Jump to content

முதல் பார்வை: சூரரைப் போற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: சூரரைப் போற்று

soorarai-pottru-movie-review

 

ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப் படை அதிகாரியாகத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார்.

தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார். லைசென்ஸ் சிக்கல், பெரும் பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார். அவரின் கனவு எப்படி நனவானது, ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை உயிரோட்டத்துடன் சொல்வதே 'சூரரைப் போற்று' படத்தின் திரைக்கதை.

1605122116751.jpg

 

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் ஷாலினி உஷாதேவியுடன் திரைக்கதை அமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். படத்தின் மேக்கிங்கில் கச்சிதத்தைக் கொண்டுவந்துள்ளார். அதுவும் அவரின் கதாபாத்திரக் கட்டமைப்புகள் ஆஸம். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ஹீரோயிசப் படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் விதம் வெல்டன். யாருக்குமே லேசுபாசான கேரக்டர் இல்லை. அத்தனை பேரும் தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

கொடுமை கண்டு பொங்கி எழுந்து பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசும் சூர்யாவைப் படத்தின் ஒரு பிரேமிலும் பார்க்கமுடியாது. கையில் அருவா, வேல் கம்பு, கத்தி, துப்பாக்கி என எதுவும் கிடையாது. நான் இதைச் சொல்லியே ஆகணும் என்று ரொமான்ஸிலும் ஒரே மாதிரியான சூர்யாவைப் பார்க்க முடியாது. ஹரி வெர்ஷனாகவும், கௌதம் மேனன் வெர்ஷனாகவும் இல்லாமல் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக ராஜபாட்டையில் நடந்திருக்கிறார். நடித்திருக்கிறார். அழுதுகொண்டே தன் இயலாமையை, ஆற்றாமையை, கையறு நிலையை வெளிப்படுத்தும் சூர்யாவைப் பார்க்க முடிகிறது. ஆனால், சின்னதாய் புன்னகையைக் கூடச் சிந்தாத அளவுக்கு சிரிப்பென்றாலே என்ன என்று தெரியாத, கதாபாத்திரத்துடன் ஒன்றிய சூர்யாவைப் பார்ப்பது புதிதாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்தின் நடிப்புச் சாயலும் இதில் இல்லை. அழுத்தமாக தன் நடிப்பில் தடம் பதித்து இதயத்தைத் தொடுகிறார்.

1605122135751.jpg

 

அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் அங்கு இருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும்போதும், ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்த கணத்தில் அழுது தன் நிலையை விளக்கும்போதும் கண்ணீரில் நனைய வைக்கிறார்.

ஒரு முன்னணி நட்சத்திர நடிகர் ஓடிடியில் படத்தை வெளியிடுவது துணிச்சல் என்றால், அதிலும் பரிசோதனை முயற்சிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருப்பது வேற லெவல். சூர்யாவின் இந்த முயற்சிகள் என்றும் தொடர வேண்டும் என்று வாழ்த்துவோம். வரவேற்போம்.

1605122216751.jpg

அபர்ணா பாலமுரளி, கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து அட்டகாசமான நடிப்பை நல்கியுள்ளார். அவர் திருமணத்துக்குப் போடும் கண்டிஷன்கள், சூர்யா உடனான உரசலுக்குப் பிறகான நடவடிக்கை, ரூ.16 கோடி டீலை சூர்யா புறக்கணித்ததற்கான ரியாக்‌ஷன் என பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் கதாபாத்திரத் தன்மைக்கு அந்தக் கண்கள் பெரிய பிளஸ்.

சுதா கொங்கரா அளவுக்கு யாரும் காளி வெங்கட்டை அவ்வளவு சரியாகப் பயன்படுத்துவதில்லையோ என்னவோ. இறுதிச்சுற்றில் ரித்த்கா சிங்கின் தந்தையாக நடித்தவர், இதில் சூர்யாவின் நண்பனாக மனதில் இடம் பிடிக்கிறார். கருணாஸின் வெள்ளந்தி மனசால், பளிச் நடிப்பால் பசை போல் ஒட்டிக் கொள்கிறார். 'உன்னை நம்பி இருக்கோம்டா. ஜெயிச்சிருடா' என்று சொல்லும் ஊர்வசியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். மகனின் தாமத வருகையை அவர் கண்ணீரும் கம்பலையுமாக கரித்துக் கொட்டும் விதம் தேர்ந்த நடிகையின் உச்சம். 'பூ' ராமு மகன் மீதான பாசத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்.

