Jump to content

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா


Recommended Posts

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா

jaffna-uni-300x175.jpgயாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட திட்டமுன் மொழிவுக்கமைய 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணத்தினால் அடிக்கல் நாட்டபட்டிருந்தது. நிறைவு செய்யப்பட்ட கட்டடத் தொகுதி 2020 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டிருக்கிறது. பேராதனை மற்றும் ருகுண பல்கலைக்கழகங்களில் உள்ளக விளையாட்டரங்குகள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் வேறெந்தப் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு இது வரை அமைக்கப்படவில்லை. சுமார் இருநூற்றி எட்டு மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கின் திறப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக் கிழமை பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்லாமல், தேவைநாடும் சகலரும் இந்த உள்ளக விளையாட்டரங்கைப் பயன்படுத்துவதற்கேற்ற முறையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து, அனுமதி பெற்று இங்குள்ள உள்ளக விளையாட்டு வசதிகளை விளையாட்டுத்துறை சார்ந்தோர் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் இடப்பற்றாக்குறை காரணமாகப் பல அமர்வுகளாக நடாத்தப்படும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவினை இம்முறை ஒரே நாளில் இந்த அரங்கில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

https://thinakkural.lk/article/87112

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வீரர்களுக்கு வரப்பிரசாதமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

இதன் காணொலி கிடைத்தால் யாராவது இணையுங்கள் பார்ப்போம்.

யாழ்  பல்கலைக்கழகம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகவும், சர்வதேசமட்டத்தில் முகம் கொடுக்கும் வகையிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கட்டும்.

ஒரு காலத்தில் யாழ் பல்கலை மாணவர்  சோதிலிங்கம் குறுந்தூர வேக ஓட்டத்தில் முன்னணி வகுத்தார்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எமது மண்ணிற்கு இவ்வாறான விடயங்கள் தான்  வானளாவிய கோபுரங்கள். புலம் பெயர் தமிழரின் ஊர் சங்ககங்கள் இனியாவது தமது உழைப்பை  இப்படியான கோபுரங்களை தத்தமது ஊருக்கு கட்ட செலவிடவேண்டும். 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையின் நவீன உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைப்பு!

November 19, 202000
IMG-20201119-WA0012-960x720.jpg?189db0&1

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு இன்று (19) காலை துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டது.

கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது.

சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டுள்ளது.

பேராதனை மற்றும் ருகுண பல்கலைக்கழகங்களில் உள்ளக விளையாட்டரங்குகள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் வேறெந்தப் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு இது வரை அமைக்கப்படவில்லை.

 

பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைத்தார்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் மனநலத்தை சீராக்க இவை அவசியம். போட்டிகளுக்காக மட்டும் என்று இருக்காமல் சுயமான உடல் நலம் பேணுவதற்காகவும் இந்த அரங்கின் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இதற்குள் உடற்பயிற்சிக் கூடமும் இருக்கிறதா அல்லது அது தனியாகவா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2020 at 16:24, tulpen said:

உண்மையில் எமது மண்ணிற்கு இவ்வாறான விடயங்கள் தான்  வானளாவிய கோபுரங்கள். புலம் பெயர் தமிழரின் ஊர் சங்ககங்கள் இனியாவது தமது உழைப்பை  இப்படியான கோபுரங்களை தத்தமது ஊருக்கு கட்ட செலவிடவேண்டும். 

 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.