Jump to content

புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்!


Recommended Posts

புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்!

இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர்.

காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது.

Link to comment
Share on other sites

மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியானது; வடகிழக்கில் என்ன நிலை?

6abe58b8-grade.5.exam_.results.scholarsh
 

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட அடிப்படையிலான வெட்டுப்புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன.

இதன்படி வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு தலா 160 வெட்டுப்புள்ளியும் மன்னார் மாவட்டத்துக்கு 158 வெட்டுப்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு 160 வெட்டுப்புள்ளியும் திருகோணமலைக்கு 159 வெட்டுப்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

1e304a8c-125371962_2894891984066785_5190

https://samugammedia.com/scholarship-cutoff-marks/

Link to comment
Share on other sites

மகாஜனா மாணவி வடக்கில் முதலிடம்!!!394b0398-6ca4-448f-87ce-94d220ea4799.jpg

 

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.

மகாஜனக் கல்லூரியில் இருந்து 36 பேர் சித்திபெற்றிருந்தனர். வயாவிளான் சிறீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். இதை அந்த வித்தியாலயத்தின் அதிபரான யூட் மரியரட்ணம் உறுதிப்படுத்தினார்.


நேற்று நள்ளிரவு வெளியான தகவல்களின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் உதயனின் வாழ்த்துக்கள்

https://newuthayan.com/மகாஜனா-மாணவி-வடக்கில்-மு-2/?fbclid=IwAR3SaFFH-hEbSDDZgz7nyN9p58lkhD7ENrcnJHoA5YqigJ7PxvYWE3GZE3c

Link to comment
Share on other sites

கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் சாதனை

20201116_131350-1024x473.jpg

யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலய மாணவர்கள் 100% சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதுடன் 27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கு  கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 50 மாணவர்கள் தோற்றி  27 மாணவர்கள் 160 வெட்டுப் புள்ளிக்கு மேலும்,  100 – 159 புள்ளிகளுக்கு மேல் 22 மாணவர்களும்,  70 -99 புள்ளிகளுக்கு மேல் ஒரு மாணவரும் பெற்று 100% சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

IMG-6e2b0cd5d1ce40602036a1f587a11001-V-2

https://newsthamil.com/கரவெட்டி-மாணிக்கவாசகர்-வ/?fbclid=IwAR1pIdbka-Bb8v45UfHjtfJvu2iIW8ZmqxcKiD0irXLHrq99lSeYIIcBnL4

 

125469941_3595961693817728_3358002900315

Link to comment
Share on other sites

சாவகச்சேரி இந்துவில் 36 மாணவர்கள் சித்தி !!!!

 

 

img-960x640.jpg?189db0&189db0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் 36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

  1. பிறேமவாசன் பௌவினன் 187
  2. நேசரூபன் நேருஜன் 187
  3. தவனேசன் ஆரணன் 186
  4. தயாக்குமரன் கேசிகா 186
  5. துளசிதாசன் அனிஸ்கா 185
  6. சகுலன் கிஷோர் 184
  7. செந்துாரன் அப்சரகான் 182
  8. சுஜீகரன் ஆருரன் 182
  9. உதயகுமார் அர்ச்சயா 182
  10. சதீஸ் ஸப்தமி 181
  11. மகேந்திரன் மாதுமை 181
  12. ஸ்ரீதரன் விரோசன் 178
  13. மதிவதனன் டிலுக்சிகா 178
  14. சிவகரன் சாமந்தி 177
  15. சிவானந்தன் ஆரபி 177
  16. சிவானந்தமூர்த்தி பானுஸ்யா 175
  17. விஜிதரன் அஸ்வினி 175
  18. கிருஸ்ணகுமார் திசானா 174
  19. சிவநிதன் ஷம்சிகா 173
  20. கிரிசங்கர் வஸ்மியா 172
  21. உதயகுணசிங்கம் யனுசன் 172
  22. மயூரதன் மயூரக்சிகா 171
  23. ஜீவராசா ஹர்சன் 170
  24. முகுந்தன் கிருஸ்ணிகா 170
  25. சதீஸ்கண்ணா தனோபிகா 170
  26. சுபாஷ்கரன் ராகவி 170
  27. ஈஸ்வரன் அபிஷாந் 168
  28. மயூரன் பிரகலாதன் 168
  29. சுரேஸ்குமார் டதுர்ஷிகா 166
  30. இரத்தினசிங்கம் சுஜானி 163
  31. ஜெயரட்ணம் அர்ச்சனா 163
  32. ஜெயக்குமார் பிரசாந் 162
  33. கிருஸ்ணராசா கிசாந் 162
  34. சந்திரகுமார் ஆராதனா 160
  35. நகுலேஸ்வரன் நர்த்தனா 160
  36. சசிகுமார் ஆரபி 160

