Jump to content

பேரறிவாளனின் தற்காலிக விடுப்பு இரண்டு வார காலத்துக்கு நீடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது கவலையளிக்கிறது –  உச்சநீதிமன்றம்

 
1-13.jpg
 26 Views

பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இந்தப் பரிந்துரை (பேரறிவாளனின் கருணை மனு) 2 ஆண்டுகளாக ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது,” என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் வழங்கியது. ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பேரறிவாளன் கருணை மனு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது  “பல்துறை கண்காணிப்பு நிறுவனத்தின் (எம்டிஎம்ஏ)  இறுதி அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எம்டிஎம்ஏ இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது,” என்று  கூறியுள்ளது.

“அவ்வாறு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தால், எம்டிஎம்ஏ குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் தந்து தெளிவுபடுத்தினீர்களா?” எனத் தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை வருகிற 23ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 1991-ல் பேரறிவாளனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

அவர்  20 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/பேரறிவாளன்-கருணை-மனு-ஆளு/

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீதி, என்ன நீதித்துறை.

குற்றமே நிரூபணம் ஆகவில்லை என்றால், வழக்கை தள்ளி ஆளை வெளியே விடாமல், ஆளுனரை இன்னும் பிடிச்சு கொண்டு நிக்குது🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், ரொம்பவும் கவலைப்பட்டு உடம்புக்கு ஏதாவது வந்துவிடப்போகுது, மெல்லமா ஆளும் கட்சிக்கு வலிக்காமல் ஒத்து ஊதவும்..! 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் தண்டனை என்றால் 20 ஆண்டுகள் மட்டுமே என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.இது பற்றி யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7பேர் விடுதலை: ஆளுநருக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் – ராமதாஸ்

597842.jpg
 17 Views

7பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று(03)  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை விட அதிகமாக 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை அதே ஆண்டின் செப்டம்பர் 9ஆம் திகதி நிறைவேற்றிய தமிழக அமைச்சரவை அன்றே ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார். இத்தகைய நிலையில், ஆளுநர் முடிவெடுக்கும் வரை தன்னை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையின்றி தாமதம் செய்து வருவதை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

“ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகுதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்குக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவருடன் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றித்தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுநரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?’ எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

7 தமிழர் விடுதலை பற்றி 2 வாரங்களில் ஆளுநர் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது நியாயமல்ல, அதை ஏற்க முடியாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பாமக என்னென்ன வாதங்களை பொது வெளியில் முன்வைத்து வந்ததோ, அதையேதான் உச்ச நீதிமன்றமும் இப்போது கூறியிருக்கிறது.

இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு விரைந்து உறுதி செய்ய வேண்டும்.

இப்போது உச்ச நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை தொடர்பான விஷயத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

எனவே, உச்ச நீதிமன்றம் கூறியவாறு ஆளுநர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவருக்குத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு இம்மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்”. என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/7பேர்-விடுதலை-ஆளுநருக்கு/

ஏழுபேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் – கனிமொழி, மு.க.ஸ்டாலின்

 
Untitled-1.jpg
 15 Views

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைதாகி சிறையிலுள்ள 7 தமிழர்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் விடுதலை தொடர்பான மனு  இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது.

இது தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ருவிற்றர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனிதநேயமற்ற அதிகார அத்துமீறல். பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாடு வேடிக்கை பார்த்திராது வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/ஏழுபேர்-விடுதலை-தொடர்பா-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்! – கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

 
WhatsApp-Image-2020-11-04-at-9.30.52-AM-
 1 Views

ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழர் பேரியக்கத்தின் செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடாவடியாகக் காலதாமதம் செய்து வருவதை உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது.

பேரறிவாளன் மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் நாகேசுவரராவ், ஏமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 03.11.2020 அன்று இக்கருத்தை வெளியிட்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கும் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தானே நேரடியாக வாழ்நாள் சிறையாளிகளையோ, மரண தண்டனை சிறையாளிகளையோ முன் விடுதலை செய்யலாம் என்றாலும், இப்போது அந்த சிறப்பதிகாரத்தை தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்ட நிலைமைகளையும் எடுத்துக்காட்டி, தமிழ்நாடு அரசு ஆளுநரை வலியுறுத்தலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் எடுத்துக்காட்டப்பட்ட நிலோபர் நிஷா வழக்குத் தீர்ப்பை வழிகாட்டுதலாகக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.

