Jump to content

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்

November 10, 2020

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.

Pillai-300x241.jpg
 

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பான இரு வழக்கு விசாரணைகள் இன்று மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிமன்றில் முடிந்த பிற்பாடு சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏறும் போது பிள்ளையான் ஊடகங்களுக்கு மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் எனக் கூறியதுடன் கார்த்திகை 27 மாவீரர் தினத்தையும் நினைவுபடுத்தினார்.
 

 

https://thinakkural.lk/article/87984

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

வழக்குகள் நீதிமன்றில் முடிந்த பிற்பாடு சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏறும் போது பிள்ளையான் ஊடகங்களுக்கு மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன்

முதலில் சிறையிலிருந்து வெளியில் வாற வழியைப்பாரும். கோத்தா சவால் விட்டு இப்போ தடுமாறுகிறார். ஆளான ஆளெல்லாம் வழி தெரியாமல் தவிக்கினம் இதற்குள் சிறையில் இருந்து கொண்டு இவரது வீறாப்பு வேற. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்

வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை. 😎

Link to comment
Share on other sites

Quote

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்

 

தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாறு தூக்கிற கதைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை. 😎

கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிதை பேசுமாம். கோத்தாவின் சிஷ்யன் அதும் பேசாவிட்டால் சிஷ்யன் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27 பற்றி இவர் எதை நினைவுபடுத்தினாராம்? மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டேன் என்றா? அது தெரிந்தவிடயம் தானே? கோத்தாவின் அடியாளாகவிருந்துகொண்டு மாவீரர் நாளையும் நடக்க அனுமதித்தால் அவரின் பெயருக்கு இழுக்காகாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கார்த்திகை 27 பற்றி இவர் எதை நினைவுபடுத்தினாராம்? மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டேன் என்றா? அது தெரிந்தவிடயம் தானே? கோத்தாவின் அடியாளாகவிருந்துகொண்டு மாவீரர் நாளையும் நடக்க அனுமதித்தால் அவரின் பெயருக்கு இழுக்காகாதா? 

தன் வீரத்தையும், விசுவாசத்தையும் எஜமானுக்கு காட்ட ஒரு களம் தேடி மாவீரர் நாளை நினைவு படுத்துகிறார். பாவம்! அப்போவாவது விடுதலை கிடைக்காதா? என்கிற ஏக்கம். ஒரு அடிமை குடிமகனாக தன்னை கற்பனை செய்யலாம் தவறில்லை. ஆனால் நிர்வாகம் செய்யவேண்டும், உரிமைகுடிமகனாக அந்தஸ்து வேண்டும் என்று நினைக்கக்கூடாது என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

Link to comment
Share on other sites

ஐயோ அந்த ஆளை விடுங்கப்பா. பாவம் மனுஷன் இந்த கொரோனவை ஒழிக்க எவ்வளவு பாடு படுது. அநேகமாக விரைவில் கூடத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரானவை மக்களை சுட்டதுபோல பிஸ்டலால் சுடலாம் என்று எண்ணித்தான் 
தான் வந்து கச்சிதமாக செய்வேன் என்று கூறி இருக்கிறார் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாவது அறிவு இருக்கும் எண்டு பார்த்தால் தலைக்குள் என்ன இருக்குதோ தெரியலை .

எல்லாம் சரி இந்த லூஸாவது இப்படித்தன்னும் அறிக்கை விடுது  நம்ம வடக்கு அரசியல் சூரர் கள்  என்ன செய்யினம்  கொரனோ பற்றி வாயே திறக்கினம்  இல்லை யுத்த குற்ற ம் இல்லை எண்றதுக்கு  பக்கம் பக்கமாக அறிக்கை வாசிச்ச  வாய் என்ன செய்யிதாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்

பிள்ளையான்.... கொரோனாவை ஒழிக்க, சிறையிலிருந்து ஏதோ மருந்து கண்டுபிடித்திருக்கிறார் போலுள்ளது.  😁 🤣

அதை வைத்து....  திருகோணாமலை, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

கோரானவை மக்களை சுட்டதுபோல பிஸ்டலால் சுடலாம் என்று எண்ணித்தான் 
தான் வந்து கச்சிதமாக செய்வேன் என்று கூறி இருக்கிறார் என்று எண்ணுகிறேன். 

"புலிகளையே அழித்த எங்களுக்கு கொரோணா எம்மாத்திரம்? அதனையும் அழித்துவிடுவோம்" என்று சிங்களவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளை அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் கோத்தாவின் அடியாளான இவரும் நினைக்கிறாரோ என்னவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

கார்த்திகை 27 பற்றி இவர் எதை நினைவுபடுத்தினாராம்? மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டேன் என்றா? அது தெரிந்தவிடயம் தானே? கோத்தாவின் அடியாளாகவிருந்துகொண்டு மாவீரர் நாளையும் நடக்க அனுமதித்தால் அவரின் பெயருக்கு இழுக்காகாதா? 

கார்த்திகை 27 ஐ நினைவு வைத்திருப்பதே நல்லதுதானே. 

கொரோனா காரணமாக ஒருவரும் மாவீரர் நாளில் வெளியே வரவேண்டாம் என்று அறிவித்தல் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201111-123017.jpg

அடிச்ச காசுல முதல்ல மருந்து அடிக்க சொல்லுங்கப்பா ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

"புலிகளையே அழித்த எங்களுக்கு கொரோணா எம்மாத்திரம்? அதனையும் அழித்துவிடுவோம்" என்று சிங்களவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளை அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் கோத்தாவின் அடியாளான இவரும் நினைக்கிறாரோ என்னவோ?

கொரோனாவிலும் புலிகள். எங்கும், எதிலும், எல்லோர் வாயிலும் புலிகள். புலிகள் இல்லாவிட்டால் பொழுதே விடியாது இலங்கையில். 

Link to comment
Share on other sites

12 hours ago, zuma said:

தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாறு தூக்கிற கதைதான்

அப்படிச் சொல்லக்கூடாது, இந்தியர்கள் கோமியத்தை அருந்திக் கொரோ தங்களைப் பீடிக்காது பாதுகாத்துக் கொள்வதுபோல் அவரும் சிறையில் கோமியத்தை அருந்தி தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளார். அந்த அனுபவத்தில்தான் அப்படிப் பேசியுள்ளார்போல் தெரிகிறது.

கோமியம் எங்கிருந்து பெறப்பட்டது???????

 Quellbild anzeigen

Link to comment
Share on other sites

எப்படி இருந்தாலும் சரியோ , பிழையோ மக்களால் தெரிவு செய்யப்படட பிரதிநிதி. படித்த அரசியல்வாதிகளையே திட்டி தீர்க்கிறோம். அவர்களே பிழையாக நடக்கும்போது பிள்ளையானை குற்றம்சாட்டுவது சர்வசாதாரணமானது. இருந்தாலும் பிள்ளையானுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் , அதை செய்யும்வரைக்கும் பொறுத்திருப்பதே எனது தாழ்மையான கருத்து. அதட்காக செய்த எல்லா கொலைகளும், குற்றங்களும் இலைஎன்றாகாது. மக்களால் தெரிவு செய்யப்படடவர் என்பதை மறைக்க முடியாது. எனவே மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.