அனைத்து மாணவர்களுக்கும் உதயனின் வாழ்த்துக்கள்

https://newuthayan.com/சாவகச்சேரி-இந்துவில்-36-மா/

தென்மராட்சி கல்வி வலயம் : வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்!!

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் நேற்று(15) வெளியாகிய ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விபரம் வருமாறு

  1. சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை. 36
  2. மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை. 22
  3. கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பபாடசாலை. 16
  4. சாவகச்சேரி மகளிர் கல்லூரி. 13
  5. சாவகச்சேரி கல்வயல் ஶ்ரீசண்முகானந்தா வித்தியாலயம். 7
  6. இயற்றாலை அ.மி.த.க.பாடசாலை 6
  7. கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் 6
  8. மிருசுவில் அ.த.க.பாடசாலை 6
  9. கச்சாய் மகா வித்தியாலயம் 5
  10. கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம் 5
  11. இடைக்குறிச்சி ஶ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம் 4
  12. எழுதுமட்டுவாள் ஶ்ரீகணேசா வித்தியாலயம் 3
  13. விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம் 3
  14. கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை 3
  15. கெற்பேலி அ.த.க.பாடசாலை 3
  16. மந்துவில் றோ.க.த.க.பாடசாலை 3
  17. நுணாவில்கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் 3
  18. நாவற்குழி ம.வி. 2
  19. உசன் இராமநாதன் ம.வி. 2
  20. மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் 2
  21. மட்டுவில்தெற்குஅ.மி.த.க.பாடசாலை 2
  22. மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் 2
  23. கைதடி எருதிடல் அ.த.க.பாடசாலை 2
  24. கைதடி கலைவாணி வித்தியாலயம் 2
  25. நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலயம் 2
  26. மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை 2
  27. கைதடி குருசாமி வித்தியாலயம் 1
  28. கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை 1
  29. மந்துவில் ஶ்ரீபாரதி வித்தியாலயம் 1
  30. கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் 1
  31. கைதடி நாவற்குழி அ.த.க.பாடசாலை 1
  32. கரம்பை அ.மி..த.க.பாடசாலை 1
  33. மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலை 1
  34. சாவகச்சேரி சக்தியம்மன் வித்தியாலயம் 1

அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அனைவருக்கும் உதயனின் வாழ்த்துக்கள்

https://newuthayan.com/தென்மராட்சி-கல்வி-வலயம்/

கரம்பைக்குறிச்சி அ.த.க. பாடசாலையில் 3 மாணவர்கள் சித்தி!!!

download-5-2.jpg?189db0&189db0

 

நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கரம்பைக்குறிச்சி அ.த.க. பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் 14 மாணவர்கள் 70புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. உ.லஸ்மிதா -171
  2. க.அபிலாஸ் -161
  3. வி.யனுசாந் -160

https://newuthayan.com/கரம்பைக்குறிச்சி-அ-த-க-பா/

யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!!!

mayilidy-960x640.jpg?189db0&189db0

 

மயிலிட்டி மாணவன் சாதனை!!!

யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசந்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலத்தின் சார்பில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற முதலாவது மாணவன் என்ற சாதனையை மயிலிட்டியைச் சேர்ந்த சா.மதுஷாந்த் படைத்துள்ளார்.

5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை-2020 இல் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் என்ற மாணவன் 170 மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளார்.

அந்தவகையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முதலாவது சித்தியடைவாக இது அமைந்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மயிலிட்டி பகுதியும் 1990/06/15 அன்று இடப்பெயர்வை சந்தித்து 27 ஆண்டுகளின் பின்னர் 2017 முதல் மீள்குடியேறி வரும் பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/யாழ்-நடேஸ்வரா-கனிஷ்ட-வித/

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் : 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்!!!

FB_IMG_1605513993831.jpg?189db0&189db0

 

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பெருமை பாடசாலைக்கு சேர்த்துள்ளனர்.

இப்பரீட்சைக்கு 29 பேர் தோற்றி, 12 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து 41.38% மும், 100 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 90%மாகவும், 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 96.5% மாகவும் அமைந்துள்ளது.

  1. நா.கவிநயா 186
  2. பா.திலக்சிகா 183
  3. ப.திராளினி 180
  4. வி.ஜனுஷன் 179
  5. சி.நிதுர்ஷிகா 177
  6. ர.கஜானன் 177
  7. சு.கபிசாணி 176
  8. ஸ்ரீ.ஜானுஜா 170
  9. க.ஆதீரன் 169
  10. ம.தனஜா 165
  11. த.தரணிகா 162
  12. றி.திலக்ஷிகா 161
  13. https://newuthayan.com/கிளிநொச்சி-பிரமந்தனாறு-ம/
Link to comment
Share on other sites

புத்துார் சோமஸ்கந்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச்சாதனை!!!

puthur-1-960x640.jpg?189db0&189db0

 

 

நேற்று வெளியாகிய புலமைப்பரிசில் முடிவுகளின்படி புத்துார் சோமஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச்சாதனை படைத்திருக்கிறார்கள்.


இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை தேர்வில் 98 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 37 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் 59 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றனர்.

  1. கிருபாகரன் நிருஷிகா 192
  2. பாலசுரேஸ் தமிழ்விழி 191
  3. ரமேஸ் அஸ்மிகா 189
  4. சசிக்குமார் சானுஜன் 187
  5. சௌந்தரராஜா டிலான் 184
  6. ரதீஸ்வரன் நியுசர்மி 182
  7. கிருசாந்தகுமார் வைஸ்ணஜா 180
  8. சபேஸ் சஞ்சையன் 179
  9. துஸ்யந்தன் லக்சிகா 179
  10. மகேஸ்வரன் லக்ஸன் 178
  11. கஜேந்திரன் கர்சயன் 178
  12. ஜெயபாலன் வர்ணன் 178
  13. ரவீந்திரன் ரினுஸ்ரன் 177
  14. ஜெயச்சந்திரன் துஷானி 176
  15. சுரேஸ் கனிஸ்ரிகா 175
  16. சரவணபவானந்தன் துர்க்காயினி 173
  17. லபிதாஸ் பாத்திமா 171
  18. புவனேஸ்வரன் பாவனா 170
  19. மகேஸ்வரன் மதுசாயினி 170
  20. றஜீவ்மோகன் வைஸ்ணவி 169
  21. ஜெயக்குமார் ஜெனிலியா 168
  22. கஜேந்திரன் ரம்சன் 168
  23. ஜெயராஜா தஸ்வினி 168
  24. ஜெயக்குமார் கயுர்ணன் 167
  25. லட்சுமணன் சந்துரு 167
  26. சுதாகரன் ஆர்த்திகா 166
  27. கமலரேகன் தருணிகா 165
  28. குகேந்திரராஜா சௌமி 164
  29. இதயகமலதாஸ் ஜதுர்சிகா 164
  30. ரதீபன் தக்சயன் 164
  31. பரமேஸ்வரன் கீதசாயி 163
  32. நீதிராஜா காவியா 162
  33. ராஜசேகரன் விதுசா 162
  34. கஜீவன் கவியிசை 161
  35. வில்வீரசிங்கம் கவிந்தன் 161
  36. ரதீஸ்குமார் ரஸ்மிகன் 160
  37. தில்லைநாதன் ரட்சிகா 160

https://newuthayan.com/புத்துார்-சோமஸ்கந்த-வித்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ..👍

