Jump to content

ஜோ பைடனை இலங்கை எப்படிச் சமாளிக்கும்? – நிலாந்தன்


Recommended Posts

மெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது.

ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ஜெயநாத் கொலம்பகே ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார் “ஐந்து ஆண்டுகளை நோக்கி அதாவது ஒவ்வொரு கட்சியும் அதன் ஆட்சிக்காலத்தை கருதி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை திட்டமிட்டக் கூடாது” என்ற தொனிப்பட.

ஆனால் இலங்கை போன்ற அடிக்கடி மாறும் வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சிறிய தீவில் வசிக்கும் தமிழர்கள் அதிலும் குறிப்பாக தங்களை ஒரு தேசம் என்று அழைத்துக் கொள்ளும் அதே சமயம் ஒரு தேசத்திற்கு தேவையான வெளியுறவுக் கொள்கையை இன்று வரையிலும் வைத்துக் கொள்ளாத மிகப் பலவீனமான தமிழர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் வருகையோடு தங்களுடைய அரசியலிலும் ஏதாவது புதிய மலர்ச்சி ஏற்படுமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஜோ பைடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது. அவருடைய வயதும் அப்படி அவர் அவர் அடுத்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருடைய வயது இடம் கொடுக்குமா? என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள். அதேசமயம் பதவியேற்றதும் இளமையும் புதுப்பொலிவு கிடைத்து விடும். எனவே அவர் மேலும் ஒரு தடவை பதவிக்குப் போட்டியிட மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது என்று ஒரு மூத்த அரசறிவியலாளர் கூறுகிறார். பைடன் ஒரு தடவை மட்டுந்தான் ஆட்சியில் இருப்பார் என்றால் நான்கு ஆண்டுகளுக்குள் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது.

ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கையில் திருப்பகரமான மாற்றங்கள் ஏற்படுவதேன்றால் அதற்கு முழு உலகத்திலும் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஒன்றில் இயற்கை பேரழிவுகள் அல்லது பெரும் தொற்று நோய்கள் அல்லது உலக மகா யுத்தங்கள் ஏற்பட்டு அதன் மூலம் பூகோள அரசியலில் வலுச் சமநிலை மாறவேண்டும். பொருளாதார வலுச் சமநிலை மாற வேண்டும். இராணுவ வலுச் சமநிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் பொழுது பேரரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏதும் ஏற்படலாம்.

அப்படி என்றால் கோவிட்-19 ஒரு பெரும் தொற்று நோய்தானே? அது ஏற்படுத்திய அழிவு அவ்வாறு திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்த போதுமானது இல்லையா? என்ற கேள்வி எழும்.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கோவிட்-19 க்குப் பின்னர் என்று கூறும் அளவுக்கு கொரோனா தொற்றலை முற்றாக நீங்கி விட வில்லை. உலகம் இப்பொழுதும் வைரசின் பிடிக்குள்தான் இருக்கிறது. அதிலிருந்து முற்றாக விடுபடவில்லை. அப்படி விடுபடும் பொழுதுதான் கோவிட்-19க்குப் பின்னரான உலகம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.

கோவிட்- 19 பொருளாதார ரீதியாக ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயம் அதன் தாக்கத்திலிருந்து முதலில் விடுபட்ட நாடு என்ற அடிப்படையில் சீனா ஏனைய நாடுகளை விடவும் முதலில் நிமிர்ந்த நாடாகக் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் சந்தைப் போட்டியில் சீனா முந்திக் கொண்டு போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாக தெரிகின்றன. இதனால் சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பனிப் போர் தீவிரமடையும்.

ஆனால் அது ஏற்கனவே உருவாகி வந்த ஒரு தோற்றப்பாடுதான். கோவிட்-19க்கு முன்னரே சீனா சந்தைப் போட்டியில் முன்னிலைக்கு வந்துவிட்டது. இது காரணமாகவே சீனாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு நிழல் போர் ஏற்கனவே கொரோனாவுக்கு முன்னரே தொடங்கி விட்டது. கோவிட்-19தையடுத்து அது மேலும் கூர்மையடைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஏற்படுத்தாது. ஏனென்றால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள வெளியுறவு கொள்கையின் பிரகாரம்தான் இந்த கெடுபிடிப் போர் தொடங்கியது. கோவிட்-19க்குப் பின் அது மேலும் கூர்மை அடையும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உடனடிக்குக் குறைவு.

ஆனால் அந்த வெளியுறவுக் கொள்கையை அமுல்படுத்துவதில் அணுகு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முன்னைய அதிபர் ட்ரம்ப் உணர்ச்சிவசப்படும் ஒருவராகவும் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டும் ஒருவராகவும் பல சமயங்களில் நிதானமற்றவராகவும் வலதுசாரி இயல்பு அதிகமுடைய ஒருவராகவும் காணப்பட்டார். அவரைப் போல புதிய அதிபர் ஜோ பைடன் இருக்க மாட்டார் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இது காரணமாக வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைகளில் ட்ரம்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் மிதமான போக்கை கடைப் பிடிக்கக்கூடும். இது ஈழத்தமிழர்களுக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

முதலாவதாக சீனாவுடனான உறவுகளில் இப்போது இருக்கும் பதட்டம் சில சமயங்களில் குறையலாம். அதாவது பனிப்போர் சூழல் ஒப்பீட்டளவில் பதட்டம் குறைந்ததாக மாறலாம். இது இலங்கை அரசாங்கத்துக்கு ஒப்பீட்டளவில் சாதகமாக இருக்கலாம். சீனாவை நோக்கி போவதில் இலங்கை தீவுக்கு உள்ள வரையறைகளை உணர்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில்தான் பொம்ம்பியோ தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்தார்.

