Jump to content

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்

November 16, 2020

sumanthiran_tna_thinakkural.jpgஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் ‘தினக்குரல்’ இணையத்துக்கு தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லாத போதிலும், அதில் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு நாடாக இருப்பதால், அமெரிக்காவுடனும் பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கை தொடர்பில் பிரதான அனுசரணை நாடுகள் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப்போகின்றன என்பதையிட்டு குறிப்பிட்ட தூதுவர்கள் தமது நாட்டு அரசாங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.

பெரும்பாலும் அடுத்த வாரம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்த்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அனுசரணை நாடுகளின் கருத்துக்களை அறிந்த பின்னரே இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு தீர்மானிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் முடிவுக்கு வருவதால், மற்றொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதா அல்லது இதனை வேறு வகையில் கையாள்வதா என்பதையிட்டு, பிரதான அனுசரணை நாடுகள் ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அனுசரணை நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு யோசனை

இதேவேளையில், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அரசாங்கம் அதற்கான யோசனைகளைக் கோரியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது யோசனைகளை முன்வைக்க இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் தமது அரசியலமைப்பு யோசனைகள் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு முன்னர் கோரப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

https://thinakkural.lk/article/89772

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்

கிழிச்சார் இவர்?  இவ்வளவு காலமும் செய்ய ஏலாததை இப்ப புதிசாய் கிழிக்கப்போறாராம்.

இவர்களால் எதுவுமே முடியாது.இதை நான் 2010ல் இங்கே கூறி விட்டேன்.அதற்கு இங்கே ஒருவர் வெட்டுவேன் குத்துவேன் என்று என்னை மிரட்டியவர். சம்பந்தப்பட்டவர் தைரியமிருந்தால் சுமந்திரனின் கருத்திற்கு பதில் கூறட்டும்.

 நிழலி! இது தனிமனித தாக்குதல் விதிக்குள் வருமா?

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன்  – சுமந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்

பினிசிங் சரியில்லப்பா . . 

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

கிழிச்சார் இவர்?  இவ்வளவு காலமும் செய்ய ஏலாததை இப்ப புதிசாய் கிழிக்கப்போறாராம்.

இவர்களால் எதுவுமே முடியாது.இதை நான் 2010ல் இங்கே கூறி விட்டேன்.அதற்கு இங்கே ஒருவர் வெட்டுவேன் குத்துவேன் என்று என்னை மிரட்டியவர். சம்பந்தப்பட்டவர் தைரியமிருந்தால் சுமந்திரனின் கருத்திற்கு பதில் கூறட்டும்.

 நிழலி! இது தனிமனித தாக்குதல் விதிக்குள் வருமா?

ஏன் நிழலியை கேட்கிறீர்கள்? நானே சொல்கிறேனே? இது நிச்சயமாக தனிமனித தாக்குதல்தான்.

சுமந்திரன் கள உறுப்பினர். அவருக்கு ஆதரவளித்தவரும் கள உறுப்பினரே. அவர் “வெட்டுவேன் குத்துவேன்” என்று மிரட்டியது உங்களையல்ல, நீங்கள் எழுதும் விடயங்ளை வெட்டி, ஒட்டி, குத்திட்டு பகிர்வது பற்றி. ஆகவே, இவை பற்றி நீங்கள் இப்படி எழுதுவதெல்லாம் தனிமனித தாக்குதல்தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் சம்மோட காமெடி 
இந்த பக்கம் வந்தால் சும்மோட காமெடி 
வாக்கு போட்டவைகளுக்கு என்டர்டேன்மண்ட்டிற்கு பஞ்சமே வைக்கினமில்லை ரெண்டு பேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கற்பகதரு said:

சுமந்திரன் கள உறுப்பினர். 

