“மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல முக்கியமான தகவல்கள்
-
Tell a friend
-
Topics
-
7
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
14
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
நாதம், நீங்கள் தொடர விரும்பாவிட்டாலும் சிலதை சொல்ல விரும்புகிறேன். கறி. இதை பற்றி முன்பே நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உரையாடி விட்டோம். இங்கே மூன்று விடயங்களை போட்டு குழப்பி கொள்ள கூடாது. 1. கறி என்ற பெயர் சொல் - இது தமிழ் சொல்தான். இதை மொழியிலாளர்கள் ஏற்று கொள்கிறார்கள் https://www.merriam-webster.com/dictionary/curry Noun Tamil kaṟi (or a cognate word in another Dravidian language). 2. Curry எனும் ஆங்கில வினைச்சொல் verb. வினைச்சொல்லாக இது 2 அர்த்தத்தில் பயன்படுகிறது, ஆனால் இரெண்டும் உணவு சம்பந்தமில்லாதது. இந்த அர்த்தத்தில் இது ஏனைய ஐரோப்பிய மொழிகளில் இருந்து வருகிறது. (மேலே தந்த இணைப்பில் ஆதாரம் உண்டு). ஆகவே கறி - என ஒரு உணவை குறிக்கும் போது அந்த சொல் தமிழ் சொல் என்பதை நாம் நிறுவ வேண்டிய தேவை இல்லை. 3. அடுத்து வருவதுதான் what is a curry? என்ற கேள்வி. இங்கேதான் மயக்கம் எழுகிறது. பால்தியில் இருந்து, குருமா, விண்டலூ, யூகேயில் உருவாக்கிய டீக்கா மசாலா, ஜமைக்காவின் curried goat வரை எல்லாவற்றையும் ஆங்கிலேயர்கள் கறி என்ற பொது பதத்தில் 300 வருடங்களாக பிழையாக அழைந்தமையால் இப்போ கறி என்றால் யாருடையது என்று பிடுங்கு படவேண்டி உள்ளது. இதற்கான விளக்கம்: Curry in its original form and meaning தமிழ் சொல்தான். ஆனால் கறியே அல்லாத பால்டி, குருமா, டீக்கா போன்றவற்றையும் பிழையாக (misnomer) கறி என அழைப்பதால் ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதை விளங்கிகொண்டால் எங்கள் புறநானூற்று கறி பறிபோகிறதே என பதறவேண்டியதில்லை. அவர்களின் டிக்சனறிகள் கூட இதை எமது சொல் என ஏற்கிறன. அடுத்து Champaign, Cornish Pastry போல geographical identification status வழங்கப்பட்டு, ஒரு பகுதியில் உருவாகும் கறி மட்டும்தான் “கறி” என அழைக்கப்படும் ஆபத்து இருக்கிறதா? என்றால் இப்போதைக்கு இல்லை என்றே கூறமுடியும். காரணம் நான் மேற்சொன்ன ஆதாரம். அவர்களது டிக்சனரியே எமது சொல் என சொல்லும் ஒன்றை தமது என அவர்கள் உரிமை கோரமுடியாதல்லவா? இப்படி ஒரு நிலைவந்தால் புறநானூற்று ஆதராமும் சமர்பிக்கபடலாம். அப்படி ஒரு நிலை வந்தால் - இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ அல்லது ஏனைய தமிழ் “கறி” வியாபாரிகளோ அதை எதிர்க்கலாம். ஆகவே தமிழர்களின் கறி-உரிமை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் விரும்பினால் யாரும் இதை ஒரு ஆய்வு செய்து, ஆய்வறிக்கையாக சமர்பிக்கலாம். இது கறி மேட்டர். பாலு ஐயா மேட்டர் சிக்கலானது. நாம் நம்புவதை போல உலகில் பலரும் தாமே ஆதிக்குடி என நம்புகிறார்கள். ஆனால் விஞ்ஞானம் இந்த இனம்களின் உரிமை கோரல்களை தவிர்த்து வேறு வழிகளில் மனித இன தோற்றுவாயையும், பரம்பலையும் ஆராய்ந்து சில கொள்கைகளையும் முன் வைக்கிறது. விஞ்ஞானத்தில் ஊகம், பின் கருதுகோள், பின் கொள்கை, ஆதாரபூர்வமாக நிறுவிய பின் விதி ஆகிறது. பாலு ஐயா முன் வைப்பது ஒரு ஊகம். இதை அவர் உங்களை