மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் – சுகாதார அமைச்சு
-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
"போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" அதனால்தான் அவர் கவலை இல்லாமல் இருக்கின்றார். எல்லோருக்கும் அப்படி ஒரு "தில்" இருப்பதில்லை......நல்ல நகைச்சுவையான பதிவு சுப. சோமசுந்தரம்.....! 👍
-
நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......! 😂
-
By உடையார் · பதியப்பட்டது
எமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுக்கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன் கோரிக்கை 24 Views சிறீலங்கா அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன், சிறீலங்கா அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையும் வைத்து பிரயோசனம் இல்லையென்ற காரணத்தினால் சர்வதேசத்திடமே எமக்கான நீதியைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனைவிட சுதந்திரமாக நடமாடக்கூடிய நீதி,போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்போன்ற பல விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்துவருகின்றது. கடந்த 73வருடங்களாக இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடித்தே வருகின்றது.2009 மே 19க்கு பின்னர் 11வருடங்கள் தற்போது கடந்துள்ளது. இந்த 11வருடங்களும் தொடர்ச்சியான அவலங்களையே தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 1500 நாட்களை தாண்டியும் போராடிவருகின்றனர். ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ஒன்றின் ஊடாக சர்வதேச பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் போராட்டம் இல்லை. சர்வதேசத்தினை எங்களை நோக்கி திருப்புகின்ற போராட்டமாகவே இதனைமாற்றியிருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார். https://www.ilakku.org/?p=43694 -
By உடையார் · பதியப்பட்டது
ஜனாஸாக்கள் நல்லடக்கம் – பாதுப்பு ஏதும் வந்தால் பொறுப்பேற்கத் தயார் -கல்முனை மாநகர முதல்வர் 17 Views கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக புதன்கிழமை இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, “20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுடன் போலியான வதந்திகளை பரப்புகின்றனர். நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்துமுடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.ஆளும் தரப்பு எதிர்தரப்பு எம்.பிக்களின் அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது. இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது. 20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது. அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார். நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம். அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள். ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம் என்றார். இந்த ஊடகசந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இம்ரான்கானின் வருகைக்கு முன்னரே பல அழுத்தங்களினால் வர்த்தமானி தயாராகி விட்டது இருந்த போதிலும் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=43697 -
By உடையார் · பதியப்பட்டது
உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் காணியை வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க கோரிக்கை 18 Views வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் அமைந்துள்ள காணியை வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி குற்றம் சாட்டினார். வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த உயர்தொழில் நுட்ப கல்விநிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் பெ. இளங்குமரன், தமது நிறுவனம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது கல்லூரி அமைந்துள்ள காணி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் உரிமைபத்திரம் பெற்றுகொள்ள முடியவில்லை. இது தொடர்பாக உரிய திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரூடாக 2016ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தெரிவித்தும் எந்த விதபலனும் கிடைக்கவில்லை. காணிக்கான உரிமைபத்திரம் இன்மையால் மேலதிகமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார். இது தொடர்பாக பிரதேச செயலாளரால் அனுப்பபட்ட கடிதத்தின் பிரதியினை வனவளத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் பத்து நாட்களிற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கையிடுமாறு வனவளதிணைக்களத்திற்கு பணித்தார். https://www.ilakku.org/?p=43690
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.