Jump to content

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!  | Athavan News

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

உள்நாட்டு புலனாய்வு அமைப்பு ‘இந்த மசூதிகளுக்கு வருகை தாக்குதல் நடத்தியவரின் தீவிரவாத எண்ணங்களை அதிகரித்ததாக எங்களிடம் கூறியது. மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.

ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் அறிக்கையில், ‘மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு’ பற்றிய விதிகளையும், இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். தாக்குதலுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ள 16பேரில் 6பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ஆஸ்திரியா-பயங்கரவாத-தாக-2/

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!

அப்பிடியே ஜேர்மனியிலும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இதே போல் லண்டனிலும் செய்தால் அடங்குவினம் .

அப்ப..  முஸ்லீம்  சகோதரர்களுக்கு... 
கொஞ்சம்  உசுப்பு, ஏத்தி விட வேண்டியதுதான்.
பக்கெண்டு... பத்து இடத்திலை, வைச்சுட்டு போயிடுவாங்கள்... பக்கிரிகள்.  

பிற்குறிப்பு:  பெருமாள்... இங்கிலாந்து நீதிமன்றம் மென்மையானது.
அது, குற்றவாளியை...  கைது செய்த, காவல் துறையினர் தான்.. குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.
அது மட்டும், குற்றவாளியின் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டே இருப்பார்.

ஆனால்... ஜேர்மன்  மொழி பேசும் நாடுகளான...
ஜேர்மனி, ஒஸ்ரியா, சுவிஸ்.. போன்ற நாடுகளில், 
காவல் துறையினர்... சந்தேகத்தின் பேரில், ஒருவரை கைது செய்தால்...
அந்தக் குற்றவாளி,  தான்...  நான், சுற்றவாளி என்பதனை நிரூபிக்க வேண்டும்.

நான் அறிந்தவரையில்,  இது... நல்ல நடைமுறை என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

பெருமாள்... இங்கிலாந்து நீதிமன்றம் மென்மையானது.
அது, குற்றவாளியை...  கைது செய்த, காவல் துறையினர் தான்.. குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.
அது மட்டும், குற்றவாளியின் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டே இருப்பார்.

நீதிமன்றம் மென்மையானது  ஆனால் எந்த பிரிவு பாதுகாவலர்கள் குறிப்பிட்ட வழக்கை  கையாளுகினம் என்பதை பொறுத்து தண்டனைகள் மாறுபடும் வெளி உலகிற்கு தெரியாமல் சகல அட்டுழியமும் நடக்கும் மீடியா முந்திரிக்கொட்டை போல் மூக்கை நீட்டினாள் சத்தமே இல்லாமல் உள்ளூர் போலீஸிடம் விசாரணையை தள்ளி விட்டு விடுவார்கள் . அவர்களைப்போல்  பாவப்பட்ட ஜென்மங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க மாட்டீர்கள் ஒரு சாதரண சைக்கிள் கள்ளனை  பிடித்தால் 40 பக்கத்துக்கு மேல் அவரின் உடல்நிலை தொடங்கி முழுவதும் எழுதி அவரின் கையெழுத்துடன் வேறு இருக்கனும் அதன் பின் கோர்ட்டுக்கு அலைச்சல் இவ்வளவும் முடிய யூரிகள் எனப்படும்  தீர்ப்பாயம் 18 மணி நேரம் குற்றவாளிக்கு ரோடு கூட்டும் வேலை  மட்டுமே தண்டனை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

மேலதிக...  நடைமுறை, விபரணங்களை தந்தமைக்கு... நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2020 at 10:44, பெருமாள் said:

நீதிமன்றம் மென்மையானது  ஆனால் எந்த பிரிவு பாதுகாவலர்கள் குறிப்பிட்ட வழக்கை  கையாளுகினம் என்பதை பொறுத்து தண்டனைகள் மாறுபடும் வெளி உலகிற்கு தெரியாமல் சகல அட்டுழியமும் நடக்கும் மீடியா முந்திரிக்கொட்டை போல் மூக்கை நீட்டினாள் சத்தமே இல்லாமல் உள்ளூர் போலீஸிடம் விசாரணையை தள்ளி விட்டு விடுவார்கள் . அவர்களைப்போல்  பாவப்பட்ட ஜென்மங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க மாட்டீர்கள் ஒரு சாதரண சைக்கிள் கள்ளனை  பிடித்தால் 40 பக்கத்துக்கு மேல் அவரின் உடல்நிலை தொடங்கி முழுவதும் எழுதி அவரின் கையெழுத்துடன் வேறு இருக்கனும் அதன் பின் கோர்ட்டுக்கு அலைச்சல் இவ்வளவும் முடிய யூரிகள் எனப்படும்  தீர்ப்பாயம் 18 மணி நேரம் குற்றவாளிக்கு ரோடு கூட்டும் வேலை  மட்டுமே தண்டனை .

