Jump to content

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..?

JIA-IN-TNA.jpg

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவை விமான சேவை இடம்பெற்றுள்ளது.இவ்வாறான நிலையில் விமான ரிக்கெற் விலையை குறைக்காதது, பயணிகளின் பொதிகள் ( passenger luggage) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையத்தின் வரி அறவிடல் குறைக்கப்படாமை போன்ற காரணங்களினால் மக்கள் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக, கொரோனா நிலையில் கூட, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் செல்ல சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், விமான நிலையத்தில் பொதுவான பிரச்சினைகளாக மாறியுள்ள இப்பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/21664

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதற்கிடையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட ரூ .300 மில்லியனை இந்திய அரசு இதுவரை முதவீடு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்தும் இந்திய அரசு கவனம் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய சப்பர் (Supper not Super) பவர் தனது நலன் கருதி ஒரு சின்ன விமானநிலையத்தில் முதலீடு செய்யமுடியாதவர்கள், 1987இல் பெட்ர தங்கள் குதத்தை பாதுகாக்க முடியாதவர்கள் தான் எங்களுக்கு விடிவு பெற்று தரப்போகிறார்கள் என்று சொல்லி கட்டுரை எழுதினால் நாங்கள் நம்பவேண்டுமா?

இதோ பேஜின் டாக்ஸிங் சர்வேதச விமான நிலையம் (Beijing Daxing International Airport) . December 22, 2014 ல் கட்ட அனுமதி வழங்கபட்டது. September 2019ல் கட்டி முடிக்கப்பட்டது. 75மில்லியன் பயணிகளை கையாள கூடியது. 

Daxin International Airport in Beijing is the largest in the world

எங்கே எங்கடை சப்பர் பவர் செய்து காட்டட்டும். இதோ ஜேவார் சர்வதேச விமானநிலையம் (Jewar International Airport or Noida International Airport) . 2001ல் பிரஸ்தாபிக்கப்பட்டது. 2014 மட்டும் என்கை கட்டுறது ஆர் பெயர் எடுக்கிறது எண்டு சண்டை. இவ்வளவும் நடக்க பக்கத்தில இந்திராகாந்தி விமான நிலையம் நிரம்பி வழியிது எண்டு ஓலம்! 2020 மாசி 28ல் கட்டுரை சொல்லுது - இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே பெரிய விமனநிலையத்தை கட்டப்போகினமாம். இப்பதானம் நிதி ஒதுக்கியிருக்கினம். 2019 நவம்பரில் சுவிஸ் நிறுவனத்துடன் விமானநிலையத்தை கட்டி 40வருஷம் நிர்வகிக்க ஒப்பந்தம் போட்டதாம். இனி தான் கட்ட போக்கினமாம்.

YEIDA selects PwC to study development of Jewar International Airport -  Projects & Tenders - Construction Week Online India

வெள்ளையனை வெளியேற்றிவிட்டு இதோ கிழிப்போம் என்று வெளிக்கிட்டவர்கள் இன்றுவரை தங்கள் நாட்டு நிறுவனத்தை கொண்டு ஒரு விமான நிலையத்தை கட்டி அதை தங்களால் நிர்வகிக்க முடியாதவர்கள் தான் எங்களுக்கு விடிவு பெற்று தரப்போகிறார்கள் என்றால் அதை நம்பும் மடையர்கள் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டும் 

மூலம்: https://en.wikipedia.org/wiki/Jewar_Airport

https://www.financialexpress.com/infrastructure/airlines-aviation/jewar-international-airport-world-class-facility-soon-10-facts-you-must-know-about-indias-largest-airport/1883962/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பயணத்தை விடுங்கள், இலங்கை 'கொழும்புலிருந்தாவது யாழ்ப்பாணம் செல்ல பயணிகள் முன் வருகிறார்களா..?' என பார்த்தால் அதுவும் குறைவாக அல்லவா இருக்கிறது..? 😯

'நாங்கள் கட்டுநாயகவிலிருந்து "டொக்கு டொக்கு"ன்னு குதிரை வண்டியினாலும் யாழ்ப்பாணம் போவோம், விமானத்தை பயன்படுத்த மாட்டோமென்றால் எப்படி..? :)

இதை காரணம் காட்டி 'எப்படா இழுத்து மூடி சாத்துவோம்..?' என் காத்திருக்கும் இலங்கை அரசும் மத்தளை விமான நிலையத்தை போலவே யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடிவிடும்..

அப்புறம் நெல் காயப்போட்டு, வைக்கோல் பொதிகளை அடுக்க வேண்டியதுதான்..! 🤔

வரும் ஒரு சில அத்தியாவசிய அபிவிருத்திகளையாவது சமயோதிதமாய் பயன்படுத்தினால், வட பகுதியின் நீண்ட கால தொடர் அபிவிருத்திகளுக்கு நல்லதுதானே..?

அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு மீது கோபம் இருப்பது நியாயம்தான், ஆனல் சொந்த நாட்டில் வரும் சில அவசிய முன்னெடுப்புகளை தவிர்ப்பது நல்லதா..?

விதியால்/கூட்டுச் சதியால், ஒற்றுமையின்மையால் இழந்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவு காலம் இப்படி மீள் கட்டமைப்பை தவிர்த்துக்கொண்டே இருப்பது..?