சூர்யாவின் உற்ற நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். மோகன்பாபு ஆச்சர்ய மறுவரவு. வினோதினி வைத்தியநாதன், பரேஷ் ராவல், அச்யுத்குமார், ஆர்.எஸ்.சிவாஜி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பில் மிளிர்கிறார்கள்.

 

1605122240751.jpg

நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. டெல்லி, மதுரை, விமானங்களின் ஓட்டம் என்று சுற்றிச் சுழன்று விதவிதமான கோணங்களில் ஈர்க்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் பருந்தாகுது ஊர்க்குருவி என்ற மாறா தீம் செம்ம. காட்டுப்பயலே காதலின் ராகம் என்றால், மண்ணுருண்ட மேல தத்துவத்தில் ததும்பி நிற்கிறது. ஏகாதசியின் பாடல் வரிகளும், செந்தில் கணேஷின் குரலும் மண்ணுருண்ட மேல பாடலுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுத்துள்ளன. கதையோட்டத்துக்குத் தகுந்தபடி பின்னணி இசையில் பிரகாசிக்கிறார் ஜி.வி. சதீஷ் சூர்யாவின் கட்ஸில் நேர்த்தி.

உண்மைக் கதையில், ஜி.ஆர்.கோபிநாத் தன் நிறுவனத்தை கிங்ஃபிஷர் மல்லையாவுடன் இணைத்தார். ஆனால், திரைப்படத்தில் அப்படி இல்லாதது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. திரைக்கதை சுதந்திரம் எனும் விதிப்படி, ஷாலினி உஷாதேவியும், சுதா கொங்கராவும் மல்லையாவுக்குப் பதில் ஒரு பாலய்யாவைக் காட்டுகிறார்கள். ஆனால், அந்த டீல் வேறு மாதிரி அமைத்திருப்பது படத்துக்கு பாசிட்டிவ் பலம் சேர்க்கிறது.

''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ். பேசாம ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையைப் பாரு'' என்ற அலைக்கழிப்புகளை, புறக்கணிப்புகளை, ஏமாற்றங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லி அடுத்தகட்டத்துக்கு சூர்யா நகரும் விதத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் எமோஷனல் கலந்து சொன்ன விதம் எடுபடுகிறது. உயர்ந்தவன் தாழ்ந்தவன், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டு சமூக அக்கறையுடன் சொன்ன விதம் பாராட்டுக்குரியது.

குடியரசுத் தலைவரை அப்படி அசால்ட்டாகச் சந்திக்க முடியுமா, விமானத்தை அசாதாரணமாக ராணுவப் பயிற்சி மையத்தில் அத்துமீறித் தரையிறக்க முடியுமா, தொழிலதிபர்களுக்காக அரசு அதிகாரிகள் அவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா போன்ற கேள்விகளும், செயற்கையான சில சினிமாத்தனங்களும் படத்தில் இருப்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் அதையே பெருங்குறையாகச் சொல்லிவிடவும் முடியாது.

மொத்தத்தில், சூரரை மட்டுமல்ல, பரிசோதனை முயற்சிக்காக சூர்யாவையும், மேக்கிங் மூளைக்காக சுதா கொங்கராவையும் போற்றலாம்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/600828-soorarai-pottru-movie-review-4.html

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சூரரை போற்று” என்ற திரைப்படம்... சூர்யாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று, என்று பல இடங்களிலும் சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் என்ன அவங்க அப்பன் வீட்டுச் சொத்தா? | சூரரை போற்று | அரசியல் விமர்சனம் |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசனில் பார்த்துக்கொண்டே இருக்கின்றன் தொடக்கமே அந்த மாதிரி விறுவிறுப்பு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா என்னவொரு விறுவிறுப்பான படம், கடைசிவரை அசத்தல் நடிப்பு, தொய்வேயில்லை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரரைப் போற்று குறித்து கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்: “பல இடங்களில் சிரிக்கவும், அழுகவும் செய்தேன்”

3 மணி நேரங்களுக்கு முன்னர்
கோபிநாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்தேன். எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," என கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இவரின் கதையை தழுவிதான் சூரரைப் போற்று திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

"சூரரைப் போற்று திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன், கதையில் பெரும் கற்பனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் எனது புத்தகத்தின் சாராம்சம் தத்ரூபமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நிஜ ரோலர் கோஸ்டரை போல. எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கோபிநாத்.

