Jump to content

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; 90 வீதம் பாதுகாப்பான செயல்திறன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; 90 வீதம் பாதுகாப்பான செயல்திறன்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%

அமெரிக்காவின் பைசர் மருந்தாக்க நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தபடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸை தடுக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேம்படுத்தப்படவுள்ள இந்தத் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்கப்படவுள்ளதாக ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம் என இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 12-க்கும் மேலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் உள்ளபோதும் சிறப்பான செயல்திறளை வெளிப்படுத்திய முதல் தடுப்பு மருந்து இதுதான்.

வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்ற முழு பரிசோதனை முறையை இது பயன்படுத்துகிறது.

மூன்று வாரங்களில் இரண்டு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ள நேரிடும். அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டாம் முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு 90 சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது தெரியவந்தது

இந்த வருட முடிவிற்குள் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை விநியோகிக்க முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் சொட்டு; மருந்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மருந்தைச் சேமித்து வைப்பதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஆம் இந்த மருந்தை மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்து குறித்து கருத்து வெளியிட்ட பைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லாசர்வதேச சுகாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர உலக மக்களுக்கு உதவும் ஒரு முக்கிய பாதையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் என பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான உகர் சஹின் கருத்து வெளியிட்டுள்ளார்;

தற்போது வழங்கப்பட்டுள்ள தரவுகள் இறுதியான தரவுகள் அல்ல. இந்த தரவுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் செயல்பாடு குறித்த விளக்கம் முழு முடிவுகளும் ஆராயப்பட்ட பிறகு மாற்றம் அடையலாம்.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள், கண்காணிப்பாளர்களிடம் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு செல்வதற்கான போதிய பாதுகாப்பு தகவல்களை நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெற்றிருக்கும்.

இருப்பினும் இந்த நிறுவனங்களின் அறிவிப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. “இந்த செய்தி என்னை மனதார சந்தோசமடையச் செய்தது,” என்கிறார் ஒக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஹார்பி கூறியுள்ளார்.

இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மருந்து தயாரானதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என பிரிட்டனின் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

https://www.meenagam.com/உலக-மக்களுக்கு-மகிழ்ச்சி/

 

 

 

Link to comment
Share on other sites

எப்போது கிடைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து?

கொரோனா வைரசிற்கான முதலாவது தடுப்பு மருந்து  90வீதம்பயனளிக்ககூடியது என்பது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது .
முதலாவது தடுப்பு மருந்தினை உருவாக்கிய  பிபைஜர் பயோன்டெக் நிறுவனங்கள் இதனை விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானத்திற்கான பெரும் வெற்றி என  தெரிவித்துள்ளன.

pfizer-300x164.jpg
ஆறு நாடுகளை சேர்ந்த 435000 பேரிடம்  இந்த மருந்தினை பரிசோதனை செய்தததில் என தெரிவித்துள்ள நிறுவனம் இந்த மருந்து குறித்து எந்த கரிசனை வெளியாகவில்லை எனவும்  தெரிவித்துள்ளன.

இந்த மிக முக்கியமான தகவலை தொடர்ந்து  எப்போது யாருக்கு இந்த மருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரமே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிற்கே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்ககூடும்.
covid-vaccine-300x169.jpg
பிபைஜர் பயோன்டெக் நிறுவனங்கள் மருந்துகளை அவசரமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் நவம்பரில் இடம்பெறும் அதற்காக போதுமான தரவுகள் தயாரானவுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளன.
இந்த மருந்துகளிற்காக அனுமதி வழங்கப்படும் வரை உலக நாடுகள் இந்த மருந்தினை பயன்படுத்த முடியாது.
இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்தினையும் அடுத்த வருட  இறுதிக்குள் 1.3 பில்லியனையும் தயாரிக்க முடியும் என இரு நிறுவனங்களும்  நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டுடோஸ் மருந்துகள் தேவை.
 