Link to comment
Share on other sites

10 hours ago, ராசவன்னியன் said:

சரியான பார்வை. புதிய புதிய எதிரிகளை உருவாக்காமல் எமக்கு அனுகூலமான விடயங்களை  எதிரிகள் என்று நாம் நினைப்பவர்களிடம் இருந்து கூட பெற்றுக்கொண்டு நம்மை பலப்படுத்துவதே தற்போதைய தேவை. அவ்வாறான நடவடிக்கையையே ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகள் தற்போதைய நிலையில்  செய்ய வேண்டிய வேலை. அடைந்தால் மகாதேவி அன்றேல் மரணதேவி  என்ற குருட்டுத்தனமான சிந்தனை மேலும் அழிவையே தரும். 

தன் மீது அணுகுண்டை வீசியவர்கள் என்ற கோபம் ஒருபுறம் இருந்தாலும் அமெரிக்காவை முற்றாக ஜப்பான் வெறுக்கவில்லை.  அதுவே சிறந்த அணுகுமுறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

பொந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பயணத்தை விடுங்கள், இலங்கை 'கொழும்புலிருந்தாவது யாழ்ப்பாணம் செல்ல பயணிகள் முன் வருகிறார்களா..?' என பார்த்தால் அதுவும் குறைவாக அல்லவா இருக்கிறது..? 😯

'நாங்கள் கட்டுநாயகவிலிருந்து "டொக்கு டொக்கு"ன்னு குதிரை வண்டியினாலும் யாழ்ப்பாணம் போவோம், விமானத்தை பயன்படுத்த மாட்டோமென்றால் எப்படி..? :)

இதை காரணம் காட்டி 'எப்படா இழுத்து மூடி சாத்துவோம்..?' என் காத்திருக்கும் இலங்கை அரசும் மத்தளை விமான நிலையத்தை போலவே யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடிவிடும்..

அப்புறம் நெல் காயப்போட்டு, வைக்கோல் பொதிகளை அடுக்க வேண்டியதுதான்..! 🤔

வரும் ஒரு சில அத்தியாவசிய அபிவிருத்திகளையாவது சமயோதிதமாய் பயன்படுத்தினால், வட பகுதியின் நீண்ட கால தொடர் அபிவிருத்திகளுக்கு நல்லதுதானே..?

அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு மீது கோபம் இருப்பது நியாயம்தான், ஆனல் சொந்த நாட்டில் வரும் சில அவசிய முன்னெடுப்புகளை தவிர்ப்பது நல்லதா..?

விதியால்/கூட்டுச் சதியால், ஒற்றுமையின்மையால் இழந்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவு காலம் இப்படி மீள் கட்டமைப்பை தவிர்த்துக்கொண்டே இருப்பது..?

இந்த விடயத்தில் மட்டுமல்ல, பல முனைகளில் நடக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இது தான் சில புலம் பெயர் தமிழர்களின், சில உள்ளூர் அரசியல் வாதிகளின் துலங்கலாக இருக்கிறது. ஆனால், ஈழத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகக் கெட்டிக் காரர்கள் என்று நிம்மதியடையுங்கள். 

உதாரணமாக 2009 இனவழிப்பு முடிந்ததும் ஏ9 வீதி முதல் பல இடங்களில் ராஜபக்ஷ குழு அபிவிருத்திகளை மேற்கொண்டது. மக்களும் அபிவிருத்தியை வரவேற்றனர், ஆனால் வாக்கை ராஜபக்ஷ கட்சிக்கு அள்ளிக் கொடுக்க மறுத்து விட்டனர்! இப்போது வேறு வழியில் வாக்கைப் பெற்றுக் கொண்டாலும் ஈழ நிலத்தில் வாழும் மக்கள் வெளியே இருப்போரை விட தெளிவான பார்வை கொண்டோர் என்பது நிம்மதியான விடயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

பொந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பயணத்தை விடுங்கள், இலங்கை 'கொழும்புலிருந்தாவது யாழ்ப்பாணம் செல்ல பயணிகள் முன் வருகிறார்களா..?' என பார்த்தால் அதுவும் குறைவாக அல்லவா இருக்கிறது..? 😯

'நாங்கள் கட்டுநாயகவிலிருந்து "டொக்கு டொக்கு"ன்னு குதிரை வண்டியினாலும் யாழ்ப்பாணம் போவோம், விமானத்தை பயன்படுத்த மாட்டோமென்றால் எப்படி..? :)

இதை காரணம் காட்டி 'எப்படா இழுத்து மூடி சாத்துவோம்..?' என் காத்திருக்கும் இலங்கை அரசும் மத்தளை விமான நிலையத்தை போலவே யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடிவிடும்..

அப்புறம் நெல் காயப்போட்டு, வைக்கோல் பொதிகளை அடுக்க வேண்டியதுதான்..! 🤔

வரும் ஒரு சில அத்தியாவசிய அபிவிருத்திகளையாவது சமயோதிதமாய் பயன்படுத்தினால், வட பகுதியின் நீண்ட கால தொடர் அபிவிருத்திகளுக்கு நல்லதுதானே..?

அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு மீது கோபம் இருப்பது நியாயம்தான், ஆனல் சொந்த நாட்டில் வரும் சில அவசிய முன்னெடுப்புகளை தவிர்ப்பது நல்லதா..?

விதியால்/கூட்டுச் சதியால், ஒற்றுமையின்மையால் இழந்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவு காலம் இப்படி மீள் கட்டமைப்பை தவிர்த்துக்கொண்டே இருப்பது..?

அருமையான கருத்து.ஆனால் எங்களில் சிலர் அபிவிருத்தி என்னட சொல்லைக் கேட்டாலே  எம்பிக் குதிக்கினம்.உரிமையும் வேணும் தான் அதுக்காக அது வரைக்கும் ஒன்டுமே வேண்டாம என்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தியின் ஊடாக ஆக்கிரமிப்பு வருமோ என்ற பயம் தான்.

தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு சாண் ஏறினா என்ன?! முழம் ஏறினா என்ன?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க அப்பவே சொன்னம் இதுதான் நடக்கும் என்று. அது அப்போ ஹிந்திய.. ரணில் - மைத்திரி காட்டிய கண்கட்டு வித்தை.  இது இப்போ ஹிந்திய - சிங்கள நிகழ்ச்சி நிரலில் அதன் முக்கியத்துவம்.. அங்கு ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்குவதில் அல்ல. ஹிந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்ற ஒரு தளம் அமைப்பது. அந்தப் பணிக்கு ஏதுவான நிலை தோன்றுவிக்கப்பட்டுவிட்டது. எனி ஹிந்தியாவோ.. சிங்களமோ.. இதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை.

மீண்டும்.. ஹிந்தியாவை நம்பி ஏமாந்தது தமிழர்களே. தமிழர்களுக்கு இதுவே பிழைப்பாகப் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

சரி, நெடுக்கு அவர்களே,

அங்கே நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்களென்றால், யார் அவர்களுக்கு மாற்று தீர்வு தருவது..?

புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்களா..? எந்த நாடு கைகொடுக்கும்..?

இன்னும் எத்தனை காலம் எடுக்கும்..?

ஒன்னும் புரியலையே..?

நான் சொன்னது, ஒரு ஆதங்கத்தில் தான்.

Link to comment
Share on other sites

15 hours ago, ராசவன்னியன் said:

பொந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பயணத்தை விடுங்கள், இலங்கை 'கொழும்புலிருந்தாவது யாழ்ப்பாணம் செல்ல பயணிகள் முன் வருகிறார்களா..?' என பார்த்தால் அதுவும் குறைவாக அல்லவா இருக்கிறது..?

15 hours ago, ராசவன்னியன் said:

வரும் ஒரு சில அத்தியாவசிய அபிவிருத்திகளையாவது சமயோதிதமாய் பயன்படுத்தினால், வட பகுதியின் நீண்ட கால தொடர் அபிவிருத்திகளுக்கு நல்லதுதானே..?

ஆம் நிச்சயமாக. இந்த விடயங்களில் சர்வதேச/உள்ளக  நுகவோர் (அதாவது பயணிகள்) நடத்தை (Consumer Behaviour) எப்படியிருக்கும் என 2014 - 2018 காலப்பகுதியில் நடந்த பல  தரப்புடன் நடந்த பேச்சுக்களில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த கருத்துப்பரிமாற்றங்களில் எனது கருத்துக்களை பகிர்ந்தவன் என்ற வகையிலும் வர்த்தக ரீதியில் விமான நிலையதின் நீண்டகால வருமானத்தை நிலைநிறுத்துவது என்பது பற்றி எனது தொடர்பாடுகளில் ஈடுபட்டவன் என்ற வகையிலும் சில கருத்துக்கள்.

முதல் சர்வேதேச பயணிகள் (தமிழர் உட்பட) பற்றி பார்ப்போம்.

இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயத்தினாலும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாண விமான இணைப்பு ரத்மலானவில் உள்ள சிறிய விமானநிலையத்தில் இருந்து யாழ் நோக்கி  இடம்பெறுகிறது.இந்த இந்த சிறிய விமானநிலையம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 45கிம் தூரத்தில் உள்ளத்துடன் ரத்மலான யாழ் விமான சேவை குறித்த நேரங்களில் இடம்பெறும்.. எனவே யாழ் விமான நிலையத்துக்கு நேரடியாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான சேவையாக இணைப்பு விமான சேவையை (regional connecting flights) நடத்துவது அல்லது கொழும்பில் இறங்கும் சர்வதேச விமானம் மீண்டும் கிளம்பி யாழ் சென்றால் அது பாவனையை ஊக்குவிக்கும் என பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஸ்ரீ லாங்கன் ஐர்வய்ஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுக்கள் திருப்திகரமாக இருந்தது. சேவையை நடத்த விமான நிலையத்தின் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு முதலீடு (infrastructure investment) தேவைப்பட்டது. பருமனில் அதிகமான விமானம் இறங்க ஓடுபாதை, அந்த விமான எரிபொருள் மீள்நிரப்பு (aircraft refuelling) வசதிகள் மற்றும் அவசர திருத்த/பராமரிப்பு கட்டமைப்பு(air craft servicing and maintenance) , சர்வதேச விமான பயணிகள் வசதிகள்  என்று பட்டியல் நீண்டது. பொதுவாக பயன்படும் வர்த்தக விமான ரகங்கள் இறங்க அனுமதி பெற இந்த கட்டமைப்புகள் உள்நாட்டு சட்ட படியும் வெளிநாட்டு விமான கட்டுப்பாடுகளுக்கும் தேவை. பருமனில் குறைந்த விமானத்தை கொழும்பில் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொண்டுசெல்வது பற்றி ஆராயபட்டது. அனால் உளூர் விமான நிறுவனங்கள் பல வர்த்தக உடன்பாடுகளில் (commercial agreements) அற்கனவே இரத்மலானவை மையமாக கொண்டுள்ளதனால் அது சாத்தியமாகவில்லை.

