Jump to content

ஒரு முறை பாருங்ககள்


Recommended Posts

என்... 

கருத்துக்கள்.....!!!

சிறுபிள்ளைத்தனமாகவோ ..... 
குழந்தைத்தனமாகவோ ..... !!!

செத்ததாகவோ...... 
இத்ததாகவோ........ 
இருக்கலாம்..... !!!

என்றாலும் ஒருமுறை பாருங்கள்......!

அதிலிருந்து உங்களுக்கு.... 
புதிய கருத்துக்கள்.. 
தோன்றலாம்..... !!!

@
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

உரத்து அழைத்தேன் 

அல்லா வரவில்லை.... !

 

மௌனமாக செபம்... 

சொன்னேன்.... 

ஜேசுவும் வரவில்லை.... !

 

அலங்காரத்தோடு... 

மந்திரம் உச்சரித்தேன்... 

சிவனும் வரவில்லை..... !

 

முத்திரையோடு... 

தியானம் செயதேன்.... 

புத்தனும் வரவில்லை.... !

 

வியந்தேன்....? 

 

டேய் சும்மா இரு... 

என்றான் சித்தன் 

சிரித்தேன்....... !!!

@

கவிப்புயல் இனியவன் 

 

Link to comment
Share on other sites

எங்கே போகிறாய்.... 

என்று கேட்டது... 

ஆழ்மனம்...... !

 

தெரியாமல்..... 

தத்தளிக்கிறேன்.... 

என்றது சுழல்மனம்..... !

 

என்னோடு வா.... 

என்றது ஆழ்மனம்...... !

 

உன்னோடு வரமாட்டேன்..

என்றது சுழல்மனம்..... !

 

என்னோடு இணைவதே.. 

உன் பிறப்பின் நோக்கம் 

என்றது ஆழ்மனம்.... !

 

உன்னோடு வந்தால்.. 

என்னை சித்தனாக்கி... 

விடுவாய் என்றது... 

சுழல் மனம்..... !

 

அதனால் என்ன..? 

என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது என்றது... 

சுழல்மனம்.... !

 

சிரித்து கொண்டே... 

அடங்கியது.... 

ஆழ்மனம்...... !!!

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

என்.... 

கருத்துக்கள்.... 

கோபத்தை ஏற்பாடுத்தலாம்.... !

 

வெறுப்பையும்... 

ஏற்பாடுத்தலாம்....!

நையாண்டியாக.... 

இருக்கலாம்...... !

ஏற்க மனம் மறுக்கலாம்..!

 

என்றோ ஒரு நாள்.... 

என் கருத்துக்கள்.... 

உங்கள் வாழ்க்கையாக... 

மாறும்........ !

 

அப்போது புரியும்... 

இந்த பித்தனின்... 

அருமை....... !!!

---சொன்னவர் என் தேசிய குரு ---

@

கவிப்புயல் இனியவன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கவிப்புயல் இனியவன் said:

அதனால் என்ன..? 

என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது என்றது... 

சுழல்மனம்.... !

 

சிரித்து கொண்டே... 

அடங்கியது.... 

ஆழ்மனம்...... !!!

@

கவிப்புயல் இனியவன் 

இன்னும் எனக்கும் வயதிருக்கு... அனுபவித்துவிட்டு சித்தனாவோம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இன்னும் எனக்கும் வயதிருக்கு... அனுபவித்துவிட்டு சித்தனாவோம்😂

இன்னுமா 

Link to comment
Share on other sites

கவிதைகள் அருமை கவி அவர்களே! இருந்தும் கவவிதைக்கு ஒரு கண்ணூற்றுப் பொட்டு.

16 hours ago, கவிப்புயல் இனியவன் said:

முத்திரையோடு... 

தியானம் செய்தேன்.... 

புத்தனும் வரவில்லை.... !

புத்தன் வராவிட்டாலும் புத்தனின் காவற்படை வந்திருக்குமே,,,,?? ஏளனம் அல்ல உண்மை கவி அவர்களே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளுக்கு நன்றி கவிப்புயல்.....!  👏

Link to comment
Share on other sites

On 15/11/2020 at 13:00, Paanch said:

கவிதைகள் அருமை கவி அவர்களே! இருந்தும் கவவிதைக்கு ஒரு கண்ணூற்றுப் பொட்டு.

