறார்கள் முஸ்லீமும்  உள்ளார்களா அந்த 23 பேரில் ?

இல்லை இனிமேல் இறக்கும் முஸ்லீய்மை  நெருப்பில் எரிகிறதுகூடாது என்பதுக்கு அழுக்கிறாங்களா ?

 

 

ஏப்ரலில் யாழில் செய்தி இணைக்கப்பட்டிருந்தது. பெருமாளும் எழுதியிருந்தீர்கள்!😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஏப்ரலில் யாழில் செய்தி இணைக்கப்பட்டிருந்தது. பெருமாளும் எழுதியிருந்தீர்கள்!

ஆரம்பத்திலே இருந்தே இந்த நோயை பற்றிய தெளிவின்மையை சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு இருந்தார்கள் .

கொரனோ  கட்டுப்பாடுகளை ராணுவத்திடம் கொடுத்து முக்குடைபட்டு கொண்டு இருக்கிறார்கள் 

தனிமைப்படுத்தும் நிலையங்களில் தேவையற்ற பண அறவீடு நோயாளிகளை தப்பி ஓட  தூண்டு  கோலாக இருந்தது .

தனிமைப்படுத்தும் நிலையங்களில்  நோய்  இல்லாதவரும் தேவையற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டனர் .

தனிமைப்படுத்தும் நிலையத்தில் களவாக  கள்ளு  சப்பிளை பண்ணியவர்களையும் பிடித்து  14 நாள் தடுப்புக்குள் போட்டு நோயை பரவபுண்ணியது.

ஊடகங்களில் உண்மையை சொல்லாமல் எங்கிருந்து பரவியது என்ற கதைகளை அவுட்டு விட்டு தேர்தல் நேர திசை திருப்பல் எல்லாம் சேர்ந்து நேர வெடிகுண்டுக்கு ஒப்பாய் இருந்தது அந்த நேரம்களில் இவற்றை சொல்ல வெளிக்கிட்டு இதே யாழில் மூக்குடைபட்டு இருந்தோம்  இனி அந்த பெரியவர் என்ன காரணம் சொல்கிறார் என்று பாப்போம் .வழக்கம்போல் உங்களுக்கு சந்தோசம் என்பார் இல்லை இந்த திரி பக்கமே தலை வைக்கமாட்டார் .

23 minutes ago, zuma said:

கொரனோ இருக்கா என்று பார்பதுக்கு முஸ்லிம்களின் பொடி  இருப்பதாகத்தான் போட்டு உள்ளது . 

முஸ்லீம் சமூகத்துக்குள் தொற்று ஏற்பட்ட வர்கள் மறைந்து வாழ தொடங்கியது இன்னும் நிலைமையை மோசமாக்கி உள்ளது நிகழ்தகவின் ஆரம்ப புள்ளிகளுக்கே  சுமோ அழுகிறார் அனுதாபம் மட்டுமே சொல்ல முடியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

ஆரம்பத்திலே இருந்தே இந்த நோயை பற்றிய தெளிவின்மையை சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு இருந்தார்கள் .

இப்ப மட்டும் என்ன வாழுதாம் மகாவம்சத்தில் தொற்று நோய்கள் பரவிய காலத்தில் புத்தர் மந்திரித்த  தண்ணி யை புத்தர் இலங்கைதீவில் பறந்து பறந்து தெளித்து தொற்று நோயை அடக்கினாராம் என்று கிடக்கு இப்ப இவங்கள் கெலியில்  பறந்து  மந்திரதண்ணியை தெளிக்கினம் சிலவேளை வேணுமெண்டு முஸ்லிலிம்கள் இருக்கும் இடத்துக்கு மேல் தெளிக்கவில்லையாக்கும் 😁 சுமோ உங்கடை அரசியவாதிகளை விட்டு  நியாயம் கேளுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

இந்த அறிவாளி பற்றி என்ன நினைக்கிறீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

இந்த அறிவாளி பற்றி என்ன நினைக்கிறீர்கள்..

அங்குள்ள அரசியல்வாதிகள் களவாக கொரனோ  ஊசியை  சைனாவிடம் வாங்கி போட்டு விட்டு மாஸ்க் கூட கழட்டி வீசி விட்டு திரிகினம் என்று எதிர்க்கட்சி சொல்லி அழுவுது டக்கி  சொல்வதை பார்த்தால் உண்மைபோல்த்தான் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அங்குள்ள அரசியல்வாதிகள் களவாக கொரனோ  ஊசியை  சைனாவிடம் வாங்கி போட்டு விட்டு மாஸ்க் கூட கழட்டி வீசி விட்டு திரிகினம் என்று எதிர்க்கட்சி சொல்லி அழுவுது டக்கி  சொல்வதை பார்த்தால் உண்மைபோல்த்தான் இருக்கு .

சீனாக்காரனுக்கே தன்னுடைய ஊசி சரியா வேலைசெய்யுமோன்னூ  தெரியாது இதுக்குள்ளை கள்ள விலைக்கு வித்திருப்பான்...இவை எலி ..குரங்குகள்தானே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.