அடுத்தடுத்து பதிவிட்டுள்ள ஐந்து ட்விட்டர் பதிவுகளில், திரைப்படத்தையும், அதில் நடித்த சூர்யாவையும், அபர்ணாவையும் மற்றும் இயக்குநர் சுதா கோங்குராவையும் வெகுவாக பாராட்டியுள்ளார் கோபிநாத்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"தனது கனவை நினைவாக்கியே தீர வேண்டும் என்ற அசாத்திய எண்ணம் கொண்ட, தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற உறுதி கொண்ட கதாபாத்திரத்தை சூர்யா வலுவாக நடித்திருந்தார். இந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊக்கமளிக்கும் ஒரு திரைப்படமாக இது உள்ளது."

சூரரைப் போற்று

பட மூலாதாரம்,AMAZON

"முழுக்க முழுக்க ஒரு ஆணை மையப்படுத்திய கதையில் சூர்யா நாயகனாகவும், அதே சமயம் அதற்கு வலுவாக ஈடுகொடுக்கும் கதாபாத்திரத்தில் அவரின் மனைவியாக அபர்ணாவை நடிக்க வைத்து கதையை ஒரு உத்வேகமளிக்கும் நல்லுணர்வு வழியில் சமன்நிலை படுத்தியதற்கு இயக்குநர் சுதாவுக்கு பெரும் பாராட்டுக்கள்."

"அபர்ணாவால் நடிக்கப்பட்ட எனது மனைவி பார்கவியின் கதாபாத்திரம், நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென சுயமான சிந்தனைகளை கொண்ட, வலுவான பெண்மணியாக அதே நேரம் மென்மையான மற்றும் அச்சமற்ற பெண்மணியாக, கிராமத்து பெண்களுக்கு ஒரு முன்னோடியாக அது அமைந்துள்ளது. குறிப்பாக தங்களின் முயற்சியால் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இது ஒரு உத்வேகம்."

 

"பல முரண்பாடுகளை கொண்ட கிராமப்புறத்திலிருந்து வரும் ஒரு தொழில்முனைவோரின், தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான நம்பிக்கை சற்று நாடகத்தன்மையுடன் பதியப்பட்டிருந்தாலும் உண்மையை பிரதிபலிக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த கோபிநாத்?

கோபிநாத்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP VIA GETTY IMAGES

சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியானது.

இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்.

 

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.

அவர் இந்தக் கதைகளை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த கோபிநாத், துவக்கக் கல்வியை வீட்டிலேயேதான் பெற்றார். பிறகு நேரடியாக பள்ளிக்கூடத்தில் 5ஆம் வகுப்பில் சேர்ந்தார்.

அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, சைனிக் பள்ளியில் சேர்வதற்கு தேர்வெழுதி, அதில் வெற்றிபெற்றார் கோபிநாத். அப்போது அவருக்கு வயது வெறும் 11தான். இந்த முதல் வெற்றிதான் அவரது வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியது என்று சொல்லலாம். சைனிக் பள்ளியில் இருந்து நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி, அங்கிருந்து இந்திய ராணுவம் என அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்தார் கோபிநாத்.

புத்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோபிநாத் ராணுவத்தில் கேட்பனாகப் பணியாற்றும்போதுதான், 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிழக்கு பாகிஸ்தான் தொடர்பாக யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் முன்னணி அதிகாரியாக செயல்பட்ட அனுபவமும் கோபிநாத்துக்கு இருக்கிறது.

ஆனால், யுத்தத்திற்குப் பிறகு தான் வாழ்வைத் தொடர்ந்து ராணுவத்திலேயே கழிக்க கோபிநாத் விரும்பவில்லை. 28 வயதிலேயே ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்.

ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்த காலகட்டம். நாம் ஏன் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை ஆரம்பிக்கக்கூடாது என நினைக்கிறார் கோபிநாத். அப்போது அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான முதலீடு ஏதும் அவரிடம் இல்லை.

இருந்தபோதும் முயற்சிகளைத் துவங்குகிறார் அவர். அது ஒரு இமாலயப் பணியாக அமைகிறது. குறிப்பாக, அரசின் ஒவ்வொரு துறைகளிடமும் அனுமதி வாங்குவதென்பது ஒரு சாகசக் கதையாகவே இருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-54930740

Link to comment
Share on other sites

நல்ல படம். பிள்ளைகளுடன் இருந்து பார்க்க கூடிய, பார்க்க வேண்டிய படம். 