தமிழ்நாடு உள்துறை செயலாளர் (சிறைத்துறை) – எதிர் – நிலோபர் நிஷா வழக்கில், 2020 சனவரி 23 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நேரடியாக பல வாழ்நாள் சிறையாளிகளுக்கு முன்விடுதலை அளித்து ஆணையிட்டது. அதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கிலும் அரசமைப்பு உறுப்பு 142-இன் கீழ் முன்விடுதலை ஆணையிட முடியும் என்றாலும், இந்தக் கட்டத்தில் அவ்வாறு தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் கூறுவதுபோல் இராசீவ்காந்தி கொலை தொடர்பான பன்னாட்டு சதியை விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமை (Multi Discplinary Monitoring Agency – MDMA) அறிக்கைக்குக் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெளிவுபடக் கூறினார்கள்.

ஏனென்றால், இராசீவ் கொலை தொடர்பாக பல நாட்டு அரசுகளின் உயர்மட்ட அளவில் நடந்துள்ள சதியை விசாரிப்பதே பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமையின் பணியாகும். ஏற்கெனவே தண்டிக்கப்பட்டு நீண்டகாலம் சிறையிலிருக்கிற பேரறிவாளன் உள்ளிட்டோர் சிக்கலுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெளிவுபடுத்திவிட்டது.

இந்நிலையில், ஆளுநர் கடந்த இரண்டாண்டுகளாக இந்தக் கோப்பின் மீது முடிவெடுக்காமல் இருப்பது மனநிறைவு அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.

எனவே, தமிழ்நாடு ஆளுநர் புரோகித், 2018 செப்டம்பர் 9ஆம் நாள் தமிழ்நாடு அமைச்சரவை அளித்துள்ள பரிந்துரையை அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளின் அடிப்படையில், ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/தமிழ்நாடு-ஆளுநர்-பன்வாரி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஆளுநர் இந்தியப் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்தார்

 
Banwarilal_Purohit_and_modi-696x348.jpg
 3 Views

தமிழக ஆளுநர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு தில்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.

இன்று காலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தில்லி சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரையில் அவர் தில்லியில் தங்கியிருப்பார். அப்போது குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இன்று தமிழக ஆளுநர், பிரதமர் மோடி அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம், கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மீது நேற்றைய தினம்(03) விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அவர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாகியும் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தியை அளிக்கின்றது என்று கூறியிருந்தது.

ஆளுநர் தில்லியில் தங்கியிருக்கும் சமயம் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/தமிழக-ஆளுநர்-இந்தியப்-பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி கருத்துக் கூறிய இந்தியப் பிரபலங்கள், அரசியல்வாதிகள்

 
1-21.jpg
 40 Views

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைதாகி தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை துரிதப்படுத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தில் இந்திய பிரபலங்கள், அரசியல்வாதிகள்  பலர் அறிக்கைகள் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தனது அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்பட எழுவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.

பின்னர், பல்வேறு சட்டச் சிக்கல்களைத் தாண்டி, இன்றைய அதிமுக ஆட்சி, அந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும். பேரறிவாளனால் தனியே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்து, ஏன் தேவையற்ற காலதாமதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து, மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்க வேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும். அதை மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியது அதைவிடத் தேவையான அவசரக் கடமையாகும்.”  என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கையில்,

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பரில் கூடி பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் மீது இரண்டாண்டு காலமாக முடிவெடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அரசியல் கட்சிகள், அமைப்புகள் எனத் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாணையில் ஆளுநரின் காலதாமதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இருக்கிறது. எனினும், அதனைப் பயன்படுத்த விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்கின்றன என்ற விவரத்தை ஆளுநருக்கு எடுத்துக் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மத்தியப் புலனாய்வுத்துறை, பெருமளவு சதிச் செயல் என்பதால் விசாரணை தொடர்கிறது என்பது போன்ற காரணங்களைத் தெரிவித்து தாமதப்படுத்தும் அலட்சிய மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தமிழர் பேரியக்கச் செயலாளர் கி.வெங்கட்ராமன், பாமக நிறுவர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் 7 தமிழர்கள் விடுதலையை ஆளுநர் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி  வேதாரண்யத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருத்துக் கூறுகையில், “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்துத் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வந்தார். பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் நேற்று இதுபற்றிக் கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றக் கருத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர், அரசு சார்பில் அமைச்சர்களை ஆளுநரிடம் அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 29 ஆண்டுகள் அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்கூட அவர்களை மன்னித்ததுடன் பழிவாங்கும் எண்ணமில்லை என்றும் கூறிவிட்டனர்.