புத்தன் வராவிட்டாலும் புத்தனின் காவற்படை வந்திருக்குமே,,,,?? ஏளனம் அல்ல உண்மை கவி அவர்களே!!

புரிகிறது 

Link to comment
Share on other sites

 மனிதனின் ......

எல்லா செயல்களும் .... 

சிலுவையாக மாறுகின்றன .... 

விளைவுகள்  ஆணியாக.... 

அறையப்படுகின்றன....!

........ 

குடும்பம் என்னும் உறவை .... 

சிலுவையாய் சுமக்கிறான் .... 

அன்பு என்னும் ஆணியால் ..... 

அறையப்படுகிறான்.....!

.......

கல்வி, பதவி, என்னும் .... 

சிலுவையை சுமக்கிறான் ..... 

அதிகாரம் என்னும் ஆணியால் ..... 

அறையப்படுகிறான்.....!

.......

உழைப்பு, வருமானம் எனும் ... 

சிலுவையாய் சுமக்கிறான் .... 

விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... 

அறையப்படுகிறான்.....!

.......

போட்டி வெற்றி என்னும் .

சிலுவையாய் சுமக்கிறான் .... 

பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... 

அறையப்படுகிறான்.....!

......

அத்தனை சுமைகளையும் 

சுமக்கும் மனிதனுக்கு .... 

விடுதலை ஒன்றே விடுதலை .... 

ஓடும் புளியம்பழம் போல் 

வாழ்வதே விடுதலை .....!

.....

@

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிலுவையை மற்றவர்கள் சந்தோஷமாக வாழ சுமந்தால் வலியில்லை, நான் மட்டும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று சுமந்தால் அது தீராத வலி.

" ஓடும் புளியம்பழம் போல் வாழ்வதே விடுதலை" 

நல்ல வரிகள் வாழ்கையை சந்தோஷமாக வாழ, ஏதிர்பாப்பதால்தான் நிம்மதி கெடுகின்றது

Link to comment
Share on other sites

On 20/11/2020 at 10:24, உடையார் said:

 

சிலுவையை மற்றவர்கள் சந்தோஷமாக வாழ சுமந்தால் வலியில்லை, நான் மட்டும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று சுமந்தால் அது தீராத வலி.

" ஓடும் புளியம்பழம் போல் வாழ்வதே விடுதலை" 

நல்ல வரிகள் வாழ்கையை சந்தோஷமாக வாழ, ஏதிர்பாப்பதால்தான் நிம்மதி கெடுகின்றது

உண்மை : நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

எத்தனையோ......
கடவுளின் உருவங்கள்.....
அத்தனையையும் அழகாக.....
சிலையாக வடித்துவிட்டான்.....
மனிதன்..........!
 
இத்தனை கடவுளை வடித்த.......
மனிதனால் ஒரு மனிதனை......
இனங்கான முடியவில்லை.......
அவனுக்கொரு சிலையை.......
வடிக்க முடியவில்லை.......?
&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
சமுதாய விழிப்புணர்வு கவிதை
Link to comment
Share on other sites

யோகா கவிதை 
........... 
வலது மூச்சு..... 
சூரிய கலை.... !
இடது மூச்சு.... 
சந்திர கலை.... !
இருதுவாரம்.... 
சுழுமுனை..... !

சூரிய கலையில்.... 
தியானம் செய்.... !
சந்திர கலையில்... 
பயணம் செய்... !
சுழுமுனையில்.... 
அமைதியாக இரு.... !!!

@
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகக்கலையில் மூச்சுப் பயிற்சியை மிக எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.....நீங்கள் யோகாசனம் செய்பவரா.....!  😁

Link to comment
Share on other sites

19 hours ago, suvy said:

யோகக்கலையில் மூச்சுப் பயிற்சியை மிக எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.....நீங்கள் யோகாசனம் செய்பவரா.....!  😁

ஆம் சரகலை, மற்றும் எளிய குண்டலினி யோகா தியானம் செய்வேன். இத் துறையில் உப பேராசிரியர் பட்டம்  வரை பயின்றேன். 

நன்றியுடன் 

கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

  • 1 month later...

என் அன்புள்ள ரசிகனுக்கு

கவிப்புயல் எழுதும் கவிதை
---------------------------------------
ஒரு
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள்
என்னை ஊனமாக்கி மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!