இதை நிவர்த்தி செய்ய முதலீடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் யாழ் விமான நிலையம் எதிர்காலத்தில் இந்திய பிராந்தியத்தில் ஒரு முக்கிய விமான நிலையமாக வரக்கூடிய வாய்ப்புகள், இரட்டை பாவனை அனுகூலங்கள் (dual civil and military use) மற்றும் கேந்திர முக்கியத்துவம் காரணமாக இந்தியா சார்பு தரப்புகள் தான் இங்கு முதலீடு செய்ய தகுந்தவர்கள் என்ற கோணத்தில் இந்தியாவை தமிழர் தரப்பு பல சந்தர்ப்பங்களில் அணுகி இருந்தனர். அதன் தொடச்சி தான் இப்பொது வந்துள்ள செய்தி.

உள்ளக பயணிகள் 
 
இதில் இரண்டு தரப்புகள். ஒன்று வெளிநாட்டில் இருந்து வரும் உடன்பிறப்புக்களை வரவேற்க கொழும்பு வருவோர். இரண்டாவது கொழும்பு யாழ் என்று பல காரணகளுக்காக சென்றுவருவோர். இந்த இரண்டாவது குழுமம் அதிக விலை உணர்திறன் (price sensitive) கொண்டிருப்பதுடன் வியாபாரிகள் என்று பார்க்கும் பொழுது தங்களுடன் பல கிலோ பொருட்களை கொண்டு செல்பவர்களும் அடங்குகின்றனர். அதனால் விமான பொருள் கட்டணங்கள் (aircraft freight costs) கிலோ அளவில் அதிகம் என்பதுடன் விமான பரிசோதனை, பொருட்கள் ஏற்றி/இறக்கம் மற்றும் இரான்மலனை விமானநிலையத்தில் அமைவிடம் என்பன பாவனையை குறைக்கும் என அனுமானித்திருந்தோம். அத்துடன் விமான சேவையுடன் ஒப்பீட்டளவில் பல மடங்கு கட்டணம் குறைந்த ரயில் மற்றும் பஸ், தனியார் வாகனம் என பலவற்றுடன் போட்டி போடவேண்டும். அதோடு விமான நேர அனுகூலத்தை தந்தாலும் அந்த சேவையுடன் இணைந்துள்ள கட்டமைப்பு குறைபாடுகள்  (பரிசோதனை நேரம், விமானம் சேவை நேரம், விமான நிலையத்துக்கு பயண நேரம், பின்னர் விமான நிலையத்தில் இருந்து பயண நேரம்) நேரத்தை அதிகரிப்பதால் 1.5 மணித்தியால  பயணம் 3 மணித்தியாலதுக்கும் மேலாகும். 

எனவே கூடியளவில் அவசர அலுவல்கள், நிறுவனகளால் விமான கட்டணங்கள் செலுத்தப்படுவோர் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோரே விமான சேவையை பாவிப்பார் எனவும் அனுமானித்திருந்தோம். அதுவே நடக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் உடன்பிறப்புக்களை வரவேற்க கொழும்பு வருவோர் கூட்டமாக (groups) வருவதால் அவர்களும்  விலை உணர்திறன் (group costs) கொண்டவர்களாக கணித்தோம். அவர்கள் திரும்பி  யாழ் போவதை பற்றி இங்கு சொல்லவே தேவையில்லை. 

எனவே உள்ளகபயணிகளால் இந்த விமான சேவையில் பொருளாதார நிலையை தக்க வைக்கும் என நாங்கள் எண்ணவில்லை.  எமது பொருளாதார நிலை (conomic conditions/spending capacity) உயரும் அவரை அது நடக்க சாத்தியம் குறைவு. இதனால் தான் சர்வதேச பயணிகள் சேவை பற்றிய கூடிய கரிசனை 

வர்த்தக /வியாபார சேவைகள் 

1980கலின் ஆரம்பத்தில் யாழ்பணத்தில் இருந்து விமான சேவை ஊடக நேர உணர்திறன் (tie sensitive) கொண்ட உட்பதிகளை கொழும்பு கொண்டு செல்ல விமான சேவையை எப்படி பயன்படுத்தலாம் என ஒரு சர்வேதேச ஆய்வு நிறுவனத்தை கொண்டு அன்றைய அரசு ஆராய்ந்திருந்தது. அந்த ஆய்வில் அன்று சொல்லப்படட விடயங்கள் பல இன்றும் பொருந்தும் என்பதால்  நேர உணர்திறன் கொண்ட சரக்குகளையும் (பழங்களில்  இருந்து மருத்தவ பொருட்கள் வரை) சேவையில் உள்ளடக்க பரிந்துரைக்கப்பட்டது. இதட்கும் எமக்கு விமான நிலையத்தில் கட்டமைப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக நேர உணர்திறன் கொண்ட சரக்குகளை முதலில் சேமிக்குமிடம் (cold storage/temperature controlled storage) தேவை (யாழிலும்  தேவை, இரதமலனையிலும் தேவை). அதோடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதிசெய்ய கூடிய நேர உணர்திறன் கொண்ட சரக்குகள் (Lobseters, prawns, fruits etc) உகந்தவை என அனுமானித்திருந்தோம். 

இதைவிட நாங்கள் சர்வேதேச பிராந்திய விமான சேவைகளையும்  நிலையங்களையும் ஆராய்ந்தோம். அதில் பிராந்திய விமான நிலையங்கள் பல சேவைகள் ஊடக வருமான ஈட்டலாம்.உதாரணமாக விமான பராமரிப்பு/திருத்த சேவை. இதனூடாக உளூரில் விமான பொறியியல் சேவையை (aircraft maintenance engineers) வளர்க்கலாம் என்று கருதினோம். இதன் மூலம் சென்னை மற்றும் அண்மைய இடங்களில் இருந்து விமானங்களை கொண்டுவந்து யாழில் பராமரிப்பு/திருத்த சேவை (regional aircraft servicing centre) வழங்க முடியும் என்பது எங்கள் கருத்தாக இருந்தது. இதட்கு  அடித்தளம் இடவும் எங்களுக்கு முதலீடுகள் தேவையாக இருந்தது. 

