Jump to content

என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்.!

dptrisha-1-1582441989-1582446186.jpg

சென்னை: தனது திருமணம் காதல் திருமணமாகவே இருக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா.

இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார்.

நின்று போன  திருமணம்

கடந்த சில வருடங்களுக்கு முன் தொழில் அதிபர் மற்றும் தயாரிப்பாளரான வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது. கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனதாக அப்போது கூறப்பட்டது. இது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

காதலை ஒப்புக்கொண்டார்

trish-Collage-1.jpg

பின்னர் பிரபல தெலுங்கு நடிகர், ராணா டக்குபதியை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வருவது என இருந்தனர். வருண் மணியனை  காதலிக்கும் முன்பே, ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் த்ரிஷா. பின் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென்று பிரிந்தனர். நடிகர் ராணா, இந்தி சேனல் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் இந்தக் காதலை ஒப்புக்கொண்டார்.

காதல் திருமணமாக இருக்கும்

இந்நிலையில், நடிகர் ராணாவுக்கு மிஹீகா பஜாஜ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தனது திருமணம் பற்றி நடிகை த்ரிஷா மீண்டும் கூறியுள்ளார். அது காதல் திருமணமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

என்னை புரிந்து கொள்பவர்

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவரைதான்  திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும் போது எனது திருமணம் நடக்கும். அதுவரை சிங்கிளாக இருப்பது பற்றி கவலைப் படவில்லை.

தெரு நாய்கள்

ஒரு வேளை அப்படி ஒருவரைச் சந்திக்கவில்லை என்றால், நான் இப்படியே இருந்து விடுவேன். பள்ளியில் படிக்கும் போதே நான் மற்றவர்களுக்கு உதவுவேன்.

நாய்களை செல்லப் பிராணிகளாக அப்போதே ஏற்று கொண்டேன். இப்போது 5 தெரு நாய்களை வளர்க்கிறேன். அது போக குதிரை ஏற்றம் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

https://tamil.filmibeat.com/news/trisha-talks-about-her-marriage-077221.html

டிஸ்கி :

வெளி நாட்டில் வாழும் ( இளம் ) மன்னிக்கவும் நடுத்தர வயது தொழில் அதிபர்களுக்காக உதவும் நோக்குடன் இச் செய்தி.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Guru peyarchi 2019 - 2020 | குரு பெயர்ச்சி 2019 - 2020 | Kanni - YouTube

குருப் பெயர்ச்சி, இன்று  (15.11.20) நடை பெறுவதால்...
குருவின் பார்வை....   இந்த பெயர்ச்சியின் போது... 
கன்னி ராசிக்கு 5ம் இடமான மகரத்தில் குரு சஞ்சரிப்பார். 
கன்னி ராசியில்... குரு சஞ்சரிப்பதால்.... 
திரிசாவுக்கு...  திருமணம் நடக்கும் என்றே நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா திரிசாவை வாழ்க்கை துணையாக ஏற்றுகொள்ள விரும்பும் அத்தான்மார்களுக்கு கொழுத்த சீதனம் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்கு தெருநாய்களில் பாசம் உண்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்.!

dptrisha-1-1582441989-1582446186.jpg

மை நேம் இஸ் பெரியதம்பி குமாரசாமி.  பிஸ்னஸ் மேன் 😎

கண்கலங்காமல் வைத்து காப்பாற்றும் திறன் கொண்டவர்.:cool:

Link to comment
Share on other sites

நடப்பு தமிழ்த்திரைப்பட நடிகைகளுள் மிக திறமையான திரைக் கலைஞர் இவர். கதாநாயகியை வெறும் கவர்சசி பொம்மையாக காட்டும் தன்மை கொண்ட பல படங்களில் கூட மிக திறமையான தனது நடிப்பாற்றலால்   ரசிகர்களின் மனங்களைக்  கவர்ந்தவர். சிகரம்  வைத்தாற் போல 96 படத்தில் இவரது திறமை பலரையும் பிரமிக்க வைத்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

மருதருக்கு தெருநாய்களில் பாசம் உண்டா.

"என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன்"

தெரு நாய்களுடன் நல்ல அனுபவம் இருப்பதால்தானே 
வாழ்க்கையையே வெட்டி ஓடுகிறோம் 

இவா புரியிறதுதான் வில்லங்கமானது என்று நினைக்கிறன் 

 

16 hours ago, குமாரசாமி said:

மை நேம் இஸ் பெரியதம்பி குமாரசாமி.  பிஸ்னஸ் மேன் 😎

கண்கலங்காமல் வைத்து காப்பாற்றும் திறன் கொண்டவர்.:cool:

என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்

இதை வாசிக்கவில்லை என்று நினைக்கிறன் 
அவாவே நீரா ஓடவேணும் என்று சொல்லாம  ஒரு பெண்ணாய் இருந்தும் சொல்கிறார் 
நீங்கள் வேற கண்கலங்காமல் என்று இழுக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.