எந்தப் பெரிய கனவும் தகுந்த முயற்சிகளும் தோல்விகளை கடந்து வரும் தைரியமும் இருந்தால் நிறைவேறும்  என்பதை நல்ல காட்சியமைப்புகள் மூலம் காட்டியுள்ளார்கள். சூர்யாவினதும், அபர்ணாவினதும் (அகன்ற விழிகளும்) நடிப்பு அருமை. பாடல்களும் பின்னனி இசையும் நல்லா வந்துள்ளது.

கொவிட் காலத்தில் எதிர்மறை சிந்தனையை வலுப்படுத்தாமல், நேர்மறை எண்ணத்தை வலிமையாக தூண்டுகின்றது சூரரை போற்றி.

ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்..! :innocent:

அப்புறம்..? 🤗

தூங்கிட்டேன்..! 🙃

Link to comment
Share on other sites

அண்மைக்காலமாக பெண் இயக்குனர்கள் தமிழில் தரமான படங்களை தந்து கொண்டு இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

ஆத்திசூடி வரிகள்:

 

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்

ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை
பல தாங்கேல்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்

கத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
கைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்

சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்

ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்

தொன்மைக்கு அஞ்சேல்¢
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்

நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்

நேர்படப் பேசு ...........................

 

                       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிடித்தது, படத்தின் தலைப்பு "சூரரைப் போற்று" 👌

தீபாவளி அன்றாவது தூங்காமல் பார்க்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

----ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

நிழலி... 💖  நாங்கள், திராவிடர்... அசுரர்...‼️  அரக்கனாகிய,    இராவண வம்சத்தை சேர்ந்தவர்கள். ⁉️
அது...  ஆரிய, பிராமணருக்கு பிடிக்காது. 😎
(சில வேளை.. யாழ் களத்திலும், சிலருக்கும் பிடிக்காது.)
இதனையே... சீமான், "நாம் , தமிழர்... என்று, தமிழகம் எங்கும்... சொல்கிறார்"  :)

அதனை.. வெற்றிகரமாக செயல் முடிப்பவன்... 
இந்த... மண்ணின், சொந்த உரிமையாளர்களே... தவிர,
வடக்கு... இந்தியனினதும், தெலுங்கன், கர்நாடகன், மலையாளத்தவன் போன்றவர்களின்  
அற்ப சுய ... லாபங்களுக்காக...  விட்டுக் கொடுக்காமல், ஊரோடு.. சேர்ந்து போராடினால்...
எந்த... உச்சத்தையும், தொட  முடியும் என்றே.. அந்தப் படத்தின்... கதை சொல்கின்றது.

"நாம் தமிழர்"   என்று... ஒற்றுமைப்  படாவிட்டால்,   
இந்தியாவில்... தமிழர் என்ற இனமே... அழிந்து  விடும் நிலையில்...
மத்திய அரசு... கீழடியில்  இருந்து,  அனைத்து தகவல்களையும்... 
மற்றைய மாநிலங்களின்... ஒத்துழைப்புடன்,  
மிக.. கச்சிதாமாக  நிறைவேற்றிக் கொண்டு இருப்பதை...
நாங்கள்.. தடுக்கவில்லை, என்றால்... எனது பிள்ளைகள் தடுப்பார்கள் என நம்புவது...
காலம் கடந்த.. செயல்.

இன்றுள்ள... சந்தர்ப்பத்தை, நாங்களே.. அந்தத் தலைவனுக்கு.. 
ஒத்துழைப்பு கொடுத்து... எமது, ஆசையை நிறை வேற்றுவதே... சிறப்பு.... என்பதனை...
அந்தப் படம், அழகாக சொல்கின்றது.