மானிய (subsidised) அடிப்படையில் இயங்குதல் 

எங்களை பொறுத்தவரை இந்த விமான நிலையம் குறைந்தது 15 வருடத்துக்கு மானிய அடிப்படையில் இயங்கவேண்டும். ஏனென்றால் அந்த விமான சேவையை மையப்படுத்திய சந்தை வாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டங்கள் (market building initiatives) பலன் தர பல ஆண்டுகள் செல்லும். உதாரணமாக அந்த யாழ்விமான நிலையந்தை சுற்றிய பகுதியில் ஒரு  தீர்வையில்லா பகுதியை (duty free/free trade zone) உருவாக்கி எமது ஏற்றுமதி சார்ந்த பொருட்களை அந்த பகுதியில் உட்பட்திசெய்யவேண்டும் என எங்களது கருத்துக்களை பகிர்ந்திருந்தோம். 

அதோடு சார்க் நாடுகளுக்கு இடையிலான தரைப்பதை இணைப்பு திட்டத்தில் இந்தியாவில் அன்றி நிதின் கட்காரி (Nitin Gadkari) கடல் துறை அமைச்சர் ஆக இருந்தவர் ஆர்வம் காட்டியபோதும் இலங்கை அதை எதித்திருந்தது. எனவே வடக்கின் நீண்டகால வர்த்தக நலனுக்கு இந்தியாவுடன் விமான இணைப்பு மிக அவசியமான ஒன்று என்ற அடிப்படியில் இந்தியாவின் கேந்திர நலனும் என்கள் நலனும் ஒரு படுகின்ற காரணத்தினாலும் இந்தியா தனது நலன் தவிர்ந்த ஒருவரையும் அங்கு முதலீடு செய்யவிடாது என்ற காரணத்தினாலும் தான் தமிழர் தரப்பு இந்தியாவை நாடியது.  ஆனால் இந்தியாவோயே நாங்கள் தமிழகத்துடன் நெருக்கி வருவது தந்து நலனுக்கு சரிவராது என் எண்ணுகிறது போல. அப்ப சீன காரன் அங்கு வந்து பலாலியில் அகழ்வாராச்சி செய்யும் வரை இவை நித்திரையாலை எழும்ப மாட்டினம். அணில்  எற விட்ட நாயகர்கள் ( கபிதனுக்காக நாயை நாயகனாக மாற்றியுளேன். இப்ப கள விதிகள் ஓகே தானே😁)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் புதல்வன், நன்றி.

அது ஏன் இரு நாட்டு தமிழர்களும் இணைய முனைந்தால் வெட்டிவிட என்றே சிலர் இருக்கிறார்கள்..? ஆக மொத்தத்தில் இந்தியா அருகில் இருக்கும் வரை நல்லது ஒன்றும் நடவாது என்கிறீர்கள்..! :)

ஒன்று இரத்தம் வடிந்து கொண்டே ஒருவித குழப்பங்கள் இருக்கோணும், அல்லது இலங்கை இந்தியாவை இரந்துகொண்டே இருக்கோணும்..!

அது கிடக்கட்டும், நடுத்தர விமானங்கள் வந்திறங்க யாழ் விமான நிலைய ஓடுதளத்தின் நீளமும், கடினத்தன்மையும், போதிய வழிகாட்டு உபகரணங்களின் வசதிகள், உள்ளக கட்டமைப்புகள் அதிகம் அங்கே இல்லையா..? 🤔

யாழ் விமான நிலையத்தைப் பற்றிய செய்திகளில் அதிக பீத்தல்கள் இருந்தனவே..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, puthalvan said:

ஆம் நிச்சயமாக. இந்த விடயங்களில் சர்வதேச/உள்ளக  நுகவோர் (அதாவது பயணிகள்) நடத்தை (Consumer Behaviour) எப்படியிருக்கும் என 2014 - 2018 காலப்பகுதியில் நடந்த பல  தரப்புடன் நடந்த பேச்சுக்களில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த கருத்துப்பரிமாற்றங்களில் எனது கருத்துக்களை பகிர்ந்தவன் என்ற வகையிலும் வர்த்தக ரீதியில் விமான நிலையதின் நீண்டகால வருமானத்தை நிலைநிறுத்துவது என்பது பற்றி எனது தொடர்பாடுகளில் ஈடுபட்டவன் என்ற வகையிலும் சில கருத்துக்கள்.

அட நீங்களா அவர்.வாழ்த்துக்கள் உங்கள் முயற்ச்சிக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நல்ல தகவல்கள் புதல்வன், நன்றி.

அது ஏன் இரு நாட்டு தமிழர்களும் இணைய முனைந்தால் வெட்டிவிட என்றே சிலர் இருக்கிறார்கள்..? ஆக மொத்தத்தில் இந்தியா அருகில் இருக்கும் வரை நல்லது ஒன்றும் நடவாது என்கிறீர்கள்..! :)

ஒன்று இரத்தம் வடிந்து கொண்டே ஒருவித குழப்பங்கள் இருக்கோணும், அல்லது இலங்கை இந்தியாவை இரந்துகொண்டே இருக்கோணும்..!