இந்திய முறையில் என்கவுண்டர் பரவாயில்லை போல.

Link to comment
Share on other sites

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

திரிக்கு சம்பந்தமில்லமால் உங்கடை  கருத்து நீங்க முஸ்லீம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

எங்கேயோ இடிக்குதே .... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

ஒரு முஸ்லீம் பள்ளிவாசலால் மற்றய மதத்தவருக்கு  சோற்று பருக்கையில் ஒன்றை கூட கொடுப்பதில்லை நீங்கள்  மேலே குறிப்பிடும் கோவில்களில் உங்கள் தொழுகை உடுப்பிடன்  பசிக்குது என்று உணவு வாங்கி சாப்பிடலாம் அவர்களும் தருவார்கள் வழிபாடு நடக்கும் நேரம்களில் நீங்கள்  விரும்பினால் கூட நேரில் போய்  பார்க்கலாம் நீங்கள் வழிபடும்போது மற்றவர்களை அனுமதிப்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

ஈழத் தமிழர்கள்.... போன இடங்களில், வெள்ளைக்காரனை கத்தியால் குத்தி கொலை செய்தும், பொது இடங்களில் குண்டு வைத்து கொண்டா திரிகிறார்கள்?

உங்களுக்கு... எதனை, எதனுடன் ஒப்பிடக் கூட தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karikaalanivan said:

கோயில்கள்  என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளை கும்பலுக்கு கொட்டிக்கொடுப்பதற்கு பதில் போரினால் பாதிக்கப்பட்டு வாடும் சொந்தங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ. வாடும் வயிறுகள் நிச்சயம் வாழ்த்தும் 

ம.. முதல்ல உங்க  பெயரை மாத்துங்க பிறகு அல்லல் ஓயாவில போய் சேருங்க 

Link to comment
Share on other sites

பெரும்பாலான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ அற்ற பதர்கள் என்பதை மேலே உள்ள பதில்கள் தெளிவாக காட்டுகின்றது. ஒரு சரியான விமர்சனத்தில் உள்ள நியாயத்தை கூட விளங்கிக்கொண்டு வாதிக்க தெரியாத மக்கள் கூட்டம்.

Link to comment
Share on other sites

ஒன்று நிச்சயம்.. இலங்கை தமிழர்கள் மனம் மகிழும் வண்ணம் இனிக்க இனிக்க பேசினால் உங்களை எல்லாம் மிக எளிதாக ஏமாற்றலாம். ஏற்கனவே சர்க்கரை நோயினால் அவதிப்படும் சமூகத்துக்கு மேலும் இனிப்பை கொடுப்பது நஞ்சுக்கு சமம்!உங்களுக்கு தேவை உண்மை எனும் கசப்பு மருந்து. 

Link to comment
Share on other sites

நான் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்தில் இருக்கும் சீழ்பிடித்த விடயங்களையும் விமரிசனம் செய்யத்தான் செய்வேன். சுயவிமர்சனமும், சுய மதிப்பீடும் செய்ய தவறும்  எந்த சமூகமும் சீழ்பிடித்து அழுகும். சுய விமர்சனமோ, மதிப்பீடு செய்வதே பாவம் என்று நினைக்கும் முஸ்லீம் மக்களை போலத்தான் இலங்கை தமிழ் சமூகமும் இருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, karikaalanivan said:

பெரும்பாலான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ அற்ற பதர்கள் என்பதை மேலே உள்ள பதில்கள் தெளிவாக காட்டுகின்றது. ஒரு சரியான விமர்சனத்தில் உள்ள நியாயத்தை கூட விளங்கிக்கொண்டு வாதிக்க தெரியாத மக்கள் கூட்டம்.

பதருக்கு என்ன அர்த்தம்; 

உங்கள் சிந்தனைகளின் வீச்சு, நன்றாக இருக்கு, பாவிக்க வேண்டிய இடத்தில் பாவியுங்கள், வீணாக போய்விடக்கூடாதல்லவா; 

பழைய கள்ளொன்று புதிய உருவில்

Link to comment
Share on other sites

https://agarathi.com/word/பதர்

நீங்கள் சொல்வதும் சரிதான் அறிவார்ந்த விடயங்களை விளங்கிக்கொண்டு விவாதிப்பதற்கும் தகுதி கொண்டோரிடம்தான் விவாதிக்க வேண்டும்.. மற்றபடி பழைய கள்ளுக்குத்தான் வீரியம் அதிகம் என்று அறியாதவரா நீங்கள் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