யாருக்கு கிடைக்கும்
vaccinearm-300x169.jpg
அனைவருக்கும் நேரடியாக இந்த மருந்துகள் கிடைக்கப்போவதில்லை ஒவ்வொரு நாடும் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என தீhமானிக்கவுள்ளன.
மருத்துவமனை பணியாளர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம் , அவர்கள் மிகவும் பலவீனமானவர்களுடன் பணியாற்றுவதே இதற்கு காரணம்.கொரோனா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுடன்  பணியாற்றுபவர்களுக்கும் இந்த மருந்து கிடைக்கலாம்.
பிரித்தானியாவில் முதியவர்களுக்கும் அவர்களுடன் முதியோர் இல்லங்களில் பணியாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம்.

அமெரிக்கா – ஜேர்மனி கூட்டு முயற்சியில் 90 வீதம் பலனளிக்கும் வைரஸ் தடுப்பூசி

  • கார்த்திகேசு குமாரதாஸன்

தொண்ணூறு வீதம் பலனளிக்கக் கூடிய நம்பிக்கையான வைரஸ் தடுப்பு மருந்து ஒன்று தயாராகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

Pfizer-.jpgஅமெரிக்காவின் Pfizer மற்றும் ஜெர்மனியின் BioNTech ஆகிய இரண்டு முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே உலகெங்கும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை இன்று வெளியிட்டுள்ளன.

“அறிவியல் மற்றும் மனிதகுல வரலாற்றில் இது ஒரு முக்கிய நாள்” என்று Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இரண்டும் இன்றைய நாளைக் குறிப்பிட்டுள்ளன.

உலகெங்கும் இதுவரை பத்து லட்சம் உயிர்களைப் பலிகொண்ட “கோவிட் 19” என்னும் கொடிய வைரஸுக்கு நம்பிக்கையான மருந்தொன்று கண்டுபிடிக்கப்படிருப்பதான இன்றைய செய்தியை பதவிவிலகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலில் தெரிவான புதிய அதிபர் ஜோ பைடெனும் வரவேற்றுள்ளனர். செய்தி வெளியான கையோடு உலகெங்கும் பங்குச் சந்தைகள் திடீரென உயர்ச்சி கண்டுள்ளன.

புதிய தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் மொத்தம் 43 ஆயிரத்து 500 நோயாளிகளில் மூன்று கட்டங்களாகப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான எத்தகைய விளைவுகளும் இன்றி தொண்ணூறு வீதம் அது பலனளிப்பது அந்தப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஜெந்தீனா, பிறேசில், தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் பரீட்சார்த்தமாக தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டோர் 90 வீதம் குணமடைந்து உடல் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இந்தத் தடுப்பூசியை மூன்று வார இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு வலுவுக்கு உடலைப் பயிற்றுவிக்கும் வகையில்( train the immune system)வைரஸின் மரபணு மூலங்களின் ஒரு பகுதியை(virus’s genetic code) உடலினுள் செலுத்துதல் என்ற அடிப்படையைக் கொண்டதே இந்தத் தடுப்பூசி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸஸுக்கான தடுப்பு மருந்துகளை மனிதர்களில் பரிசோதிக்கும் மூன்றாவது சோதனைகளை உலகெங்கும் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மேற்கொண்டுவருகின்றன.

ஒரு மருந்தை பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்னரான Phase 3 எனப்படும் முக்கிய மூன்றாவது கட்டப் மனிதப் பரிசோதனையின் முடிவுகளையே Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. புதிய மருந்தை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிக்கு இனி அவை விண்ணப்பிக்க முடியும்.

வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகத் தாக்கிவருவதால் புதிய தடுப்பூசிக்கு மிக விரைவாக அனுமதியைப்பெற்று இந்த ஆண்டின் இறுதிக்குள் அதனைப் பாவனைக்கு விடும் பணிகளைத் தொடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே 200 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முன் பதிவு செய்துள்ளன. உலக நாடுகள் பலவும் இதே போன்று மில்லியன் கணக்கான தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே ஓடர்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கின்றன.

இந்த நிலையில் புதிய தடுப்பூசி வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.ஆயினும் தடுப்பூசியின் பக்க விளைவுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு நாட்கள் செல்லலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி வந்துவிட்டது என்ற தகவல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுயபாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மக்கள் தட்டிக்கழித்து மீறி நடப்பதற்கு வாய்ப்பளித்தால் அதன் விளைவுகள் பேராபத்தாகிவிடும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன

https://thinakkural.lk/article/87707

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.