Jump to content

பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தன் சி.ஐ.டியினரால் கைது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தன் சி.ஐ.டியினரால் கைது

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
https://www.meenagam.com/பிள்ளையானின்-செயலாளர்-பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசாந்தனை விளக்கமறியலில் வைக்க மட்டு நீதி மன்றம் உத்தரவு

IMG_1106-696x392.jpg
 4 Views

குற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை-பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேற்குறிப்பிட்ட கொலை வழக்கு  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

IMG_1108.jpg

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ரீ.எம்.வி.பி கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.ilakku.org/பிரசாந்தனை-விளக்கமறியலி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

ரீ.எம்.வி.பி கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்

சிறை செல்வது படுகொலை தொடர்பில், ஏதோ நாட்டுக்காக போராடி சிறை செல்வதுபோல் கைகாட்டி போஸ் கொடுப்பது தாங்க முடியலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

சிறை செல்வது படுகொலை தொடர்பில், ஏதோ நாட்டுக்காக போராடி சிறை செல்வதுபோல் கைகாட்டி போஸ் கொடுப்பது தாங்க முடியலை. 

கோழிக்கள்ளரும் இப்ப தியாகிகள் வரிசையிலை வந்திட்டினம் கண்டியளோ...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சிறை செல்வது படுகொலை தொடர்பில், ஏதோ நாட்டுக்காக போராடி சிறை செல்வதுபோல் கைகாட்டி போஸ் கொடுப்பது தாங்க முடியலை. 

மக்கள் பிரதிநிதிகளைப் படுகொலை செய்ததற்காகச் சிறைசென்ற செம்மலின் செயலாளர் எப்படி இருப்பார் என்று கேட்கத் தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

மக்கள் பிரதிநிதிகளைப் படுகொலை செய்ததற்காகச் சிறைசென்ற செம்மலின் செயலாளர் எப்படி இருப்பார் என்று கேட்கத் தேவையில்லை. 

தலைவர் எவ்வழி
குடிகள் அவ்வழி.

Link to comment
Share on other sites

இங்கு பிரச்சினை என்னவென்றால் பிள்ளையான் உள்ளே இருப்பதால் பிரசாந்தன் இவரின் பெயரை பாவித்து பிழையாக செயல்படுவதாக தலைவருக்கு தகவலாம். எனவே இவரை ஒதுக்கி விட்டு முனைத்தீவை சேர்ந்த ஒரு பெண் சடடதரணியை கொண்டுவர முயட்சி நடப்பதாகவும் தகவல்.

எனவே பிரசாந்தன் கொலை காரனாக இருந்தாலும் இங்கும் அரசியலும் விளையாடுகின்றது. எனவே வரும் காலங்களில் நிலைமைகள் எப்படி போகுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TMVP பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

IMG_0072.JPG

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் காணொளி ஊடாக நேற்று  (23) விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன்போதே, பிரசாந்தனை டிசெம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த 9ஆம் திகதி சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, பிரசாந்தன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.battinews.com/2020/11/TMVP.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2020 at 07:32, Robinson cruso said:

இங்கு பிரச்சினை என்னவென்றால் பிள்ளையான் உள்ளே இருப்பதால் பிரசாந்தன் இவரின் பெயரை பாவித்து பிழையாக செயல்படுவதாக தலைவருக்கு தகவலாம். எனவே இவரை ஒதுக்கி விட்டு முனைத்தீவை சேர்ந்த ஒரு பெண் சடடதரணியை கொண்டுவர முயட்சி நடப்பதாகவும் தகவல்.

எனவே பிரசாந்தன் கொலை காரனாக இருந்தாலும் இங்கும் அரசியலும் விளையாடுகின்றது. எனவே வரும் காலங்களில் நிலைமைகள் எப்படி போகுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த மாதம் பிணை கிடைக்கும்  ஆனால் கிடப்பிலிருந்த கேஸ் ஏன் தோண்டப்பட்டது என்பதற்கு பெரிய காரணம் இருக்கு  அரசியலுக்கு அப்பால் சட்டத்தரணி மங்களேஸ்வரி அதிக விருப்ப வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார் தற்போது பிரசாந்தனின் வெற்றிடத்தை நிரப்புகிறார்.