எனவே ஆளுநர் இனியும் அவர்களின் விடுதலையைத் தாமதிக்கக் கூடாது. ஆளுநர் இதை அலட்சியப்படுத்தினால், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம். அதுபோல் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை வருடத்தை நிர்ணயம் செய்து, அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.” என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/ஏழு-தமிழர்கள்-விடுதலையை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரே இனியும் தாமதிக்காமல் ஏழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலை நினைத்தாவது விடுதலை செய்யுங்கள்.

14 hours ago, உடையார் said:

தமிழக ஆளுநர் இந்தியப் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்தார்

இன்னும் எந்தெந்த நடிகர் நடிகைகளை பிஜேபி க்கு உள் வாங்கலாம் என்று பேச சந்தித்திருப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் எந்தெந்த நடிகர் நடிகைகளை பிஜேபி க்கு உள் வாங்கலாம் என்று பேச சந்தித்திருப்பார்களோ?

101% உண்மை தோழர் ..

modi_gauthami1.jpg நீங்களே சந்தித்து கலந்து உரையாடி கொண்டுருந்தா எப்படி ? நானும் இருக்கிறேன் அல்லோ . 👍 என்னையும் இரண்டாம் கட்டமா கலந்து உரையாட அனுப்புங்கள் என்டு கோரிக்கை வைத்திருப்பார் .. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7தமிழர்களின் விடுதலையை அரசாணை மூலம் நிறைவேற்ற ஆலோசனைபி.உதயகுமார்

 
83389536_1066703967007287_38089626910038
 4 Views

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான தீர்மானமும் ஆளுநர் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும். விரைவில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை இது குறித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7பேரும் விடுதலை பெற வேண்டுமென்று மற்றவர்களைப் போலவே நாங்களும் ஆவலாகக் காத்திருக்கிறோம். இட ஒதுக்கீட்டில் முடிவு எடுத்தது போல, எழுவர் விடுதலை குறித்தும் முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்” எனக் கூறினார்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் தாமதம் ஆனதால், உடனடியாக நிறைவேற்ற அரசாணை வெளியிட்டது போல எழுவர் விடுதலையிலும் அரசாணை பிறப்பிக்க திட்டம் உள்ளதா என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

https://www.ilakku.org/7தமிழர்களின்-விடுதலையை-அ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய தலைவர்களுடன் அடுத்தடுத்து தமிழக ஆளுநர்  சந்திப்பு –பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா?

 
1-25-696x392.jpg
 32 Views

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனைக்காலம் முடிந்த பிறகும் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டில் குரல்கள் வலுத்து வருகின்றன.

அத்தோடு ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அமைச்சரை மாநில ஆளுநருக்கு முறைப்படி கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்த பிறகும், அதன் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்துள்ளார்.

இந்த பின்னணியில் பல்வேறு அரசியல் விவகாரங்களும் தனிப்பட்ட காரணங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு அண்மையில் விசாரணை நடத்தியது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராஜ், “ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின் சதி தொடர்பான விவகாரம், இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் உள்ளது. ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பான புலனாய்வில் உறுதியான தகவல் சிபிஐக்கு கிடைக்கவில்லை,.” என்று குறிப்பிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், “மிகப்பெரிய இந்த சதி தொடர்பான புலனாய்வு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது. இருந்தபோதும் பிரிட்டன், தாய்லாந்தில் இருந்து தகவல் வரும் என சிபிஐ காத்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட தண்டனை பெற்ற கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரும் மனுக்கள் மீது மாநில ஆளுநர் அரசியலமைப்பின் 161ஆவது விதியின்கீழ் மன்னிப்பு வழங்க உரிமை உள்ள விவகாரத்தில், தனது அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் நீதிமன்ற தலையீடு இல்லாமல் இந்த வழக்கில் ஏன் ஆளுநர் முடிவெடுப்பது பற்றி அவரிடமே கேட்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் கழித்து வரும் பேரறிவாளன், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னை விடுவிக்குமாறு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கருணை மனு மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பு அணுகியது. இதையடுத்து, அவரது மனு மீது முடிவெடுக்குமாறு ஆளுநரை உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டது.

இதன் பிறகு மீண்டும் இந்த விவகாரம் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம், கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநருக்கு செய்தது.