போன்ற ஆர்வலருக்கு சமர்பித்து funding எடுத்து, கொள்கையாக ஏற்று கொள்ளவைக்க வேண்டும். அந்த நிலையை அடையும் போது, கோசானும் ஜஸ்டினும் அல்ல, துறைசார் நிபுணர்கள் இதை பற்றி விவாதிப்பார்கள். அதை விடுத்து, வெறுமனே தமிழில் வீடியோக்களை விட்டு அதை “ஆராய்சி முடிவு” என்றால் - அதை தமிழ் உணர்வாளர்களை தாண்டி யாரும் கருத்தில் எடுக்க போவதில்லை. காக்கை பொன் குஞ்சை நாங்கள் மட்டும் கொஞ்சி வளர்த்து விட்டு போக வேண்டியதுதான். அது மட்டும் அல்லாமல் ஜஸ்டீன் அண்ணா சொல்வதை போல் “வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தையும் கொண்டு போன கதையாக” இலங்கையில், இந்தியாவில் எமது உண்மையான தொன்மையயும் எதிரிகள் இதை வைத்து கேள்விக்கு உள்ளாக்கவும் கூடும். தமிழர் மரபுரிமை மீது உங்களையும் குமாரசாமி அண்ணையையும் போலத்தான் எல்லாருக்கும் அபிமானம் உண்டு. எங்களது அம்மா அப்பாவும் தமிழ்தானே🤣. ஆனால் ஆராய்சி என்ற பெயரில் மொக்கேனப்படும் படிநடந்தால் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். -
அது மகிந்தவுக்குத் தெரியுமோ.. 😂
-
By ஈழப்பிரியன் · Posted
இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் முகக்கவசம் போடாதவர்களே இல்லை. இரவு நடந்த ரம்பின் பிரியாவிடையில் முகக்கவசம் போட்டவர்களைக் காணமுடியவில்லை. -
By goshan_che · Posted
அக்னி, இதென்னப்பா கூத்தா கிடக்கு. சுமந்திரனை தப்ப வைக்க அவர் தோத்த வழக்கை யாரும் லிஸ்ட்போடுவார்களா🤣. நான் முன்பே சொல்லி விட்டேன், 2013இல் இருந்து 2015 வரை சும்+விக்கி க்கு ஒரு சந்தர்பம் கொடுக்கலாம் என நான் யோசித்தது உண்மை. நான் நினைத்தது போல் அவர்கள் நடக்கவில்லை என்றதும் உங்களை போல் “போய் தேசிக்காயை கேளுங்கள்” என மழுப்பாமல், எனது கணிப்பு பிழை அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை ஒத்து கொண்டு, அவர்களுக்கு சந்தர்பம் கொடுக்க வேண்டும் என்று எழுதுவதை நிறுத்தி, அவர்கள் மீது விமர்சனத்தையும் வைத்து வருகிறேன். ஆனால் கஜேந்திரகுமார் மீது நம்பிக்கை ஒரு போதும் வரவில்லை. அவர் சொல்லும் விடயங்கள் அத்தனை சாத்தியமறரதாய் இருப்பதால். ஆனால் ஒரு தோல்வியடைந்த வக்கீலை இன்னொரு தோல்வியடைந்த வக்கீலால் பிரதியீடு செய்ய கூடாது என்பதை காட்டவே இருவரையும் ஒப்பிட்டு எழுதினேன். ஆனால் அவர்கள் வக்கீல் தொழிலில் பிரகாசிக்கவில்லை என்பதால் அரசியலில் பிரகாசிக்க மாட்டார்கள் என்பதில்லை அதனால்தான் அவருக்கு ஒரு சந்தர்பம் தரலாம் என்றும் எழுதினேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கலாம், இருவரில் யார் வினைதிறனாக செயல்பட்டார்கள் அல்லது இருவரும் ஒரே கேஸ்தானா என. இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் எந்த அரசியல் கட்சிக்கும் “நேர்ந்து விடப்பட்டவன் அல்ல”🤣. ஆகவே உங்களை போல் அன்றி, என்னால் சந்திரகாந்தனையும், சுமந்திரனையும், கஜேந்திரகுமாரையும் ஒரு சேர விமர்சிக்க இயலுமாய் உள்ளது. ஆனானப்பட்ட திரு பிரபாகரன் அவர்களின் சில அரசியல் முடிவுகளையே விமர்சித்து எழுதுபவன் நான் - பிஸ்கோத்து சுமந்திரனுக்கு கவர் எடுக்கிறேன் என்று என்னை சொல்வதை பெரும் மானநஸ்டமாகவே கருதுகிறேன்🤣 -
சீனாக்காரன், உங்களை அழைக்கும்படி சொல்லவில்லையே!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.