Jump to content

உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு

-அ.நிக்ஸன்-

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொருளாதார நகர்வுகளினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் சுயமரியாதைப் பாதிப்புகள் பற்றியே அதிகமாக விபரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உலகத் தலைவர்கள், அவர்கள் மேற்கொண்ட பூகோள அரசியல் செயன்முறைகள் பற்றியும் உலகத்துக்கு அமெரிக்கா ஓர் சிறந்த நாடு என்ற கருப்பொருளின் மையமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் அதிகாரத்தை எப்படிப் பண்முகப்படுத்துவது என்பதே இந்நூலின் பிரதான அவதானிப்பாகவுள்ளது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டுவரையான தனது ஆட்சிக்கால அனுபவங்கள் பற்றியும் அமெரிக்கா என்ற சக்தியின் பலம் பற்றியதாகவும், அமெரிக்கா அடக்கி ஆழும் சக்தியல்ல என்ற கருத்தை முதன்மைப்படுத்தியுமே இந்த நூல் அமைந்துள்ளது.

புறொமிஸ் லான்ட் என்ற இந்த நூல் தொடர்பாக  வெள்ளிக்கிழமை வெளியான நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கண்ணோட்டம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கும் அவருடைய ஜனநாயகக் கட்சிக்கும் ஆதரவான நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை, புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் என்ற நூல் உந்துசக்தியாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ளது.

உலகத் தலைவர்களில் இந்தியாவின் காங்கிராஸ் தலைவி சோனியா காந்தி, சிறந்த தலைவர் எனவும் ஆண் ஊழியர்களுக்கு எதிரான பெண் ஊழியாளர்களின் முறைப்பாடுகள் பற்றி நிதானமாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பவர் எனவும் ஒபாமாவின் நூலில் கூறப்பட்டுள்ளதாக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் கண்ணோட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாரி கிளிங்டன் சிறந்த பெண் தலைமத்துவ அதிகாரியெனவும் கிளாரி கிளிங்ரனுக்குச் சோனியா காந்தியே சிறந்த வழிகாட்டியாக அமைந்திருந்தாரென்றும் ஒபாமா தனது நூலில் சித்தரித்துள்ளார்.

ஆனால் சோனியா காந்தியின் மகன் ராகூல் காந்தி அரசியல் செயற்பாடுகளில் நிதானமற்றவர் என்றும் பதற்றத்துடனேயே எப்போதும் அவர் காணப்படுவதாகவும் தனது நூலில் ஒபாமா விமர்சித்துள்ளார். ராகூல் காந்தி இந்தியாவின் அடுத்த தலைவர் என்ற கருத்து ஒபாமாவின் விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்த அளவுக்கு ராகூல் காந்தியை, ஒபாமா பலவீனமான அரசியல் செயற்பாட்டாளராகவே கருதுகின்றாரென்பது அவருடைய கருத்து வெளிப்பாட்டில் இருந்து தெரிகிறது.

டொனால்ட் ட்ரம் நரகத்துக்குப் போகட்டும் என்றுதான் செனட் சபை உறுப்பினரான ஹிறகாம் தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் பற்றிய விபரங்கள் செயற்பாடுகள் பற்றியும் ஆழமாகத் தனது நூலில் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்சி செய்த பராக் ஒபாமா, தன்டைய ஆட்சிக்கால நிகழ்வுகள், அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றித் தனது நூலில் விபரித்துள்ளார்.

அதேவேளை, இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் மற்றும் சீன ஆதிக்கம் பற்றியும் ஈழத் தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் தொடர்பாகவும், புறொமிஸ் லான்ட் என்ற நூலில் எழுதப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் கண்ணோட்டத்தில் கூறப்படவில்லை. ஆனால் எழுநூற்று 68 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் நிச்சயமாக இந்த விடயங்கள் எழுதப்பட்டிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

spacer.png

ஏனெனில் 2009ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே, அந்த ஆண்டு மே மாதம் இலங்கைத் தீவில் இறுதிப் போர் நடந்தது.

அதனால் ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூலில் நிச்சயம் ஈழப் போராட்டம் பற்றிய சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கும். ஆனாலும் நூல் வெளிவந்த பின்னரே அது பற்றி வாசித்து அறியக் கூடியதாக இருக்கும்.

சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சிக்கு சென்ற புதன்கிழமை 60 நிமிட நேர்காணல் ஒன்றை வழங்கிய ஒபாமா, இந்த நூலை எழுதுவதற்குக்கான காரணங்கள் பற்றியும் அமெரிக்காவின் தூய்மைச் செயற்பாடுகள். நோக்கங்கள் குறித்தும் உலக மக்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

டொனால் ட்ரம்பின் ஆட்சிக்குப் பின்னரான அமெரிக்கா எப்படி இருக்க வேண்டும் என்றும் ட்ரம்பினுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை அமெரிக்காவின் இருண்ட யுகம் என அமெரிக்க அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

எழுநூற்று 68 பக்கங்களைக் கொண்ட புறொமிஸ் லான்ட் என்ற நூல் $27 அமெரிக்க டொலருக்கு (இலங்கைப் பெறுமதியில் 5 ஆயிரத்து 130 ரூபாவுக்கு) விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவரை மூன்று மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. எழுத்தாளரும் நூல் வெளியீட்டின் உரிமையாளரும் ஒபாமா என்றே அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.samakalam.com/செய்திகள்/உலக-அரசியலை-புரட்டிப்-போ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை – ஜோ பைடன் எச்சரித்தார்- ஹிலாரி ஆதரித்தார் – தனது நூலில் பராக் ஒபாமா

November 16, 2020

ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை குறித்து ஜோ பைடன் தன்னை எச்சரித்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நாளை வெளியாகவுள்ள புரொமிஸ்ட் லான்டில் தெரிவித்துள்ளார்.

promised-land.jpg

நேவி சீல்ஸ் நடவடிக்கை குறித்த கலந்தாலோசனையின் போது ஜோ அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார் என ஒபாமா எழுதியுள்ளார்.
2011 மே மாதம் முதலாம் திகதி ஒபாமா நேவிசீல்ஸ் குழுவை பாக்கிஸ்தான் அனுப்பியிருந்தார்.

osama-killing-300x180.jpg

தோல்வியால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து பைடன் எச்சரித்திருந்தார், குறிப்பிட்ட வீட்டினுள் பின்லேடன் இருப்பதை புலனாய்வு பிரிவினர் உறுதியாக உறுதிப்படுத்தும்வரை தாக்குதல் குறித்த முடிவை ஒத்திவைக்கவேண்டும் என பைடன் கேட்டுக்கொண்டார் என பராக் ஒபாமா எழுதியுள்ளார்.
ஜனாதிபதியாக நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் உறுதியாகயிருந்தது போன்று, நடைமுறையில் உள்ள மனோநிலைக்கு எதிராக கடினமான கேள்விகளை கேட்கும் ஜோவின் இயல்பினை நான் பாராட்;டினேன், எனது சொந்த உள்மனவிவாதங்களுக்கான இடத்தை தருவதற்கான ஆர்வம் காரணமாகவே அவர் அவ்வாறு கேள்வி எழுப்பினார்என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

osama-1.jpg

டெசேர்ட் ஒன் ஒத்திகையின் போது பைடன் வோசிங்டனில் இருந்தவர் என்பது எனக்கு தெரியும் எனவும் ஒபாமா எழுதியுள்ளார்.
ஈரானில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை மீட்பதற்கான நடவடிக்கையே டெசேர்ட் ஒன்.
இந்த நடவடிக்கையின் போது ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியதுடன் எட்டு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது குறித்த ஜிம்மி கார்ட்டரின் கனவுகளை தவிடுபொடியாக்கியது.
ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கையின் போது பாதுகாப்பு செயலாளராக விளங்கிய ரொபேர்ட் கேட்ஸ் , எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகள் தோல்வியடையலாம், என எனக்கு தெரிவித்தார் எனவும் ஒபாமா எழுதியுள்ளார்.

osama-killing-1-300x157.jpg

இது நடவடிக்கையில் ஈடுபடவுள்ள படையணிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் , இந்த நடவடிக்கை தோல்வியடைந்தால் அது ஆப்கானில் அமெரிக்க படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார் என ஒபாமா எழுதியுள்ளார்.
அது நிதானமான-நன்கு நியாயமான மதிப்பீடு என ஒபாமா தெரிவித்துள்ளார்.
சீல்விசேட பிரிவினர் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில், எங்கள் இறுதி உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தவேளை வெள்ளைமாளிகையில் கடும் ஆலோசனையை மேற்கொண்டிருந்த நானும் ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கை வெற்றிபெறுவது 50-50 வீதமே சாத்தியம் என நம்பினேன் எனவும் எழுதியுள்ளார்.
சிஐஏ தலைவர் லியோன் பனேட்டா,உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பிரெனன்,முப்படைகளின் பிரதானி அட்மிரல் மைக்முல்லென் ஆகியோர் ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றனர் எனவும் பராக் ஒபாமா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இராஜாங் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நடவடிக்கை வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் 51- 49 என கருதியதுடன் நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்ற தரப்பிற்கு ஆதரவாகயிருந்தார் எனவும் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டதும் ஜோ பைடன் எனது தோளில் தனது கையை வைத்து அழுத்தினார், பாராட்டுக்கள் பொஸ் என்றார் என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்

 

https://thinakkural.lk/article/89733

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கொப்பியடிக்கப் போய்த்தான் ட்ரம்ப் ஈரானிய ஜெனரலைக் கொலை செய்தது! இதன் விளைவு இனி பைடன் போய் ஒலிவ் இலை நீட்டினாலும் ஈரானியர் திரும்பி வர மாட்டார்கள் ஒப்பந்தத்திற்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.