Jump to content

அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி கிராம மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி கிராம மக்கள்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ், கருப்பின - தமிழ் பூர்வீகம் உள்ளவர்.

குறிப்பாக இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அந்த கிராமமே இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர் மிகப் பெரிய உச்சத்தை தொட்டது குறித்த பெருமிதம் இங்கே ஒவ்வொருவரிடமும் ததும்பி வழிகிறது.

பெரும்பாலானவர்கள் வீட்டின் வாசலில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலம் வரையப்பட்டிருக்கிறது. இனிப்புகள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கமலாவின் உறவினர் மூலம் நன்கொடை வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி மக்கள்

 

அங்கு இன்று சிறப்பு பூஜைகளும் நடந்தன.

பிபிசி தமிழிடம் பேசிய கோயில் நிர்வாகி எஸ்.வி.ரமணன், ''கமலாவின் அத்தை சரளா கோபாலன் என்பவர் 2014ல் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்தார். கமலாவின் பெயரும் கோயில் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது கமலா இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார்." என்றார். 

கமலா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து துளசேந்திரபுரத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.

அரசியலே எதிர்காலம்

பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளாவிடம் பேசிய துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரானஅருள்மொழி சுதாகர், "எங்கள் வீட்டு பெண் அமெரிக்க துணை அதிபராக ஆவது பெரும் மகிழ்ச்சி தருகிறது," என்கிறார்.

 

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி மக்கள்
 

"அரசியல் தளத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஓர் ஒன்றிய கவுன்சிலராகவே அவ்வளவு இடர்களை சந்திக்கிறேன். எத்தனை சவால்களை சந்தித்து கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். உண்மையில் இது பெண் சமூகத்திற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும். இனி பல பெண்கள் அரசியலை தங்கள் எதிர்காலமாக தேர்ந்தெடுப்பார்கள்," என்று அவர் கூறினார்.

முன்னதாக கமலா ஹாரிஸின் தாய் வழி மாமாவான கோபாலன் பாலகிருஷ்ணன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 

அற்புதமான துணை அதிபராக...

 
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி மக்கள்

 

 

டெல்லியில் வசித்து வரும் இவர் கமலா ஹாரிஸ் வெற்றி குறித்து, " ''அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என நான் எதிர்பார்த்தேன். என் எதிர்பாப்பு நிறைவேறி உள்ளது," என தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க வரலாற்றில் கமலா ஒரு அற்புதமான துணை அதிபராக செயலாற்றுவார் என்றும் அவர் கூறி இருந்தார்.

துளசேந்திரபுரத்தில் மக்கள் ஒன்றுகூடி தேர்தலுக்கு முன்பாக கமலா வெற்றி பெற வழிபாடு நடத்தினார்கள். இப்போது அவரது வெற்றி உறுதியான நிலையில், கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூஜைகள் நடக்கின்றன.

 

https://www.bbc.com/tamil/india-54862415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா காரிஸ் தமிழின வம்சாவழியாகவே இருக்கட்டும் வாழ்த்துவோம் ...முழு மதுடன் ஏற்றுக்கொள்வோம்..

இவ்வேளையில் ஒரு சின்ன உதாரணம்...என்னுடைய முகநூல் நண்பி ஒருவர் ( கொழும்பில் பிறந்து வளர்ந்துபெரிய பெண்கள் பாடசாலையில் படித்தவர்...சிங்கள இன பெண்கள்  நட்பு வட்டம் அதிகம்)

கமல காரிஸ்  வம்சாழி பற்றியும் ...அவரின் வெற்றி பற்றியும் ஆங்கில செய்தியொன்றை பகிர்ந்து இருந்தார்....அதனைப்பார்த்த சிங்கள இன சினேகிதி...அவர் தமிழ் இல்லை ..கறுவல் தான் என்பதை அடித்து சொல்கிறார்...இதில் இருந்து அந்த இனத்தின் மனவோட்டத்தை  படம் பிடிக்கக் கூடியதாக இருந்தது....எனவே பிடனே சொல்லிட்டார்... நம்ம தமிழக உறவுகளும் சொந்தமென்று கொண்டாடுகையில் ...எமது உறவென்றே ஏற்போம்....எதிரி கை வைக்கமுன் யோசிக்கட்டும்....வாழ்க கமலா காரிஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவாட பெயர் கமலாதேவி ஹரிஸ்.

இவாட அம்மா தமிழ்நாட்டு தமிழ்.

