Jump to content

வன்னி எம்.பி.யை வழிமறித்து தாக்க முயன்ற இளைஞர் குழு – பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு! இருவர் கைது


Recommended Posts

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடுநடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றது

https://thinakkural.lk/article/89298#.X7Aa8BHdk4o.whatsapp

Link to post
Share on other sites
2 hours ago, Iraivan said:

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடுநடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு!

ஆர் ஆரை சுட்டது?🙄

Link to post
Share on other sites
7 minutes ago, puthalvan said:

பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு!

ஆர் ஆரை சுட்டது?🙄

சுட்டது பாதுகாவலர்; சுடப் பட்டது வானம்!😎

Link to post
Share on other sites

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் குழு தாக்குதல் : பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் குழு தாக்குதல்
வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று (14.11.2020) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். 
இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

 

அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்தி கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதினால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணோளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர.

 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.crimenews.lk/2020/11/14/31122/

Link to post
Share on other sites

நன்றி நுணா. ஒரு மாதிரி என்ன நடந்தது என்று தெரிகிறது.

பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து vs நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடுநடத்தியமையினையடுத்து 😁

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அட பாதுகாவலர் இருந்தும் சாத்துப்படி நடந்து இருக்கு .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.