டிஸ்கி: இந்தப் படம்... ஈழப் போராட்டத்தின் தோல்வியை... 
உங்கள் கண் முன்னே.. கொண்டு வந்தால்... நீங்களும், தமிழன் தான்.
மாறாக.... எது வந்தாலும்....  நீங்கள், எமது இனத்தவரே...
அந்தப் பக்குவம், எமக்கு என்றும்... வேண்டும்.  :)

Link to comment
Share on other sites

50 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... 💖  நாங்கள், திராவிடர்... அசுரர்...‼️  அரக்கனாகிய,    இராவண வம்சத்தை சேர்ந்தவர்கள். ⁉️
அது...  ஆரிய, பிராமணருக்கு பிடிக்காது. 😎
(சில வேளை.. யாழ் களத்திலும், சிலருக்கும் பிடிக்காது.)
இதனையே... சீமான், "நாம் , தமிழர்... என்று, தமிழகம் எங்கும்... சொல்கிறார்"  :)

அதனை.. வெற்றிகரமாக செயல் முடிப்பவன்... 
இந்த... மண்ணின், சொந்த உரிமையாளர்களே... தவிர,
வடக்கு... இந்தியனினதும், தெலுங்கன், கர்நாடகன், மலையாளத்தவன் போன்றவர்களின்  
அற்ப சுய ... லாபங்களுக்காக...  விட்டுக் கொடுக்காமல், ஊரோடு.. சேர்ந்து போராடினால்...
எந்த... உச்சத்தையும், தொட  முடியும் என்றே.. அந்தப் படத்தின்... கதை சொல்கின்றது.

"நாம் தமிழர்"   என்று... ஒற்றுமைப்  படாவிட்டால்,   
இந்தியாவில்... தமிழர் என்ற இனமே... அழிந்து  விடும் நிலையில்...
மத்திய அரசு... கீழடியில்  இருந்து,  அனைத்து தகவல்களையும்... 
மற்றைய மாநிலங்களின்... ஒத்துழைப்புடன்,  
மிக.. கச்சிதாமாக  நிறைவேற்றிக் கொண்டு இருப்பதை...
நாங்கள்.. தடுக்கவில்லை, என்றால்... எனது பிள்ளைகள் தடுப்பார்கள் என நம்புவது...
காலம் கடந்த.. செயல்.

இன்றுள்ள... சந்தர்ப்பத்தை, நாங்களே.. அந்தத் தலைவனுக்கு.. 
ஒத்துழைப்பு கொடுத்து... எமது, ஆசையை நிறை வேற்றுவதே... சிறப்பு.... என்பதனை...
அந்தப் படம், அழகாக சொல்கின்றது.

டிஸ்கி: இந்தப் படம்... ஈழப் போராட்டத்தின் தோல்வியை... 
உங்கள் கண் முன்னே.. கொண்டு வந்தால்... நீங்களும், தமிழன் தான்.
மாறாக.... எது வந்தாலும்....  நீங்கள், எமது இனத்தவரே...
அந்தப் பக்குவம், எமக்கு என்றும்... வேண்டும்.  :)

தமிழ் சிறி, நீங்கள் சூரர் என்பதை சூத்திரர் என்று நினைத்து விட்டீர்களோ என நினைக்கின்றேன்.

இப்படத்தின் இயக்குநர் சுதா சூரர் என்றால் அறிவாளி என்று அர்த்தம் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இன்னொருவர்  லிங்க் தந்து உதவினார்

https://tamilminutes.com/entertainment/soorarai-potru-title-explained-by-sudha/cid1258012.htm

ஆனாலும் சூரன் என்றால் வீரன் என்ற பொருளில் தான் பாரதியார் பயன்படுத்தி இருக்கின்றார். வீரனை போற்று என்று. நாங்கள் தமிழில் அசகாயசூரன் என்று எவரது துணையும் இன்றி வெல்பவரை குறிப்பிடுவதுண்டு.

இக் கதை கர்னாடகத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோபினாத்தின் சொந்தக் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட கதை. பிராமண குலத்தில் இருக்கும் ஒரு பிரிவு தான் அய்யங்கார் பிரிவு. இப் படம் மலையாளம், கர்னாடகம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்து இருக்கு, 

இதைப் பார்த்து விட்டு "நான் கன்னடன்' என்று கொலரை தூக்கிப் பிடிக்க சிலர் கன்னடர்கள் முனையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மிகவும் பிடித்தது, படத்தின் தலைப்பு "சூரரைப் போற்று" 👌

தீபாவளி அன்றாவது தூங்காமல் பார்க்கணும்.

ஏற்கனவே ரிலீஸ் ஆகிட்டுது இணையத்தில் hd  தரத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி, நீங்கள் சூரர் என்பதை சூத்திரர் என்று நினைத்து விட்டீர்களோ என நினைக்கின்றேன்.

