Jump to content

7 ஆவது தடவையாகவும் சம்பியனானார் ஹேமில்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆவது தடவையாகவும் சம்பியனானார் ஹேமில்டன்

போர்முலா - 1 கார் பந்தயத்தில் ஏழாவது தடவையாக லூயிஸ் ஹேமில்டன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

spacer.png

இந்த ஆண்டுக்கான போர்முலா - 1  கார் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடக்கிறது. 

இதன் 14 ஆவது சுற்றான துருக்கி கிராண்ட்பிரி இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது. 

இதில் 309.396 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 

6 ஆவது வரிசையில் இருந்து காரை மின்னல் வேகத்தில் செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹேமில்டன் (மெர்சிடஸ் அணி) ஈரப்பதமான ஓடுபாதை சூழலை திறம்பட சமாளித்து 1 மணி 42 நிமிடம் 19.313 நிமிடங்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. 

இந்த தொடரில் அவர் பெற்ற 10 ஆவது வெற்றி இதுவாகும். 

அவரை விட 31.633 வினாடி பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் 2 ஆவதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். முன்னாள் சாம்பியனான ஜேர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3 ஆவதாக வந்து அதற்குரிய 15 புள்ளிகளை வசப்படுத்தினார். 

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஹேமில்டன் கைப்பற்றினார். எஞ்சிய 3 பந்தயத்தில் அவர் தோற்றாலும் பிரச்சினை இல்லை. 

ஹேமில்டன் இந்த பட்டத்தை வெல்வது இது 7 ஆவது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தார். 

இதன் மூலம் போர்முலா 1 கார்பந்தய வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஜேர்மனியைச் சேர்ந்த ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹேமில்டன். 
 

 

https://www.virakesari.lk/article/94493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூமார்க்கர் சொல்லி வேல இல்ல .....என்ன ஒரு வேகம் + சாதுர்யம்......கண்ணீருடன் நினைவு கூருகின்றேன்.....!  

பகிர்வுக்கு நன்றி கிருபன் .....!   👋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.