அப்பா..ஜமேக்கா கறுவல்.

அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவில் படிக்கும் போது சந்தித்து.. அமெரிக்காவில் பிறந்த பிள்ளை தான் கமலாதேவி.

இவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாது. ஆனால்.. தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட தாய்க்குப் பிறந்தவர் என்பது மட்டுமே நிதர்சன உண்மை.

இவரை அமெரிக்க உப சனாதிபதி என்று தமிழர்கள் தூக்கிக் கொண்டாட என்ன இருக்கோ தெரியவில்லை. இப்படித்தான்.. சிறுபான்மையின... ஒபாமா தமிழருக்கு உதவுவார் என்று சொல்லி தூக்கிக் கொண்டாடிச்சினம். கடைசியில் முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் ஒரு இன அழிப்பை சர்வதேச நீதிக்கு கூட இடமில்லாமல் செய்து முடித்த பெருமை ஒபாமாவையும் சாரும். 

இவரும் சொந்தப் பெயரை சுருக்கி.. கமலா என்றுகிட்டு திரிகிறார். இதுங்க எல்லாம்... தமிழருக்கு உதவுங்களா...??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாட்ஸ்அப் தம்பி எனக்கு அனுப்பிய படம். 😁

Image-2020.jpg

இப்பவே தொடங்கீட்டாங்கள்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

இவரை அமெரிக்க உப சனாதிபதி என்று தமிழர்கள் தூக்கிக் கொண்டாட என்ன இருக்கோ தெரியவில்லை.

💯

கமலா கரிஸ் பற்றி எனக்கு வட்ஸ்அப்பில் நண்பர்கள் இப்படி தகவல் அனுப்பியுள்ளார்கள்
Kamala Harris is not an Indian.
Her grandfather Mr P. V Gopalan is from Manipay, Jaffna and Gopalan's wife Mrs Rajam Gopalan is from Batticaloa. Sri Lanka.
Mr P.V Gopalan was a civil servant under the British govt. He moved to South India and her daughter Shymala Gopalan was born in South India......
.......
Kamala was brought up in the Hindu tradition; She married a Jewish man. Now she is a "nominal christian".

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

இவாட பெயர் கமலாதேவி ஹரிஸ்.

இவாட அம்மா தமிழ்நாட்டு தமிழ்.

அப்பா..ஜமேக்கா கறுவல்.

அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவில் படிக்கும் போது சந்தித்து.. அமெரிக்காவில் பிறந்த பிள்ளை தான் கமலாதேவி.

இவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாது. ஆனால்.. தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட தாய்க்குப் பிறந்தவர் என்பது மட்டுமே நிதர்சன உண்மை.

இவரை அமெரிக்க உப சனாதிபதி என்று தமிழர்கள் தூக்கிக் கொண்டாட என்ன இருக்கோ தெரியவில்லை. இப்படித்தான்.. சிறுபான்மையின... ஒபாமா தமிழருக்கு உதவுவார் என்று சொல்லி தூக்கிக் கொண்டாடிச்சினம். கடைசியில் முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் ஒரு இன அழிப்பை சர்வதேச நீதிக்கு கூட இடமில்லாமல் செய்து முடித்த பெருமை ஒபாமாவையும் சாரும். 

இவரும் சொந்தப் பெயரை சுருக்கி.. கமலா என்றுகிட்டு திரிகிறார். இதுங்க எல்லாம்... தமிழருக்கு உதவுங்களா...??!

எங்களுக்கு ஒன்றும் ஆகாது உண்மை...ஆனால் தமிழ் என்றவுடன் ..நம்ம நாட்டு சீனாவும்...மூனாவும் ஏற்க மறுக்கினாம்...இதற்காக்வெனும்... நம்ம இனம் என்பதை ஏற்றுக்கணும்..அவ்வளவுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸ் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார் - சென்னை ‘சித்தி’ உற்சாகம்

கமலா ஹாரிஸ் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார் - சென்னை ‘சித்தி’ உற்சாகம்

 

‘கமலா ஹாரிஸ் எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார்’ என்று சென்னையில் உள்ள அவருடைய சித்தி டாக்டர் சரளா கோபாலன் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கூறினார்.

 
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு பெற்றுள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலன் என்பவருடைய மகள் வழி பேத்தி ஆவார்.

கமலா ஹாரிசின் தாயார் டாக்டர் சியாமளா கோபாலனின் தங்கையும், கமலா ஹாரிசின் சித்தியுமான டாக்டர் சரளா கோபாலன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளார்.