Link to comment
Share on other sites

கிராமப்புற பாடசாலைகளில் இம்முறை சிறந்த பெறுபேறுகள் – பல பாடசாலைகளின் பெறுபேறுகள் உள்ளே!!!

cong.jpg?189db0&189db0

 

1.கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை
செல்வி.கீர்த்தி சுரேஸ் 168

2.மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்
செல்வி.சி.அம்சவி 179
செல்வன்.கே.திலக்சன் 172
மேலும் 15 மாணவர்கள் 100புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.கைதடி குருசாமி வித்தியாலயம்
செல்வி.கி.பவிசனா 171

4.மந்துவில் சிறீபாரதி வித்தியாலயம்
செல்வி.எஸ்.றிஸ்மிதா 168

5.மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை
செல்வி.கே.பவிஷனா 164
செல்வி.ச.கர்சனா 162

6.கெற்பேலி அ.த.க பாடசாலை
செல்வன்.ச.நிருசாந் -178
செல்வி.க.ஜென்சிகா -178
செல்வன்.ந.கபிலன் -161
மேலும் 12 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

7.நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலயம்
செல்வன்.ந. தமிழாரன்——–184
செல்வி.ரு. துஜிதா ——–163

8.மட்டுவில் தெற்கு அ.மி.த.க பாடசாலை
செல்வி.சதீஷ்வரன் நிதுசிகா – 162
செல்வி.க.யதுசிகா – 161

9.மந்துவில் றோ.க.த.க பாடசாலை
செல்வன்.டி.திஷாந்த் 174
செல்வன்.எஸ்.ஹம்சன் 173
செல்வி.ஜே.ஷோபிகா 166

10.மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலை
செல்வன்.சி.யெகு 170
மேலும் 70 புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11.கிளி/ சோரன்பற்று சி.சி.த.க பாடசாலை
செல்வி.நி.பம்சிகா 187 புள்ளிகள்

12.கிளி/சோரன்பற்று கணேசா வித்தியாலயம்
செல்வன்.க.பிரஜீன் 188
செல்வன்.கோ.தனதீஸ் 176
மேலும் 70 புள்ளிக்கு மேல் 13 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13.கரம்பை அ.மி.த.க பாடசாலை
செல்வன்.பி.கஜானன் 166
மேலும் 70 புள்ளிக்கு மேல் 7 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14.கிளி/கரியாலை நாகபடுவான் இல.02 அ.த.க பாடசாலை
செல்வி.செ.மதுசாளினி 165

 

https://newuthayan.com/இம்முறை-கிராமப்புற-பாடசா/

உசன் இராமநாதன் ம.வி’யில் 2 மாணவர்கள் சித்தி !!!

 

 

ushan-960x640.jpg?189db0&189db0

தரம் 5 புலமைப் பரீட்சையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் 18 மாணவர்களில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


மேலும் 15 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. ம.கவிமாறன் -177
  2. க.பவிசன் -169
  3. https://newuthayan.com/உசன்-இராமநாதன்-ம-வி-2-மாணவர/

7வது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் சாதனை!!!!

 

 

vavp-960x640.jpg?189db0&189db0

 

வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதித்துள்ளனர்.