இப்படத்தின் இயக்குநர் சுதா சூரர் என்றால் அறிவாளி என்று அர்த்தம் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இன்னொருவர்  லிங்க் தந்து உதவினார்

https://tamilminutes.com/entertainment/soorarai-potru-title-explained-by-sudha/cid1258012.htm

ஆனாலும் சூரன் என்றால் வீரன் என்ற பொருளில் தான் பாரதியார் பயன்படுத்தி இருக்கின்றார். வீரனை போற்று என்று. நாங்கள் தமிழில் அசகாயசூரன் என்று எவரது துணையும் இன்றி வெல்பவரை குறிப்பிடுவதுண்டு.

இக் கதை கர்னாடகத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோபினாத்தின் சொந்தக் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட கதை. பிராமண குலத்தில் இருக்கும் ஒரு பிரிவு தான் அய்யங்கார் பிரிவு. இப் படம் மலையாளம், கர்னாடகம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்து இருக்கு, 

இதைப் பார்த்து விட்டு "நான் கன்னடன்' என்று கொலரை தூக்கிப் பிடிக்க சிலர் கன்னடர்கள் முனையலாம்.

URGENT: Leaked documents show White House is planning executive order to  censor the Internet

இப்படி... பண்ணீட்டிங்களே...... நிழலி / சூர்யா.....  ‼️

நிழலி... ஒவ்வொருவர் பார்வையிலும்,  திரைப்படங்கள்... 
வித்தியாசமான பார்வையில்.... நோக்கப் படும் என்பதனை, 
நீங்கள்.. நன்கு, அறிந்து இருப்பீர்கள் என, நம்புகின்றேன்.

சினிமாவில்...  பல சொற் பிரயோகங்களை, "சென்சார்" குழுவினரின் பார்வையில் தப்பி... 
நாசூக்காக... பாமர  மக்களிடம், கொண்டு சேர்க்க வேண்டும் என்றே...
சில... படங்கள், வெளியே வெற்றிகரமாக வலம்,  வருகின்றது. 

அதிலும்... இந்திய ஊழல், அதிகார, பிராமண  கொழுப்பை... 
இந்தப் படத்தில்.... கிழித்து... எறிகின்றான், படத்தின்.. கதாநாயகன்  மாறன்.

அதிலும்... இந்தியாவின்,  பெருமைக்குரிய...  ஜனாதிபதியாக இருந்த....
அப்துல் கலாம் அய்யா... அவர்கள்... 
"மதுரைப் பையனா....."   உள்ளே... அனுப்புங்க...
என்று சொல்லிய... காட்சி, இந்தப் படத்திற்கு ஒரு வெற்றி. 

சீமான்... என்றால், உங்களுக்கு.. அலர்ஜி என்று... எமக்கு தெரியும் நிழலி...
பீறிட்டு... கிளம்பும், தமிழ் எரிமலையை, 
சாதா... போர்வையால்.. மூட முடியாது.  என்பது தான்...  உண்மை. :)

 

காணொளியை... பார்த்த, அனைவருக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே ரிலீஸ் ஆகிட்டுது இணையத்தில் hd  தரத்தில் 

நன்றி, தகவலுக்கு திரு.பெருமாள்.

அமேசான் ப்ரைமில் தான் 12 ந் திகதி நள்ளிரவில் 1080p தரத்தில் பார்த்தேன்.

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நன்றி, தகவலுக்கு திரு.பெருமாள்.

அமேசான் ப்ரைமில் தான் 12 ந் திகதி நள்ளிரவில் 1080p தரத்தில் பார்த்தேன்.

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

"தூங்காமல் பார்த்த" என்ற வாக்கியத்தையும் சேர்த்து கொள்ளவும்....!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சார்!  நீங்கள் கடைசியாய் பார்த்த சுவாரசியமான பத்து  தமிழ் படங்கள் கூறவும்? 😎

கைதி
தீரன் அதிகாரம் ஒன்று
மாநகரம்
இமைக்கா நொடிகள்
இரும்புத் திரை
தடம்
இரவுக்கு ஆயிரம் கண்கள்
ராட்சசன்
வேலையில்லா பட்டதாரி
அசுரன்
வெள்ளை பூக்கள்
யாகாவராயினும் நா காக்க
துப்பாக்கி
யுத்தம் செய்
மாயவன்
அடங்க மறு
காக்க முட்டை
பசங்க
நெஞ்சில் துணிவிருந்தால்
பாண்டிய நாடு
குள்ள நரிக் கூட்டம்
ராஜதந்திரம்
இன்று நேற்று நாளை
அதிதி
டிமான்டி காலனி
வட சென்னை
ஈட்டி
ஈரம்
தலைமுறைகள்
வெற்றிவேல்
சுந்தரபாண்டியன்
கே.டி. (எ) கருப்புத் துரை

...