மேலும் ராஜிவ் கொலை வழக்கில் ஆளுநர் தாமதம் செய்வது தொடர்பான கருத்துகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பதிவு செய்தன. இந்தப் பின்னணியில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.ilakku.org/முக்கிய-தலைவர்களுடன்-அடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7தமிழர்கள் விடுதலையை ஆளுநரே முடிவு எடுக்க வேண்டும் – தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி

 
524ad9a88bfc3343eecbeb3f33df3364fcde7fcb
 10 Views

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் தொடர்பில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போதும் 7பேரும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையில் ஆளுநர் நிலுவையில் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு இருப்பதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

இதேவேளை இன்று (05) முதலமைச்சர் பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தது அதிமுக அரசு, விடுதலை குறித்து அமைச்சரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். 7பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஏழு பேர் விடுதலை குறித்து போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு அக்கறை இருந்தால் கடந்த 2000ஆம் ஆண்டிலேயே முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியிலேயே செய்திருக்க வேண்டும்.

அன்று ஆட்சியில் இருந்த திமுக அமைச்சரவை வைத்த கோரிக்கையில், நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கலாம் என்றும், பிறருக்கு நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை அமுல்ப்படுத்தலாம் என்று கூறினார்கள். இப்போது அரசியலுக்காக ஸ்டாலின் அனைத்தையும் செய்து வருகிறார். அம்மாவின் அரசு விரைவில் அவர்களை விடுதலை செய்யும்.

 

https://www.ilakku.org/7பேர்-விடுதலையை-ஆளுநரே-மு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா? தமிழக அரசியலில் பரபரப்பு

 
6550ce0ace3a272a302aa96961718e9ba1b69798
 1 Views

தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் தமிழக ஆளுநரை மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென கடந்த புதன்கிழமை இந்தியத் தலைநகர் தில்லிக்கு பயணமானார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஜிதேந்திரா சிங், ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தமிழக ஆளுநர் பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கத் தாமதம் செய்வதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களில் குதித்தன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமையால், தமிழக அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்தது. அதன் பின்னர் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் 7தமிழர்களை விடுவிக்கக் கோரி 2018இல் தமிழக அரசு அனுமதிக் கடிதம் அனுப்பியிருந்தும், ஆளுநர் எந்தப் பதிலும் வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதேபோன்று பல பிரச்சினைகளில் ஆளுநரின் செயற்பாட்டால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனாலேயே ஆளுநர் தில்லி விஜயத்தை மேற்கொண்டு, 2 நாட்கள் தங்கி தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகக் கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் வருவதால், மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தமிழக ஆளுநரை மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.ilakku.org/தமிழக-ஆளுநர்-மாற்றப்படுவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் வைரமுத்து டுவிட்டரில் கருத்து

November 6, 2020

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

rajiv-ghand-axccu-300x167.jpg

 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமடைவது ஏன் என கேள்வி வைரமுத்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது
தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது
எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது
இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடையார் என்பது ஆளுநருக்கே தெரியும் என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

vairamuthu-300x169.jpg

 

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு வைத்து இரண்டு வருடங்களாகியுள்ள போதிலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எதனையும் எடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

 

 

https://thinakkural.lk/article/86618

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீடிப்பு – உயர்நீதிமன்றம்

 
88543a19cfdbbf5ba9953ac590395f8da13a2413
 27 Views

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஏற்கனவே 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தது.  மேலும் இரண்டு வாரங்களுக்கு பரோலை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கமைவாக பேரறிவாளன் கடந்த அக்டோபர் 9ஆம் திகதி முதல் பரோலில் வெளிவந்தார். அவரின் பரோல் காலம் வரும் 9ஆம் திகதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீடிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பரோலை நீடிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சரவணன் வாதாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனின் பரோலை, மேலும் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23ஆம் திகதி வரை) நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/பேரறிவாளனுக்கு-மேலும்-2-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: ஆளுநரின் காத்திருப்பு உச்சநீதிமன்ற அவமதிப்புந உச்ச நீதிமன்றம் கடமையென்ன? ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை, தமிழக அரசு முடிவெடுத்து எப்பவோ விடுதலை செய்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு மேல் யாரையும் சிறையில் வைத்திருக்க முடியாது; 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் கொலை வழக்கு: – 7 பேர் விடுதலைக்கு தமிழக காங் எதிர்ப்பு

 

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவர்னருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‛பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல. முன்னாள் பிரதமரை கொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்தோருக்கு பரிந்துபேசுவது தமிழர் பண்பாடாகாது. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என அழைப்பது சரியல்ல. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் எனக்கூறினார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ராஜிவ்-கொலை-வழக்கு-7-பேர்-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் விடுதலை: திமுக- காங்கிரஸ் மோதல்!

