Jump to content

``என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!'' - தன்னம்பிக்கை மனுஷி பிரியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

``என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!'' - தன்னம்பிக்கை மனுஷி பிரியா

உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா

உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா ( படம்: நா.ராஜமுருகன் )

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்றுக்கொண்டிருந்த பிரியாவை எதேச்சையாகப் பார்த்தோம். அவரிடம் பேசினோம்.

``என்னைக் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்ட என் வீட்டுக்காரர், ஏழு வருஷம் என்கூட வாழ்ந்தாரு. அப்புறம் என்னை விரட்டிவிட்டுட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ரெண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு, செத்துடலாமானு எல்லாம்கூட எனக்குத் தோணுச்சு. ஆனா, `நாம ஏன் சாகணும். நம்மை உதாசீனப்படுத்தினவங்க முன்னாடி கம்பீரமா வாழ்ந்து காட்டணும்'னு நினைச்சேன். இந்தா, ஏழு வருஷமா உளுந்தங்கஞ்சி வித்து, வாழ்க்கையை வசந்தமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்" என்று வார்த்தைக்கு வார்த்தை தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் பிரியா.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரியா. 34 வயதாகும் உழைப்பாளி. பிரியாவுக்கு இப்போது பத்தாவது படிக்கும் ஒரு மகளும், எட்டாவது படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். கணவரால் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கைவிடப்பட்ட பின்னர், மாலை நேரங்களில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்க ஆரம்பித்து, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறார் பிரியா. குடும்ப பாரத்தை ஒற்றை ஆளாய் சுமக்கிறார். வேலாயுதம்பாளையம் கடைவீதியில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்றுக்கொண்டிருந்த பிரியாவை எதேச்சையாகப் பார்த்தோம். அவரிடம் பேசினோம்.

``இதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார்தான் என் வீட்டுக்காரர். என்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆரம்பத்துல நல்லா வெச்சிருந்தாரு. அப்புறம் தினமும் என்கூட சண்டைபோட ஆரம்பிச்சாரு. எங்களுக்கு ஜெயஸ்ரீ, குமரன்னு (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரெண்டு புள்ளைங்க. எட்டு வருஷத்துக்கு முன்னாடி, `உனக்கும் எனக்கும் ஒத்துவராது. உன் வாழ்க்கைய நீ பார்த்துக்க. நான் என்சோலிய பார்த்துக்கிறேன்'னு சொல்லிட்டுப் போயிட்டாரு. நொறுங்கிப்போனேன். அவரு ரெண்டாவதா ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னாங்க. எதிர்காலமே இருண்டமாதிரி ஆயிட்டு.

மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா
 
மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா படம்: நா.ராஜமுருகன்

வாடகை வீட்டுலதான் இருந்தோம். ஒரு வருஷம் கிடைச்ச வேலைய செஞ்சேன். ஆனாலும் வருமானம் போதலை. `பேசாம பிள்ளைகளை விஷம் வெச்சு கொன்னுட்டு, நாமளும் செத்துருவோமா?'னு தோணுச்சு. ஆனா அடுத்த நிமிஷமே, `நம்மை உதாசீனப்படுத்துன வீட்டுக்காரருக்கு முன்னாடி நல்லா வாழ்ந்துகாட்டணும்'னு வைராக்கியம் வந்துச்சு. அப்பா, அம்மா வயசானவங்க. அப்பாவை அக்கா பார்த்துக்கிறாங்க. அம்மா என்கூட இருந்தாங்க. வேற எந்த சொந்தமோ, பரிவுகாட்டி ஆதரவு தர மனிதர்களோ எனக்கு இல்ல. அதனால என்ன... பொண்ணுங்களுக்கு எதையும் தாங்கும் சக்தி உண்டுனு இந்த உலகத்துக்குக் காட்ட நெனச்சேன்.

ஏழு வருஷத்துக்கு முன்னாடி உளுந்தங்கஞ்சி செஞ்சு விற்க ஆரம்பிச்சேன். டேஸ்ட் நல்லா இருக்குனு பலரும் பாராட்டினாங்க. அதனால, இதையே தொழிலா பண்ணுவோம்னு முடிவு பண்ணினேன். வீட்ல உளுந்தங்கஞ்சியைத் தயாரிச்சு, அதைப் பாத்திரத்துல ஊத்தி, சைக்கிள்ல வெச்சுக்கிட்டு தெருத்தெருவா போய் விற்க ஆரம்பிச்சேன். பெருசா வருமானம் இல்லைன்னாலும், இந்தக் கரடுமுரடான வாழ்க்கைய தெம்பு தைரியமா வாழ்ந்திரலாம்னு இந்தத் தொழில் எனக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்துச்சு. ஏழு வருஷம் போனதே தெரியல. எல்லாரும் 10 ரூபாய்க்கு உளுந்தங்கஞ்சி விக்கிறாங்க. நான் ஆறு ரூபாய்க்குதான் கொடுக்கிறேன்.

மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா
 
மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா படம்: நா.ராஜமுருகன்

சாயங்காலம் 3 - 7 மணிவரை விற்பனை செய்றேன். சைக்கிளை தள்ள ஆரம்பிச்சா வேலாயுதம்பாளையம், கடைவீதி, கந்தபாளையம், பைபாஸ்னு பல பகுதிகளை சுத்தி வந்து வியாபாரம் பார்த்திருவேன். கொரோனா பிரச்னையால லீவுல இருக்கும் என் மகன் எனக்கு இப்போ ஒத்தாசையா இருக்கான். தினமும் 200 ரூபாய் கிடைக்கும். அந்த வருமானத்தை வெச்சுதான் மாசம் பொறந்தா 2,000 ரூபாய் வாடகை, வீட்டுச் செலவு, பிள்ளைங்க படிப்புச் செலவுனு செலவழிக்கணும். எங்கம்மாவுக்கு மருத்துவச் செலவுகளும் இருக்கு. இப்படிப் பல பிரச்னைகள இந்த சொற்ப வருமானத்துல சமாளிக்குறது கஷ்டமாதான் இருக்கு. கடனவொடன வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறேன். ஆனாலும் வைராக்கியமா, என்னை உதாசீனப்படுத்தினவங்க முன்னால வாழ்ந்துகாட்டணும்னு ஓடிக்கிட்டு இருக்கேன். 

என் பிள்ளைகள நல்லா படிக்க வெச்சு ஆளாக்கிவிட்டுட்டேன்னா அதுங்க என்னைப் பார்த்துக்கும்ங்க. ஆனா, அதுவரைக்கும் ஓடியாகணுமே. மனசுல அதுக்கான தெம்பும் தைரியமும் இருக்கு. மக்கள் கூடுற இடத்துல தள்ளுவண்டி மாதிரி போட்டு, அதுல வியாபாரம் பார்த்தா சொல்லிக்குற மாதிரி சம்பாதிக்க முடியும். ஆனா, அதுக்குத் தேவையான முதலீடு இல்லாம முழிபிதுங்கி நிக்கிறேன். இருந்தாலும், `நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா'னு என் சைக்கிளை உருட்டிக்கிட்டு, தினமும் வியாபாரத்தைத் தொடங்கிருவேன்.

மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா
 
மகனோடு உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா படம்: நா.ராஜமுருகன்

பல பேரு நான்படுற கஷ்டத்தைப் பார்த்துட்டு, என்னை ரெண்டாவது திருமணம் பண்ணிக்கச் சொன்னாங்க. ஆனா, என்னை ஒதுக்கித்தள்ளின வீட்டுக்காரர் கண்முன்னால என் சொந்த உழைப்புல நான் வாழ்ந்துகாட்டணும். அதுபோதும் எனக்கு. அதோட, என்னைப்போல வாழ்க்கையில கஷ்டத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு, சுயசம்பாத்தியத்துல தன்னம்பிக்கையோட வாழ்ந்துகாட்டி முன்னுதாரணமா இருக்கணும்.

என்ன சூழல் வந்தாலும், பெண்கள் கோழைத்தனமா தற்கொலை செய்துக்கக் கூடாது. தன்னை எட்டி உதைக்கிற உறவுகளுக்கு முன்னால, புறந்தள்ளும் இந்த உலகத்துக்கு முன்னால, கம்பீரமா நின்னு வாழ்ந்துகாட்டணும்ங்கிற உறுதியை வளர்த்துக்கணும். பொண்ணுனா பேயும் இரங்கும்னு சொல்வாங்க. இந்தப் பிரச்னைகள் ஒரு கட்டத்துல இரங்காதா என்ன?" என்று கேட்டு முடித்தார்.

வாழ்த்துகள் சகோதரி!

 

https://www.vikatan.com/news/women/karur-woman-priya-shares-her-emotional-life-story

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவவை மாதிரி ஊரிலையும் கன சனம் இருக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.