இன்னும் சில படங்கள் இருக்கிறது சார்..! :)

4 hours ago, suvy said:

"தூங்காமல் பார்த்த" என்ற வாக்கியத்தையும் சேர்த்து கொள்ளவும்....!  😎

நல்லா உசுப்பேத்தி விடுறீங்கள்..😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

நல்ல படம். பிள்ளைகளுடன் இருந்து பார்க்க கூடிய, பார்க்க வேண்டிய படம். 

எந்தப் பெரிய கனவும் தகுந்த முயற்சிகளும் தோல்விகளை கடந்து வரும் தைரியமும் இருந்தால் நிறைவேறும்  என்பதை நல்ல காட்சியமைப்புகள் மூலம் காட்டியுள்ளார்கள். சூர்யாவினதும், அபர்ணாவினதும் (அகன்ற விழிகளும்) நடிப்பு அருமை. பாடல்களும் பின்னனி இசையும் நல்லா வந்துள்ளது.

கொவிட் காலத்தில் எதிர்மறை சிந்தனையை வலுப்படுத்தாமல், நேர்மறை எண்ணத்தை வலிமையாக தூண்டுகின்றது சூரரை போற்றி.

ஒன்றும் மட்டும் விளங்கவில்லை, இதற்கு ஏன் சூரரை போற்றி என பெயரிட்டார்கள் என. இதன் அர்த்தம் என்ன?

எல்லாம் சரி. ஆனால் தலைப்பு பிழை. அப்படியா ... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 12:01, Kapithan said:

எல்லாம் சரி. ஆனால் தலைப்பு பிழை. அப்படியா ... 😁

திரைப்பட விமர்சனங்களும் ஒருவித விளம்பரங்கள் தானே? அது எந்த கோட்பாட்டில் இங்கே எப்படி?
நாம் தமிழர் கட்சி திரி விளம்பரமெண்டால் இந்த திரி என்ன மாதிரி.....🤣
ஐயோ கடவுளே நான் இதை கேக்கேல்லை. ஒரு சில  அடியார்மட பக்த்தர்மார் கேக்கினம்...🧐

ஏனைய திரிகளில் தட்டி கேட்பவர்கள் இங்கே வந்து தட்ட மாட்டார்களா? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல படம் என்று அறிந்தேன்! அரசியல் அமைப்புகளின் வன்முறை, பிரிவினை தூண்டும் காணொளிகள் போல் அல்லாமல் நல்ல கருத்துக்களை விதைக்கும் படம் என்பதால் குடும்பத்தோடு பார்க்க வேண்டுமெனப் பரிந்துரை செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

மிக நல்ல படம் என்று அறிந்தேன்!

நான் ஒழுங்காக படம் பார்க்கும் இரசிகன் இல்லை.ஆனால் இந்த படம் பற்றி இவர் சொன்னதே எனக்கு சரியாக தெரிகிறது.

On 13/11/2020 at 22:22, ராசவன்னியன் said:

பார்த்த சில நிமிடங்களில் அப்படியொன்றும் சுவாரசியம் இல்லாததால், அப்படியே தூங்கிவிட்டேன்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மிக நல்ல படம் என்று அறிந்தேன்! அரசியல் அமைப்புகளின் வன்முறை, பிரிவினை தூண்டும் காணொளிகள் போல் அல்லாமல் நல்ல கருத்துக்களை விதைக்கும் படம் என்பதால் குடும்பத்தோடு பார்க்க வேண்டுமெனப் பரிந்துரை செய்யலாம்!

சோவியத் யூனியன், நிக்கரகுவாவின் சன்ரனிஸ்ரா(?), பலஸ்தீனம், கியூபா, எரிற்றியா, வட அயர்லாந்து, பற்றிஸ் லுமும்பாவின் கென்யா, தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம், இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற முயன்றது போன்ற பிரிவினைப் போராட்டங்களைக் குறிப்பிடுகின்றீர்கள் போல...... 🤔

 

ஹி..ஹி..ஹி.... 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.