பொய்களை சொல்வதாக இருந்தாலும் கொஞ்சம் பொருந்த சொல்லணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் இருந்த இடைவெளியை நிரப்ப உள்ளே சென்றார் பிரசாந்தன்! 

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடுத்த மாதம் பிணை கிடைக்கும்  ஆனால் கிடப்பிலிருந்த கேஸ் ஏன் தோண்டப்பட்டது என்பதற்கு பெரிய காரணம் இருக்கு  அரசியலுக்கு அப்பால் சட்டத்தரணி மங்களேஸ்வரி அதிக விருப்ப வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார் தற்போது பிரசாந்தனின் வெற்றிடத்தை நிரப்புகிறார்.

பொய்களை சொல்வதாக இருந்தாலும் கொஞ்சம் பொருந்த சொல்லணும் 

கொலை காரர்களுக்கு நல்லகத்தான் வக்காலத்து வாங்குகிறீர்கள். பிரசாந்தன் ஒன்றும் நல்லவன் இல்லை. பிள்ளையானைபோல கொலை கொள்ளை கட்பளிப்பு எல்லாம் செய்தவர்தான். நான் அறிந்த வரைக்கும் பிரசாந்தனை பிள்ளையான் நம்ப தயாரில்லை. எனவேதான் அந்த பெண் சடடதரணிக்கு முன்னுரிமை கொடுக்கிறார். இது பிரசாந்தன் வெளியில் இருந்த போதே தொடக்கி விட்ட்து. இனி பிரசாந்தன் எப்போது வெளியில் வருகின்றார் எண்டு பார்ப்போம். அப்போது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Robinson cruso said:

இப்படியே சொல்லி சொல்லி இருக்க வேண்டியதுதான் இது சிறிலங்கா சார்

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியே சொல்லி சொல்லி இருக்க வேண்டியதுதான் இது சிறிலங்கா சார்

நாங்களும் ஸ்ரீ லங்காவிலேதான் சார் இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

நாங்களும் ஸ்ரீ லங்காவிலேதான் சார் இருக்கிறோம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் நான் நாட்டைப்பற்றியே சொன்னது. 

றீசாட் விடுதலை எப்படி இருக்கிறது இதுவும் ஸ்ரீலங்கா தான் நாம் நினைப்பது நடப்பதில்லை 😉😉

Link to comment
Share on other sites

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் நான் நாட்டைப்பற்றியே சொன்னது. 

றீசாட் விடுதலை எப்படி இருக்கிறது இதுவும் ஸ்ரீலங்கா தான் நாம் நினைப்பது நடப்பதில்லை 😉😉

ரிசார்ட் ஒன்றும் நிரபராதி என்று விடுதலை செய்யப்படவில்லை. பிணையில்தான் வந்திருக்கிறார். பிள்ளையானயே விடும்பொழுது இவரை பிணையில் விடுவதில் தப்பு ஒன்றுமில்லை.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

ரிசார்ட் ஒன்றும் நிரபராதி என்று விடுதலை செய்யப்படவில்லை. பிணையில்தான் வந்திருக்கிறார். பிள்ளையானயே விடும்பொழுது இவரை பிணையில் விடுவதில் தப்பு ஒன்றுமில்லை.😷

அதே போல நாளை பிரசாந்தனும் பிணையில வரலாம் டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் அதிக வாக்குகள் இவருக்கு அரசாங்க சார்பில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு

Link to comment
Share on other sites

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதே போல நாளை பிரசாந்தனும் பிணையில வரலாம் டொட்.

வரலாம் , வராமலும் விடலாம். இதெல்லாம்  அரசியல் தீர்மானங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TMVP பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

By Battinews
 
IMG-20201201-WA0371.jpg

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் . 

பிரசாந்தன் தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக கட்சி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெகநாதன் ஜெயராஜ் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக தலைமை பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த மாதம் 9ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.battinews.com/2020/12/tmvp.html

Link to comment
Share on other sites

On 27/11/2020 at 11:10, தனிக்காட்டு ராஜா said:

அதே போல நாளை பிரசாந்தனும் பிணையில வரலாம் டொட்.

நிலைமை எப்படி போகுது? நாங்கள் எழுதும்போது அங்கு விசாரித்துதான் எழுதுவோம். பிரசாந்தன் ஐயா வெளியே , ஆனால் உள்ளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.