#

என்இரவுகளின் வலி......
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும்.....
இதயத்துக்கு புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!

#

என்
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!

#

வேதனையில்
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!

#

பள்ளி
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

காதல் என்றால் என்ன ...?
காதலித்துப்பார் புரியும் ...!
^
காதலிப்பது எப்படி ...?
காதலோடு பார் வரும் ...!
^
காதலோடு பார்ப்பது ...?
அன்போடு பார் புரியும் ....!
^
அன்போடு பார்ப்பது....?
பிரபஞ்சமாக  பார் வரும் ....!
^
பிரபஞ்சம் என்றால் ....?
பஞ்ச பூதங்களின் கூட்டு .....!
^
பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....?
பஞ்சபூத கூட்டே மனிதன் ....!
^
மனிதன் என்றால் ....?
மனிதம் நிறைத்த உள்ளம் ....!
^
மனிதம் என்றால் ....?
பகுத்தறிவோடு வாழ்வது ....!
^
பகுத்தறிவு என்றால் ...?
இத்தனை கேள்வியும் கேட்காமல் 
தானே கண்டறியும் அறிவு ....!!!

^^^

கவிப்புயல் இனியவன் 
வசனக்கவிதை

Link to comment
Share on other sites

  • 1 month later...

 பெண்மனம்
ஒரு பூமனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறர் குழந்தைக்கும்
உணவூட்டும் குணம்//

பசியோடு அழும்
உயிருக்காக அழுவாள்//

தனக்கில்லாமல் உணவை
எளியோருக்கு  கொடுப்பாள் //

உறவுகளின் குற்றத்தை
தானாகவே   ஏற்பாள் //

கிள்ளிக் கொடுக்காமல்
அள்ளிக் கொடுப்பாள் //

கணவன் துவண்டால்
வாடி விடுவாள்//

தலைவனோடு துணைநின்று
தூங்காமல்  உழைப்பாள் //

பெரியோரை மதித்து
மகிழ்வோடு வாழ்வாள்//

குழந்தைப் பருவத்தில்
சகோதரத்தை காப்பாற்றுவாள் //

முழுவிழி தூங்காது
அரைவிழி தூங்குவாள் //

பூவைப்போல் மென்மை
கசங்கி போகமாட்டாள் //

பூமனத்தை கிள்ளினால்
 பூகம்பமாய்
 வெடிப்பாள் //

@

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தான கவிதைகள் புயல் ......தொடர்ந்து வீசட்டும்.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொலைந்துபோனநீதி
............. 

எழுத்து வடிவில்
இருப்பது சட்டம்//

மனசாட்சி வடிவில்
இருப்பது நீதி//

மலரும் பூக்கள்
மலரமுன்
பறிக்கப்படுகிறது//

கருவில் குழந்தை
இறக்கமின்றி நசுக்கப்படுகிறது//

பெற்ற தாய்
வீதியில் கிடக்கிறார் //

வாயில்லா ஜீவன்கள்
 கொடூரமாய் வதைக்கப்படுகிறது//


உயிர்க்காற்று தரும்
 மரங்கள் வெட்டப்படுகிறது//

அத்தனைக்கும் சட்டம் தனித்தனியேஇருக்கிறது //

சட்டை பணபைக்குள்
 சட்டம் முடங்குகிறது//

மனச்சாட்சியே சிறந்த
 மனு  நீதியாகும்//

@

 கவிப்புயல் இனியவன்
RK. Uthayan

துன்பமும் தோல்வியும் 
....... 

எதிர்பார்ப்பு தோற்றால் 
வருவது தோல்வி //

இருந்த ஒன்றை 
இழப்பது  துன்பம் //

தோற்பவன் தோல்வியை 
உரமாக எடுக்கிறான் //

துன்பத்தில் இருப்பவன் 
சுமையாக பார்க்கிறான் //

துன்பத்தையும் 
தோல்வியையும் 
இதயத்தில் சுமக்காதே //

இறந்தகாலத்தில்
வாழ்பவன் என்றும் துயரப்படுவான் //

நிகழ்காலத்தில் வாழ்பவன்
முன்னேறி செல்வான்//

தூக்கி எறியுங்கள் 
இறந்தகால நினைவுகளை//

வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு//

இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் பாதைகள் //

@

கவிப்புயல் இனியவன் 
RK. Uthayan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.