Jump to content

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- ஞானசார தேரர்


Recommended Posts

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- ஞானசார தேரர்

 

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பாக அரசாங்கம், தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா- புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு, இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாம் கடந்த காலங்களில் பல முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தோம்.  எனினும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இதனை அந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

எம்மீது தான் குற்றஞ்சாட்டினார்கள். முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க நாம் முயற்சிப்பதாகக் கூறினார்கள். இன்று அண்ணன் செய்த தவறையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்ளார். உடல்களை புதைப்பதா- எரிப்பதா என்பதல்ல எமது பிரச்சினை.

உலக சுகாதார ஸ்தாபனம் விடுக்கும் வேண்டுகோளுக்கு இணங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும், கொரோனாவை ஒழிக்க யாரிடமும் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. கொரோனா வைரஸ் எதனால் உருவானது என்பது குறித்து கூட யாருக்கும் தெளிவில்லை.

இந்த நிலைப்பாடு நாட்டுக்கு நாடு மாற்றமடைகிறது. எமது நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும்.எமது நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்த நபர்களை எந்தக் காரணம் கொண்டும், புதைக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

உடல்களை புதைப்பதால், நீர் மாசுபடுகிறது என்று எச்சரிக்கையும் கடந்த காலங்களில் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், முஸ்லிம்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நாடகமொன்றைதான் அங்கேற்றி வருகிறது. அரசாங்கம் சார்பாக இதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    by : Yuganthini

http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழந்த-3/

Link to comment
Share on other sites

அரசாங்கம் இப்போது இக்கட்டான நிலையில் இருக்கின்றது. விஞான ரீதியாக , வைத்திய துறை சார்பாக முன்னர் எடுத்த தீர்மானமே கொரோன தொற்றினால் இறப்பவர்களை எரிக்க வேண்டுமென்பது. இப்போது புதைக்கலாம் எண்டு அனுமதி வழங்கினால் இவர்கள் முன்பு எடுத்த தீர்மானம் தவறானது என்பதுபோலாகிவிடும். எனவே இலங்கை வைத்திய துறை சார் நிபுணர்களுக்கு இது ஒரு சவாலாக மாறிவிடும். நாளைய கூடத்தில் அநேகமாக வைத்தியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எரிப்பதைத் தவிர மாற்றுவழி இருக்கிறது. ஆறு அடி ஆழக்குழியில் புதைக்கலாம். இது ஒரு வைரசு, அந்த்ராக்ஸ் பக்ரீரியா அல்ல! உக்கும் உடல் இழையங்களில் வைரசு தங்கி வாழாது. நிலக்கீழ் நீருடன் கலக்கும் வாய்ப்புகளும் இல்லை (ஆறு அடிகளில் நிலக்கீழ் நீரை எட்ட முடியாது, aquifer இருப்பது மிக ஆழத்தில்). ஆகவும் பயம் இருந்தால் 10-15% சோடியம் ஹைபோகுளோரைட் இனால் உடலை மூடி விட்டுப் புதைக்கலாம்! 

ஆறு அடிக் குழியில் உடலைப் புதைக்கும் வழக்கமே 1600 களில் வந்த கொள்ளை நோயோடு உருவானது தான்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிலும் அரசியல் செய்து பழக்கப்பட்டவர்களால், இதிலும் அரசியல் செய்யாமல் இருக்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் வந்த்திட்டுது...பார்ப்பம் நாளைக்கு என்ன நடக்குதென்று..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெகலிய வேறேதோ புலம்புறார்...இங்ககாலை இவை எதுவோ நாடு பிடிச்சமாதிரி புலம்புகினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸா அடக்கம் தொடர்பான வர்தமானி வெளிவரும் வரை பொறுமை காப்போம் – இம்ரான் எம்.பி

November 11, 2020

imran-11.jpeg

 

ஜனாஸா அடக்கம் செய்வது தொடர்பான வர்தமானி வெளிவரும் வரை அனைவரும் பொறுமை காப்போம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடந்து கருத்து தெரிவிக்கையில்;

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப் படவில்லை என அரசு அறிவித்து விட்டது.

எனவே அரசின் உத்தியோக பூர்வ அறிவித்தல் அல்லது வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரை வீணான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்வது சிறந்தது.

சில அமைப்புகளும் தனி தபர்களும் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைத்து விட்டதாக பிழையான தகவல்களைப் பரப்பினர். இதனால் சமுகம் குழம்பிப் போய் இருக்கின்றது.

இலங்கையில் ஜனாஸாவை வைத்து பேரினவாத அரசியல் நடாத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.

இவ் அரசியல் விளையாட்டிலிருந்து ஜனாஸா அடக்குவதற்கு அனுமதியை பெற ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மற்றும் சிவில் சமூகம் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது நன்கு திட்டமிடப்பட்ட ஏமாற்று நாடகமொன்று அரங்கேற்றப்படுகின்றதா ? என்ற சந்தேகம் எழுகிறது.

அரசு நினைத்தால் இதற்கான நல்ல தீர்மானத்திற்கு வருவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. உண்மை என்னவென்றால் அரசு இது தொடர்பான விடயத்திற்கு இதுவரை வரவில்லை என்பதுதான் என சுட்டிக்காட்டினார்.

ஆனால் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூட இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டது கவலைக்குறிய விடயமாகும்.

ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்ததாக உரிமை கூற முயன்று அவசரமாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டவர்கள் ஒருபுறம். இருபதுக்கு ஆதரவு அளித்ததால் தான் அனுமதி கிடைத்தாக கூறியவர்கள் இன்னொரு புறம்.

இதன் பின்னால் உள்ள அரசியல் விளையாட்டு இவர்களுக்கு தெரியாமலில்லை.
இருப்பினும் இது தெரிந்தும் சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கையையே இவர்கள் முன்னெடுக்கின்றனர்.

சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமையவே ஜனாஸாவை அடக்கம் செய்யும் அனுமதியை வழங்க முடியும் என கூறும் அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார துறை கூறிய போது அதை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆகவே இங்கு பிரச்சினை சுகாதார துறை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் ஏமாற்று நடவடிக்கைகளை நம்புவதிலிருந்து விடுபட வேண்டும் என தெரிவித்தார்.

 

 

https://thinakkural.lk/article/88358

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை அடக்கம் செய்யும் விவகாரம் - இலங்கைக்கு ஐ.நா கடிதம்.!

dead.jpg

உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்றதன் அடிப்படையில் பல சமூக அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுப்பதற்கு, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம், ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை’ எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது  சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/90876/

டிஸ்கி

Screenshot-2020-11-13-11-15-23-654-org-m

அடுத்தவர் மத விவகாரத்தில் தலையிடபடாது என்டாலும் அவர்களுக்கு மட்டும் எங்கிருந்தாலும் குதித்து கொண்டு வருவினம் ..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முஸ்லிம்களை அடக்கம் செய்யும் விவகாரம் - இலங்கைக்கு ஐ.நா கடிதம்.!

Remember Love Letter GIF by Great Big Story - Find & Share on GIPHY

உள்நாட்டு பிரச்சினையை...  உள் நாட்டிலேயே தீர்த்துக் கொள்கின்றோம் என்று,
தமிழ், சிங்கள எம்.பீ.க்கள், ஐ.நா. வுக்கு... முத்திரை ஓட்டாமல், பதில் கடிதம்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.