 

https://newuthayan.com/7-வது-வருடமாகவும்-வவுனியா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்த காலத்தில் இதுபோன்ற புலமைபரிசில்கள் இருந்ததில்லை. ஆனால் வெவ்வேறு (உதாரணம் N.P.T.A, சைவசமயம் போன்ற) தனியான பரீட்சைகள் இருந்தன. சிறந்த பெறுபேறுகளை அடைவதற்காக மட்டும் அவற்றில் தோற்றுவது தான் வழமை.

இப்போது இருக்கும் புலமைபரிசில் தேர்வுகளில் சித்தியடைந்தவர்களுக்கு என்ன பரிசில் கிடைக்கும்? சித்தி அடையாதவர்கள் எதை இழப்பார்கள்?
எப்போது இருந்து இது நடைமுறையில் உள்ளது?
அப்படியானல் இப்போது இலங்கையில் மாணவருக்கு கல்வி இலவசம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு-கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் 5ம் தர பரீட்சையில் சித்தி

IMG_2223-696x392.jpg
 32 Views

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை மாணவியாக குறித்த மாணவி சித்தி அடைந்துள்ளார்.

IMG_2185.jpg

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இவர் பெரிய உப்போடையை சேர்ந்த சிறிசங்கர் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் திருமதி உமா ஆகியோரின் மகளாவார்.

தனக்கு தெரியாத விடயங்களை பாடசாலை வகுப்பாசிரியர்,ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொண்டு கற்றதாக சிறிசங்கர் பவினயா தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் குறைந்த புள்ளிகளைப்பெறும்போது அவர்களை திட்டாமல் அவர்களுக்கு முடியும் என்ற நம்பிக்கையினை வளர்க்கும்போது அந்த பிள்ளை வெற்றியடையும்.அதனையே தனது பிள்ளைக்கும் தான் ஊக்கப்படுத்தியதாக பவினயாவின் தாயாரும் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளருமான திருமதி உமா சிறிசங்கர் தெரிவித்துள்ளார்.

IMG_2214.jpg

இதேவேளை மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இம்முறை 93வீதமாக மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 433 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரியில் தலா 74மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த வருடத்தினை விட அதிகளவான சித்தி பெறப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்த கல்வி அமைச்சுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வலய கல்வி பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/மட்டு-கல்வி-வலயத்தில்-93வீ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களை கல்வித்துருவ மயமாக்கும்.. இந்தப் பரீட்சை முறை ஆரோக்கியமானதா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

நாங்கள் இந்தப் பரீட்சைக்கு தயார் படுத்திய காலங்களில்.. ஆசிரியர்களின்..பிள்ளைகளுக்கு வகுப்பில் முன் வரிசையில் வைச்சு போதிப்பதும்.. ஆசிரியருக்கு... அதிபருக்கு தெரிந்தவர்கள்.. செல்வாக்கானவர்களில் பிள்ளைகளுக்கு விசேட கவனிப்பில் படிப்பிப்பதும்.. ஊக்குவிப்பதும் நடப்பது வழமை. 

எதுஎப்படியோ.. இந்த போட்டிப் பரீட்சை.. வெட்டிப்புள்ளி முறை எல்லாம் அநாவசிய அழுத்தங்களை சிறுவர்களுக்கு விதைப்பது.. ஒரு ஆரோக்கியமான நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான.. நிஜ வாழ்க்கைக்கு அவசியமான அறிவாற்றலை வளர்க்க பிரயோகிக்க இடமளிக்குமா என்பது கேள்விக்குறியே.

இதில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளில் தோன்றியோரில் பலர் ஆசிரியர்களின் பிள்ளைகள். எல்லோரும் வைத்தியர் பொறியலாளராக வர வேண்டும் என்ற அந்த அடிமட்டச் சிந்தனையில் வைக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. எத்தனையோ சமூகத்துக்கு நாட்டுக்கு பிரதேச வளர்ச்சிக்கு ஆற்ற உள்ள துறைகள் குறித்து இந்தப் பிள்ளைகளுக்கு அறிவூட்ட முடியாத படிப்புப்பும் பரீட்சையும் அவசியம் தானா...???!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.