அது கிடக்கட்டும், நடுத்தர விமானங்கள் வந்திறங்க யாழ் விமான நிலைய ஓடுதளத்தின் நீளமும், கடினத்தன்மையும், போதிய வழிகாட்டு உபகரணங்களின் வசதிகள், உள்ளக கட்டமைப்புகள் அதிகம் அங்கே இல்லையா..? 🤔

யாழ் விமான நிலையத்தைப் பற்றிய செய்திகளில் அதிக பீத்தல்கள் இருந்தனவே..?

ஊடகங்களிடம் உண்மையை எதிர்பார்த்தது உங்கள் பிழை. பிறரைக் குறை கூறாதீர்கள் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நல்ல தகவல்கள் புதல்வன், நன்றி.

அது ஏன் இரு நாட்டு தமிழர்களும் இணைய முனைந்தால் வெட்டிவிட என்றே சிலர் இருக்கிறார்கள்..? ஆக மொத்தத்தில் இந்தியா அருகில் இருக்கும் வரை நல்லது ஒன்றும் நடவாது என்கிறீர்கள்..! :)

ஒன்று இரத்தம் வடிந்து கொண்டே ஒருவித குழப்பங்கள் இருக்கோணும், அல்லது இலங்கை இந்தியாவை இரந்துகொண்டே இருக்கோணும்..!

அது கிடக்கட்டும், நடுத்தர விமானங்கள் வந்திறங்க யாழ் விமான நிலைய ஓடுதளத்தின் நீளமும், கடினத்தன்மையும், போதிய வழிகாட்டு உபகரணங்களின் வசதிகள், உள்ளக கட்டமைப்புகள் அதிகம் அங்கே இல்லையா..? 🤔

யாழ் விமான நிலையத்தைப் பற்றிய செய்திகளில் அதிக பீத்தல்கள் இருந்தனவே..?

இரத்தினச் சுருக்கம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அது கிடக்கட்டும், நடுத்தர விமானங்கள் வந்திறங்க யாழ் விமான நிலைய ஓடுதளத்தின் நீளமும், கடினத்தன்மையும், போதிய வழிகாட்டு உபகரணங்களின் வசதிகள், உள்ளக கட்டமைப்புகள் அதிகம் அங்கே இல்லையா..? 🤔

பெரிய விமானங்கள் இறங்குவதற்கு இயற்கையாகவே தரை அமைந்திருப்பதாக முன்னர் கேள்விப்பட்டுள்ளேன்.
உண்மை பொய் தெரியவில்லை.

4 hours ago, ராசவன்னியன் said:

அது ஏன் இரு நாட்டு தமிழர்களும் இணைய முனைந்தால் வெட்டிவிட என்றே சிலர் இருக்கிறார்கள்..? ஆக மொத்தத்தில் இந்தியா அருகில் இருக்கும் வரை நல்லது ஒன்றும் நடவாது என்கிறீர்கள்..! :)

ஒன்று இரத்தம் வடிந்து கொண்டே ஒருவித குழப்பங்கள் இருக்கோணும், அல்லது இலங்கை இந்தியாவை இரந்துகொண்டே இருக்கோணும்..!

இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் என்றால் எதுவும் நடக்கும்.

இல்லை எனும் போது எப்போதுமே குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள்.

இலங்கை தமிழர்கள் இன்று படும் வேதனை 
எதிர் காலத்தில் தமிழ்நாட்டு தமிழருக்கும் வரலாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, ராசவன்னியன் said:

அது கிடக்கட்டும், நடுத்தர விமானங்கள் வந்திறங்க யாழ் விமான நிலைய ஓடுதளத்தின் நீளமும், கடினத்தன்மையும், போதிய வழிகாட்டு உபகரணங்களின் வசதிகள், உள்ளக கட்டமைப்புகள் அதிகம் அங்கே இல்லையா..? 🤔

யாழ் விமான நிலையத்தைப் பற்றிய செய்திகளில் அதிக பீத்தல்கள் இருந்தனவே..?

நான் ராஜாவானியன் 2018கு பிறகு இந்த விடயங்களில் இருந்து விலகிவிட்டேன். ஆனாலும் ஆட்களை சந்திக்கும் போது அரசியல் தான் முதலிடம். எனக்கு தெரிந்த படி கடந்த அரசு அதன் இறுதிநாட்களில் சிலவற்றை செய்ய முனைந்தனர். எல்லாம் தேர்தலில் ஒரு கண் வைத்து. அதனால் தான் விமான நிலையமும் தட்காலிக வழிகாட்டு கோபுரமும் வெள்ளத்தில் கிடக்கும் படம் களத்தில் பார்த்த ஞாபகம்!. தட்காலிக வழிகாட்டு கோபுரம் போட வந்த இந்திய பொறியியலாளரையும் அங்கிருந்த இராணுவ அதிகாரி அவமதித்து அனுப்பி வைத்திருந்தாராம்.

இப்பொது விமான நிலைய கட்டணங்கள் தொடர்பாக பிரச்னை படுகிறார்கள் என்று தான் செய்திகள் வாயிலாக அறிகிறேன். விமானம் வந்து  இறங்கிதோ இல்லையோ விமான நிலைய இயக்க செலவுகள் (operating costs) தொடர்ந்து கொண்டிருக்கும். இவர்கள் அதை கட்டணங்கள் ஊடக நிரப்பிக்கொள்ள பாக்கிறார்கள். அது தோல்வியில் தான் முடியும். அதுவும் எந்த கொரோன காலத்தில் பயணிகள் தொகை விழுந்துவிட்டது . எனவே குறைந்தது 5 வருடத்திக்காவது மானிய அடிப்படையில் இந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் செய்யவேண்டும். ஏனென்றால் விமான கம்பெனிகள் வெறும் விமானத்தை கொண்டுவந்தாலும் 40 பேரை கொண்டுவந்தாலும் கட்டணம் கட்டியே  தீரவேண்டும். அப்ப எப்படி விமான கம்பெனி வருமானம் சம்பாதிப்பது? . மக்களும் பொருளாதார ரீதியாக கஷடப்படுகிறார்கள் .