இது விடயத்தில் ராஜபக்சக்கள் ஒரு பிராந்திய வியூகத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதாவது  இந்தியா முதலில் என்ற வெளியுறவுக் கொள்கை. அது ஒரு திரி சூல அணுகு முறை. இத்திரிசூல அணுகுமுறை மூலம் மூன்று முனைகளை ஒரே நேரத்தில் கையாளாலாம். இந்தியா- அமெரிக்கா- தமிழர்கள்.

இதன் மூலம் இந்தியாவை அமைதிப்படுத்தலாம். இப்பொழுது அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். எனவே இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கும். ஸ்ரீலங்கா இந்தியாவைச் சமாளித்தால் அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓரளவுக்கு அமெரிக்காவையும் சமாளிக்கலாம். இந்தியாவை சமாளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் மேற்கத்திய தலையீட்டைக் குறைக்கலாம்.

இதில் ஸ்ரீலங்காவுக்கு மூன்று அனுகூலங்கள் உண்டு. முதலாவது – இந்தியாவை பகை நிலைக்குத் தள்ளாத  ஓர் அணுகுமுறை. இரண்டாவது- தமிழ் மக்களை 13ஆவது திருத்தத்துக்குள் முடக்கும் ஒரு தீர்வு. மூன்றாவது – தமிழ் மக்களையும் இந்தியாவையும் தொடர்ந்தும் முரண் நிலையில் வைத்திருக்கலாம். எனவே இந்தியா முதலில் என்பது ராஜபக்சக்களைப் பொருத்தவரை மிகவும் சமயோசிதமான தற்காப்பு நோக்கு நிலையுடனான ஓரு திரி சூல அணுகுமுறை. இதன் மூலம் அவர்கள் இந்தியாவையும் சமாளிக்கலாம் தமிழ் மக்களையும் சமாளிக்கலாம் அமெரிக்காவையும் சமாளிக்கலாம்.

டிரம்ப்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் ஐநாவை  அதிகமாக நெருங்கி வருவார் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மறுபடியும் நாட்டம் காட்டலாம். அப்படி ஒரு சூழல் உருவானால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ராஜபக்சக்களின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் ராஜபக்சக்கள் இந்தியாவோடு நிற்கும் வரை அந்த அழுத்தங்களை அவர்களால் சமாளிக்க முடியும். எனவே ஜோ பைடனின் அணுகு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் இறுதியாக இந்தியாவை வெற்றிகரமாக கையாள்வதன் மூலம்  தன்னால் கையாளக் கடினமாக உள்ள தமிழ் தரப்பையும் மேற்கு நாடுகளையும் இலங்கை வெற்றிகரமாக வெட்டி ஓட முயற்சிக்கும்.

எனினும் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத் தடை போன்ற விவகாரங்களைக் கையாள்வது என்று சொன்னால் அதற்கு அமெரிக்கா வற்புறுத்தும் அதன் வியூக உடன்படிக்கைகளான எம்.சி.சி. உடன்படிக்கை சோபா உடன்படிக்கை போன்றவை தொடர்பாக முடிவுகளை மாற்ற வேண்டி இருக்கும். சவேந்திர சில்வாவின் விவகாரம் ஒரு குறியீட்டு நடவடிக்கைதான்; அது ஒரு பரந்தளவிலான கொள்கை நிலைப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல என்று ராஜபக்சக்கள் நம்ப இடமுண்டு.

அமெரிக்கா உண்மையாகவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களை தண்டிக்க விரும்பியிருந்திருந்தால் அவர்கள் முதலில் கோதாபயவை அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் துறக்க முன்பு விசாரித்திருந்திருக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத்துக்குள் வர இருக்கும் பசில் ராஜபக்ச இப்பொழுதும் அமெரிக்கப் பிரஜைதான். எனவே தன் பிரஜைகளாக இருந்த இருக்கின்ற ராஜபக்சக்களின் மீது தனது பிடியை இறுக்காத அமெரிக்கா ஒரு கருவியான சவேந்திர சில்வாவின் மீது என் பிடியை இறுக்கியது?

தவிர பொருளாதார ரீதியாக இலங்கைத் தீவின் ஆடை உற்பத்திகளை அதிகம் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. இலங்கை தீவின் மொத்த ஆடை உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 விகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா அதை என் நிறுத்தவில்லை? அதுபோன்ற தடை நடவடிக்கைகளை எடுக்காமல் ஒரு சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரவேண்டாம் என்று தடை விதிப்பது வெறும் குறியீட்டு நடவடிக்கைதான். இது விடயத்தில் அமெரிக்கா கேட்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளுக்கு இலங்கை விட்டுக் கொடுக்குமாக இருந்தால் ஜோ பைடனின் அணுகுமுறை இலங்கைக்குப் பெரிய சோதனையாக அமையுமா?

https://thinakkural.lk/article/89273#.X6_XNEbLRxA.whatsapp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.