பதருக்கு என்ன அர்த்தம்; 

உங்கள் சிந்தனைகளின் வீச்சு, நன்றாக இருக்கு, பாவிக்க வேண்டிய இடத்தில் பாவியுங்கள், வீணாக போய்விடக்கூடாதல்லவா; 

பழைய கள்ளொன்று புதிய உருவில்

உடையார்... அவர், யாழ். களத்தில்  இணைந்த அடுத்த நாளே...
மட்டுறுத்தினர் பார்வையில், வைத்து  இருக்கப் பட்டு... 
இன்றுதான்...  "ரிலீஸ்" ஆகி  விடுவிக்கப் பட்டு வந்துள்ளார். 
அவரிடம்... நல்ல கருத்துக்களை எதிர்பார்ப்பது, வேஸ்ட்டு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, karikaalanivan said:

அப்படியே இலங்கை தமிழர்கள் அகதியாக சென்ற நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில்கள் என்ற பெயரில் திறந்து வைத்திருக்கும் கொள்ளை கூடங்களான முருகன், பிள்ளையார், சிவா, விஷ்ணு இன்ன பிற வசூல் மையங்களையும் மூடினாள் நல்லது. 

வணக்கம் வாங்கோ. முருகன் சிவனை விமர்சனம் செய்யலாம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. போட்டு தாக்குங்கோ. 

Link to comment
Share on other sites

17 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்... அவர், யாழ். களத்தில்  இணைந்த அடுத்த நாளே...
மட்டுறுத்தினர் பார்வையில், வைத்து  இருக்கப் பட்டு... 
இன்றுதான்...  "ரிலீஸ்" ஆகி  விடுவிக்கப் பட்டு வந்துள்ளார். 
அவரிடம்... நல்ல கருத்துக்களை எதிர்பார்ப்பது, வேஸ்ட்டு.  :grin:

அய்யகோ..  ஐ நா சபை பாதுகாப்பு மன்றத்திலிருந்து என்னை விலத்தி வெச்சுட்டாங்கள் இண்டைக்குத்தான் இணைத்துக்கொண்டார்கள்.

5 minutes ago, விசுகு said:

வணக்கம் வாங்கோ. முருகன் சிவனை விமர்சனம் செய்யலாம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. போட்டு தாக்குங்கோ. 

முருகனையோ, சிவனையோ, அல்லாவையோ நான் விமர்சனம் செய்யவும் இல்லை போட்டுத்தாக்கவும் இல்லை மக்களின் முட்டாள்தனத்தைத்தான் சுட்டிக்காட்டினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியன்னாவில் 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதல்; மக்கள் மத்தியில் அச்சம் -  Canadamirror

வியன்னாவில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் 60 இடங்களில் சோதனை!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், பல்வேறு அமைப்பு நிறுவனங்களில் பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலேயே நேற்று (திங்கட்கிழமை) சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சோதனைக்கும், வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் அலுவலகங்கள், குடியிருப்புகள் என 60 இடங்களில் சோதனை நடந்தது.

33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பண மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிh என்ற சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம். இவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார்.

http://athavannews.com/வியன்னாவில்-பயங்கரவாத-இய/

Link to comment
Share on other sites

ஒரு மனிதப் பிறவிக்கு 20வயதில் உலக இன்பங்களை அனுபவிக்கும் உணர்வுகளை ஊட்டி வருகிறது இயற்கை. அந்த இயற்கையை மறுத்துப் பயங்கர உணர்வுகளை 20வயதிலும் ஊட்டி வளர்க்கும் செயல்பாடுகளைச் செய்கின்றதோ இசுலாமிய மதம் என எண்ணத் தோன்றுகிறது.🤔 

Link to comment
Share on other sites

43 minutes ago, Paanch said:

ஒரு மனிதப் பிறவிக்கு 20வயதில் உலக இன்பங்களை அனுபவிக்கும் உணர்வுகளை ஊட்டி வருகிறது இயற்கை. அந்த இயற்கையை மறுத்துப் பயங்கர உணர்வுகளை 20வயதிலும் ஊட்டி வளர்க்கும் செயல்பாடுகளைச் செய்கின்றதோ இசுலாமிய மதம் என எண்ணத் தோன்றுகிறது.🤔 

இதே கருத்துதான் எனக்கும் பதின் வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்தில் களத்தில் தம் இன்னுயிர் ஈந்த தமிழ் போராளிகளுக்கும்        அவர்களின் சாவை சாக்காட்டி  வெளிநாடுகளில் குளிர்காயும் அற்ப பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.