இதட்கு தீர்வு விமான நிலைய வருமானம் ஈட்டும் முறைகளை (revenue sources) அதிகரிப்பது. விமான துறையின் இருப்பு பயணிகள் தொகை (passenger numbers) , சரக்கு தொகை (freight) மற்றும் சேவைகள் வருமானம் (support services) , விசுவாச அட்டை(loyalty programs) ஆகியவற்றில் தங்கியுள்ளது. பயணிகள் இல்லாவிடில் விமான நிலைய சேவைகள் வருமானம் பற்றி கதைக்க முடியாது. எமது உள்நாட்டு/வெளிநாட்டு ஏற்றுமதி துறை மற்றும் இறக்குமதி சந்தை மிகவும் சிறியது எனவே சரக்கு விமான சேவை பற்றியும் கதைக்க இப்போதைக்கு ஒன்றுமில்லை. எனவே பயணிகள் தொகையை கூட்டவேண்டும். அதுவும் சர்வதேச பயணிகள் தொகையை. 

எப்படி செய்யலாம்:

1. கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கும் யாழ்  விமானநிலையத்துக்கும் நேரடி சேவை தேவை 

2. இந்த நேரடி சேவை சர்வேதேச விமானத்தில் வரும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். உள்ளூர் மக்கள் தொடர்ந்து இரதமலனை சேவையை பாவிக்கலாம். இப்படி செய்தால் உளூர் விமான நிறுவனங்களின்  வர்த்தக உடன்பாடுகளில் (commercial agreements) பிரச்சனைகள் எழுவதை நிறுத்தலாம்.

3. கொழும்பு வரும் சர்வதேச விமானம் கொழும்பில் எரிபொருளை மீள்நிரப்பி (யாழ் போய் வர தேவையான அளவு) மீண்டும் யாழ் நோக்கி செல்லலாம். எரிபொருளின் அளவு விமானத்தின் நிறையை கூடுவதுடன் அதன் செயல்திறநை (operating efficiency in revenue terms) குறைக்கும் என்பதால் கொழும்பில் தரையிறங்கி மீள்நிரப்புதல் உசிதமானது. அல்லது சர்வதேச விமானத்தில் இருந்து இனொரு உள்ளக சேவைக்கு ட்ரான்சிட் (transit) செய்யலாம்.

இந்த முறையின் படி இலங்கை வரும் வடபகுதி மக்கள் நேரடியாக யாழ்ப்பாணம் போக மிகுதி பேர் கொழும்பில் இறங்கக்கூடும். குறிப்பாக வயோதிபார்கள்  நேரடி சேவையை விரும்புவர். இவாறு நடந்தால் கொழும்பு விமான நிலையம் ஒரு வருமான இல்லப்பாய் சந்திக்கும். ஆனால் அதனை யாழ் விமான நிலையத்தில் வரும் காலத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

அத்துடன் பயணிகள் நேரடியாக அங்கு வரும்போது யாழ் விமான நிலையம் வடபகுதியின் மையமாக (transport hub) உருவாவதுடன் விமான நிலையத்தில் இருந்து முல்லைத்தீவு மன்னர் போன்ற இடங்களுக்கு பஸ், தனியார் வாகன சேவை என்பன வளர இடம் உண்டு. மேலும் பயணிகள் விமானம் வடபகுதிக்கான வெளிநாட்டு பொதிகளை கொண்டுவர தொடங்கினால் விமான சரக்கு செலவு படிப்படியாக கூறிய இடமுண்டு. யாழ் வந்து கொழும்பு திரும்பும் விமானம் யாழில் இருந்து பயணிகளையும் பொதிகளையும் கொண்டு செல்லும். வெளியில் இருந்து வரும் உறவுகளை வரவேற்க வரும் உறவுகள் யாழ் விமான நிலையத்தை அதிகம் பாவிக்க தொடங்கியவுடன் அங்கு சேவைகளை விஸ்தரிக்கலாம். தீர்வையற்ற கடைகளில் இருந்து பலவிதமான சேவைகளை உளூர் மக்கள்  அங்கு வந்து பெறக்கூடும். அதனால் விமான நிலையத்துக்கு மேலதிக வருமான ஈட்டும் வழிகள்  திறக்கும்.

சரி இதனை எப்படி சாதிப்பது?. இப்ப மாகாண சபை எங்களிடம் இல்லை. ரணிலுடன் சேர்த்து இந்த விடயத்தில் மூக்கை அறுத்துக்கொண்டோம். நாங்கள் அரசுடன் இல்லை. ஆரிடம் கேட்பது? இந்தியா?. இந்தியாவுக்கும் தெரியும் நாங்கள் ஆப்பிழுத்த குரங்குகள் என்று. நாங்கள் சிறிது காலம் பின்னோக்கி போகவேண்டி வரும் என்று தான் அங்குள்ள நிலைமை சொல்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, puthalvan said:

...எப்படி செய்யலாம்:

1. கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கும் யாழ்  விமானநிலையத்துக்கும் நேரடி சேவை தேவை 

2. இந்த நேரடி சேவை சர்வேதேச விமானத்தில் வரும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். உள்ளூர் மக்கள் தொடர்ந்து இரதமலனை சேவையை பாவிக்கலாம். இப்படி செய்தால் உளூர் விமான நிறுவனங்களின்  வர்த்தக உடன்பாடுகளில் (commercial agreements) பிரச்சனைகள் எழுவதை நிறுத்தலாம்.