கமலா ஹாரிஸ் குறித்து டாக்டர் சரளா கோபாலன் கூறியதாவது:-

அமெரிக்கா நாட்டு துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்ததும் எங்களுக்கு மெய்சிலிர்த்தது. நாங்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், உற்சாகமாக இருக்கிறோம். இதனை ஒரு வரலாற்று வெற்றியாகத்தான் பார்க்கிறோம். அவர் எப்படியும் துணை ஜனாதிபதியாக விடுவார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் முன்பே இருந்தது. இதுவரை கமலாவிடம் பேசவில்லை.

இன்று கமலா வாழ்வில் இந்த உயர்வான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை பார்த்து ஆனந்தப்பட அவருடைய தாயாரும், என்னுடைய சகோதரியுமான டாக்டர் சியாமளா கோபாலன் இல்லாமல் போய்விட்டார். அவர் இன்றைக்கு இருந்து இருந்தால் ஆனந்த கண்ணீர் விட்டிருப்பார். இந்த நல்ல நேரத்தில் அவர் எங்களுடன் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக உள்ளது. என்னுடைய அப்பாவும், அம்மாவும் அவர்களுடைய பேத்தி கமலா ஹாரிசை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

கமலா ஹாரிஸ் இப்போதும் உறவுகளை மறக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை தொடர்பு கொண்டு ‘சித்தி’ என்று அழைத்து நலம் விசாரிப்பதில் தவறுவதில்லை. வருகிற ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்கும் விழாவில் பார்வையாளர்களாக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களையும், ஆசியையும் வழங்குவோம். இதற்காக விரைவில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கிறோம்.

எப்படியும் ஒரு நாள் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கமலா ஹாரிசின் தாய்மாமா கோபாலன் பாலசந்திரன், டெல்லியில் வசித்து வருகிறார்.

அவர் கமலா ஹாரிஸ் பற்றி கூறியதாவது:-

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை நாங்கள் பார்க்க விரும்பினோம். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்து நேற்று (நேற்று முன்தினம்) நான் கமலாவுடன் தொலைபேசியில் பேசினேன். நிச்சயம் அவர் வெல்வார் என்று சொன்னேன்.

கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி ஆகி இருப்பதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். அவர் ஒரு போராளி ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/09045429/2050275/Kamala-Harris-first-female-President-of-the-United.vpf

Link to comment
Share on other sites

இந்த வெற்றி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மாத்திரமில்லை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விடயம – கமலா ஹாரிசின் வெற்றியை கொண்டாடுகின்றது தமிழக கிராமம்

 

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலாஹாரிஸ் தெரிவாகியுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீககிராமத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்..

HARRISANCESTRALPLACE-300x199.jpg
தமிழ்நாட்டின் திருவாவூரின் துளசேந்திரபுரத்தின் பெண்கள் கமலாஹாரிசினை வாழ்த்துவதற்கா விசேட கோலமொன்றை உருவாக்கியுள்ளனர்.
எங்கள் கிராமத்தின் கமலா ஹாரிசிற்கு வாழ்த்துக்கள் என்ற செய்தியை அந்த கோலத்தில் காணப்படுகின்றது.

hamala-vill1-300x200.jpg
வணக்கம் அமெரிக்கா எனவும் துளசேந்திரபுரத்தின் பெண்கள் தங்கள் கோலத்தில் தெரிவித்துள்ளனர்.

2.56462278-300x187.jpg
இதுதவிர சுவரொட்டிகளை ஒட்டியும் இனிப்புகளை வழங்கியும் துளசேந்திரபுரம் கமலாஹாரிசின் வெற்றியை கொண்டாடியுள்ளது.

kamala_harris_-300x192.jpg
எங்கள் கிராமத்தில் தனது வேர்களினை கொண்டுள்ள பெண் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் அதனை கொண்டாடுகின்றோம் என அந்த கிராமத்தினை சேர்ந்த மலர்வேந்தன் என்பவர் தெரிவித்துள்ளார்.

kamala-harris-village-1-300x169.jpg
இந்த வெற்றி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மாத்திரமில்லை உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயதுறை அமைச்சர் காமராஜ் இந்த கிராமத்திற்கு சென்று ஆலயவழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.

Kamala_Harris_Ancestral_village_celebrat

இந்த சிறிய கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இது மிகவும் பெருமைக்குரிய தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நாட்களில் கமலா ஹாரிசின் வெற்றிக்காக துளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/87245

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.