சுமந்திரன் இந்தக் களத்தில் உறுப்பினரா? எந்தப் பெயரில் உலாவருகிறார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது எவ்வளவு பெரிய சுத்து மாத்து? அனுசரணை வழங்கிய நாடுகளில் பாதிப்பேர் இப்போது ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இல்லை. அனுசரணை வழங்கிய பிரதான குற்றவாளியான சிங்கள அரசின் சார்பில் கையொப்பமிட்ட ரணில் அரசியலிலும் இல்லை, மைத்திரியும் இப்போது செல்லாக்காசு. தற்போதைய சிங்களப் பேரினவாதம் தாம் முன்னர் கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளுக்கு அனுசரணை வழங்கும் முடிவினை ஏற்கவில்லையென்று முற்றாக வெளியேறிவிட்டார்கள்.

இந்த லட்சணத்தில் இவர் எப்படி இதுபற்றிப் பேசியோ அல்லது செயற்பட்டோ இருக்க முடியும்? இவ்வளவுகாலமும் நடப்பதை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, வெறும் 4 மாதங்களேயிருக்க, கனவிலிருந்து எழுந்துவந்து "கால அவகாசம் முடியப்போகுது, என்ன செய்யப்போறியள்?" என்று கேட்பது சுத்த ஏமாற்று வேலை. 

சிங்களவன் ஒருபோதுமே தமது குற்றங்களை விசாரிக்க விரும்பப்போவதில்லையென்று தெரிந்துகொண்டும் தானே அனுசரணை வழங்கினீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஏன் நிழலியை கேட்கிறீர்கள்? நானே சொல்கிறேனே? இது நிச்சயமாக தனிமனித தாக்குதல்தான்.

சுமந்திரன் கள உறுப்பினர். அவருக்கு ஆதரவளித்தவரும் கள உறுப்பினரே. அவர் “வெட்டுவேன் குத்துவேன்” என்று மிரட்டியது உங்களையல்ல, நீங்கள் எழுதும் விடயங்ளை வெட்டி, ஒட்டி, குத்திட்டு பகிர்வது பற்றி. ஆகவே, இவை பற்றி நீங்கள் இப்படி எழுதுவதெல்லாம் தனிமனித தாக்குதல்தானே? 

ஆ....ஆ சுமந்திரன் கள உறுப்பினரா?🤓
 ஆடு வெட்டி விருந்து வைக்கிறாராம்......எங்களுக்கு எப்ப எண்டு ஒருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ..🤣

Link to comment
Share on other sites

இராஜ தந்திர விடயங்கள் கண்ணியமாக விளம்பரம் இல்லாமல் முன்னெடுக்கப்படவேண்டும். அப்படியிருக்க  நாங்கள் ஏன் இலங்கை அரசுக்கு முன்னறிவித்தல் கொடுப்பது போல இந்த விவகாரங்களை வெளியில் இப்பொது தெரிவிக்க வேண்டும்?

சுமந்திரன் ஒரு பொது துறை பதவியில் (public official/elected official)  இருப்பவர். பொதுத்துறையில் உள்ள ஒருவர் தனது கருமங்களை ஆற்றும் விதம் மற்றும் அந்த பதவியின் பின்னணியில் அது சார்ந்த அவரின் போக்குகள் நிச்சயமாக ஆழ்ந்த அலசல்கள், விமர்சனகள், கடும் வார்த்தை பிரோகங்களுக்கு உட்படுவது சகஜம். மேலும் பொதுத்துறையில் உள்ள ஒருவரின் நடவடிக்கைகளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படக்கூடிய ஒரு தரப்பு அது பற்றி கடும் விமர்சனம் வைப்பது விதிகளுக்கு முரணாக இருக்கமுடியாது (Freedom to criticize public officials). அதேவேளை விமர்சங்களில் தவறிருந்தால் அதை சுட்டிக்காட்டவும் ஆதாரங்களை முன்வைக்கவும் விவாதிக்கவும் (Right of reply) பொதுத்துறையில் உள்ள ஒருவருக்கு முழு உரிமையுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.