3. கொழும்பு வரும் சர்வதேச விமானம் கொழும்பில் எரிபொருளை மீள்நிரப்பி (யாழ் போய் வர தேவையான அளவு) மீண்டும் யாழ் நோக்கி செல்லலாம். எரிபொருளின் அளவு விமானத்தின் நிறையை கூடுவதுடன் அதன் செயல்திறநை (operating efficiency in revenue terms) குறைக்கும் என்பதால் கொழும்பில் தரையிறங்கி மீள்நிரப்புதல் உசிதமானது. அல்லது சர்வதேச விமானத்தில் இருந்து இனொரு உள்ளக சேவைக்கு ட்ரான்சிட் (transit) செய்யலாம்.

இந்த முறையின் படி இலங்கை வரும் வடபகுதி மக்கள் நேரடியாக யாழ்ப்பாணம் போக மிகுதி பேர் கொழும்பில் இறங்கக்கூடும். குறிப்பாக வயோதிபார்கள்  நேரடி சேவையை விரும்புவர். இவாறு நடந்தால் கொழும்பு விமான நிலையம் ஒரு வருமான இல்லப்பாய் சந்திக்கும். ஆனால் அதனை யாழ் விமான நிலையத்தில் வரும் காலத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

...

சிவப்பு வண்ணத்தில் எடுத்துக்காட்டியபடியே எல்லாம் நடக்கும் எதிர்பார்த்தனர்.

தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை தரைப்பாலமும் கட்டப்படும் என படித்த நினைவு. அப்படி நடந்திருந்தால் இரு நாட்டு தமிழர்களிடையே நெருக்கம் அதிகரித்திருக்கும். நான் கூட 'துபாயிலிருந்து மதுரை செல்லும் வழியில், அடிக்கடி யாழப்பாணம் சென்று பார்க்கலாம்' என எண்ணி சந்தோசப்பட்டேன் அப்பு. :)

இப்படி ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுத்த மாதிரி ரத்மலானை நிலையத்தை வைத்து சித்து விளையாடி பாழடிப்பார்களென நினைக்கவில்லை. 🤔

Link to comment
Share on other sites

49 minutes ago, ராசவன்னியன் said:

இப்படி ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுத்த மாதிரி ரத்மலானை நிலையத்தை வைத்து சித்து விளையாடி பாழடிப்பார்களென நினைக்கவில்லை

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில்  இருந்து சார்ட்டர் (Charter tours) விமானம் மற்றும் ஹெலிகாப்டர் எடுத்து திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சுற்றுலா போகலாம். ஆனால் பயணிகள் விமானம் நடத்த பிரச்னை. அவர்களுக்கு நல்லா  தெரியும். எங்களை கொஞ்சம் வளரவிட்டால் எட்டி பிடிக்க கஷடம் என்று. இந்த விமான விவகாரம் ஒரு உதாரணம் மட்டுமே. புலம்பெயர் முதலீட்டுக்கான நிதி பொறிமுறையில் இருந்து அகதிகளுக்கான வீடு வரை எத்தனை திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, இழுத்தடிப்பு என்று. 

1 hour ago, ராசவன்னியன் said:

தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை தரைப்பாலுமும் கட்டப்படும் என படித்த நினைவு. அப்படி நடந்திருந்தால் இரு நாட்டு தமிழர்களிடையே நெருக்கம் அதிகரித்திருக்கும். நான் கூட 'துபாயிலிருந்து மதுரை செல்லும் வழியில், அடிக்கடி யாழப்பாணம் சென்று பார்க்கலாம்' என எண்ணி சந்தோசப்பட்டேன் அப்பு.

ஒரு நாள் அது நடக்கும் ராஜவன்னியன். தலைமுறைகள், உலக ஒழுங்குகள் மாற என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் எங்கள்  காலத்தில் அது நடக்குமா என்பது கேள்விக்குறி தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, puthalvan said:

எங்களை கொஞ்சம் வளரவிட்டால் எட்டி பிடிக்க கஷடம் என்று. இந்த விமான விவகாரம் ஒரு உதாரணம் மட்டுமே. புலம்பெயர் முதலீட்டுக்கான நிதி பொறிமுறையில் இருந்து அகதிகளுக்கான வீடு வரை எத்தனை திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, இழுத்தடிப்பு என்று. 

ஒரு நாள் அது நடக்கும் ராஜவன்னியன். தலைமுறைகள், உலக ஒழுங்குகள் மாற என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் எங்கள்  காலத்தில் அது நடக்குமா என்பது கேள்விக்குறி தான். 

புதல்வன்... இந்தத் தலைப்பில், இலங்கை அரசால் தமிழருக்கு செய்யப்படும்... 
பல  உள்ளடி வேலைகளை, எமக்கு அறியத் தந்தமைக்கு நன்றி.

இவை எல்லாம்... தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலா....
சென்ற அரசாங்கத்துக்கு, முட்டுக் கொடுத்துக் கொண்டு...
உள்நாட்டு பிரச்சினையை.. உள்நாட்டிலேயே தீர்ப்போம் என்று,
சர்வதேசத்துக்கு சொல்லிக் கொண்டிருந்தவர்கள்.

அல்லது... சிங்களவனின் அரசியலை புரியாமல், இருக்கும் அளவுக்கு..
அரசியல் அறிவு அற்றவர்களா? என்ற சந்தேகம் எனக்குள்ளது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.