 

spacer.png

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரு வருடங்களாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில்...தமிழக அரசே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சட்ட வல்லுநர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (நவம்பர் 7) வெளியிட்டிருக்கும் செய்தியில்,

“ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.

 

எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது”என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதிய கடிதத்தில்,

“ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு- சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவர்களை விடுவிக்க அ.தி.மு.க, அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது.

ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் அவர்களை விடுவிக்கக் கோருவது தமிழ் பண்பாடு அல்ல என்று கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

திமுக கூட்டணிக்குள் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இது தொடர்பாக கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்றாலும் இப்போது இது மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.

 

https://minnambalam.com/politics/2020/11/07/22/rajeev-gandhi-killers-release-congress-oppose-dmk

 

Link to comment
Share on other sites

பேரறிவாளனின் தற்காலிக விடுப்பு இரண்டு வார காலத்துக்கு நீடிப்பு


சிறையில் பலருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாகத் தனது மகனுக்கு சுகாதார ரீதியில் ஆதரவு வழங்கப்படவேண்டும் என்பதால் அவரது விடுப்பை நீடிக்கும்படி பேரறிவாளனின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

Rajiv Gandhi Assassination case convict Perarivalan
பேரறிவாளன்

இவ்விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர், பேரறிவாளனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என அவரது வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக விடுப்பை நவம்பர் 23 வரை நீடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளனர்.

ரஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு 29 வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு அக்டோபர் 9 முதல் வழங்கப்பட்டிருந்த 30 நாள் தற்காலிக விடுப்பை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

தந்தையாரிந் உடல்நிலை காரணமாகவும், திருமணமொன்றுக்குச் சமூகமளிப்பதற்காகவும் பேரறிவாளனுக்கு சென்ற வருடம் விடுப்பு வழங்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவருக்கு மேலும் விடுப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு மறுப்புத் தெரிவித்து வருகிறது. அப்படியிருந்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மர்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அவருக்குத் தற்காலிக விடுப்பை வழங்கியிருந்தார்கள்.

ரஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் இதுவரை இரண்டு ஆயுள் தண்டனைக் காலங்களைச் சிறையில் கழித்துவிட்டாரகள் என்பதால் அவர்களை விடுவிக்கும்படியான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

பேரறிவாளநின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுனருக்கு வழங்கிய பரிந்துரைப்பை அவர் இரண்டு வருடங்களாக இழுத்தடிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் தந்து அதிருப்தியைத் தெரிவித்துள்ள நிலையில் நீதி மன்றம் இத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

https://marumoli.com/பேரறிவாளனின்-தற்காலிக-வ-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை பற்றிப் பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு அல்ல: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

it-is-not-tamil-culture-to-advocate-for-the-release-of-seven-ks-alagiri-criticism  
 

சென்னை

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

 

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.

எனவே, முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்து, இந்தியாவிற்குக் கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/599288-it-is-not-tamil-culture-to-advocate-for-the-release-of-seven-ks-alagiri-criticism-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம் :- திட்டமிட்டு மறுக்கப்படும் எழுவர் விடுதலை, ரஜீவ் காந்தி பிரதமரில்லை கொல்லபடும் போது. இந்திரா காந்தி & காந்தியை கொன்றவர்களை எப்படி பார்கின்றீர்கள். அதிக பட்சம் 14 ஆண்டுகள்,... கொலை வழக்கில் நேரடி தொடர்பில்லை. சட்டத்தின் படி தடுத்து வைக்க உரிமையிருக்கா? 150 பேரின் இறப்பிற்கு காரணமான சஞ்யாதத்தினை விடுதலை செய்யும் போது, இவர்கள் தமிழர்கள் என்பதாலா? 

பிகு: வசை சொற்களில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: - என் மகன் பேரறிவாளனை சிறைமீட்டுத் தாருங்கள் : அற்புதம்மாள் கண்ணீர் கோரிக்கை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் & பி. ரவிச்சந்திரன் இதுவரை பட்ட கஷ்டங்கள் போதும், விரைவில் வெளிவர தமிழ்நாட்டில் போராட்டங்கள் தமிழக மக்கள் எடுப்பார்களா? 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.